Verified Web

தமிழ் முஸ்லிம் உறவை பாதிக்கும் செயற்பாடுகள்

2017-06-14 11:03:39 Administrator

மூதூர் மல்­லி­கைத்­தீவு மணற்­சேனை பெரு­வெளிக் கிரா­மத்தில் அண்­மையில் மூன்று சிறு­மிகள் பாலியல் துன்­பு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட ஆறு சந்­தேக நபர்­களும் தற்­போது பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

பாட­சாலை மாண­விகள் மீதான இந்த துன்­பு­றுத்தல் சம்­பவம் வடக்கு கிழக்கில் பல்­வேறு அதிர்­வ­லை­களைத் தோற்­று­வித்­தி­ருந்­தது. குறிப்­பாக இதில் பாதிக்­கப்­பட்ட மாண­விகள் தமிழ் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­ப­தாலும் குற்­ற­வா­ளிகள் என சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட நபர்கள் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­ப­தா­லுமே இந்த விவ­காரம் வழ­மையை விட பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருந்­தது.

இதன் கார­ண­மாக சமூக ஊட­கங்கள் வாயி­லாக இரு சமூ­கங்­களின் மத்­தியில் கருத்து மோதல்கள் ஏற்­பட்­ட­துடன் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் தமிழ் - முஸ்லிம் மோதல் தோற்றம் பெற்­று­வி­டுமோ என்று அஞ்­சு­கின்ற அள­வுக்கு நிலைமை மோச­ம­டைந்­தி­ருந்­தது.
இருந்­த­போ­திலும் சந்­தேக நபர்கள் அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நிலையில், அவர்­களை பாதிக்­கப்­பட்ட மாண­வி­களால் அடை­யாளம் காண்­பிக்க முடி­ய­வில்லை. இதன் கார­ண­மா­கவே சந்­தேக நபர்கள் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதற்­கி­டையில் மேற்­படி பாலியல் துன்­பு­றுத்தல் சம்­ப­வத்­திற்கும் குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்ற நபர்­க­ளுக்கும் எந்­த­வித சம்­பந்­தமும் இல்லை எனவும் வேறு யாரோ செய்த குற்­றத்­திற்­காக திட்­ட­மிட்டு இவர்கள் மீது பழி சுமத்­தப்­ப­டு­வ­தா­கவும் முஸ்­லிம்கள் தரப்பில் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் மாண­விகள் மீதான பாலியல் துன்­பு­றுத்தல் சம்­பவம் வன்­மை­யாகக் கண்­டிக்­கத்­தக்­கது என்­ப­துடன் உச்­ச­பட்ச தண்­ட­னைக்­கு­ரி­ய­து­மாகும்.

அந்த வகையில் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் கண்­ட­றி­யப்­பட்டு அவர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு கடும் தண்­டனை வழங்­கப்­பட வேண்டும்.

அவர்கள் எந்த இனத்தை, மதத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் சரியே.

துர­திஷ்­ட­வ­ச­மாக இந்த சம்­ப­வத்தை சில சக்­திகள் தமது தீய நோக்­கங்­க­ளுக்கு சாத­க­மாக மாற்­றி­ய­மைத்து யுத்­தத்­திற்குப் பின்னர் ஒற்­று­மை­யா­கவும் புரிந்­து­ணர்­வு­டனும் வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் மத்­தியில் விரி­சலை ஏற்­ப­டுத்த முனை­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

இந்த சக்­தி­களின் செயற்­பா­டா­னது உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் தப்­பிக்­கவும் நிர­ப­ரா­திகள் தண்­டிக்­கப்­ப­டவும் கார­ண­மாக அமை­வ­துடன் மீண்டும் ஒரு இன­மு­று­க­லுக்கு வழி­ச­மைப்­ப­தா­கவும் அமைந்­துள்­ளது.

என­வேதான் இந்த விவ­கா­ரத்­துடன் சம்­பந்­தப்­பட்ட தரப்­புகள் பொலி­சாரும் சட்­டத்­த­ர­ணி­களும் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தற்கு அனு­ம­திப்­ப­துடன் பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்டவும் முன்வர வேண்டும்.

அத்துடன் அப் பகுதியில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உண்மையான குற்றவாளிகளை கண்டறியவும் பாடுபட வேண்டும். இதுவே பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கும் பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கும் பேருவதவியாக அமையும்.