Verified Web

தீ வைப்­பு­களின் பின்­ன­ணியில் பொது பல சேனா அமைப்பு

13 days ago Administrator

முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்கள் மீது தீ வைத்த குற்­றச்­சாட்டில் கடந்த வாரம் கைது செய்­யப்­பட்ட நபர் பொது பல சேனா அமைப்பின் முக்­கி­யஸ்தர் என்­பது விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிசார் பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்­ளனர்.

மஹ­ர­கம மற்றும் நுகோ­கொட பகு­தி­களில் நான்கு வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு தீ வைத்த குற்­றச்­சாட்டில் குறித்த நபர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். இந்த நபர் மேற்­படி அமைப்­புடன் 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்­பி­லி­ருப்­ப­தா­கவும் அதன் செயற்­பா­டு­களில் தீவி­ர­மாக பங்­கெ­டுத்து வரு­வ­தா­கவும் பொலிசார் தெரி­விக்­கின்­றனர்.

இதற்­க­மைய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக தீவிர பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வந்த பொது பல சேனா அமைப்பே இந்த தீ வைப்புச் சம்­பங்­க­ளுக்கு பின்­ன­ணியில் உள்­ளமை தெளி­வா­கி­யுள்­ளது. 

அந்த வகையில் மேற்­படி சந்­தேக நப­ரிடம் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணை­க­ளுக்­க­மை­வாக மேலும் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­படும் எனவும் பள்­ளி­வா­சல்கள் உட்­பட ஏனைய பகு­திகள் மீது தாக்­குதல் நடத்­திய சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­ப­டு­வார்கள் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இருப்­பினும் மேற்­படி சந்­தேக நபரை வழி­ந­டத்­திய பொது பல சேனா அமைப்பின் முக்­கி­யஸ்­தர்கள் யார் என்­பது கண்­ட­றி­யப்­பட்டு அவர்­களும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். தற்­ச­மயம் தலை­ம­றை­வா­கி­யி­ருக்கும் அவ்­வ­மைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் கைது செய்­யப்­ப­டு­வ­துடன் அவ­ரது சகாக்­களும் கைது செய்­யப்­பட்டு இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்டும்.

குறித்த அமைப்­பையும் அதன் செய­லா­ள­ரையும் அர­சாங்­கத்­தி­லுள்ள முக்­கிய அமைச்சர் ஒரு­வரே பாது­காத்து வரு­வ­தாக ஊட­கங்­களில் குற்­றச்­சாட்­டொன்று முன்­வைக்­கப்­பட்டு வரு­கி­றது. இந் நிலையில் இது தொடர்பில் அர­சாங்கம் தனது நேர்­மையை வெளிப்­ப­டுத்­து­வ­துடன் முஸ்லிம் மக்­களின் நிம்­ம­தி­யான வாழ்­வொ­ழுங்­குக்கும் வழி­செய்ய வேண்டும்.

அளுத்­கம வன்­மு­றைகள் நிகழ்ந்து சரி­யாக மூன்று வரு­டங்­க­ளா­கின்ற நிலையில் அது தொடர்பில் இன்­னமும் நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை. அவ்­வ­ளவு பாரிய அசம்­பா­விதம் நடந்தும் ஒருவர் கூட சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வில்லை. 

இந்த அர­சாங்கம் அளுத்­கம முஸ்லிம் மக்­க­ளுக்கு நீதி பெற்றுத் தரப்­படும் என வாக்­கு­று­தி­யு­ட­னேயே ஆட்­சிக்கு வந்­தது. ஆனால் அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்­கான எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை.

இந் நிலை­யில்தான் மீண்டும் கடந்த இரண்டு மாதங்­க­ளாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தலை­தூக்­கிய வன்­முறைச் சம்­ப­வங்­களை அர­சாங்­கமும் பொலி­சாரும் கட்­டுப்­ப­டுத்­தாது வேடிக்கை பார்க்­கின்­றனர் எனும் குற்­றச்­சாட்டு பர­வ­லாக முன்­வைக்­கப்­பட்ட நிலையில்தான் மேற்படி கைது இடம்பெற்றுள்ளது.

பொலிசார் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்ததையும் அவரது பின்னணியை வெளிப்படுத்தியதையும் நாம் வரவேற்கிறோம். அதேபோன்று ஏனைய சம்பவங்களின் சூத்திரதாரிகளையும் அவர்களது எஜமான்களையும் சட்டத்தின் முன் விரைந்து நிறுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.