Verified Web

அளுத்கமை முதல் மஹியங்கனை வரை

2017-06-15 11:22:14 Administrator

 

- எம்.எம்.ஏ.ஸமட் -
உல­க­ளா­விய ரீதியில் இஸ்­லாத்தின் வளர்ச்­சியும் முஸ்­லிம்­களின் விருத்­தியும் இஸ்­லாத்­தி­னதும் முஸ்­லிம்­க­ளி­னதும் எதி­ரி­களை கிலி­கொள்ளச் செய்­தி­ருக்­கி­றது.

அச்­சத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. அதற்­கான நவீன பெயர்தான் இஸ்­லா­மிய போபியா என அழைக்­கப்­ப­டு­கி­றது. 

இஸ்­லாத்­தி­னதும் முஸ்­லிம்­க­ளி­னதும் வளர்ச்சி குறித்த அச்­ச­மா­னது இன்று நேற்று உரு­வா­ன­தல்ல. பல நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்­பி­ருந்தே எதி­ரி­க­ளிடம் உரு­வா­கி­விட்­டது. அதன் வெளிப்­பா­டுதான் உல­க­ளவில் முஸ்­லிம்­களின் சமூக, பொரு­ளா­தார, அர­சியல் கட்­ட­மைப்­புக்கள் சீர­ழிக்­கப்­பட்டு சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்டு வரு­கின்­ற­மை­யாகும்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நவீன அழிப்பு நட­வ­டிக்­கைகளின் ஆரம்பம் 2001ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 11ஆம் திகதி  நியுயோர்க் நக­ரி­லுள்ள இரட்டை வர்த்­தகக் கோபுரத் தாக்­குதல் நாடகத்­துடன் ஆரம்­பித்தது. அதன் பின்னர் இஸ்­லா­மிய நாடு­களில்  ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக கிளர்ச்­சி­யா­ளர்­களை உரு­வாக்கி கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கும், மக்­க­ளுக்கும் மனி­தா­பி­மான உதவி வழங்­கு­வ­தாக அந்­நா­டு­க­ளுக்குள் நுழைந்து  குறிப்­பாக ஈராக், லிபியா போன்ற நாடு­களின் வலி­மை­மிக்க அர­சியல் தலை­வர்­க­ளையும் அந்­நா­டு­களின் சமூக, பொரு­ளா­தார, அர­சி­ய­லையும்  அழித்து, சின்­னா­பின்­ன­மாக்கி இலட்­சக்­க­ணக்­கான மக்­களை கொன்ற­ழித்து, அக­தி­க­ளாகவும், அங்­க­வீ­னர்­க­ளா­கவும் ஆக்­கி­யதன் பின்­ன­ணியில்  இஸ்­லாத்தின் எதி­ரி­க­ளி­டத்தில் காணப்­படும் இஸ்­லா­மிய போபி­யாதான் என்­பதில் மாற்றுக்கருத்து இருக்க முடி­யாது. 

இஸ்லாம் வெறுத்த தீவி­ர­வா­தத்­தை­யும் பயங்­க­ர­வா­தத்­தையும் இஸ்­லா­மிய பெயர்­தாங்­கி­ய­வர்­களைக் கொண்டு அமைப்­புக்­களை உரு­வாக்கி, முஸ்­லிம்­களை அழித்துக் கொண்­டி­ருக்கும் இஸ்­லாத்தின் எதி­ரி­களின் மற்­று­மொரு கைவ­ரி­சைதான் தற்­போது மத்­திய கிழக்கில் ஏற்­பட்­டி­ருக்கும் அர­சியல் நெருக்­கடி நிலை­யாகும். 

வளை­கு­டாவை நெருக்­க­டிக்குள் தள்ளி கட்டார் நாட்­டுக்கு எதி­ராக சவூதி உள்­ளிட்ட ஏனைய ஆறு நாடுகள் முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கை­களின் பின்­ன­ணியில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் சவூதி விஜ­யமும் அவர் 52  நாடு­களின் தலை­வர்கள் மத்­தியில்  ஆற்­றிய உரையும் ஊடகப் பயங்­க­ர­வா­தமும் ஐக்­கிய அரபு இரா­ஜ்­யத்தின் அமெ­ரிக்­கா­வுக்­கான தூது­வ­ராகக் கரு­தப்­ப­டு­கின்ற யூசுப் குதைபா என்­ப­வரின் மின்­னஞ்சல் திரு­டப்­பட்டு அவை கசி­ய­வி­டப்­பட்­ட­மையும் அவ­ருக்கும் இஸ்­ரே­லுக்­கு­மி­டை­யி­லான தொடர்பும் என பல்­வேறு பின்­னணிக் கார­ணிகள் காணப்­படும் நிலையில், மத்­திய கிழக்கு நாடு­களின் அர­சியல், பொரு­ள­தார மற்றும் சமூகக் கட்­ட­மைப்பு சிக்­கல்­களை எதிர்­நோக்­கி­யி­ருக்­கி­றது.

வளை­கு­டாவின் சம­கால நிலை­மைகள் தொடர்­பில பிள்­ளை­யையும் கிள்ளி தொட்­டி­லையும் ஆட்­டி­விட்ட மேற்­குலக இஸ்­லா­மிய எதி­ரிகள் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்­டி­ருக்கும் இக்­கால கட்­டத்தில், இலங்கை வாழ் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பௌத்த சிங்­கள கடும்­போக்­கா­ளர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கைகள் குறித்து கடந்த காலங்­களில் அவ்­வ­மைப்­புக்­க­ளுக்கு உர­மூட்­டி­ய­வர்கள் தற்­போது முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இந்த அரசின் மீது குற்­றஞ்­சு­மத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அரசும் இவ்­வன்­மு­றை­யா­ளர்­களை அடை­யாளம் காண்­ப­திலும் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­திலும் காலம் தாழ்த்தி வரு­கி­றது என்ற நிதர்­ச­னங்­க­ளுக்கு மத்­தி­யில் கடும்­போக்­கா­ளர்கள் இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஏற்­ப­டுத்­து­கின்ற நெருக்­க­டிகள் இன்று நேற்று ஆரம்­பித்­த­தல்ல.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள்
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் இந்­நாடு சுதந்­தி­ர­ம­டை­வ­தற்கு முன்­பி­ருந்தே தொடங்கி விட்­டது. அதன் வர­லாற்றுப் பதி­வு­களை மீட்­டுப்­பார்க்கும் காலத்­திற்குள் நாம் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்றோம். ஏனெனில், ஆங்­கங்கே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற தாக்­குதல் சம்­ப­வங்கள் இந்­நாட்டில் அமை­தி­யாக வாழும் முஸ்­லிம்­களின் நிம்­ம­தியைச் சீர்­கு­லைத்து பெரும் அழி­வுக்குள் தள்­ளி­வி­டு­வ­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சியே என்­பதில் எவ்­வித சந்­தே­க­மு­மில்லை. 

இருப்­பினும், அநி­யாயம் இழைக்­கப்­பட்ட சமூ­க­மாக வாழும் முஸ்­லிம்­க­ளி­னது பிரார்த்­த­னைக்கும் இறை­வ­னுக்­கு­மி­டையில் எவ்­வித திரை­யு­மில்லை என்ற நம்­பிக்­கையில் பொறுமை காப்­பது நமது தேவை­யா­க­வுள்­ளது. விளக்கில் வண்டு விழுந்த கதைக்கு முஸ்­லிம்கள் ஆகி­வி­டாமல் இருப்­ப­தற்கு பொறு­மையும் நிதா­னமும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

ஏனெனில், இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட நெருக்­க­டி­யான கால வர­லாற்றைப் பின்­னோக்கி நோக்­கு­கின்­ற­போது,  மேற்­குலக ஏகா­தி­பத்­தியவாதி­களின் ஆட்­சிக்­கா­லத்தில் அவர்­களின் மறை­முக ஆத­ர­வுடன் 1915 ஆம் ஆண்டின் மே மாதத்தின் பிற்­ப­கு­தியில் ஆரம்­பித்து அதே ஆண்டின் ஜூன் மாதத்தின் நடுப்­ப­கு­தியில் நிறை­வுக்கு வந்­த முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன வன்­மு­றை­ பல்­வேறு அழி­வு­களை அக்­கால முஸ்­லிம்­களைச் சந்­திக்கச் செய்­துள்­ளது. உயிரிழப்பு முதல் சொத்­த­ழிவு வரை இத்­தாக்­கு­தல்­க­ளினால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­நாட்டில் முஸ்­லிம்­களின் வளர்ச்­சி­ சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் பார்­வையை தொடர்ச்­சி­யாகக் குத்திக் கொண்­டி­ருந்த போதி­லும் பல்­வேறு கோணங்­களில் அவற்றின் வெளிப்­பா­டுகள் அரங்­கேற்­றப்­பட்டு வந்த போதிலும்  பெரும்­பான்மைக் கட்­சி­களின் அர­சியல் தேவை­க­ளுக்­காக முஸ்­லிம்­களின் ஆத­ரவு இன்­றி­ய­மை­யா­த­தாக இருந்­த­மை­யினால், பேரி­ன­வா­தத்தின் நேர­டித்­தாக்­கு­தல்­களை பெரும்­பான்மை கட்சி அர­சாங்­கங்கள் அடக்கி வந்­தன. 

இருப்­பினும், முஸ்­லிம்­களை நெருக்­க­டிக்குள் தள்ளும் பேரி­ன­வாதத்தின் திட்­ட­மா­னது நேர­டி­யா­கவல்­லாது மறை­மு­க­மாகத் திசை­மாற்­றப்­பட்­டது.  வடக்கு கிழக்கில் ஒரே மொழி பேசும் இனங்­க­ளாக வாழ்ந்த முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் தங்­க­ளுக்குள் மோதிக்­கொள்­ளவும் ஒரு­வரை ஒருவர் ஜென்ம விரோ­தி­க­ளாக வர­லாற்று நெடுங்­கிலும் சந்­தே­கக் கண்­கொண்டு பார்க்­கவும் பௌத்த சிங்­கள பேரி­ன­வாதம் சூழ்ச்சி செய்­தது. 

இச்­சூழ்ச்­சி­யினால் காலத்­திற்குக் காலம் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் அடிக்­கடி மோதிக்­கொண்­டனர். ஆயுதமேந்­திய தமிழ் இளை­ஞர்­களைக் கொண்ட அமைப்­புக்­க­ளினால் முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­ட­மையும், தாக்­கப்­பட்­ட­மையும் அதற்கு பதி­லாக முஸ்­லிம்கள் தரப்­பி­லி­ருந்தும் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­ற­மை­யும என்ற இரு சமூ­கங்­களும் விளங்கிக் கொள்ளக் கசப்­பான சம்­ப­வங்கள் குறிப்­பாக 1990 ஆம் ஆண்டு வரை வடக்கு கிழக்கில் நீடித்­தது. அந்தக் கசப்­பான வர­லாற்றுத் தொடரின் பெரும் தவ­றுதான் வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­ட­மை­யாகும். இந்த வர­லா­றுகள் நம்முன் நிழ­லா­டிக்­கொண்­டி­ருக்கும் சூழ்­நி­லையில், முஸ்­லிம்­க­ளு­க்கு எதி­ரான செயற்­பா­டுகள் பொது­ப­ல­சேனா என்ற அமைப்பின் ஆரம்­பத்­துடன் வலு­வ­டைந்­தது என்று கூறலாம்.

2012 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட பொது­ப­ல­சேனா மற்றும் அவற்­றோடு கைகோர்த்து செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் கடும்­போக்­கு­வாத அமைப்­புக்­களின் மத­நிந்­த­னைகள், வெறுப்­பூட்டும் பேச்­சுக்கள் இந்­நாட்டில் வாழும் சிறு­பான்மை சமூ­கங்­களை வெகு­வாகப் பாதித்­தி­ருக்­கி­ன்றன. அதே நேரத்­தி­ல் பௌத்த சிங்­கள அப்­பாவி இளை­ஞர்கள் மத்­தியில் இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்­களின் வளர்ச்சி மீது அச்­சத்­தையும் காழ்ப்­பு­ணர்ச்­சி­யையும் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

பொது­ப­ல­சோன உரு­வான காலம்­தொட்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களின் பட்­டி­யல்கள் தொடர்ந்து நீண்­டு­கொண்­டுதான் செல்­கி­றது. 2013 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதலாம் திகதி அநு­ரா­த­புரம் மல்­வத்து ஓயா பள்­ளி­வா­ச­லையும் அங்கு வாழ்ந்த முஸ்­லிம்­களின் குடி­யி­ருப்­புக்­க­ளையும் அகற்றக் கோரி  பிக்­குகள் மேற்­கொண்ட போராட்­டத்­துடன் தொடங்­கிய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் இன்னும் ஓய­வில்லை.

2013 ஆம் ஆண்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக 250 தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இதில் 15 பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு 2014 ஆம் ஆண்­டிலும் பல்­வேறு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. கடந்த ஆட்­சியின் இறு­திக்­கால கட்­டங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல தாக்­குதல் சம்­ப­வங்கள் கடும்­போக்­கா­ளர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கி­ன்றன.

2014 இல் தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அகற்ற எடுத்த முயற்சி, வீதி அபி­வி­ருத்தி என்ற பெயரில் பள்­ளி­வா­சலை அண்டி வாழ்ந்த மக்­களை வெளி­யேற்­றி­யமை, 300 வருட பூர்­வீக வர­லாற்றைக் கொண்ட மாவ­னல்லை தெவ­ன­கல பிர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்­லிம்­களை வெளி­யேற்ற மேற்­கொள்­ளப்­பட்ட  முயற்சி எனத் தொடர்ந்த கடும்­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டுகள், 2014 ஜூன் 15 ஆம் திகதி அதா­வது, இன்­றைய தினத்தில் இற்­றைக்கு 3 வரு­டங்­க­ளுக்கு முன் அளுத்­­க­மையில் நேரடி இன­வெ­றி­யாட்­ட­மாக அரங்­கேற்­றப்­பட்­டது.

கறுப்பு ஜூன் ஆக இன்­றைய நாளை இந்­நாட்டு முஸ்­லிம்­களின் வர­லாற்றில் எழுதச் செய்­தது. சட்­டமும் நீதியும் புதைக்­கப்­பட்டு அரா­ஜகம் சில மணித்­தி­யா­லங்கள் அளுத்­கமையில் தாண்­டவமாடி­யது. ஜன­நா­யகம் கண்ணீர் சிந்தச் செய்­யப்­பட்டு பேரி­ன­வாதம் அகோரம் பெற்­றது இன்­றைய தினத்­தில்தான்

ஜன­நா­ய­க ­தே­சமும் பேரி­ன­வா­தத்தின் அகோ­ரமும் 
பௌத்த பிக்­குவை ஏற்றி வந்த வாகன சார­திக்கும் முச்­சக்­கர வண்டி சார­திக்­கு­மி­டையே இடம்­பெற்ற தனி­நபர் பிரச்­சினை ஒரு சமூ­கத்தை நிலை­கு­லையச் செய்­தது. பேரி­ன­வா­தத்தின் இலக்­கு­களை நிறை­வேறச் செய்­தது. கறை­ப­டிந்த கறுப்பு ஜூனாக வர­லாற்றில் எழுதச் செய்­தது. பேரி­ன­வா­தத்தின்  வெறி­யாட்டம் முஸ்­லிம்­களின் உயிர்­களைக் காவு­கொண்டு உடல்­களை குரு­தி­பாயச் செய்து  வீடு­க­ளையும் வர்த்­தக நிலை­யங்­க­ளையும் வழி­பாட்­டுத்­த­லங்­க­ளையும் எரி­யூட்­டி­யது.

மாண­வர்­களின் கல்வி அடை­யா­ளத்தை அழித்­தது. பாட­சாலைக் கல்வி நட­வ­டிக்­கை­க­ளைப் பாதித்து சின்­னஞ்­சி­றார்­களின் சின்ன மனங்­களில் அழி­யாத வடுக்­களை ஏற்­ப­டுத்­தி­யது. இவ்­வாறு அளுத்­கமை, தர்ஹா நகர் மற்றும் பேரு­வளைப் பிர­சே­தங்­களைச் சேர்ந்த குழந்­தைகள், சிறு­வர்கள், பெண்கள், முதி­ய­வர்கள் என ஒட்­டு­மொத்த முஸ்லிம் மக்­க­ளி­னதும் சமூக, பொரு­ளா­தார கட்­ட­மைப்­புக்­களைச் சிதைத்­தது. இத்­தனை அழி­வு­களுக்கும்  பொது­பல சேனாவின் செய­லா­ளரின் இன­வெ­றுப்புப் பேச்சே கார­ண­மென அப்­போது தெரி­விக்­கப்­பட்­டது.

அன்­றைய அரசு இக்­க­டும்­போக்­கா­ளர்­களின் நட­வ­டிக்­கை­களைக் கட்­டுப்­ப­டுத்தத் தவ­றி­யதன் விளைவு ஆட்சி மாற்­றத்­திற்கும் வழி­கோ­லி­யது. ஆனாலும், 2015 ஆம் ஆண்டில் உரு­வான இக்­கூட்­டாச்­சி­யிலும் கடும்­போக்­கா­ளர்­களும் அவர்­களின் செயற்­பா­டு­களும் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதே கவ­லை­ய­ளிக்கும் விடயம் மாத்­தி­ர­மின்றி சந்­தே­கங்­க­ளையும் உரு­வாக்­கி­யு­முள்­ளது.

ஏனெனில், 2014 ஜூனில்  அளுத்­க­மையில் ஆரம்­பித்த இன­வா­தத்தின் இன­வெ­றி­யாட்டம் 2017 ஜூனிலும் மஹி­யங்­கனை வரை தொடர்ந்­தி­ருக்­கி­றது. 20 வரு­ட­கா­ல­மாக மஹி­யங்­கனைப் பிர­தே­சத்தில் சிங்­கள மக்­க­ளோடு அன்னியொன்­ய­மாக வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டி­ருந்த முஸ்லிம் வர்த்­த­கரின் வர்த்­தக நிலையம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்டு அவரின் பொரு­ளா­தாரம் அழிக்­கப்­பட்­டி­ருப்­பது மாத்­தி­ர­மின்றி அப்­பி­ர­சேத்­தி­லுள்ள முஸ்லிம் வர்த்­த­கர்­க­ளுக்கு இன­வா­தி­க­ளினால் அச்­சு­றுத்­தலும் விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அங்­குள்ள முஸ்லிம் வர்த்­த­கர்கள் அச்­சத்தில் உறைந்­து­போ­யி­ருக்­கி­றார்கள். வர்த்­தக நிலை­யங்­க­ளுக்­கான பாது­காப்பை வேண்­டி­நிற்­கி­றார்கள்.

2015 ஆம் ஆண்டில் உரு­வான நல்­லாட்சி என்று அழைக்­கப்­படும் கூட்­டாட்­சியின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 100க்கு மேற்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. ஒரு சில சம்­பங்­க­ளுக்­கான சூத்­தி­ர­தா­ரி­யென ஓரி­ருவர் கைது செய்­யப்­பட்­டாலும். இச்­சம்­ப­வங்­களின் மூலவேர் எங்­கி­ருந்து உரு­வா­கி­றது என்­பதைக் கண்­ட­றி­யப்­ப­டு­வ­தற்கு காலம் தாழ்த்­தப்­ப­டு­வது பல்­வேறு சந்­தே­கங்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. ஜன­நா­ய­கத்­தையும் சமத்­து­வத்­தையும் சட்­டத்­தையும் கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இலங்கை ஒரு ஜன­நா­யக நாடு. நாம் ஒரு ஜன­நா­யக நாட்டில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். மக்­க­ளுக்கு நல்­வாழ்வு கிட்டச் செய்­வதே ஜன­நா­ய­கத்தின் குறிக்­கோ­ளாகும். ஜன­நா­யக நாட்டில் வாழும் மக்­க­ளுக்கு சுதந்­தி­ர­மாக வாழும் உரி­மை­யு­முண்டு. ஜன­நாயம் என்­பது பெரும்­பான்மை மக்­களின் விருப்பை நிறைவு செய்­வ­தில்லை.

எந்­த­வொரு இனத்­திற்கு எதி­ரா­கவும் அதி­காரம் செயற்­பட ஜன­நா­யகம் அனு­ம­திக்­க­வு­மில்லை. ஒரு ஜன­நா­யக நாட்டில் வாழும் சிறு­பான்மை சமூ­கத்தின் அனைத்துத் துறை­க­ளிலும் ஜன­நா­யகம் அதன் நிலையைத் தக்க வைத்­துக்­கொள்ள வேண்டும். சம உரி­மை­யு­டனும், பாது­காப்­பு­டனும் வாழ வழி­ய­மைக்க வேண்டும்.  சமத்­து­வமும் பாது­காப்பும் கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட்டு இன ரீதி­யான, மத ரீதி­யான நிந்­த­னைகள் அதி­க­ரிக்­கின்­ற­போது ஜன­நா­யகம் அத­னது வடி­வத்தை மாற்­றிக்­கொள்­கி­றது. ஜன­நா­யகத் தேசத்தில் சிறு­பா­ன்­மை­யி­னரின் இருப்பு கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது 

ஒரு ஜன­நா­யக நாடு என்­பது அந்த நாட்டில் வாழு­கின்ற ஒரு இனத்­திற்கு மட்டும் சொந்­த­மா­ன­தல்ல. ஏனெ­னில், அந்த நாட்டின் அர­சாங்­கத்தை தெரிவு செய்­வது ஓர் இனம் மாத்­தி­ர­மல்ல. அந்­நாட்டில் வாழ்கின்ற எல்லா இனத்தைச் சார்ந்த மக்­க­ளும்தான் வாக்­க­ளித்து அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­கி­றார்கள். எல்லா இன மக்­க­ளும்தான் அந்த அர­சாங்­கத்­திற்கு வரி செலுத்­து­கி­றார்கள். இவ்­வா­றான நிலையில் அர­சாங்­கமும், பாது­காப்­புத்­த­ரப்பும் ஓர் இனத்­திற்­கு­ரி­யது என அழிச்­சாட்­டியம் புரியும் பேரி­ன­வா­த அமைப்­புக்கள் கூக்­குரல் இடு­வதில் எவ்­வித நியா­ய­மு­மில்லை.

இலங்கை ஒரு ஜன­நா­யக நாடு என்ற வகையில் இந்த நாட்டில் பரம்­பரை பரம்­ப­ரை­யாக வாழும் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் நாட்­டுக்­கு­ரிய மக்­கள்தான். இந்த நாட்டில் பிறந்து இந்­நாட்­டுத் ­தண்­ணீரைக் குடித்து, இந்­நாட்டின் காற்றைச் சுவா­சித்து வாழும் இந்த இரு இனமும் இன்­னு­மொரு நாட்­டிக்குச் சென்று வாழ முடி­யாது. இந்த நாடும் இந்த இரு இனத்­திற்கும் சொந்­த­மா­ன­துதான்.    

எந்­த­வொரு சமூ­கமும் இன்­னு­மொரு சமூ­கத்தை அடக்­கி­யொ­டுக்கி வாழ விரும்பக் கூடாது. ஒரு சமூ­கத்­தினர் அல்­லது ஒரு இனத்­தினர் மற்­றைய சமூ­கத்தை இழி­வு­ப­டுத்தி, தாழ்த்தி, பொரு­ளா­தா­ரத்தை பிடுங்கி, அழித்து  வாழ விரும்பம் கொள்ளக் கூடாது. எந்­த­வொரு இனத்தின் மத்­தி­யிலும் இன்­னு­மொரு இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் மனப்­பாங்கு ஏற்­ப­டுத்தக் கூடாது. அவ்­வாறு ஏற்­ப­டு­கின்­ற­போது இன முரண்­பா­டு­களும். அமை­தி­யின்­மையும் வன்­மு­றை­களும் தோற்றம் பெறு­கின்­றன.

உல­கி­லுள்ள ஜன­நா­யக நாடு­களில் வாழும் சிறு­பான்மை சமூ­கங்கள் எதிர்­நோக்­காத நெருக்­க­டி­களை இந்­நாட்டில் வாழும் தமிழ், - முஸ்லிம் சிறு­பான்மை சமூ­கங்கள் எதிர்­நோக்­கு­கி­றது என்று கூறு­வதில் தவ­றேதும் இருக்க முடி­யாது.

உல­கி­லுள்ள ஜன­நா­யக நாடு­களின் தர­வ­ரி­சைப்­படி முதன்மை பெறு­கின்ற சுவீடன், டென்மார்க், பின்­லாந்து, நோர்வே, நியூ­சி­லாந்து, சுவிட்­ச­ர்லாந்து, பெல்­ஜியம், அவுஸ்­தி­ரே­லியா, கனடா, ஜேர்­மனி, அயர்­லாந்து, அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா ஆகிய நாடு­க­ளிலும் சிறு­பான்மை சமூ­கங்கள் வாழ்ந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றன.

இந்­நா­டு­க­ளி­ளெல்லாம் இன­வாதம் தலை­வி­ரித்­தா­ட­வில்லை. இருப்­பி­னும் இஸ்­லா­மிய எதி­ரி­க­ளினால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள இஸ்லாம் பெயர்­தாங்கிய தீவி­ர­வாத அமைப்­புக்­க­ளினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற தாக்­கு­தல்கள் மேற்­கு­லகில் வாழும் முஸ்­லிம்­களின் பாது­காப்­பையும் இருப்­பையும் தற்­கா­லத்தில் கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. மிக அண்­மையில் இலண்­டனில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலும் அதற்­கான உரி­மை­கோ­ரலும் அங்கு வாழும் முஸ்­லிம்­களின் மீது சந்­தேகப் பார்­வையை உரு­வாக்­கி­ய­ருக்­கி­றது என்­பதைச் சுட்­டிக்­காட்­டு­வது அவ­சி­ய­மாகும்.

சம­கால செயற்­பா­டு­களும் அரசின் மீதான நம்­பிக்­கையும்
இலங்­கையில் பேரி­ன­வாதத்தின் நெருக்­க­டி­களும் அங்­காங்கே இடம்­பெறும் தாக்­கு­தல்­களும் அசௌ­க­ரி­யங்­க­ளையும் சொத்­த­ழி­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­னாலும், அவற்றின் செயற்­பா­டுகள் இன்றுவரை நீண்டு கொண்டு சென்­றாலும் இந்­நாட்டில் அமை­தியும் நல்­லி­ணக்­கவும் ஏற்­பட வேண்டும் என்று சிந்­திக்­கின்ற பெரும்­பான்மை இன மக்­க­ளோடு இணைந்து இன­வா­தத்­திற்கு எதி­ராகப் போரட வேண்­டிய பொறுப்பும் பொறு­மையும் முஸ்­லிம்­களின் இன்­றைய காலத்தின் தேவை­யா­க­வுள்­ளது. 

அளுத்­க­மையில் தொடங்­கிய பேரி­ன­வா­தத்தின் வெறி­யாட்டம் இன்று வரை மத நிந்­த­னை­யா­கவும், வெறுப்புப் பேச்­சா­கவும், சிலை வைப்­பா­கவும், தொல்­பொருள் அடை­யா­ளப்­ப­டுத்­த­லா­கவும், பலாத்­க­ர­மாகக் காணி­களை கைய­கப்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளா­கவும், பூர்­வீக காணி­களில், பிர­தே­சங்­களில் வாழ விடாமல் தடுப்­பற்­கான போலிப் பிர­சா­ரங்­க­ளா­கவும் அவற்றை பௌத்த சிங்­கள மக்கள் மத்­தியில் ஊதிப்­பெ­ருப்­பிக்கும் இன­வாத ஊது­குழல் ஊட­கங்­களின் செயற்­பா­டு­க­ளா­கவும், முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளுக்கு எதி­ரான போலிப்­பி­ரச்­சா­ரங்­க­ளா­கவும் என பல்­வேறு வடி­வங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் கடந்த இரு மாத­கா­ல­மாக பள்­ளி­வால்­களை குண்டு வைத்துத் தகர்ப்­ப­தாவும் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்­களை தீயிட்டுக் கொளுத்­து­வ­தா­கவும் மாறி நிற்­கி­றது. 

பேரி­ன­வா­தத்தின் முஸ்­லிம்கள் சார் இலக்­கு­களில் ஒன்­றான பொரு­ளா­தார அழிப்பு என்ற இலக்கை கடந்த இரண்டு மாதங்­களில் கச்­சி­த­மாக நிறை­வேற்றி இருக்­கி­றது. இந்­நி­லையில் இன ஒடுக்­கு­மு­றையை மேற்­கொண்டு வரு­கின்ற கடும்­போக்கு அமைப்­புக்கள் தடை செய்­யப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்­கைகள் வலுப்­பெற்று வரு­வது தொடர்பில் அர­சாங்கம் எதுவும் செய்­த­தாகத் தெரி­யவில்லை என பல்­வேறு தரப்­புக்­க­ளி­லி­ருந்து வெளி­வரும் கருத்­துக்கள் கருத்­திற்­கொள்­ளப்­பட வேண்­டி­ய­தாகும்.

கடும்­போக்­கு­வாத அமைப்­புக்கள் தொடர்­பிலும் சர்­வ­தே­சத்­திலும், உள்­ளூரிலும் எழுந்­துள்ள கருத்­துக்­க­ளுக்கும் கோஷங்­க­ளுக்­கு­மான விடை அர­சாங்கம் எடுக்கும் நட­வ­டிக்­கையில் தங்­கி­யுள்­ள­துடன் அதுவே  இன­வா­தத்­தீ­யினால் வலி­களைச் சுமந்து வாழும் மக்­களின் உள்­ளார்ந்த பாதிப்­புக்­கான வலி நிவா­ர­ணி­யா­கவும் இந்­நாட்டில் சக­வாழ்வும் சமாதா­னமும் ஜன­நா­ய­கமும் வளர்­வ­தற்­கான உர­மா­கவும் அமை­யும். 

இந்­நி­லையில், முஸ்­லிம்­களும் தமது செயற்­பா­டு­களை பேரி­ன­வா­தத்தின் காழ்ப்­பு­ணர்ச்­சிக்கு ஆளா­காத வகையில் மேற்­கொள்­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது. பள்­ளி­வ­ாசல்கள் நிறு­வப்­ப­டு­வது இறை­வனை வணங்­கு­வ­தற்­கா­க­வேதான். விளம்­ப­ரப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வல்ல. ஒரு பள்­ளி­வாசல் ஏதோவொரு பிர­தே­சத்தில் நிறு­வப்­பட்டால் அவற்றை சமூக ஊட­கங்­க­ளிலும் ஏனைய ஊட­கங்­க­ளிலும் அர­சியல் நல­னுக்­காவும் வேறு தேவை­க­ளுக்­கா­கவும் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. சம­கா­லத்தில் இவ்­வாறு விள­ம்­ப­ரப்­ப­டுத்­து­வது எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பது உண­ரப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

அதே­போன்று தங்­க­ளி­ட­மி­ருக்கும் செல்­வத்­தினை அலங்­கா­ரப்­ப­டுத்தும், பிர­பல்யப் படுத்தும் ஆடம்­பரத் திரு­ம­ணங்கள் மற்றும் வைபவங்களிலும், பள்ளிவசால்கள் முன்னாலும் தமது வாகனங்களின் காட்சிப்படுத்தல்கள் தொடர்பிலும் முஸ்லிம்கள் கவனம் செலுத்துவது அவசியமாகும். பெருமைக்கு மாவிடிக்கும் நமது செயற்பாடுகள் பேரினவாதத்தின் கண்களைக் குத்திக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சியானது பேரினவாதிகளை அச்சத்துக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. பல சந்தேகங்களை உருவாக்கியிருக்கிறது. அச்சந்தேகங்களுக்கு விடையாக நமது செயற்பாடுகள் அமைந்துவிடக் கூடாது.

உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பிரதான காரணமாக அமைது முஸ்லிம்களின் இன விருத்தி மற்றும் பொருளாதார விருத்தியாகும். இவற்றை அழிப்பதற்கான வழிகளையே இன்று பேரினவாதம் தேடிக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றின் பின்னணியில் இருப்பது ஒரு ஞானசார தேரர் மாத்திரமல்ல. 
ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் வடிவமைப்பின் கீழ் பலதரப்பட்டவர்களின வகிபாகத்துடன் ஒரு சிலரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற அழிப்பு நடவடிக்கைகள் அளுத்கமை முதல் மஹியங்கனை வரை இடம்பெற்றிருக்கிறது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் நிறுத்திக் கொள்வது அவசியமாகும். இந்த அவசியத்தின் அடிப்படையில் முஸ்லிம்களையும் முஸ்லிம்களினது பொருளதாரம், பாதுகாப்பு உட்பட எதிர்கால சந்ததியினரின் இருப்பு என்பவற்றையும் உறுதிப்படுத்துவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை முறையாகத் திட்டமிட்ட வடிவில் ஒன்றுபட்டு மேற்கொள்வதுடன் பேரினவாதத்தின் காழ்ப்புணர்ச்சியைத் தூணடும் செயற்பாடுகளிலுமிருந்து தவிர்ந்து கொள்வதும் காலத்தின் தேவையாகவுள்ளது. 

மறுபக்கம் இந்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதையும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை உருவாக்குவதையும் கோஷமாகக் கொண்டு சிறுபான்மை சமூகங்களின் பங்களிப்புடன் ஆட்சி பீடமேறிய இந்த நல்லாட்சி அரசு இந்நாட்டின் அமைதிக்கும் இன ஒருமைப்பாட்டுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் வேட்டு வைத்து செயற்படும் கடும்போக்காளர்களின் செயற்பாடுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுத்தாமல் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற அழுத்தங்களின் யதார்த்தத்தினை செயற்படுத்தும் போதுதான் இவ்வாட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கை வலுப்பெறும்.

இந்த நம்பிக்கையைக் கட்டியெழுபப்படுவதற்கு அல்லது கடும்போக்காளர்களின் செயற்பாடுகள் முழுமையாக அடக்கப்படுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என்பதே சிறுபான்மையின மக்களின் இன்றைய வினாவாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.