Verified Web

அச்சத்தில் அளுத்கம

2017-06-18 06:52:16 Administrator

அஷந்தி வருணசூரிய
தமிழில்: எம்.ஐ.அப்துல் நஸார் 
நன்றி: சண்டேலீடர்


முஸ்­லிம்­களை இலக்கு வைத்து அண்மைக் கால­மாக அதி­க­ரித்து வரும் சம்­ப­வங்கள் அளுத்கம மக்கள் மத்­தியில் 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஏற்­பட்­டது போன்று மீண்டும் ஒரு கலகம் ஏற்­பட்­டு­வி­டுமோ என்ற அச்­சத்­தினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  

நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ சண்டே லீட­ருக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் இந்த நாட்டில் இன்­னு­மொரு இன­ரீ­தி­யான கலகம் ஏற்­ப­டாது என உறு­தி­ய­ளித்­துள்ளார். 

எனினும், அளுத்­க­ம­யி­லுள்ள தர்ஹா நகரில் வசிக்கும் மக்கள் தாம் அச்­சத்­து­ட­னேயே வாழ்ந்து வரு­வ­தாக சண்டே லீடர் பத்­தி­ரிகைக்குத் தெரி­வித்­துள்­ளனர். அதே­வேளை சிலர் தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் தமக்கு வழங்­கப்­பட்­டுள்ள பாது­காப்பு தொடர்பில் திருப்­தி­ய­டை­வ­தாகத் தெரி­வித்­துள்­ளனர். எந்த நேரத்தில் கலகம் வெடிக்­குமோ என்ற அச்­சத்தில் தாம் வாழ்­வ­தாக ஏனையோர் தெரி­விக்­கின்­றனர். அந்த அச்ச நிலைக்குக் காரணம் சுமார் மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அப் பிர­தே­சத்தை துவம்சம் செய்த கல­வ­ர­மாகும். 

மீண்­டு­மொரு கலகம் ஏற்­பட்­டு­விடும் என்ற அச்ச நிலை மக்­களைச் சூழ்ந்­துள்ள நிலையில் அது தொடர்பில் பேசிய பொலிஸ் பேச்­சா­ள­ரான பிரதிப் பொலிஸ் மாஅ­திபர் பிரி­யந்த ஜயக்­கொடி மக்கள் அவ்­வாறு அச்சம் கொள்­வ­தற்­கான அவ­சியம் இல்லை என தான் கரு­து­வ­தாகத் தெரி­வித்தார்.ஏனெனில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பொலிஸ் மாஅ­தி­ப­ரினால் அனைத்து நிலையப் பொறுப்­ப­தி­கா­ரிகள், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்கள் மற்றும் பொலிஸ் நிலை­யங்­க­ளி­லுள்ள அனைத்து பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் அனுப்பி வைத்­துள்ள அறி­வித்­தலில் இன­ரீ­தியாக இடம்­பெறும் சிறிய சம்­ப­வங்­க­ளா­யினும் அவை கட்­டுக்­க­டங்­காமல் செல்­வதைத் தடுப்­ப­தற்­காக அவற்­றிற்குக் கார­ண­மாக இருப்­ப­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­மாறு குறிப்­பிட்­டுள்ளார்.  

2006 ஆம் ஆண்டின் குடி­யியல் மற்றும் அர­சியல் உரி­மைகள் சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு 56 ஆம் பிரிவின் கீழ் வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களைப் பிர­யோ­கிக்­கு­மாறும், இனங்­க­ளுக்­கி­டையே அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்த முனை­ப­வர்­க­ளுக்கும் இன­ரீ­தி­யான பதற்றத்தை ஏற்­ப­டுத்த முனை­வ­த­னூ­டாக சட்­டத்தை மீறு­வோர்­க­ளுக்கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் பொலிஸ் மாஅ­திபர் அறி­வு­றுத்தல் வழங்­கி­யுள்ளார். 

பல ஆண்­டு­க­ளுக்கு முன்னர் ஜுன் மாதம் 13 ஆந் திகதி நடை­பெற்ற பயங்­க­ர­மான சம்­ப­வங்கள் பெரு­ம­ள­வி­லான இன­ரீ­தி­யான பதற்றங்­க­ளையும் மக்கள் மத்­தியில் அச்­சத்­தி­னையும் ஏற்­ப­டுத்­திய நிலையில் இன்றுகூட அந்த இன­ரீ­தி­யான பதற்றத்தை தோற்­று­விக்க முனை­ப­வர்கள் வேறு­யா­ரு­மல்ல மஞ்சள் நிற ஆடை அணிந்­த­வர்­க­ளாவர். அவ்­வா­றான சம்­ப­வத்தால் தர்கா நகர் மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர்.  

அந்த பயங்­க­ர­மான தினத்தில் தர்கா நகரின் அதி­காரி வீதி­யி­லுள்ள சுமார் 16 வீடுகள் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டன. சுமார் 25 வீடுகள் சேத­மாக்­கப்­பட்­ட­தோடு சுமார் எட்டுக் கடைகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. இந்தத் தாக்­கு­த­லின்­போது தமது பெறு­ம­தி­மிக்க பொருட்கள் சூறை­யா­டப்­பட்­ட­தா­கவும் நகைகள் திரு­டப்­பட்­ட­தா­கவும் அங்கு வசிக்கும் முஸ்லிம் மக்கள் தெரி­விக்­கின்­றனர். 

சேத­ம­டைந்த வீடுகள் அர­சாங்­கத்­தினால் மீள்­நிர்­மாணம் செய்து கொடுக்­கப்­பட்­டுள்ள போதிலும் இந்த சம்­ப­வத்தில் பெறு­ம­தி­மிக்க பொருட்கள் மற்றும் தள­பா­டங்கள் சேத­ம­டைந்து பாதிப்­புக்­குள்­ளான மக்­க­ளுக்கு இன்று வரை எவ்­வித நட்­ட­ஈடும் வழங்­கப்­ப­ட­வில்லை. அவர்­களும் எமது நாட்டின் பிர­ஜை­களே, ஏனை­யோரைப் போன்று அச்­ச­மின்றி வாழ்­வ­தற்­கான அதே உரிமை அவர்­க­ளுக்கும் உண்டு. 

தர்கா நகர் பள்­ளி­வாசல் புன­ர­மைப்பு 
முந்­தைய அர­சாங்­கத்தால் தர்கா நக­ரி­லுள்ள பள்­ளி­வாசல் புன­ர­மைப்புச் செய்­யப்­பட்­டது. சேத­ம­டைந்த பல கட்­ட­டங்­களும் திருத்­தப்­பட்டு புனர் நிர்­மாணம் செய்­யப்­பட்­டுள்­ளன. எனினும், மக்கள் மனதில் அச்சம் இன்னும் மறை­யா­ம­லேயே உள்­ளது என்­பதை எம்­மோடு பேசிய மக்­களின் கருத்­துக்­களில் இருந்து புரிந்­து­கொள்ள முடிந்­தது.  

 இந்தப் பின்­ன­ணியில், இந்த நோன்பு காலத்தில் இப் பிர­தே­சத்­திற்கு மேல­திக பாது­காப்­பினை வழங்­கு­மாறு அப் பிர­தே­சத்தின் முஸ்லிம் தலை­வர்கள் பாது­காப்புப் படை­யி­ன­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர். அண்­மையில், அர­சி­யல்­வா­தி­யான அஸாத் ஸாலி மற்றும் தெவட்­ட­கஹ பள்­ளி­வாசலின் நம்­பிக்­கை­யா­ளர்கள் இணைந்த குழு­வினர் ஜரோப்­பிய யூனியன் தூது­வர்­களை சந்­தித்­த­தோடு இப் பிரச்­சினை தொடர்பில் கலந்­து­ரை­யாடி தமது கவ­லை­களை உள்­ள­டக்­கிய கடி­த­மொன்­றி­னையும் கைய­ளித்­தனர். அதற்கு பதி­ல­ளித்த இரா­ஜ­தந்­தி­ரிகள் இந்த விட­யத்தை அர­சாங்­கத்தின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரு­வ­தாக தெரி­வித்­தனர்.  

இப்பிரச்­சினை தொடர்­பாக அளுத்­க­மவில் அமைந்­துள்ள கந்தே விகா­ரையின் பிர­தம தேரர் சங்­கைக்­கு­ரிய கொக்­கா­விட்ட விபு­ல­சார தேர­ரினை அவ­ரது கருத்­துக்­களைத் அறிந்து கொள்­வ­தற்­காக சண்டே லீடர் சந்­தித்­தது.

ஒரு சில சம்­ப­வங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இந்த நாட்டு மக்­களின் நல்­லி­ணக்கம் சீர்­கு­லைந்து விடும் எனக் கூறு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் எதுவும் இல்லை. அவ்­வா­றான இன மோதல்கள் இந்தப் பிர­தே­சத்தில் இல்லை. சில தரப்­பி­னரின் தவ­றான வழி­ந­டத்­தல்­களைப் பின்­பற்ற வேண்டாம் எனவும் தங்­க­ளது உயர்­த­ர­மான நுண்­ண­றி­வினைப் பயன்­ப­டுத்­து­மாறும் நான் பொது­மக்­களைக் கேட்டுக் கொள்­கின்றேன்.

இளை­ஞர்­களைப் பொறுத்­த­வ­ரையில், சில வேளை­களில் அவர்கள் உணர்ச்­சி­வ­சப்­ப­டுத்­தப்­ப­டும்போது தவ­றாக வழி ­ந­டாத்­தப்­ப­டு­கி­றார்கள். ஆனால் பகுத்­த­றி­வுடன் செயற்­ப­டு­மாறு இளை­ஞர்­களைக் கேட்­டுக்­கொள்­கின்றேன். இந்தப் பிர­தே­சத்தில் இரண்டு விஷேட அதி­ர­டிப்­படை முகாம்கள் இருக்­கின்­றன. அதன் கார­ண­மாக அவ்­வா­றான சம்­ப­வங்கள் மீண்டும் நிகழும் என அச்­சப்­ப­ட­வேண்­டிய அவ­சியம் இல்லை. எனினும், இப் பிர­தே­சத்தில் இருக்கும் பிர­தான விகாரை என்ற வகையில் இப்­பி­ர­தே­சத்தில் வாழும் அனைத்து இன மற்றும் மத மக்­க­ளி­னதும் உரி­மை­களைப் பாது­காக்க விகாரை நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தோடு மக்­க­ளி­டையே மத­ரீ­தி­யான அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் நிச்­ச­ய­மாக பணி­யாற்றும் எனவும் தேரர் தெரி­வித்தார்.
 
எனினும், அண்­மைக்­கால சம்­ப­வங்கள் முஸ்­லிம்­களின் குடி­யி­ருப்­புக்கள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­களை இலக்கு வைக்­கப்­ப­டு­வது புல­னா­கி­றது. ஆங்­காங்கே நடை­பெறும் தனித்­தனி சம்­ப­வங்கள் கட்­டுக்­க­டங்­காமல் செல்­ல­வில்­லை­யா­யினும், அதி­கா­ரி­கள் சிறிய சம்­ப­வங்கள் தொடர்பில் கரி­சனை செலுத்தி அவை கைமீறிச் செல்­லா­த­வாறு தடுக்க வேண்டும்.

அதே­வேளை சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்தும் நிறு­வ­னங்கள் நாட்டின் அனைத்து மக்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­கின்­றன. மக்கள் அவற்றின் மீது நம்­பிக்கை கொள்ள வேண்டும் என கேட்­கப்­ப­டு­கி­றார்கள். சிறு­பான்மை சமூ­கங்­களின் மனதில் இச் சம்­ப­வங்கள் ஏற்­ப­டுத்­தி­யுள்ள மனோ­நிலை மற்றும் அச்சம் தொடர்பில் அர­சாங்கம் புரிந்து கொள்­வ­தற்­கான தருணம் இது­வாகும். முஸலிம் சமூ­கத்­திற்கு எதி­ரான இவ்­வா­றான தாக்­கு­தல்கள் பெரும்­பான்மை பொது­மக்­களால் உரு­வாக்­கப்­பட்­ட­தொன்­றல்ல. அவர்­க­ளுக்கு ஏனைய சமூ­கத்­தினர் தொடர்பில் எவ்­வித எதிர்ப்­பு­ணர்வும் கிடை­யாது. எனினும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் மறை­வான நோக்­கங்­க­ளுடன் செயற்­படும் சில தீவிரப் போக்­கு­டை­ய­வர்­களின் நட­வ­டிக்­கை­க­ளாகும். 

 பள்­ளி­வாசல் தாக்­கு­தலை தடுத்து நிறுத்­திய விஷேட அதி­ரடிப் படை­யினர்
அளுத்­க­மவில் அமைந்­துள்ள அதி­கா­ரி­கொட பள்­ளி­வாயல் என அழைக்­கப்­படும் மஸ்­ஜிதுன் நூர் பள்­ளி­வாசல் சேத­மாக்­கப்­பட்­டது. எனினும் பள்­ளி­வாசல் குழு­வொன்­றினால் தாக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­போது உரிய நேரத்தில் விஷேட அதி­ரடிப் படை­யினர் ஸ்தலத்­திற்கு வந்­ததால் ஓர­ள­வுக்கு பள்­ளி­வா­சலை பாது­காக்க முடிந்­தது.

இந்தப் பள்­ளி­வா­யலே இறு­தியில் கல­வ­ரத்தால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு புக­லிடம் வழங்­கி­ய­தோடு இடம்­பெ­யர்ந்­தோ­ருக்கு உணவும் அத்­தி­ய­வ­சிய பொருட்­க­ளையும் வழங்­கி­யது. 'இந்த சம்­ப­வங்கள் தொடர்பில் நாம் அதி­கா­ரி­க­ளுக்கு முறைப்­பாடு செய்­தி­ருந்­த­போ­திலும், இது வரை எவ்­வித விசா­ர­ணை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. நாம் இது தொடர்பில் மிகவும் கவலை அடைந்­துள்­ளளோம். 

பள்­ளி­வா­சலின் நம்­பிக்­கை­யாளர் என்ற வகையில் பிர­தே­சத்தில் உள்ள மக்­க­ளுக்கு என்னால் முடி­யு­மா­ன­வற்றை உரிய நேரத்தில் செய்­துள்ளேன். இன்று கூட மக்கள் இது­போன்ற இன்­னு­மொரு சம்­பவம் நடந்­து­வி­டுமோ என்ற அச்­சத்தில் வாழ்ந்து வரு­கின்­றனர். இந்த நோன்பு மாதத்தில் ஆண்கள் மட்­டு­மல்­லாது எமது பெண்­களும் இரவு வேளை­களில் பள்­ளி­வா­ச­லுக்குச் செல்­கின்­றனர்.

இந்த மாதத்தில் இரவு வேளை­களில் மேல­திக பாது­காப்­பினை வழங்­கு­மாறு நாம் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரிடம் வேண்­டுகோள் ஒன்றை முன்­வைத்­துள்ளோம். இந்த அர­சாங்கம் முஸ்­லிம்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ள­தோடு அதற்­காக நாம் நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றோம்.

என்­றாலும் அடுத்து என்ன நடக்­குமோ என்ற அச்­சத்­தி­லேயே நாம் வாழ்­கிறோம்' என அதி­கா­ரி­கொட பள்­ளி­வாசல் என அழைக்­கப்­படும் மஸ்­ஜிதுன் நூர் பள்­ளி­வா­சலின் நம்­பிக்­கை­யாளர் கபூர் மொஹமட் ஹிபாத் தெரி­வித்தார்.

ஒரு நாடு என்ற வகையில் இலங்கை இன மற்றும் மத அடிப்­ப­டை­யி­லான பல சம்­ப­வங்­களை சந்­தித்­துள்­ளது. அவற்­றை­யெல்லாம் அது தாங்­கிக்­கொண்­டுள்­ளது என்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். இவ்­வா­றான சம்­ப­வங்கள் கார­ண­மாக அழிக்­கப்­பட்ட உட்­கட்­ட­மைப்­புக்­களை மீள­மைப்புச் செய்­வ­தற்கு விர­ய­மாக்­கப்­படும் தேசிய சொத்­துக்­களும் நிதியும் நாட்டின் எதிர்­கால அபி­வி­ருத்தி மற்றும் முன்­னேற்­றத்­திற்­கான நிதி­களை வீண் விர­ய­மாக்­கு­கின்­றது. அத்­த­கைய சம்­ப­வங்கள் நாட்டின் முன்­னேற்­றத்­திலும் அபி­வி­ருத்­தி­யிலும் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­து­வ­தோடு மறு­பு­ற­மாக இளம் சமு­தா­யத்­தி­னரின் எதிர்­கா­லத்­திலும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது. 

இவ்­வா­றான சம்­ப­வங்­களைத் தூண்­டி­வி­டு­ப­வர்கள் தம்மால் மேற்­கொள்­ளப்­படும் செயற்­பா­டு­களின் பின் விளைவை மறந்தே செயற்­ப­டு­கின்­றனர். இது தவிர இன்­றைய உலகம் இவ்­வா­றான இன, மத அடிப்­ப­டை­யி­ல­மைந்த தாக்­கு­தல்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்டும் என எதிர்­பார்க்­கின்­றது.

அவ்­வா­றா­ன­தொரு சூழலில் கடந்த காலங்­களில் நடை­பெற்ற இவ்­வா­றான சம்­ப­வங்கள் கூட உள்­ளகப் பிரச்­சினை என்ற வகையில் நாட்­டுக்குள் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இது எதிர்­கா­லத்தில் வெளி­நாட்டு சக்­தி­களின் தலை­யீட்டினால் சர்­வ­தேச பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளது. எனவே, குறு­கிய மனப்­பான்மை கொண்ட குழுக்கள் தமது கெட்ட நோக்­கங்­களை அடைந்­து­கொள்ள இன மற்றும் மத­வாத பிரச்­சி­னை­களை தூண்­டி­விட்ட போதிலும் இந்தப் பிரச்­சினை எமது நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தோடு சர்­வ­தேச சக்­திகள் தலை­யீடு செய்­வ­தற்கும் வழி­வ­குக்கும் என்­ப­தையும் அவர்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.

அதிர்ச்சி கார­ண­மாக  குழந்தை உயி­ரி­ழப்பு 
அப் பிர­தே­சத்தில் வசிப்­ப­வர்­களுள் சம்­ப­வத்தில் எரிக்­கப்­பட்ட வீட்டின் உரி­மை­யா­ள­ரொ­ருவர் கருத்துத் தெரி­விக்­கையில் அதிர்ச்சி கார­ண­மாக வீட்டில் வசித்­து­வந்த குழந்­தை­யொன்று நோய்­வாய்ப்­பட்­ட­தா­கவும் பின்னர் அக் குழந்தை இறந்­து­விட்­ட­தா­கவும் தெரி­வித்தார். கண­வனை இழந்­தி­ருந்த என சகோ­தரி வீட்டின் பின்­பு­றத்தில் வசித்­து­வந்தார்.

கல­கக்­கா­ரர்கள் எமது வீட்டைத் தாக்க வந்­த­போது வீட்டின் பின்­பு­ற­மி­ருந்த புத­ருக்குள் அவர் மறைந்­து­கொண்டார். எமது பக்­கத்து வீட்டில் ஒரு ஆசி­ரியை வசித்து வந்தார். அவர் வய­தா­னவர், கண்­பார்­வையும் குறைவு. 

கல­கக்­கா­ரர்கள் வீட்டைத் தாக்­கி­ய­போது தப்­பி­யோ­டிய அவர் சதுப்பு நில­மொன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்டார். நாம் எமது பிள்­ளை­களின் வாயினுள் விறகுத் துண்­டு­களைப் போட்டு அடைத்தோம். ஏனென்றால் அவர்கள் ஏதேனும் சத்தம் எழுப்­பினால் கல­கக்­கா­ரர்கள் எங்­களை கொன்று விடு­வார்கள் என்ற அச்­சத்­தி­னா­லேயே நாம் அவ்­வாறு செய்தோம். அது மிகப் பயங்­க­ர­மான சம்­ப­வ­மாகும். முஸ்­லி­மாக இருக்­கலாம், பௌத்­த­ராக இருக்­கலாம் அல்­லது கிறிஸ்­த­வ­ராக இருக்­கலாம் அதில் எவ்­வித வேறு­பாடும் இல்லை.

நாம் ஒற்­று­மை­யா­கவே வாழ்ந்து வரு­கின்றோம். நாம் இந்த உலகில் தற்­கா­லி­க­மா­கவே வாழ்ந்து வரு­கின்றோம் என்­றா­வது ஒரு நாள் நாம் இறந்து விடுவோம். ஆனால் அது வரை இந்த உலகில் நாம் வாழ வேண்­டி­யுள்­ளது. நாம் அனை­வரும் அமை­தி­யா­கவும் ஒற்­று­மை­யா­கவும் வாழ வேண்டும்.

  சம்­பவ தினத்­தன்று வெளி­யூர்­க­ளி­லி­ருந்து மூன்று பஸ்­களில் வந்த குழு­வினர் வீடு­களைத் தாக்­கி­ய­தோடு எமது பெறு­ம­தி­யான பொருட்­க­ளையும் சூறை­யா­டினர். இன்று வரை நாம் இழந்த பெறு­ம­தி­யான பொருட்கள் வீட்­டுத்­த­ள­பா­டங்­க­ளுக்கு நட்­ட­ஈட்­டினை எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்றோம். என அவர் தெரி­வித்தார். 

அப்­பி­ர­தே­சத்தில் வசிக்கும் மற்­று­மொ­ருவர் தனது கருத்தை இவ்­வாறு பகிர்ந்து கொண்டார் 'நாம் சிங்­கள மக்கள் மத்­தியில் ஒற்­று­மை­யுடன் வாழ்ந்து வரு­கின்றோம். அவர்­க­ளுடன் எமக்கு எவ்­வித பிரச்­சி­னையும் இல்லை. சம்­பவம் நடை­பெற்ற மறுநாள் கந்தே விகா­ரையின் பிர­தம தேரர் கொக்­கா­விட்ட விபு­ல­சார தேரர் எம்மை பார்க்க வந்தார்.

அவ­ரைப்­போன்ற கரு­ணை­யுள்ளம் கொண்ட புரிந்­து­ணர்­வுள்ள மதத் தலை­வர்கள் எமக்குத் தேவை. கடந்த வாரம் பொலிஸ் நிலை­யத்தில் ஒரு கூட்டம் நடை­பெற்­றது. அதில் எமது மனக் குறை­களை விப­ரித்தோம். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிஸ்­புல்லாஹ் பல தட­வைகள் இந்த விடயம் பற்றி வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். இதுவரை அர­சாங்கம் ஏன் இந்த விடயம் தொடர்பில் பதி­ல­ளிக்­காமல் இருக்­கின்­றது? இன்­று­வரை இந்தத் தாக்­கு­த­லுக்குக் கார­ண­மா­ன­வர்கள் எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை' என அவர் குற்றம் சாட்­டினார். 

சம்­பவ தினத்­தன்று இரண்­டுபேர் கொல்­லப்­பட்­ட­தோடு இரண்டு இளை­ஞர்கள் காலில் ஏற்­பட்ட படு­காயம் காரண­மாக வல­து­கு­றைந்­தோ­ராக ஆக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் இரு­வரும் நண்­பர்கள். கலகம் நடப்­பதைப் பார்க்கச் சென்ற வேளையில் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி காய­ம­டைந்­த­தோடு தற்­போது உடல் ஊன­முற்­ற­வர்­க­ளா­கி­யுள்­ளனர். பாதிப்­புக்­குள்­ளான இரு­வருள் ஒரு­வ­ரான மொஹமட் அஸ்­ஜலின் வீட்டுக்கு நாம் சென்றோம். அந்த வேளையில் அவர் வீட்டில் இருக்­க­வில்லை.

அவரின் தாயார் பாத்­திமா செல்­வி­யா­வுடன் நாம் பேசினோம். நான்கு பிள்­ளைகள் கொண்ட குடும்­பத்தில் இரண்­டா­வது பிள்ளை அவர். அஸ்ஜால் 21 வயது இளைஞர். அன்­றைய தினம்தான் எனது மக­னுக்கு இது நிகழ்ந்­தது.

அவர் நாகொட வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்டு செல்­லப்­ப­டடார். அங்கு எனது மகனைத் தாக்­கி­னார்கள். தம்­பி­லாக்­க­ளுக்கு இப்­ப­டித்தான் நடக்க வேண்டும் எனக் கூறி­ய­தோடு தண்ணீர் கூட கொடுக்க மறுத்து விட்­டனர். இது வைத்­தி­ய­சா­லையின் கவ­ன­யீ­ன­மாகும். இறு­தியில் எனது மகனின் கால் அகற்­றப்­பட்­டது. எந்த சம­யத்­து­டனும் எமக்கு எவ்­வித பிரச்­சி­னையும் இல்லை. நாம் நாள்­தோறும் அழு­கிறோம். நாம் அச்­சத்­து­டன்தான் வாழ்ந்து வரு­கின்றோம். 

எனது மகன் காலை இழந்தார் 
ஒவ்­வொ­ரு­வரும் வரு­கி­றார்கள் எமது கதை­களை எழு­திக்­கொண்டு செல்­கி­றார்கள். ஆனால் இன்று வரை எதுவும் நடை­பெ­ற­வில்லை. இந்தப் பிரச்­சி­னைகள் பற்றி சிந்­தித்தே நானும் எனது கண­வரும் நோயா­ளி­க­ளா­கி­விட்டோம். எனக்கு இத­யத்தில் சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

எனது மக­னுக்கு காலில் மீள் சிகிச்சை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது அல்­லது செயற்கைக் கால் பொருத்த வேண்­டி­யுள்­ளது. ஆஸாத் ஸாலி சக்­கர நாற்­கா­லி­யொன்றை அன்­ப­ளிப்புச் செய்­துள்ளார். எனது மகனால் அவ­ரது இய­லாமை கார­ண­மாக அதனை செலுத்த முடி­யாமல் உள்­ளது.

நாங்கள் மர­ணித்­து­விட்டால் எங்கள் மகனை யார் கவ­னிப்­பார்கள்? அவரை யாரா­வது கவ­னிப்­பார்கள் என்ற நம்­பிக்கை எங்­க­ளுக்கு இருக்­கின்­றது. 

ஆனால் இந்தப் பிரச்­சி­னைகள் பற்றி சிந்­தித்தே நாம் நோயா­ளி­க­ளா­கி­விட்டோம். இந்த விடயம் சம்­பந்­த­மாக செலவு செய்து நீதி­மன்­றத்­திற்குச் செல்ல எம்­மிடம் பணம் இல்லை. வழக்­கு­க­ளுக்கு சமுக­ம­ளிக்­கா­த­வி­டத்து சூத்­தி­ர­தா­ரிகள் விடு­விக்­கப்­பட்டு சுதந்­தி­ர­மாக நட­மா­டு­வார்கள். எனது கணவர் ஒரு தொழி­லாளி. சேத­மாக்­கப்­பட்ட வீட்டை அர­சாங்­கத்தால் மீளக் கட்டித் தர முடியும். ஆனால் இழந்த என் மகனின் காலை திரும்பத் தர முடி­யுமா? இது மிகப் பெரும் பாவ காரி­ய­மாகும்.

இந்த சம்­பவம் எனது மகனின் முழு வாழ்க்­கை­யையும் சிதைத்­து­விட்­டது எனவும் அவர் குற்றம் சாட்­டினார். 

 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆந் திகதி பிரதிப் பொலிஸ்மா அ­திபர் அனுர சேன­நா­யக்க களுத்­துறை உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் அலு­வ­ல­கத்தில் கூட்­ட­மொன்றை நடத்­தினார். பிர­தே­சத்தின் முக்­கி­யஸ்­தர்கள் மற்றும் பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யா­ளர்கள் அதில் பங்­கு­பற்­றுவர் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் அதி­க­மான பிரபலம் கொடுக்­கப்­பட்­ட­த­னா­லும், கூட்டம் நடை­பெற்றால் மேலும் வன்­மு­றைகள் வெடிக்க வாய்ப்பி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்து அக் கூட்டம் இரத்துச் செய்­யப்­பட்­டது. 

பேரு­வளை பிர­தேச சபையின் முன்னாள் எதிர்க்­கட்சித் தலைவர் அப்துல் றகுமான் மரிக்கார் பதி­யுதீன் கூறு­கையில், மேலும் பிரச்­சி­னைகள் ஏற்­பட வாய்ப்­பி­ருந்­ததால் நாம் தான் அக் கூட்­டத்தை இரத்துச் செய்­யு­மாறு கோரினோம். ஆனால், அவ்­வாறு எதுவும் நடை­பெ­றாது. ஏனென்றால் மேலி­டத்து கட்­ட­ளைக்கு அமை­வாக எமது பாது­காப்­புக்­காக சுமார் 2,000 விஷேட அதி­ரடிப் படை­யினர் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அனுர சேன­நா­யக்க உறு­தி­ய­ளித்தார். நாம் கூட்­டத்­திற்கு சமு­க­ம­ளித்தோம். முழு நக­ரமும் இந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கூட்­டத்தைப் பற்­றியே பேசி­யது. மக்கள் மிகவும் அச்­ச­ம­டைந்­தி­ருந்­தனர்.

பள்­ளி­வாசல் தர்கா நகரின் நுழை­வா­யிலில் அமைந்­துள்­ளது. தர்கா நகர் பள்­ளி­வா­சலை தாக்­கு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது என அச்சம் பர­வ­லாகக் காணப்­பட்­டது. அதன் கார­ண­மாக பள்­ளி­வாசலை பாது­காப்­ப­தற்­காக அனை­வரும் பள்­ளி­வா­ய­லுக்கு அருகில் திரண்­டனர். ஆனால் அவர்­க­ளிடம் ஆயு­தங்கள் எதுவும் இருக்­க­வில்லை. 

ஊட­ரங்குச் சட்­டத்­தின்­போது தாக்­குதல் நடை­பெற்­றது 
கூட்டம் முடி­வ­டைந்­ததும் நக­ருக்குள் நுழைந்த குழு­வினர் கட்­டங்கள் மீது தாக்­குதல் நடத்தில் தீ வைத்­தனர். பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் அதி­க­மாக தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. பொது­வாக இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்றால் மக்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக ஊர­டங்குச் சட்டம் பிறப்­பிக்­கப்­படும். 

அதற்­க­மை­வாக மாலை சுமார் 5.55 மணி­ய­ளவில் ஊர­டங்குச் சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டது.

ஆனால் ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்த பிற்­பகல் 6.00 மணிக்கும் இரவு 10.00 மணிக்கும் இடைப்­பட்ட காலத்தில் கொலை­கா­ரர்­களால் கொள்ளைச் சம்­ப­வங்­களும் சொத்­துக்கள் அழிக்­கப்­பட்ட சம்­ப­வங்­களும் அரங்­கேற்­றப்­பட்­டன. இதில் கவலை என்­ன­வென்றால் பாது­காப்புப் படை­யினர் கட­மையில் இருந்­த­போதே இவை நடை­பெற்­றன. அவர்கள் இதனைத் தடுக்­க­வில்லை.

அதனால் தான் மக்கள் தற்­போதும் அச்­சத்­துடன் இருக்­கின்­றனர். உயர் அதி­கா­ரி­க­ளிடம் இருந்து கிடைத்த கட்­டளை கார­ண­மாக  பாது­காப்புப் படை­யினர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­தோடு இந்தச் சம்­பவம் நடந்­தே­று­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டது என அவர் தெரி­வித்தார். 

இதற்கு பதி­ல­ளித்த பொலிஸ் பேச்­சாளர் பிரி­யந்த ஜய­கொடி அப்­போ­தி­ருந்த பாது­காப்பு நிலைமை தொடர்பில் கருத்துத் தெரி­விக்க முடி­யாது எனத் தெரி­வித்­த­தோடு இன்று தாம் மக்கள் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தாகத் தெரி­வித்தார். 

இத­னி­டையே அளுத்­கம நிகழ்­வு­களைத் தொடர்ந்து சாதி மத இன பேதங்­க­ளுக்கு அப்பால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு மக்கள் கை கோர்த்­தனர். அதற்­க­மை­வாக அளுத்­கம அபி­வி­ருத்தி நிதியம் தோற்றுவிக்கப்பட்டது.

எனினும் அவர்களுக்குத் தேவையானதை இந் நிதியம் வழங்கினாலும் பாதிக்கப்பட்ட வீடுகளை புனர் நிர்மாணம் செய்ததைத் தவிர வேறு எதனையும் அரசாங்கம் செய்யவில்லை என மக்கள் முறைப்பாடு செய்கின்றனர். அரசாங்கம் இதனை மிகச் சிறிய விடயமாகக் கருதி பாராமுகமாக இருந்தது. ஆனால் இன்று அனர்த்தத்தினால் பாதிப்பு ஏற்படும்போது மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்கின்றனர். 

அப்போதும் இதுதான் நடந்தது. நாம் இன அல்லது மத வேறுபாடுகளைப் பாராது நாம் இலங்கையர் எனச் சிந்திக்க வேண்டும். அரசாங்கம் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு விசேட குழுவொன்றினை நியமிக்க வேண்டும் எனவும் இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் பதியுதீன் கோரிக்கை விடுக்கின்றார். 

 அரசாங்கம் கருத்தில் கொள்ளாதபோது அதற்கெதிராக எதிர்ப்பினை வெளிப்படுத்துவது சாதாரண விடயமாகும். மற்றுமொரு சமூகத்தின் சொத்துக்களை மட்டுமல்லாது உள ரீதியாக அவர்களை வருத்தும் பாதிப்புகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென்பது ஒட்டுமொத்த கோரிக்கையாகும். அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்துவது மட்டுமன்றி இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தி அவற்றிற்கு நிரந்தரத் தீர்வினையும் காண வேண்டும். 

கலகொட ஞானசார தேரர் 
எவ்வாறெனினும், இது தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரருடன் தொடர்பினை ஏற்படுத்தியபோது சட்டரீதியான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க முடியாதெனத் தெரிவித்தார். எனினும் தனக்கும் முஸ்லிம்களுக்கும் அல்லது வேறு சமயப் பிரிவினருக்கும் இடையே எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனத் தெரிவித்தார். இன ரீதியான பதற்றங்கள் ஒருசிலராலேயே பரப்பப்படுகின்றன.

ஆனால் அவர்களது செயற்பாடுகள் பலரால் அங்கீகரிக்கப்படவில்லை. சில தீவிரபோக்குடைவர்கள் மற்றும் இனவாதிகளின் செயற்பாடுகளால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

அத்துடன் மக்கள் தவறாக வழிநடாத்தப்பட்டுள்ளனர். எவ்வாறெனினும் பல்சமய மற்றும் பல்லின நாடு என்ற வகையில் நாம் ஒற்றுமையுடனனும் சமாதானத்துடனும் ஐக்கிய இலங்கையினுள் ஒரு குழுவினராக வாழ வேண்டும். அதுதான் எமது பிரச்சினைளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நாடு என்ற வகையில் முன்னேற்றம் காண்பதற்கும் ஒரேயோரு வழியாகும்.