Verified Web

தடைகள் கட்டாரை பாதிக்காது : மாற்று வழிகள் தயார்

2017-06-11 08:08:36 Administrator

தமிழில்
எம்.ஐ.அப்துல் நஸார்

கட்டார் வெளிநாட்டமைச்சர் மொஹமட் பின் அப்துர்ரஹ்மான் அல்தானி, சீ.என்.என். தொலைக்காட்சி அலைவரிசைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் கேள்வி :  உங்­க­ளது நாடு பிராந்­தி­யத்தில் ஸ்திரத்­தன்­மை­யினைச் சீர்­கு­லைத்­து­வரும் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்கம், அல்-­கைதா, சவூதி அரே­பி­யாவின் கிழக்கு மாகா­ணத்தில் காதிப் பிர­தே­சத்தில் ஈரானின் ஆத­ர­வோடு செயற்­பட்­டு­வரும் சில ஐ.எஸ். அமைப்­பின் பிரி­வுகள் உள்­ளிட்ட பல்­வேறு பயங்­க­ர­வாத மற்றும் பிரி­வி­னை­வாத அமைப்­புக்­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து வரு­வ­தாக சவூதி அரே­பி­யா­வினால் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டு உண்­மையா அல்­லது பொய்யா?


பதில் : இந்தக் குற்­றச்­சாட்டு பல்­வேறு முரண்­பா­டு­களை கொண்­டுள்­ளது. ஏனெனில், ஒரு புறத்தில் நாம் ஈரா­னுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மறு­பு­ற­மாக சிரி­யா­வி­லுள்ள தீவி­ர­வாதக் குழுக்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. சவூதி அல்­லது யெம­னி­லுள்ள முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்­கத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

இன்­னொரு வகையில் நாம் குர்­து­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா­கவும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. அனைத்து யுத்­த­க­ளங்­களும் மோச­மா­ன­வை­யாகும். சவூ­திக்கு எதி­ரான பிரி­வி­னை­வாத அமைப்­பான அல்-­க­தீ­புக்கு நாம் ஆத­ர­வ­ளிப்­ப­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­வது முற்­று­மு­ழு­தாக பொய்­யான தக­வ­லாகும். ஏனெனில் சவூ­தி­யி­னதும் எம்­மு­டை­யதும்  பாது­காப்புப் படை­யி­னரும் புல­னாய்வுப் பிரி­வி­னரும் ஒத்­து­ழைத்து சவூ­தியின் தேசிய பாது­காப்பு தொடர்பில் சேவை­யாற்றி வரு­கின்­றனர்.

கேள்வி : சற்று சீ.என்.என். உடன் முன்னர் பேசிய ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் வெளி­நாட்­ட­லு­வல்கள் இரா­ஜாங்க அமைச்சர், முன்னர் சிரி­யாவின் அல்-­கைதா என அறி­யப்­பட்ட அல்­நுஸ்ரா இயக்கம், லிபி­யாவின் சைனாய் பிர­தே­சத்­தி­லுள்ள பயங்­க­ர­வாதக் குழு உள்­ளிட்ட பிரி­வி­னை­வாதக் குழுக்­க­ளுக்கு கட்டார் நிதி மற்றும் பொருள் உத­வி­களை வழங்­கு­வ­தாக குற்­றம்­சாட்­டி­யுள்ளார். அதற்கு உங்­க­ளது குறிப்­பான பதில் என்ன?
பதில் : நுஸ்ரா அல்­லது அல்-­கைதா அல்­லது பிற அமைப்­புக்­க­ளுக்கு நாம் எவ்­வித ஆத­ர­வையும் வழங்­க­வில்லை. எமது நட்பு நாடு­க­ளுடன் இணைந்து சிரி­யாவில் நாம் புரியும் யுத்தம் எமது நிலைப்­பாட்­டிற்கு தகுந்த சான்­றாகும். எமது நிலைப்­பாடு என்­பது மிகவும் உறு­தி­யா­னது.

நாம் சிரிய மக்­க­ளுக்கு அவர்­க­ளுக்­கான உரிமை மற்றும் அவர்­க­ளுக்­கான நீதி மற்றும் சுதந்­திர வாழ்­வுக்­காக நாம் ஆத­ர­வ­ளிக்­கின்றோம். எங்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­படும் அனைத்துக் குற்­றச்­சாட்­டுக்­களும் பொய்­யான தக­வல்­களின் அடிப்­ப­டையில் புனை­யப்­பட்­ட­வை­யாகும். அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் பிழை­யான தக­வல்­களே காரணம் என நாம் கரு­து­கின்றோம்.

எம்­மீ­தான குற்­றச்சாட்­டுக்­களின் அடிப்­படை என்­ன­வென்றால் எமது தேசிய செய்தி முக­வ­ரகம் ஊடு­ரு­வப்­பட்டு பொய்­யான தக­வல்கள் உட்­சேர்க்­கப்­பட்­ட­மை­யாகும். குறித்த ஊடு­ருவல் தொடர்பில் எப்.பீ.ஐ.யும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

கேள்வி :இஸ்­லா­மிய தீவி­ர­வாத அல்­லது மதத் தீவி­ரப்­போக்குக் கொண்­டோ­ருக்கு நிதி­யு­தவி வழங்­கு­வ­தாக ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­தினால் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டு தொடர்பில் நீங்கள் கூறு­வது என்ன?
பதில் : அனை­வ­ரை­யும் பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து பாது­காக்­கவே கட்டார் முனை­கி­றது. நாம் சமா­தா­னத்தை வலி­யு­றுத்­து­கின்றோம், வெளிப்­ப­டை­யான இரா­ஜ­தந்­தி­ரத்தை வலி­யு­றுத்­து­கின்றோம், பேச்­சு­வார்த்தை, கல்வி மேம்­பாடு, மத்­திய கிழக்கு நாடு­களில் உள்ள மக்­க­ளுக்கு வேலை வாய்ப்பு போன்­ற­வற்றை கட்டார் உரு­வாக்­கு­கின்­றது.

அகதி முகாம்­களில் இளஞ்­சி­றார்­க­ளுக்கு ஆயு­தங்­க­ளுக்கு பதி­லாக சிறந்த கல்­வி­யினை நாம் வழங்­கு­கின்றோம். பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து அனை­வ­ரையும் பாது­காக்க தேவையான அனைத்­தையும் செய்­கின்றோம். 

கேள்வி :ஹமாஸ் மற்றும் இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ இயக்கம் ஆகி­ய­வற்­றோடு ஆதா­ர­பூர்­வ­மான தொடர்­பு­களைப் பேணு­கி­றீர்­களா? அவ்­வா­றெனில் அவற்றை நிறுத்­திக்­கொள்­வீர்­களா ?
பதில் : நான் ஏற்­க­னவே கூறி­ய­து­போன்று காட்டார் இராஜ­தந்­தி­ர­ரீ­தி­யான அணு­கு­மு­றை­களில் நம்­பிக்கை கொண்­டுள்­ளது. முதலில் நான் உங்­க­ளுக்கு ஒன்றை தெளி­வு­ப­டுத்த வேண்டும். அதா­வது, ஹமாஸின் பிர­சன்னம் என்­பது கட்­டாரில் அதன் அர­சியல் அலு­வ­லகம் இருந்­தது. தற்­போது ஹமாஸின் தலை­மைத்­துவம் பலஸ்­தீ­னத்தின் உள்ளே காஸாவில் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஹமாஸின் தலை­வர்கள் அவ்­வப்­போது வரு­கி­றார்கள், போகி­றார்கள். அது­த­விர, பலஸ்­தீ­னத்தில் பேச்­சு­வார்­ததை, நல்­லி­ணக்கம் தொடர்­பான செயற்­ப­டு­களில் அவர்கள் ஈடு­ப­டு­கி­றார்கள். பலஸ்­தீ­னத்தில் காணப்­படும் பிரி­வி­னை­களை சீர்­செய்­வ­தற்கு மத்­தி­யஸ்தம் செய்­வதில் அமெ­ரிக்கா மற்றும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னையும் இணைத்­துக்­கொண்டு கட்டார் காத்­தி­ர­மான வகி­பா­கத்­தினைக் கொண்­டுள்­ளது. 
 
கேள்வி :வெளி­நாட்­ட­மைச்சர் அவர்­களே, அந்த விட­யத்தைப் பொறுத்­த­மட்டில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்­த­வர்கள் வெளி­யேற்­றப்­ப­டு­வார்கள் எனக் கூறப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யென்றால் தற்­போதும் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்­த­வர்கள் கட்­டாரில் இருக்­கி­றார்கள் எனக் கூறு­கி­றீர்­களா? 
பதில் : ஆம், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்­த­வர்கள் கட்­டாரில் இருக்­கி­றார்கள். வெளி­யே­றுதல் என்ற தீர்­மானம் ஹமா­ஸி­னா­லேயே எடுக்­கப்­பட வேண்டும். நாம் அவர்­களை வெளி­யே­று­மாறு கோரப்­போ­வ­தில்லை. கட்­டாரில் இருப்­பதா இல்­லையா என்­பதை அவர்­களே தீர்­மா­னிக்க வேண்டும். அவர்கள் கட்­டாரில் மாத்­திரம் இருக்­க­வில்லை. இன்னும் பல நாடு­க­ளிலும் அவ்­வ­மைப்பைச் சேர்ந்­த­வர்கள் இருக்­கி­றார்கள். 

கேள்வி :இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ அமைப்பு ஏனைய நாடு­களால் குறிப்­பாக சவூதி அரே­பியா மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ரகம் ஆகிய நாடு­களால் பயங்­க­ர­வாத அமைப்­பாக பிர­க­ட­னப்­படுதப்­பட்ட அமைப்­பாகும். தங்­க­ளது வளை­குடா நட்பு நாடு­க­ளுக்கு மிகுந்த தொந்­த­ரவைத் தரும் வகையில் உள்ள இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ அமைப்­பு­ட­னான தொடர்­பினை தொடர்ந்து பேணு­வீர்­களா? 
பதில் : இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ அமைப்­புக்கும் எமக்கும் எவ்­வித தொடர்பும் கிடை­யாது. சாதா­ர­ண­மாக நாடு­க­ளு­ட­­னேயே எமது தொடர்­புகள் இருக்கும். நாம் ஒரு நாடு எமது தொடர்­புகள் இன்­னு­மொரு நாட்­டு­ட­னா­ன­தா­கவே இருக்கும். நாம் எகிப்­து­ட­னான தொடர்­பு­க­ளையே பேணி­வ­ரு­கின்றோம். இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ அமைப்­புடன் தொடர்­பு­களைப் பேண­வில்லை. துனீஷியாவில் இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ அமைப்பு ஆட்சி செய்­ய­வில்லை. துனீஷியா­வுக்கு நாம் ஆத­ர­வ­ளித்து வரு­கின்றோம்.

இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ அமைப்­புடன் தொடர்­பு­களைப் பேணு­வ­தாகத் தெரி­விக்­கப்­படும் கதை­க­ளுக்கு நூற்­றுக்­க­ணக்­கான தட­வைகள் நாம் அவ்­வ­மைப்­புடன் தொடர்­பு­களை பேண­வில்லை என்­பதை கூறி­யி­ருக்­கின்றோம். பயங்­க­ர­வாத செயலில் ஈடு­பட்­ட­தாக எவ்­வித ஆதா­ரமும் இல்­லாத நிலையில் நாம் அதனை பயங்­க­ர­வாத அமைப்­பு­­களின் பட்­டி­யலில் சேர்க்க முடி­யாது. அமைப்பை பயங்­க­ர­வாத அமைப்­பாக பட்­டி­ய­லி­டு­வ­தென்றால் அவ்­வ­மைப்பின் செயற்­பா­டு­களின் அடிப்­ப­டை­யி­லேயே அதனை மேற்­கொள்ள வேண்டும். 

கேள்வி :அவ்­வ­மைப்­பி­னு­ட­னான தொடர்­பு­களை குறைத்­துக்­கொள்­ள­ாத­வி­டத்து சவூதி அரே­பியா மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ரகம் ஆகி­வற்­று­ட­னான பிரச்­சி­னைகள் தொடர்ந்­து­கொண்டே இருக்கும் என்று கூற­லாமா ? 
பதில் : சவூதி அரே­பியா மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ரகம் ஆகி­ய­வற்­றிற்கும் கட்­டா­ருக்கும் இடை­யி­லான முரண்­பாடு வெளி­நாட்டுக் கொள்­கை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தாகும்.

இது கேள்­விக்கு உட்­ப­டுத்த முடி­யாத விட­ய­மாகும். ஏனென்றால் ஒவ்­வொரு நாடும் தனக்­கென இறை­மையைக் கொண்­டி­ருக்­கின்­றன. நாங்கள் மீண்டும் மீண்டும் வலி­யு­றுத்திக் கூறு­வது என்­ன­வென்றால், எமது நாட்டின் தேசியப் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக இருக்கும் எந்த விட­யமும் அதா­வது, கட்­டாரில் இருந்­து­கொண்டு பிழை­யான செயல்­களில் ஈடு­ப­டு­வ­தாக நிரூ­ப­ண­மாகும் பட்­சத்தில் அது­பற்றி பேசி உரிய நட­வ­டிக்கை எடுக்க ஒரு­போதும் நாம் தயங்­கப்­போ­வ­தில்லை.

ஆனால் ஏனைய நாடு­களின் கொள்­கை­ளுடன் முரண்­ப­டு­கி­றது என்­ப­தற்­­காக எமது கொள்­கை­களை மாற்ற முனை­வது மற்றும் தலை­யீடு செய்ய முனை­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. கட்டார் தனக்­கென கொள்­கை­களை கொண்­டுள்­ளது. நாம் எப்­போதும் பேச்­சு­வார்­த­்தையில் நம்­பிக்கை கொண்­டுள்ளோம். 

கேள்வி :சவூதி அரே­பியா மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ரகம் என்­பவை ஈரான் தொடர்பில் நீங்கள் எவ்­வாறு நடந்­துகொள் வேண்டும் என எதிர்­பார்ப்­பது போல வளை­குடா ஒத்­து­ழைப்பு அமைப்பின் அங்­கத்­துவ நாடு என்ற வகையில் ஈரானின் செல்­வாக்­கினை எதிர்­கொள்­வ­தற்கு நீங்கள் எடுக்­கப்­போகும் நட­வ­டிக்கை என்ன ? 
பதில் : எமக்கும் ஈரா­னுக்கும் கருத்து வேறு­பாடு இருக்­கி­றதா என்றால் ஆம் இருக்­கி­றது. ஆனால் பேச்­சு­வார்­த்­தையில் நாம் நம்­பிக்கை கொண்­டுள்ளோம். ஒரு­மித்த கொள்­கையின் அடிப்­ப­டையில் அனைத்து வளை­குடா நாடு­களின் தலை­வர்­க­ளு­டனும் அதனை மேற்­கொள்ளத் தயா­ராக இருக்­கின்றோம். ஈரா­னுடன் உறவுகளை அனைத்து நாடுகளும் பேணவேண்டும், அது அவசியமுமாகும். ஏனென்றால், ஈரான் எமது அண்டை நாடாகும். யாராலும் புவியியலை மாற்ற முடியாது. நாம் ஒன்றாகவே சகவாழ்வு வாழ வேண்டும். கோபமூட்டும் செயற்பாடுகளினால் நாம் எதனையும் சாதித்துவிடமுடியாது. பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து பேசுவதனூடாகவே மாற்றங்களை ஏற்படுத்த முடியும். 

கேள்வி :இறுதியாக, கட்டாருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் எவ்வளவு காலத்திற்குத் தங்களது நாட்டினால் தாக்குப்பிடிக்க முடியும் என கருதுகிறீர்கள் ?
பதில் : நான் ஒன்றை உறுதியாகக் கூறமுடியும். தற்போது வர்த்தகம் சுமுகமாக நடைபெற்று வருகிறது, உணவு விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை. ஆம் எமக்கான சில உணவு விநியோகங்கள் எல்லைக்கப்பால் இருந்து வருபவையாகக் காணப்படுகின்றன.

எனினும் அதற்கான மாற்று வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. களஞ்சிய ஏற்பாடுகள் கட்டாரில் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தடை எவ்விதத்திலும் கட்டாரைப் பாதிக்காது. ஏனெனில், சர்வதேச கடல்வழி மற்றும் வான்வழி விநியோகங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் கட்டாரின் இயல்பு வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என நாம் உறுதியாக நம்புகின்றோம்