Verified Web

செயற்­தி­ற­னற்ற அர­சாங்கம்

2017-06-16 11:46:31 Administrator

நாட்டில் ஆட்­சி­யி­லுள்ள தேசிய அர­சாங்­கத்தின் வினைத்­தி­ற­னின்மை மற்றும் செயற்­தி­ற­னின்மை என்­பன நாட்டை மென்­மேலும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்­லுமா எனும் கவ­லையை தோற்­று­வித்­துள்­ளது.

நல்­லாட்சி எனும் கோஷத்­துடன் ஆட்­சிக்கு வந்த இந்த இரு கட்சி தேசிய அர­சாங்­கத்­தினால் நாட்டின் நிர்­வா­கத்தை திறம்­பட முன்­கொண்டு செல்ல முடி­ய­வில்லை என்­பது தற்­போது நிரூ­ப­ண­மாகி வரு­கி­றது.

வெறு­மனே அமைச்­ச­ர­வையில் மாற்­றங்­களைக் கொண்டு வரு­கின்­றார்­களே தவிர அவற்றின் செயற்­தி­றனை அதி­க­ரிப்­பதில் எந்­த­வித முன்­னேற்­றங்­க­ளையும் காண முடி­ய­வில்லை.

இன­வாத சக்­திகள் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் மீளத் தலை­தூக்கி இன மத நல்­லி­ணக்­கத்தை சீர்­கு­லைத்து வரு­கின்ற போதிலும் அதனைக் கட்­டுப்­ப­டுத்த இந்த அர­சாங்­கத்­தினால் முடி­ய­வில்லை. நீதி­மன்­றத்­தினால் பிடி­வி­றாந்து பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள ஒரு சாதா­ரண பிக்­குவைக் கூட கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்தத் திரா­ணி­யற்ற நிலை­யி­லேயே இந்த அர­சாங்கம் இருந்து கொண்­டி­ருக்­கி­றது.
கடந்த வரு­டமும் இவ்­வ­ரு­டமும் பாரிய அனர்த்­தங்கள் நாட்டில் ஏற்­பட்­டன.

இருப்­பினும் இவற்றை சரி­யாக எதிர்­கொள்­ளவும் முகாமை செய்­யவும் மக்­களை அதன் பாதிப்­பு­க­ளி­லி­ருந்து மீட்­கவும் அரச இயந்­திரம் தவ­றி­விட்­டது.

ஊழல் மோச­டி­களைப் பொறுத்­த­வரை கடந்த அர­சாங்­கத்தைப் போலவே இந்த ஆட்­சி­யிலும் உள்­ள­ரங்­க­மாக பல்­வேறு மோச­டி­களும் அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களும் அரங்­கே­றவே செய்­கின்­றன.

சட்­டத்தை நிலை­நாட்ட வேண்­டிய பொலிசார் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு ஜால்ரா அடிப்­ப­வர்­க­ளா­கவும் தமது கடந்த கால எஜ­மா­னர்­க­ளுக்கு விசு­வா­சத்தை வெளிப்­ப­டுத்­து­ப­வர்­க­ளு­மா­கவே நடந்து கொள்­கி­றார்கள்.

இப்­பின்­ன­ணியில் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் தமது கட்­சி­களின் நலன்­க­ளையும் வாக்கு வங்­கி­க­ளையும் குறி­வைத்து நடந்து கொள்­கி­றார்­களே தவிர தம்மை நம்பி வாக்­க­ளித்த மக்­களை நட்­டாற்றில் விட்­டு­விட்­டார்கள்.

இவ்­வாறு மிகவும் கவலை தரும் நிலை­யி­லேயே அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் சென்று கொண்­டி­ருக்­கின்­றன. இந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி கடந்த கால ஆட்­சி­யா­ளர்கள் மக்கள் மத்­தியில் மீண்டும் தலை­காட்­டவும் தம்­மிடம் நாட்டின் ஆட்­சியை ஒப்­ப­டைக்­கு­மாறும் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கி­றார்கள்.

நாட்டு மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் இன்று எல்லா அர­சியல் தரப்­பு­களும் ஒரே குட்­டையில் ஊறிய மட்­டை­களே. யாரையும் திற­மா­ன­வர்கள் என்று விரல் நீட்ட முடி­யாத நிலை­யி­லேயே இலங்­கையில் அர­சியல் இருந்து கொண்­டி­ருக்­கி­றது.

இந் நிலை மாற்­றப்­பட வேண்டும். அதற்­காக தூய்­மை­யான சிவில் சமூக சக்­திகள் களத்தில் இறங்கி உழைக்க வேண்டும்.

சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்களிலுள்ள சிவில் மற்றும் மத தலைவர்கள் ஒன்றுபட்டு இது தொடர்பில் மக்களை அறிவூட்டி அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்க முன்வர வேண்டும். இன்றேல்  நாடு நம் கண்முன்னேயே சின்னாபின்னமாகிப் போவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும்.