Verified Web

இனவாதம் அழிவுவாதமே...

2017-06-06 10:26:53 Administrator

 - பாரூக் பஸ்­மில்கான் -
நல்­லாட்­சிக்­கா­ரர்கள் பத­விக்கு வரு­வ­தற்கு முன்னர் தேர்தல் காலங்­களில் மேடை­களில் கட்­ட­விழ்த்து விட்ட கட்­டுக்­க­தை­களும் கொடுத்த வாக்­கு­று­தி­களும் வழமை போலவே நீரில் மேல் இட்ட எழுத்­துக்­களைப் போல் அமைந்­து­விட்­டன.

தமக்குத் தாமே நல்­லாட்சி என்று பெயர் சூட்டிக் கொண்ட இந்த அர­சாங்­கத்தின் இன­வாதம் போகின்ற போக்கில் முன்­னைய ஆட்­சி­யையும் தோற்­க­டித்து விடுமோ என்ற சந்­தே­கத்தை எமக்கு எடுத்­தி­யம்­பு­கின்­றது.

முன்னாள் ஜனா­தி­பதி ராஜ­பக் ஷவின் காலத்தில் மேலெ­ழுந்த இன­வாதத் தீப்பி­ழம்பை விடவும் மோச­மா­ன­தொரு அட்­ட­கா­சங்­களும், அட்­டூ­ழி­யங்­களும் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் தலை­வி­ரித்­தா­டு­கின்­றது.நாளுக்கு நாள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வா­தி­களின் போக்­குகள் தீவி­ர­ம­டைந்து கொண்­டி­ருக்­கின்­றன.

முஸ்­லிம்கள் எண்­ணி­யதைப் போன்று அல்­லாமல் நல்­லாட்சி அர­சாங்­கமும் இன­வா­தி­களின் முன்னால் செல்­லாக்­கா­சாகி நிற்­கின்­றது. பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­படல், முஸ்­லிம்­களின் சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­வித்தல்,வியா­பா­ரஸ்­த­லங்­க­ளுக்கு பெற்றோல் குண்டு வீச்­சுக்­களை மேற்­கொள்ளல்,பௌத்­தர்கள் இல்­லாத இடங்­களில் புத்தர் சிலை­களை வைத்தல்,விகா­ரை­களை அமைத்தல் என நல்­லாட்­சி­யிலும் மாற்­றாந்தாய் மனப்­பாங்கே நீடித்துச் செல்­கின்­றது.

மைத்­திரி அர­சாங்­கத்தின் தோற்­றத்தின் ஆரம்­பத்தில் ஞான­சா­ர­தே­ரரும்,பேரி­ன­வா­தி­களும் அடங்­கி­யி­ருந்­தனர்.இத்­தோடு இலங்­கையின் இன­வாதம் ஓர­ளவு கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்ற நிலைப்­பாட்­டுக்கு வரு­வ­தற்கு முன்னர் தொடர்ச்­சி­யாக நடை­பெ­று­கின்ற சம்­ப­வங்கள் மீண்டும் இன­வாத அபா­யத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.முன்னாள் ஆட்­சியில் இருந்த இடத்­திற்கே இன­வா­திகள் வந்­து­விட்­டனர். இது­வரை கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களைப் பார்க்­கின்ற போது சுமார் ஒரு மாத காலத்­துக்குள் 20 க்கும் மேற்­பட்ட அசம்­பா­வி­தங்கள் பதி­யப்­பட்­டுள்­ளன.

பள்­ளி­வா­சல்­களை தாக்­கு­ப­வர்­க­ளையும், கடை எரிப்­புக்­களை மேற்­கொள்­ப­வர்­க­ளையும் CCTV கம­ராக்கள் அடை­யாளம் காட்­டு­கின்ற போதும் பொலிஸார் இவ்­வி­ட­யத்தில் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­காது அச­மந்தப் போக்கை கடைப்­பி­டிப்­பதன் மூலம் இவற்­றுக்குப் பின்னால் பல­மான கரங்கள் இயக்­கு­கின்­றது என்­பதை ஊகிக்க முடி­கின்­றன.

மேலும் முஸ்­லிம்கள் யாரா­வ­தொ­ருவர் பௌத்­தர்­க­ளோடு சிறிய வாக்­கு­வா­தங்­களில் ஈடு­பட்­டாலும் உலக மகா உரிமை மீறல் இழைக்­கப்­பட்­டது போன்று இன­வா­திகள் அதனை சிங்­கள மக்கள் மத்­தியில் ஊதிப் பெரி­தாக்­கு­வதும் சம்­பவ இடத்­திற்குச் சென்று மிரட்­டல்­களை விடு­வதும் திட்­ட­மிட்ட கட்­ட­விழ்ப்பு நட­வ­டிக்­கைகள் என்­பது புலப்­ப­டு­கின்­றது.

நல்­லாட்­சி­யிலும் இன­வாத நிகழ்ச்சி நிரல்கள் அர­சியல் காய்­ந­கர்த்­த­லுக்கு ஏற்ப மேலும் கீழு­மாக ஆடிக்­கொண்­டி­ருக்­கின்­றதே ஒழிய அதன் பின்­ன­ணியில் எவ்­வித மாற்­றங்­களும் நிகழ்­வ­தற்­கான சமிக்­ஞைகள் இன்னும் தென்­பட்­ட­தா­கவே தெரி­யவில்லை. ஊழல் மோச­டிகள், இன­வாதம், வன்­மு­றைகள் என்­ப­வற்றை ஒழிப்போம் என்ற துதி­பா­ட­லுடன் ஆட்­சிக்கு வந்­த­வர்கள் குற்­ற­வா­ளி­களை இன்னும் சுதந்­தி­ர­மாக உலா­வ­விட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். தண்­டிக்க வேண்­டி­ய­வர்­களை பதுங்கு குழி­களை அமைத்து அர­சாங்­கமே பாது­காத்து வரு­கின்­றது.

இந்த இன­வாதம் ஆட்­சி­யா­ளர்­களை ஆபத்­துக்கள் சூழ்ந்த இருண்ட எதிர்­கா­லத்­துக்குள் கொண்டு சென்­று­விடும். இவ்­வி­ன­வா­திகள் முன்னாள் ஜனா­தி­ப­தி­யிடம் இன­வா­தத்தை பற்றிக் கொள்ள கரம் கேட்­டதன் விளைவே கடை­சியில் அவரை ஆட்­சியை விட்டும் மக்கள் தூர­மாக்­கினர்.இப் பேரி­ன­வா­திகள் இன­வாதம் பேசி பேசி ஆட்­சியை கவிழ்க்க முன்னர் நல்­லாட்சி அர­சாங்கம் தனக்கு ஏற்­படப் போகும் ஆபத்­துக்­களில் இருந்து விடு­வித்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது உசி­த­மா­னது.

வெறு­மனே ஆட்சி மாற்­றத்தை மாத்­திரம் முஸ்­லிம்கள் விரும்­பி­யி­ருக்­க­வில்லை. சிறு­பான்மை சமூகத்­தி­ன­ருக்கு எதி­ராக பந்­தா­டப்­படும் இன­வாத காழ்ப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­க­ளையும், வன்­மு­றை­களை தூண்டும் கைங்­க­ரி­யங்­க­ளையும் இல்­லா­தொ­ழித்து இலங்­கையில் கானல் நீராக இருந்த சமா­தா­னத்­தையும், அமை­தி­யையும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சிறப்­பா­ன­தொரு ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்­கமே எதிர்­பார்ப்­பாக அமைந்­தி­ருந்­தது.

இனங்­க­ளுக்­கி­டையில் முறுகல் நிலையும், சந்­தேகக் கண்­களும் உச்­சத்­தி­லுள்­ளது.எனவே இனங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்­வையும் பரஸ்­பர ஒற்­று­மையையும் ஏற்­ப­டுத்த அர­சாங்கம் இதற்­கான கொள்கை முனைப்­புக்­களை வகுக்க வேண்டும்.

இன­வா­தத்­தினை தூண்டும் நபர்­க­ளையும், அமைப்­புக்­க­ளையும் கடு­மை­யான சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்த வேண்டும்.

முஸ்­லிம்­களின் சொத்­துக்கள் சேத­மாக்­கு­வ­தாலும், வியா­பா­ரஸ்­த­லங்­களை எரிப்­ப­தாலும் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தில் பாரிய பின்­ன­டை­வுக்கு இட்டுச் செல்ல முடியும் என்று இன­வா­திகள் சரி­காணும் கணக்கின் நியாயம் வேடிக்­கை­யாக உள்­ளது.

உடலில் ஏற்­படும் காயம் முழு உட­லையும் பாதிக்கும் என்­பது போல முஸ்­லிம்­களின் பொரு­ளா­தாரம் இந் நாட்டின் பொரு­ளா­தாரம்,முஸ்­லிம்­களின் சொத்து இந்­நாட்­டி­னது சொத்து,இப் பொரு­ளா­தா­ரங்கள் அழிக்­கப்­படும் போது அது நாட்­டி­னது பொரு­ளா­தா­ரத்­தையும் வரு­மா­னத்­தை­யுமே பாதிக்கும். 

அதே நேரத்தில்,சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக இன­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­படும் நியா­ய­மற்ற காழ்ப்­பு­ணர்­வுகள் இலங்கை தேசத்­திற்கே இழுக்கைத் தேடித்­தரும்.இலங்­கையின் தேசிய ஒற்­று­மைக்கும் ஆள்­புல ஒரு­மைப்­பாட்­டிற்கும் குந்­தகம் விளை­விக்கும் என்­ப­தோடு சர்­வ­தேச சமூகம் நல்­லாட்சி மீது வைத்­தி­ருக்­கின்ற நம்­பிக்­கை­யையும் தகர்த்­தெ­றிந்து விடும்.

ஓர் அடக்­கு­முறை கலந்த இன­வா­தமும், ஒரு சம­யத்­தினை மையப்­ப­டுத்­திய அர­சியல் கலா­சா­ரமும் பல்­லின சமூகம் வாழும் இலங்கை நாட்டில் மாறு­பட்­டொ­ழிய வேண்டும்.சம­யத்­தினைப் பயன்படுத்தி அடாவடித்தனங்கள் மேற்கொள்ளும் கடும்போக்காளர்கள் எப்பிரிவை சார்ந்தவர்களாயினும் அவர்களை போசித்துப் பாதுகாக்காமல் அரசாங்கம் தடுத்துத் தண்டிக்க வேண்டும்.

இனவாத அரசியலும் பேரினவாத கொள்கையும் ஆட்சிக்கு எந்தளவு ஆபத்தானவை என்ற பாடத்தை மீண்டும் ஒரு முறை கடந்தகால அரசாங்கத்தின் வீழ்ச்சியிலிருந்து மீட்டிப்பார்க்க நல்லாட்சிக்காரர்களுக்கு வலியுறுத்துகின்றோம்.கடந்த காலத்தில் இலங்கை சமூகங்களின் மனங்களில் ஏற்படுத்திய ரணங்கள் இன்னுமொரு தடவை இடம்பெற்றுவிடக்கூடாது.இலங்கை முன்னோக்கி நகர்ந்து செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே மக்கள் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினர் என்பதை அரசாங்கம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.