Verified Web

2014 ஜுன் 15 மறக்க.. மறைக்க முடியாத கரி நாள்

2017-06-15 11:09:03 Administrator

ஏ.ஆர்.எம்.பதியுதீன்
பேருவளை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்

தர்கா நகர், அளுத்­கமை, பேரு­வளை பகு­தி­களில் வாழும் சிறு­பான்மை இனத்­திற்கு எதி­ராக சரி­யா­ன­தொரு பாடம் புகட்ட வேண்டும் என பல காலங்­க­ளாக திரை­ம­றைவில் செயற்­பட்ட இன­வாதக் குழு ஒன்று 2014 ஜுன் 12ம் திகதி பொஸன் தினத்­தன்று தர்கா நகர் பதி­ர­ா­ஜ­கொட பன்­ஸ­லைக்கு அரு­கா­மையில் ஏற்­பட்ட சிறு சம்­ப­வ­மொன்றை பெரி­தாக்கி அப்­போ­தைய அரசின் அனு­ச­ர­ணை­யுடன் செயற்­பட்ட இவ்­வி­ன­வாதக் குழு 2014 ஜுன் 15ஆம் திகதி இதை அரங்­கேற்­றி­யது.இதனால் மூன்று உயிர்கள் காவு­கொள்­ளப்­பட்­டன. வர்த்­தக ஸ்தாப­னங்­களை கொள்­ளை­யிட்டு, தீ மூட்டி நாசம் செய்­தார்கள். ஆண்­டாண்டு கால­மாக வாழ்ந்து வந்த இருப்­பி­டங்­களை கொள்ளை அடித்து, தீயிட்டு அழித்­தார்கள்.

இச்­சம்­ப­வங்கள் இடம்பெற முன் இன­வாதக் குழுவின் அட்­ட­காசம் தொடங்­கவே இதைக் கட்­டுப்­படுத்தப் போவ­தா­கவும் இப்­ப­கு­தியில் வாழும் முஸ்­லிம்­களை வீட்டில் அடைத்து வைக்கும் நோக்கில் மேலிடம் அளுத்­கம பொலிஸ் பிரிவில் அவ­ச­ர­கால சட்­டத்தை மாலை 5.55 மணிக்கு அமு­லாக்கி முஸ்­லிம்­களை ஓரம்­கட்­டி­விட்டு இன­வாதக் குழுவை சுதந்­தி­ர­மாக இப்­ப­கு­தியில் நட­மாட விட்டு அநி­யா­யங்­களை அரங்­கேற்­றி­னார்கள்.

அவ­ச­ர­கால சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் நோக்­குடன் 2500க்கும் மேற்­பட்ட பொலிஸ், விசேட அதி­ரடிப் படை­யினர் நவீன ஆயு­தங்­க­ளுடன் பாது­காப்­புக்­காக ஆயுதம் தாங்­கிய பொம்­மை­க­ளாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் இன­வா­திகள் மிகச் சுதந்­தி­ர­மாக மூன்று மணி நேரத்­திற்குள் வெறி­யாட்டம் ஆடி எல்­லா­வற்­றையும் நாசம் செய்­தார்கள். காவல் படை­யி­னரை பாரா­மு­க­மாக இருக்­கு­மாறு மேலி­டத்­தி­லி­ருந்து உத்­த­ர­விட்ட அந்த மேல­தி­காரி யார்? காவல் துறை­யினர் இந்த அநி­யா­யத்தை தடுக்க முயற்சி எடுக்­கா­மைக்குக் காரணம் என்ன? என்­பன இப்­ப­குதி வாழ் மக்­களின் கேள்­விக்­கு­றி­யாகும். 

இச்­சம்­ப­வங்கள் நடை­பெற்று மூன்று ஆண்­டுகள் நிறை­வ­டைந்தும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் குறைகள் இன்­று­வ­ரையில் நிவர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்ட தலை­வர்கள் யார் என்று பொது­மக்­களால் இனங்­கா­ணப்­பட்ட நிலை­யிலும் இவர்­க­ளுக்கு எதி­ராக இந்த சம்­ப­வங்­களை முற்­ப­டுத்தி ஏற்­ப­டுத்­தப்­பட்ட நல்­லாட்சி அரசு நட­வ­டிக்கை எடுக்­காது மௌனம் சாதிப்­பது ஏன்? புரி­யாத புதி­ராக இருக்­கின்­றது. 

மேற்­படி சம்­ப­வங்­களால் பாதிக்­கப்­பட்ட  தர்கா நகர், அளுத்­கம, பேரு­வளை மக்­களின் பாதிப்­புக்கும் மேலும் பல கார­ணங்­க­ளுக்­கா­கவும் பழி தீர்க்­கவும், பாடம் புகட்­டவும் நாட்டு மக்கள் ஒன்­றி­ணைந்து அப்­போ­தைய அரசை வீட்­டுக்கு அனுப்­பி­வைத்­தார்கள். 2015 ஜன­வரி 8 ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லின்­போதும் அதனைத் தொடர்ந்து நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு முன்­ன­தா­கவும் 
மைத்­தி­ரி­பால சிறி­சேனவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவும் வெளி­யிட்ட தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இந்­நாட்டில் வாழும் எல்லா இன மக்­களும் சுதந்­தி­ர­மா­கவும் நிம்­ம­தி­யா­கவும் அவர்­க­ளது மத சுதந்­தி­ரத்தை எவ்­வித பாதிப்­பு­மின்றி செயற்­ப­டுத்த சந்­தர்ப்பம் கொடுக்­கப்­படும் என  உறு­தி­யாகக் கூறி­ய­மையால் முன்னாள் அர­சுக்கு தகுந்த பாடம் புகட்­ட­வென இந்­நாட்டில் வாழும் மூவின மக்­களும் ஒன்­றி­ணைந்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­தி­னார்கள்.

ஆனால் முன்னாள் ஆட்­சியில் அரசின் ஆத­ர­வுடன் இந்தப் பகு­தியில் பேயாட்டம் ஆடிய அந்த இன­வாதக் குழு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய் இப்­போதும் சுதந்­தி­ர­மா­கவும் முன்­ன­ரை­விடப் பல மடங்கு தைரி­யத்­து­டனும் அன்று அவர்கள் இப்­ப­கு­தியில் மாத்­திரம் ஆடிய பேயாட்­டத்தை இன்று நாட்டின் நாலா பாகங்­க­ளிலும் முஸ்­லிம்கள் எங்­கெங்கு வாழ்­கின்­றார்­களோ அங்­கெல்லாம் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை, பொரு­ளா­தார வளர்ச்­சியை அடி­யோடு இல்­லாமல் செய்ய, கரு­வ­றுக்க பகி­ரங்­க­மாக செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனைக் கண்டும் காணாத போக்கில் நல்­லாட்சி அரசு கண்­மூ­டியும், எது­வித காத்­தி­ர­மான அறிக்­கையை வெளி­யி­டாது வாய்­மூ­டியும் மௌனம் சாதிப்­பது எதற்­காக? 

சென்ற 8 ஆம் திகதி பொஸன் தினத்­தன்று இரவு ஓர் தொலைக்­காட்சி செய்­தியில், நல்­லாட்சி அரசின் அமைச்சர் ஒருவர் கழிவு அகற்றல் சம்­பந்­த­மாக ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரை பொலிஸார் முன்­னி­லையில் தூஷித்­த­தா­கவும் அவ்­வ­மைச்­ச­ருக்கு எதி­ராக ஏன்  சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அபிப்­பி­ராயம் ஒன்று முன்­வைக்­கப்­பட்­டது. ஊட­க­வி­ய­லா­ள­ருக்கு எதி­ராக ஒரு பொறுப்­புள்ள, அதுவும் நல்­லாட்சி அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சர் இவ்­வாறு முறை­கே­டாக நடந்­து­கொண்­ட­மையை நானும் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறேன்.

ஆனாலும் அவ்­வ­மைச்­ச­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கு முன்,  எமது நாட்டின் ஜனா­தி­பதி, பிர­தமர், நீதி­ய­ரசர், நீதி­மன்றம் போன்­ற­வற்றை கேவ­ல­மா­கவும் கீழ்த்­த­ர­மா­கவும் பொலி­ஸாரின் முன்­னி­லையில் சவால் விட்ட ஒரு­வ­ருக்கு எதி­ராக அரசு சட்ட நட­வ­டிக்கை எடுக்­காது மௌனம் சாதிப்­பது ஏன்? இந்­நாட்டில் நாம் நியா­ய­மான முறையில்  எமது பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளையும், மார்க்கக் கட­மை­களை நிம்­ம­தி­யா­கவும் செய்து கொண்டு ஏனைய சமூ­கங்­க­ளுடன் மிகவும் கண்­ணி­ய­மா­கவும் ஒற்­று­மை­யா­கவும் புரிந்­து­ணர்­வு­டனும் வாழ்ந்­து­கொண்­டி­ருக்கும் அதே­வேளை இனியும் அவ்­வாறு வாழவே விரும்­பு­கின்றோம்.

இதற்கு வழிவிடுவதைத்தான் நாம் நல்லாட்சி அரசிடம் எதிர்பார்க்கிறோம். 2014 ஜுன் 15 ஆம் திகதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வது, அந்தக் கரிநாள் நாசம் ஏற்படுத்த உத்தரவிட்டவர்கள் யார்? இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி, பிரதமர் தாமதிப்பது, இதை நல்ல முறையில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த தனிநபர் கமிஷன் ஒன்றை ஏற்படுத்த முன்வருவதில்லை. இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தினருக்கு இதன்பின்பு இப்படியான கலவரம் ஏற்படாமலும் பாதுகாக்க வேண்டியது நல்லாட்சி அரசின் கடனாகும்.