Verified Web

எய்­த­வர்­களை கைது செய்­யுங்கள்

2017-06-09 11:19:23 Administrator

நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத செயற்­பா­டுகள் தொடர்ந்து வரு­கின்ற நிலையில் அது தொடர்பில் முதன் முறை­யாக இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

நுகே­கொடை மற்றும் மஹ­ர­கம பகு­தி­களில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான நான்கு கடை­களை தீ வைத்து எரித்த நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இக் குற்­றச்­சாட்­டுக்­களை அவர் ஒப்புக் கொண்டு வாக்­கு­மூ­ல­ம­ளித்­துள்ளார். 

எனினும் இவ­ரது பின்­ன­ணியில் உள்ளோர் யார் என்­பதை பொலிஸார் வெளிப்­ப­டுத்த வேண்டும். கைதா­கி­யுள்ள நபர் வெறும் அம்பு மட்­டுமே. எய்­த­வர்கள் யார் என்­பதைக் கண்­ட­றி­வதன் மூலமே இந்தத் திட்­டங்­களின் பின்­ன­ணியில் இருந்­தோரை சட்­டத்தின் முன் நிறுத்த முடியும்.

அதே­போன்­றுதான் திரு­கோ­ண­ம­லையில் பள்­ளி­வாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் நபரும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். இவ­ரி­டமும் பொலிசார் முறை­யான விசா­ர­ணை­களை நடத்தி உண்­மை­களைக் கண்­ட­றிய வேண்டும்.

துர­திஷ்­ட­வ­ச­மாக அண்மைக் கால­மாக பொலி­சாரின் நட­வ­டிக்­கை­களை எடுத்து நோக்­கு­மி­டத்து இந்தக் கைது­களும் வெறும் கண் துடைப்­பா­கத்தான் இருக்­குமோ எனும் சந்­தேகம் வலுக்­கி­றது. 

பொலிசார் மீதான விமர்­ச­னங்கள் அதி­க­ரித்து வரு­கி­றது என்­ப­தற்­கா­கவும் பொலி­சாரால் முடி­யா­விட்டால் இரா­ணு­வத்­திடம் பொறுப்பை ஒப்­ப­டைப்பேன் ஜனா­தி­பதி கூறி­யுள்­ள­தாலும் இவ்­வா­றான கைதுகள் இடம்­பெ­று­கின்­ற­னவா எனும் கேள்­விகள் எழு­கின்­றன.

பொலிசார் தாம­தித்­தேனும் சந்­தேக நபர்­களை கைது செய்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது என்ற போதிலும் இந்த சக்­தி­களின் மூல வேரைக் கண்­ட­றிய வேண்டும் என்­பதை வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.

ஏற்­க­னவே ஞான­சார தேரரைக் கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் கூறியும் இது­வரை அவர் கைது செய்­யப்­ப­ட­வில்லை. 

இருப்­பினும் ஞான­சார தேரர் தற்­போது பகி­ரங்­க­மாக ஊட­கங்கள் மூலம் தனது கருத்­துக்­களை முன்­வைக்க ஆரம்­பித்­துள்ளார். பொது­பல சேனா அமைப்பின் முகநூல் மூல­மாக சில தினங்­க­ளுக்கு முன்னர் ஒலிப்­ப­தி­வொன்றை அவர் வெளி­யிட்­டுள்ளார். மேலும் வீடியோ காட்சி ஒன்­றிலும் அவர் தோன்றி உரை­யாற்­று­கிறார்.

அப்­ப­டி­யானால் ஞான­சார தேரர் எங்­கி­ருக்­கிறார் என்­பதை இன்­னுமா பொலிசார் அறி­யா­ம­லி­ருக்­கி­றார்கள்? நிய­மிக்­கப்­பட்ட நான்கு விசேட பொலிஸ் குழுக்­களும் இன்­ன­முமா தமது தேடுதல் வேட்­டையை நடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்? அல்­லது இவர்கள் அனை­வ­ரி­னாலும் கண்­டு­பி­டிக்க முடி­யாத மறை­வி­டத்­திலா ஞான­சார தேரர் இருந்து கொண்­டி­ருக்­கிறார்?

ஞான­சார தேரரை அர­சாங்­கத்­தி­லுள்ள அமைச்­சர்கள் ஒரு சிலரே பாது­காத்து வைத்­துள்­ள­தாக பர­வ­லாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

அப்­ப­டி­யானால் இந்த அமைச்­சர்­களின் அழுத்­தங்­க­ளால்­தானா தேரர் இன்னும் கைது செய்­யப்­ப­டா­ம­லுள்ளார்?ி­யானால் இந்த அமைச்­சர்­களின் அழுத்­தங்­க­ளால்­தானா தேரர் இன்னும் கைது செய்­யப்­ப­டா­ம­லுள்ளார்? இந்தக் கேள்­வி­க­ளுக்கு விடை தரப்­போ­வது யார்?

எனவேதான் பொலிசாரும் அரசாங்கமும் இன்னமும் நாட்டு மக்களையும் முஸ்லிம் சமூகத்தையும் ஏமாற்றாமல் இந்த இனவாத சக்திகளை கைது செய்ய முன்வர வேண்டும்.