Verified Web

கட்டார் நிலைவரம் : சந்தேகங்களும் தெளிவுகளும்

2017-06-11 07:37:59 Administrator

கட்டார் தொடர்பில் இடம்­பெற்ற நிகழ்­வு­களை சுருக்­க­மாகத் தர முடி­யுமா?
திங்கட் கிழமை அதி­காலை 5.30 மணிக்கு (கடடார் நேரம்) கட்­டா­ரு­ட­னான இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை துண்­டித்துக் கொள்­வ­தாக பஹ்ரைன் முதன் முத­லாக அறி­வித்­தது.

பஹ்­ரைனின் அறி­விப்பு வெளி­வந்த அரை மணி நேரத்தில் கட்­டா­ரு­ட­னான இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை துண்­டித்துக் கொள்­வ­தாக  சவூதி அரே­பி­யாவும் அறி­வித்­தது. பிராந்­தி­யத்தில் தீவி­ர­வா­தத்தை பரப்­பு­வ­தற்கு கட்டார் துணை போவ­தாக குற்­றம்­சாட்­டியே இந்த நாடுகள் மேற்­படி தீர்­மா­னத்தை வெளி­யிட்­டன.

அடுத்த 10 நிமி­டங்­களில் கட்­டா­ரு­ட­னான இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை துண்­டித்துக் கொள்­வ­தாக  எகிப்தும் ஐக்­கிய அறபு இராச்­சி­யமும் அறி­வித்­தன.

கட்­டா­ருக்­கான விமான சேவை­களை மறு அறி­வித்தல் வரை நிறுத்­து­வ­தாக எதிஹாட் விமான சேவை அறி­வித்­தது.

கட்­டா­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்தும் அடிப்­ப­டை­யற்­றவை எனவும் இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை துண்­டிப்­ப­தா­னது நீதி­யற்ற செயற்­பாடு எனவும் கட்டார் தெரி­வித்­தது.

வளை­குடா நாடுகள் தமக்குள் ஒற்­று­மைப்­பட வேண்டும் எனவும் பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அமெ­ரிக்க வேண்­டுகோள் விடுத்­தது.

செவ்­வாய்க்­கி­ழமை முதல் எமிரேட்ஸ் , அல் அரே­பியா மற்றும் பிளை டுபாய் விமான சேவைகள் கட்­டா­ருக்­கான தமது சேவை­களை இடை­நி­றுத்­தின.

கட்­டா­ரு­ட­னான இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை துண்­டித்துக் கொள்­வ­தாக யெமன் அறி­வித்­தது.

கட்­டா­ரு­ட­னான இரா­ஜ­தந்­திர உறவை துண்­டிப்­ப­தாக யெமன் அறி­வித்­தது.

கட்­டா­ரு­ட­னான கடல் மற்றும் தரை வழிப் பாதை­களை சவூதி அரே­பியா மூடி­யது.

லிபி­யாவில் ஆட்சி புரியும் கலீபா ஹப்தார் தலை­மை­யி­லான அர­சாங்கம் கட்­டா­ரு­ட­னான இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை துண்­டிப்­ப­தாக அறி­வித்­தது.

கட்­டா­ரு­ட­னான இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை துண்­டிப்­ப­தாக மாலை­தீவு அறி­வித்­தது.

கட்­டா­ருக்குச் சொந்­த­மான எந்­த­வொரு கப்­பலும் தமது நாட்டுத் துறை­மு­கத்­துக்கு வர அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது என ஐக்­கிய அரபு இராச்­சியம் அறி­வித்­தது.

கட்­டா­ருக்குத் தேவை­யான உணவுப் பொருட்­களை 12 மணி நேரத்­திற்குள் அனுப்பி வைக்க முடியும் என ஈரான் அறி­வித்­தது

கட்­டா­ரு­ட­னான தனது வான், கடல் மற்றும் தரை வழிப்­பா­தை­களை மூடு­வ­தாக எகிப்து அறி­வித்­தது

கட்­டா­ருக்குச் சொந்­த­மான கப்­பல்கள் சவூதி துறை­மு­கங்­க­ளுக்கு வருகை தரு­வது தடை செய்­யப்­பட்­டது

சவூதி அரே­பி­யாவில் அமை­யப்­பெற்­றி­ருந்த அல் ஜஸீரா ஊடக வலை­ய­மைப்பின் அலு­வ­ல­கத்தை மூடு­மாறு சவூதி உத்­த­ர­விட்­டது.

கட்­டா­ருக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தீர்­மா­னங்­களை தாம் வர­வேற்­ப­தாக இஸ்ரேல் அறி­வித்­தது.

கட்டார் விமா­னங்கள் தமது வான் பரப்பில் பறப்­ப­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக எகிப்து அறி­வித்­தது.

கட்டார் ரியால்­களை விற்­பனை செய்­யு­மாறும் அவற்றை கொள்­வ­னவு செய்ய வேண்டாம் என்றும் சவூதி அரே­பிய மத்­திய வங்கி உள்ளூர் வங்­கி­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யது.

வளை­குடா நாடு­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பாட்டை முடி­வுக்கு கொண்டு வரும் வகையில் துருக்கி அதிபர் ரஜப் தையிப் அர்­துகான் சவூதி கட்டார் குவைத் மற்றும் ரஷ்யா ஆகிய நாடு­களின் தலை­வர்­க­ளுடன் தொலை­பே­சியில் உரை­யா­டினார்.

சவூ­தியைத் தொடர்ந்து ஐ.அ.இராச்­சியம், எகிப்து மற்றும் பஹ்­ரை­னுக்­கான கட்டார் எயார்­வேய்ஸின் விமான சேவைகள் நேற்­றி­லி­ருந்து மறு அறி­வித்தல் வரை இடை­நி­றுத்­தப்­பட்­டன.

கட்­டா­ரி­லி­ருந்து ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு அலு­மி­னியம் ஏற்­று­மதி செய்­வது தடை செய்­யப்­பட்­டது.

கட்டார் எயார்­வேய்­சுக்கு வழங்­கப்­பட்ட அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்துச் செய்­துள்­ள­தாக சவூதி அரே­பியா அறி­வித்­தது. அத்­துடன் சவூ­தி­யி­லுள்ள கட்டார் எயார்­வேய்ஸின் சகல அலு­வ­ல­கங்­களும் மூடப்­பட்­டன.

இவ்­வா­றான தீர்­மா­னத்­திற்­கான பின்­னணி என்ன?
கட்டார் அர­சாங்கம் சவூதி அரே­பியா தலை­மை­யி­லான ஏனைய நாடு­களை விடவும் வேறு­பட்­டதும் பிரத்­தி­யே­க­மா­ன­து­மான வெளி­யு­றவுக் கொள்­கை­யையே கடைப்­பி­டித்து வரு­கி­றது. குறிப்­பாக கட்டார் அண்­மைக்­கா­ல­மாக ஈரா­னுடன் உறவைப் பேணு­கி­றது. மேலும் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்கம், ஹமாஸ் இயக்கம் என்­ப­வற்­று­டனும் தொடர்­பி­லி­ருக்­கி­றது. இது சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு இராச்­சியம் உட்­பட ஏனைய அதன் நேச நாடு­க­ளுக்கும் பிடிக்­க­வில்லை.

இதற்கு மேலாக கட்­டாரைத் தள­மாகக் கொண்­டி­யங்கும் அல் ஜஸீரா ஊடக வலை­ய­மைப்பு மேற்­படி நாடு­களின் அநீ­தி­யான செயற்­பா­டு­களை தொடர்ச்­சி­யாக பகி­ரங்­கப்­ப­டுத்தி வரு­கி­றது. இதுவும் சவூ­திக்கும் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கும் தொட­ராக எரிச்­சலை உண்­டு­பண்ணி வந்­தது.

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே கட்­டாரைத் தனி­மைப்­ப­டுத்தும் தீர்­மா­னத்தை மேற்­படி நாடுகள் கூட்­டாக எடுத்­தன.

அப்­ப­டி­யானால் இந்த நிகழ்­வு­க­ளுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் சம்­பந்­த­மில்­லையா?
ஏன் இல்லை? அமெ­ரிக்­காவின் ரிமோட் கன்ட்­ரோ­லா­கவே மேற்­படி நாடுகள் கட்டார் விட­யத்தில் நடந்து கொள்­கின்­றன என்­பது வெள்ளிடை மலை. இதனை அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் டரம்ப் நேற்று முன்­தினம் தனது டுவிட்டர் பக்கம் மூல­மாக உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

தான் அண்­மையில் சவூ­திக்கு மேற்­கொண்ட விஜ­யத்தின் போது கேட்டுக் கொண்­ட­தற்­கி­ணங்க கட்­டாரைத் தனி­மைப்­ப­டுத்தும் தீர்­மா­னத்தை மேற்­கொண்­டதை வர­வேற்­ப­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

இதி­லி­ருந்து ட்ரம்பின் விஜ­யத்தைத் தொடர்ந்தே இந்த நகர்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன என்­பது தெளி­வா­கி­றது.

இதனால் கட்­டாரில் வாழும் மக்­க­ளுக்கு பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­னவா?
இது­வரை எந்­த­வி­த­மான பாதிப்­பு­களும் கட்­டாரில் வாழும் அந்­நாட்டுப் பிர­ஜை­க­ளுக்கோ அல்­லது ஏனைய நாடு­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கோ ஏற்­ப­ட­வில்லை. அங்கு வழக்கம் போல இயல்பு வாழக்கை தொடர்­கி­றது.
ஆனால் கட்­டா­ருடன் தொடர்பைத் துண்­டித்­துள்ள நாடு­களின் பிர­ஜைகள் அங்­கி­ருந்து வெளி­யேற வேண்டும் என அந்­தந்த நாடுகள் அறி­வித்­துள்­ளன. இதற்­க­மைய சவூதி, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தைச் சேர்ந்த 11 ஆயி­ரத்து 378 பேர் கட்­டா­ரை­விட்டும் வெளி­யேற நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். இதனால் அவர்கள் கட்­டாரில் செய்து வந்த தொழில்­வாய்ப்­பு­க­ளையும் இழக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. 

கட்­டாரில் உணவுத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றதே?
அவ்­வாறு எது­வு­மில்லை. அங்கு தாரா­ள­மாக உணவுப் பொருட்கள் கையி­ருப்பில் உள்­ள­தாக கட்டார் வர்த்­தக அமைச்சு தெரி­வித்­துள்­ளது. கட்டார் மீதான தடைகள் அறி­விக்­கப்­பட்ட உட­னேயே மக்கள் அச்­சத்தில் உட­ன­டி­யாக சுப்பர் மார்க்­கட்­க­ளுக்குச் சென்று பொருட்­களை அவ­சர அவ­ச­ர­மாக கொள்­வ­னவு செய்­தது உண்மை. ஆனால் அங்கு உணவுத் தட்­டுப்­பாடு எதுவும் ஏற்­ப­ட­வில்லை.

எகிப்து, சவூதி மற்றும் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தி­லி­ருந்து கட்­டா­ருக்கு பொருட்­களை ஏற்­று­மதி செய்­வது தடை செய்­யப்­பட்­டாலும் துருக்­கியும் 
ஈரானும் கட்­டா­ருக்குத் தேவை­யான சகல பொருட்­க­ளையும் உட­ன­டி­யாக அனுப்பி வைக்க முன்­வந்­துள்­ளன. ஏற்­க­னவே துருக்­கியின் பொருட்­களைச் சுமந்த விமானம் கட்­டாரை வந்­த­டைந்­துள்­ளது. கட்டார் கோரிக்கை விடுத்தால் சரி­யாக 12 மணி நேரத்தில் தமது நாட்­டி­லி­ருந்து தேவை­யான உத­விகள் வந்­த­டையும் என ஈரான் அறி­வித்­துள்­ளது.
கட்டார் தனது சொந்த உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு விட்டுள்ளது.

விமானப் போக்­கு­வ­ரத்­துக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளதா? இலங்­கை­யர்கள் கட்டார் எயார்­வேய்ஸில் பய­ணிக்க முடி­யாதா?
கட்­டா­ருக்­கான விமானப் போக்­கு­வ­ரத்­துக்­களில் சில மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. கட்­டா­ருடன் தொடர்பைத் துண்­டித்­துள்ள நாடு­க­ளுக்கு கட்­டா­ரி­லி­ருந்து நேர­டி­யாகப் பய­ணிக்க முடி­யாது. அதே­போன்று அந்த நாடு­க­ளி­லி­ருந்தும் கட்­டா­ருக்குச் செல்ல முடி­யாது. இந்த நாடு­க­ளி­டை­யே­யான விமான சேவைகள் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. 

எனினும் இதனால் இலங்­கைக்கு எந்தப் பாதிப்­பு­மில்லை. இலங்­கை­யி­லி­ருந்து வழ­மை­போன்று கட்டார் எயார்வேய்ஸ் விமானம் அங்கு செல்­கி­றது. கட்­டா­ரி­லி­ருந்தும் விமானம் நேர­டி­யாக இங்கு வரு­கி­றது.

கட்டார் ரியால்­களை இலங்­கையில் மாற்ற முடி­யாதா?
முடியும். 1000 டொலர்கள் பெறு­ம­தி­யான தொகை­யு­டைய கட்டார் ரியால்­களை இலங்­கையில் மாற்றிக் கொள்ள முடியும் என மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது.

கட்­டாரில் வாழும் இலங்­கை­யர்கள் தொழில்­களை இழக்க வேண்டி வருமா?
நிச்­ச­ய­மாக அவ்­வா­றா­ன­தொரு நிலை ஏற்­ப­டாது. இந்த நிலை­மை­களால் கட்­டாரில் மேலும் இலங்­கை­ய­ருக்­கான தொழில்­வாய்ப்­புகள் கூடு­வ­தற்கு சந்­தர்ப்பம் உள்­ளது. கட்­டா­ருடன் தொடர்பைத் துண்­டித்துக் கொண்­டுள்ள நாடு­களின் தொழி­லா­ளர்கள் கட்­டா­ரி­லி­ருந்து வெளி­யே­றினால் அந்த இடத்­திற்கு இலங்கை இந்­தியா பாகிஸ்தான் போன்ற நாட்­ட­வர்கள் இணைத்துக் கொள்­ளப்­பட வாய்ப்­புண்டு.

துருக்கி கட்­டா­ருக்கு இரா­ணு­வத்தை அனுப்ப தீர்­மா­னித்­துள்­ளதே? அங்கு ஏதேனும் போர் நடை­பெற வாய்ப்­பி­ருக்­கி­றதா?
துருக்கி படை­களை அங்கு அனுப்­பு­வது புதி­தல்ல. 2014 இல் கட்­டா­ருக்கும் துருக்­கிக்­கு­மி­டையே செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் படி ஏற்­க­னவே 150 இரா­ணு­வத்­தினர் அங்கு பணி­யாற்­று­கின்­றனர். மேல­தி­க­மாக 3000 துருப்­பி­னரை அனுப்ப துருக்கி பாரா­ளு­மன்றம் நேற்று ஒப்­புதல் அளித்­துள்­ளது. கட்­டாரின் தற்­போ­தைய நிலையில் அதற்­ககு ஆத­ர­வ­ளிக்கும் வகையில் இந்தத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.எனினும் கட்டாரில் போர் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இப்போது நடப்பது இராஜதந்திர பனிப் போர் மட்டுமே.

இந்த விடயத்தில் கட்டாருக்கு எந்த நாடுகள் ஆதரவளிக்கின்றன?
துருக்கியும் ஈரானும் பகிரங்கமாக கட்டாருக்கான ஆதரவை வெ ளிப்படுத்தியுள்ளன. குவைத் நடுநிலை வகிக்கிறது. பாகிஸ்தானும் கட்டாருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளும் கட்டாருடனான தொடர்பில் பாதிப்பில்லை என அறிவித்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் கட்டாருடன் பிரதான வர்த்தக தொடர்புகளை கொண்டுள்ளதால் அவற்றின் ஆதரவும் கட்டாருக்கு உண்டு. இதற்கப்பால் கட்டாரிலேயே மத்திய கிழக்குக்கான அமெரிக்காவின் பாரிய இராணுவ தளம் அமைந்துள்ளதால் அமெரிக்காவினாலும் நேரடியாக கட்டார் மீது மோதுவது கடினம். ஆக கட்டார் பாதுகாப்பானதொரு சூழலிலேயே உள்ளது.