Verified Web

முஜிபுர் ரஹ்மானுடன் செவ்வி : பொதுபல சேனாவினை மொஸாட் வழிநடத்தலாம்

2017-06-04 07:19:36 Administrator

தமிழில்:எம்.ஐ.அப்துல் நஸார் 

புல­னாய்­வுத்­துறை விசா­ரிக்க வேண்டும்  
பௌத்த அமைப்­பான பொது­பல சேனா வெளி­நாட்டு சக்­தி­களால் வழி­ந­டாத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது என ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.

இந்தத் தீவி­ர­வாத அமைப்பு வெறுப்­பு­ணர்வு, குற்றச் செயல்கள் மற்றும் வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு நிதி­யு­த­வி­ய­ளிப்­பதும் தூண்­டு­கோ­லாக இருப்­பதும் யாரென கண்­ட­றி­வ­தற்கு இலங்­கையின் புல­னாய்­வுத்­துறை விசா­ரணை செய்ய வேண்டும் எனவும் சிலோன் டுடேக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் தெரி­வித்­துள்ளார். சிங்­கள சமூ­கத்தின் ஒரு வீதத்­திற்கும் குறை­வா­ன­வர்­க­ளையே இவ்­வி­யக்கம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

வின­வப்­பட்ட கேள்­வி­களும் அதற்கு அவர் வழங்­கிய பதில்­களும் 
கே: தீவி­ர­வாதம் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளது. இது தொடர்பில் நீங்கள் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­யி­ருக்­கி­றீர்கள். இப்­போது நாம் அதனை அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்கும் இப்­பி­ரச்­சினை புதி­தா­ன­தொன்­றல்ல. தற்­போ­தைய சூழ்­நிலை தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
 கடந்த சில வரு­டங்­க­ளாக உச்ச அள­வி­லான தீவி­ர­வாத செயற்­பா­டு­களைப் பார்க்­கிறோம். எனவே, இதனைச் சகித்­துக்­கொள்ள முடி­யாது எனவும் இது உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும் எனவும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

அதன் கார­ண­மாக தீவிர செயற்­பா­டுகள் ஓர­ளவு குறை­வ­டைந்­துள்­ளன. எனினும் சில பகு­தி­களில் பயங்­கர மற்றும் வன்­மு­றை­யான தனித்­தனி சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ள­தாக எமக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.   

கே: முந்­தைய அர­சாங்கம் தோற்­க­டிக்­கப்­பட்­ட­மைக்குக் காரணம் அப்­போது இடம்­பெற்ற பயங்­க­ர­வாத மற்றும் வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த தவ­றி­ய­மை­யாகும். அதே­போன்று அவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­வர்கள் அர­சாங்­கத்தின் ஆத­ரவைப் பெற்­றி­ருந்­தனர். அர­சாங்கம் மாற்றம் பெற்­றி­ருந்த போதிலும் தீவிர செயற்­பா­டுகள் இந்த அள­விற்கு சகித்துக் கொள்­ளப்­பட்­டது ஏன்
 முந்­தைய அர­சாங்கம் தோற்­க­டிக்­கப்­பட்­ட­மைக்குக் காரணம் எதிர்­ப்பு­ணர்­வினால் தூண்­டப்­பட்ட பயங்­கர மற்றும் வன்­முறைச் சம்­ப­வங்­க­ளாகும். நாம் தற்­போ­தைய அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­ய­போது அத்­த­கைய சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­ததைத் தடுக்கும் நோக்கில் நட­வ­டிக்கை எடுத்­த­தோடு சட்டம் ஒழுங்­கினை சீர்­கு­லைப்போர் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்­டனர்.

வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்கு எதி­ரான சட்­ட­மூலம் அதன் ஒரு பகு­தி­யாகும். எமது விஞ்­ஞா­ப­னத்­திலும் அது உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த விட­ய­மாகும். அச் சட்ட மூலத்தை நிறை­வேற்­று­வ­தாக நாம் வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தோம். இதில் முக்­கிய விடயம் என்­ன­வென்றால் அர­சாங்கம் நல்­லி­ணக்கம், புனர்­வாழ்வு மற்றும் சமா­தான சக­வாழ்வை நோக்கி நகர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றது.

இந்­த­வே­ளையில் சமா­தான சக­வாழ்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முன்­னெ­டுத்­து­வரும் பணி­களை சீர்­கு­லைக்கும் நட­வ­டிக்­கை­களில் சில சக்­திகள் ஈடு­பட்­டுள்­ளமை தெளி­வா­கி­றது. இது முஸ­லிம்­க­ளுக்கு எதி­ரான இயக்­க­மல்ல. இதில் மறை­மு­க­மான நிகழ்ச்சி நிரல் ஒன்று காணப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான தீவி­ர­வாத சக்­திகள் அர­சாங்கம் முன்­னெ­டுத்­து­வரும் புனர்­வாழ்வு மற்றும் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கு குந்­தகம் விளை­விப்­ப­தற்கு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கோஷங்­களை முன்­வைக்­கின்­றன. அவர்­க­ளது நோக்கம் மிகத் தெளி­வா­ன­தாகும். அவர்­க­ளது நோக்­கத்தை தோற்­க­டிக்க நாம் மக்­களை ஒன்­றி­ணைக்க வேண்டும், அவ்­வா­றான செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை அமுல்­ப­டுத்த வேண்டும். சமூ­கங்­க­ளுக்­கி­டையே விரி­சல்­களை ஏற்­ப­டுத்த முற்­படும் சக்­தி­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் என நாம் நம்­பு­கின்றோம். 

கே: இலங்­கையில் முஸ்­லிம்­க­ளி­டையே தீவி­ர­வா­தமும் தலை­தூக்­கி­யுள்­ள­தாக சில பௌத்த தீவி­ர­வாத சக்­திகள் குற்­றம்­சாட்­டு­கின்­றன. ஏனைய சமூ­கங்­க­ளுடன் இணக்­கப்­பாட்­டினை ஏற்­ப­டுத்த முஸ்லிம் சமூகம் கடும் பிர­யத்­தனம் எடுப்­ப­தா­கவும் அவர்கள் குறிப்­பி­டு­கின்­றனர். மக்கள் பிர­தி­நிதி என்ற வகை­யி லும், முஸ்லிம் என்ற வகை­யிலும் இக் குற்­றச்­சாட்­டினை எவ்­வாறு பார்க்­கி­றீர்கள் ?
முஸ்­லிம்கள் மத்­தியில் தீவி­ர­வாதம் சம்­பந்­த­மான கதைகள் நான் சிறு­பிள்­ளை­யாக இருக்­கும்­போது கேள்விப் பட்­ட­வை­யாகும். 1980 களில் யுத்த காலத்­தின்­போது தமி­ழீழ விடு­தலைப் புலிகள் வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்­களை வெளி­யேற்­றினர். பின்னர், காத்­தான்­குடி பள்­ளி­வாசல் தாக்­குதல் இடம்­பெற்­றது.

இத் தாக்­கு­தல்கள் அனைத்தும் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்பின் இரா­ணுவக் கும்­பல்கள் கிரா­மங்­களில் மேற்­கொண்ட தாக்­கு­தல்­க­ளாகும். அவ்­வா­றான அனைத்துத் தாக்­கு­தல்­க­ளின்­போதும் முஸ்­லிம்­களே கொல்­லப்­பட்­டனர். எனினும், முஸ்­லிம்கள் எதிர்த் தாக்­குதல் நடத்­த­வில்லை. அதே­வேளை தெற்­கிலும் அது­போன்ற சம்­ப­வங்கள் இடம் பெற்­றன. அளுத்­க­மவில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிறு­வ­னங்­க­ளுக்கு தீ வைக்­கப்­பட்­டது.

இவ்­வா­றான சம்­ப­வங்­களில் முஸ்­லிம்கள் தமது உயிர்­க­ளையும் சொத்­துக்­க­ளையும் இழந்­தனர். மீண்டும் முஸ்­லிம்கள் எதிர்த்தாக்­கு­தலில் ஈடு­ப­ட­வில்லை. இவ்விடயம் அதனை நிரூ­பணம் செய்யும் தனி­யொரு சம்­பவம் அல்ல. வடக்­காக இருக்­கலாம், தெற்­காக இருக்­கலாம் அல்­லது கிழக்­காக இருக்­கலாம் அங்­கெல்லாம் முஸ்­லிம்கள் வன்­மு­றைகள் மற்றும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு இலக்­கா­கி­யுள்­ளனர் என்­பதே உண்­மை­யாகும்.

எனவே இலங்­கையில் முஸ்­லிம்­க­ளி­டையே தீவி­ர­வா­தமும் தலை­தூக்­கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­வது ஒரு கற்­ப­னை­யாகும். அவ்­வா­றான தீவி­ர­வாதம் இருந்­தி­ருக்­கு­மானால் அவ்­வா­றா­ன­சக்­திகள் தம்­மைத்­தாமே தற்­காத்­துக்­கொள்ள முன்­ன­ணிக்கு வந்­தி­ருக்கும். இவை எவையும் நடை­பெ­ற­வில்லை.

எனவே முஸ்­லிம்­க­ளி­டையே தீவி­ர­வாதம் காணப்­ப­டு­வ­தாக குற்­றம்­சாட்­டுவோர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள சமூ­கத்தைத் தூண்டி விடு­வ­தற்கும் அமை­தியின்­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­குமே முயற்­சிக்­கின்­றனர். அவர்­க­ளது நோக்கம் சிங்­கள சமூ­கத்­திற்கு மத்­தியில் அச்­சத்தை தோற்­று­விப்­ப­தாகும். அந்த அச்­சத்­தி­னூ­டாக முஸ்லிம் சமூ­கத்­திற்கும் சிங்­கள சமூ­கத்­திற்கும் இடை­யி­லான தொடர்பை முறிப்­ப­தற்கு முயற்­சிக்­கின்­றனர்.

முஸ்­லிம்­களும் சிங்­கள மக்­களும் ஒற்­று­மை­யாக வாழ்­வது வெறுப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு அசௌ­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதன் கார­ண­மாக சமா­தான சக­வாழ்வை இல்­லா­தொ­ழிக்க முற்­ப­டு­கின்­றனர். இந்தக் குற்­றச்­சாட்டில் எவ்­வித உண்­மையும் இல்லை. இந்த நாட்டில் சட்­டமும் ஒழுங்கும் நடை­மு­றையில் உள்­ளன. இங்கு அர­சாங்கம் ஒன்று இருக்­கி­றது, பொலிஸ் மற்றும் புல­னாய்வுப் பிரிவும் செயற்­ப­டு­கின்­றன. 

எனவே, இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­களை அவர்கள் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வந்து விசா­ர­ணை­யொன்றை மேற்­கொள்ள முடியும். இவ்­வா­றான வெறுப்­பு­ணர்­வு­களைத் தூண்­டு­ப­வர்கள் பொது­மக்கள் சட்­டத்தை தமது கைகளில் எடுக்க வேண்டும் என்­ப­த­னையும், வெறுப்­பு­ணர்வு வார்த்­தை­களை பிர­யோ­கிப்­ப­த­னையும், சமூ­கங்­க­ளுக்­கி­டையே சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தையும், ஒரு சமூ­கத்தை இன்­னொரு சமூ­கத்­துடன் மோத விடு­வ­தையும் நோக்­க­மாகக் கொண்­டுள்­ளனர். அவ்­வாறு நடை­பெ­று­வதை அனு­ம­திக்க முடி­யாது, அது நாட்டை சீர­ழித்­து­விடும். 

கே: சில இலங்­கை­யர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் இல் இணைந்து கொண்­டுள்­ள­தாக குற்­றம்­சாட்டப்படு­கின்­றது. அதன் கார­ண­மாக கிழக்கில் தீவி­ர­வாதம் பர­வு­வ­தற்கு வாய்ப்­புள்­ள­தாக அவர்கள் குறிப்­பி­டு­கின்­றனர். இது பற்றி உங்­க­ளது கருத்து என்ன ?
20 அல்­லது 30 இலங்­கை­யர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொள்­வ­தற்கு சென்­றுள்­ள­தாக அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றெ­னினும் அது வெறு­மனே அறிக்கை மாத்­தி­ர­மே­யாகும். அவ்­வாறு உண்­மையில் நடந்­துள்­ளதா இல்­லை­யான என்­பது பற்றி நம்­ப­க­மான ஆதா­ரங்கள் எதுவும் இல்லை. அவ்­வா­றா­ன­தொரு குற்­றச்­சாட்டு இருக்­கு­மானால் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் விசா­ர­ணை­யொன்றை மேற்­கொண்டு நம்­ப­க­மான ஆதா­ரங்­களை வெளிப்­ப­டுத்த வேண்டும். முஸ்லிம் சமூகம் அதற்கு ஒரு­போதும் எதிர்ப்புத் தெரி­விக்­காது.

ஆனால் அது பிரச்­சி­னை­யல்ல, பிரச்­சினை என்­ன­வென்றால் முஸ்லிம், சிங்­கள மற்றும் தமிழ் சமூ­கங்கள் ஒற்­று­மை­யாக வாழ்­வதை விரும்­பாத மற்­றொரு சக்தி காணப்­ப­டு­வ­தாகும். அதனை இல்­லாமல் செய்ய அவர்கள் விரும்­பு­கின்­றனர். பெரும்­பான்மை முஸ்­லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்­பி­னைக் கண்­டிக்­கின்­றனர்.

அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்­பி­னையோ அல்­லது வேறு பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளையோ ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. எந்­த­வித தொடர்பும் இல்­லாத நிலையில் முஸ்­லிம்­க­ளையும் பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளையும் தொடர்­பு­ப­டுத்தி முரண்­பட்ட, பொய்­யான அறிக்­கை­களை வெளி­யிட்டு எதிர்ப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த முனைவோர் இலங்­கையில் நிலவும் சமா­தான சக­வாழ்வை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்கு எந்த வகை­யிலும் முயற்­சி­செய்­யாத மக்கள் மத்­தியில் தேவை­யற்ற பயத்­தி­னையும் சந்­தே­கத்­தி­னையும் ஏற்­ப­டுத்த முற்­ப­டு­கின்­றனர். 

முஸ்லிம், சிங்­கள மற்றும் தமிழ் சமூ­கங்கள் ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரு­கின்­றன என்­பதை உங்­களால் மறுக்க முடி­யாது. எமக்­குள்ள சந்­தேகம் என்­ன­வென்றால், இவ்­வா­றான சக்­திகள் வெளி­நாட்டு நிகழ்ச்சி நிர­லினை வெற்­றி­ய­டையச் செய்­வ­தற்கு பணி­யாற்­று­கி­றார்­களா என்­ப­தாகும்.

இவர்­க­ளுக்கு எவ்­வாறு நிதி கிடைக்­கின்­றது, எவ்­வாறு அவர்கள் தமது இயக்­கத்தைக் கொண்டு நடாத்­து­கி­றார்கள் என்­பது பற்றி புல­னாய்­வுத்­துறை விசா­ரித்­தாக வேண்டும்.

அதேபோல் அதன் பின்­ன­ணியில் மெஸாட் இருக்­கி­றதா என்­பது பற்­றியும் விசா­ரிக்க வேண்டும். எமக்கு இந்த விட­யத்தில் சந்­தேகம் இருக்­கி­றது. திடீ­ரென ஆரம்­பித்த தீவி­ர­வாதம் திடீ­ரென தணிந்­தது. அது மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளது. இது சந்­தே­கத்­திற்­கி­ட­மான செயற்­பா­டாகும். எனவே, இக் குழு வேறொரு நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­வாகச் செயற்­ப­டு­கின்­றது என்­பது அந்த நிகழ்வின் மூலம் தெளி­வாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. 

கே: கடந்த சில வாரங்­க­ளாக சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வாத மற்றும் வன்­முறைச் செயற்­பா­டுகள் ஞான­சார தேரோ­வினால் வழி­ந­டாத்­தப்­பட்­டுள்­ளன. அவ­ருக்கு எதி­ராக பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றெ­னினும், அவர் இது­வரை கைது செய்­யப்­ப­ட­வில்லை. இதன் மூலம் சட்ட அமு­லாக்­கத்தில் சில பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன என நீங்கள் நினைக்­க­வில்­லையா? 
 சட்டம் முறை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதில் ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும், சட்டம் மற்றும் ஒழுங்­குக்­கான அமைச்­சரும் உறு­தி­யாக இருக்­கின்­றனர். ஆனால் இரண்டாம் நிலை­யி­லுள்­ள­வர்கள் ஏன் இது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­காமல் இருக்­கி­றார்கள் என்­ப­தில்தான் பிரச்­சினை காணப்­ப­டு­கின்­றது.

சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு பொலிஸார் ஏன் தயங்­கு­கி­றார்கள் என்­ப­து­பற்­றியே நாம் கவலை கொண்­டுள்ளோம். முஸ்லிம் ஒருவர் புத்­தரைப் பற்­றியோ அல்­லது சிங்­கள சமூ­கத்தைப் பற்­றியோ தரக்­கு­றை­வாகப் பேசினார் என வைத்­துக்­கொண்டால், அவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் பொலிஸார் பாரா­மு­க­மாக இருந்­தி­ருப்­பார்­களா என்­பதில் எனக்கு பலத்த சந்­தேகம் இருக்­கி­றது.

பொலிஸார் அதற்­கெ­தி­ராக நிச்­ச­மாக நட­வ­டிக்கை எடுப்­பார்கள்; ஒரு சந்­தர்ப்­பத்தில் அவ்­வாறு நடந்­தது. இருந்­த­போ­திலும், இந்த தீவி­ர­வா­திகள் இஸ்­லாத்தின் தூதரை தரக்­கு­றை­வாகப் பேசி­ய­மை­யா­னது பல சந்­தர்ப்­பங்­களில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு வேத­னையைத் தந்­துள்­ளது.

ஆனால் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அவ்­வா­றான தனிப்­பட்ட நபர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு பொலிஸார் ஏன் தயங்­கு­கி­ற­ார்கள்? ஏன் அவர்கள் இரட்டை நிலைப்­பாட்டில் இருக்­கி­றார்கள் ? நல்­லாட்சி அர­சாங்­கத்தில் சட்­டத்தை சம­மாக அமுல்­ப­டுத்­து­வ­தாக நாம் வாக்­கு­றுதி அளித்­துள்ளோம். அர­சி­யல்­யாப்­பிற்கு அமை­வாக, சட்­டத்­திற்­குட்­ப­டாது எவரும் இருக்க முடி­யாது.

ஒரு நபரின் தரா­த­ரத்தை கருத்­திற்­கொள்­ளாது சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கு­மானால் இந்த நாட்டின் பல பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிட்­டி­யி­ருக்கும். சட்டம் மற்றும் ஒழுங்­கிற்குப் பொறுப்­பான அமைச்­ச­ருடன் நாம் உரை­யா­டி­ய­போது அவர் கூட எவ­ரேனும் சட்­டத்தை மீறு­வார்­க­ளாக இருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக பொலிஸார் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே இருந்தார். 

கே: சிரேஷ்ட அமைச்சர் ஒரு­வரால் வழங்­கப்­பட்­டுள்ள பாது­காப்­பான இடத்தில் ஞான­சார தேரர் மறைந்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றதே அது உண்­மையா? 
 இது தொடர்பில் நானும் கேள்­விப்­பட்டேன். எனினும், ஞான­சார தேரர் மறைந்­தி­ருப்­ப­தற்கு வச­தி­யினை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்கு இந்த அர­சாங்­கத்­தி­லுள்ள எந்த அமைச்­ச­ருக்கும் காரணம் இருப்­ப­தாக நான் நினைக்­க­வில்லை.  

அவ்­வாறு யாரேனும் உத­வி­ய­தாகக் கண்­ட­றி­யப்­பட்டால் அவர் தனது அந்­தஸ்தை இழப்பார். தேவை­யில்­லாமல் எந்த ஒரு அமைச்­சரும் தனது அந்­தஸ்தை இழக்க விரும்­பு­வாரா?  ஞான­சார தேர­ருடன் தொடர்­பினை பேணியவர்களது வாக்கு வங்கி அதி­க­ரிக்­க­வில்லை. 
உண்மை என்­ன­வென்றால் ஞான­சார தேர­ருடன் எவ்­வ­ளவு நெருக்­க­மாக இருக்­கி­றார்­களோ அந்த அள­விற்கு அவர்கள் தமது வாக்­கு­களை இழப்­பார்கள். 

கே: எவ்­வா­றெ­னினும், இந்த விடயம் தொடர்பில் அர­சாங்­கத்­தினுள் சில முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்றன அப்­ப­டியா ? 
ஆம், ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் வெவ்வேறு கருத்­துக்கள் இருக்கும். எவ்­வா­றா­யினும், எவரும் பாஸிச மற்றும் தீவி­ர­வாத கருத்­துக்­களைக் கொண்­டி­ருக்­க­வில்லை. ஞான­சார தேரர் முஸ்­லிம்­களை வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும், வெளி­யேற்ற வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருக்­கின்றார். தற்­போ­தைய அர­சாங்­கத்தின் எந்த ஒரு அங்­கத்­த­வரும் அவ்­வா­றான கருத்­தினைக் கொண்­டி­ருக்­க­வில்லை. வெவ்வேறு நிலைப்­பா­டு­களைக் கொண்­ட­வர்கள் இருக்­கி­றார்கள். ஆனால் அவர்­களுள் எவரும் தீவி­ர­வாதம் மற்றும் பாஸி­சத்தை வெளிப்­ப­டுத்தும் அள­விற்குச் செல்­ல­வில்லை.

நான் ஏற்­க­னவே குறிப்­பிட்­டது போன்று, சட்­டத்­தி­லி­ருந்து ஞான­சார தேரரை காப்­பாற்­று­வதன் மூலம் எவரும் நன்­மை­ய­டைந்­து­விட முடி­யாது. அவர்கள் தற்­போது அனு­ப­வித்­து­வரும் நலன்­களை இழப்­பார்கள்.  ஞான­சார தேரரை அருகில் வைத்­துக்­கொண்­டி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் கோட்­டா­பய ஆகி­யோ­ருக்கும் இதுதான் நடந்­தது. அவர்­க­ளிடம் இருந்­ததை இழந்­தார்கள். 

கே: இறு­தி­யாக வேறு ஏதேனும் கூற விரும்புகிறீர்களா? 
 பௌத்த தீவிரவாதம் ஒரு நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன். தாம் பௌத்த மதத்தையும் பௌத்தர்களையும் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள். பெரும்பான்மை பௌத்தர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கே அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். அவர்கள் கடந்த தேர்தலில் போட்டியிட்டபோது பௌத்தர்களாலேயே நிராகரிக்கப்பட்டனர்.

அவர்கள் இலங்கை மக்களில் ஒரு வீதத்தினரைக்கூட பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவ்வாறானவர்களின் எதிர்ப்புணர்வுக் கோஷங்களுக்கு தலைசாய்க்கத் தேவையில்லை. அவர்கள் சிறிய எண்ணிக்கையிலானோராவர். அவர்களால் பெரும்பான்மையைப் பெற முடியாது. தீவிர செயற்பாடுகள் மற்றும் அச்சுறுத்தல் மூலம் மக்களை அச்சநிலையில் வைத்திருக்க முனைகின்றனர்.

அரசாங்கம் என்ற வகையில் எம்மால் இதனை அனுமதிக்க முடியாது. வெவ்வேறு கருத்துக்கள் தொடர்பில் சகிப்புத்தன்மையினை வெளிப்படுத்துவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை, ஆனால் தீவிர செயற்பாடுகளினால் அச்சுறுத்த முடியாது. தீவிரப் போக்கு அனைத்து சமூகத்திலும் காணப்படுகின்றது. வடக்கில் அது தலைதூக்கியதை நாம் பார்த்தோம். தமிழ் மக்களில் ஒரு குழுவினர் இலங்கையிலிருந்து சுதந்திரம் பெற வேண்டுமென விரும்பினர்.

ஆனால் தமிழ் மக்கள் அதனை நிராகரித்ததோடு மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். இந்த நிலைமைதான் அனைத்து சமூகங்களிலும் காணப்படுகின்றன. அவர்களுள் சிறு குழுவினரே தீவிரப் போக்கை வெளிப்படுத்துகின்றனர். பெரும்பான்மையினர் அதனை நிராகரிக்கின்றனர்.

அதேபோல, 2015ஆம் ஆண்டு நாம் செய்ததுபோல இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களிலுமுள்ள பெரும்பான்மை மக்கள் அனைவரும் குறிப்பிட்ட சில சிறிய சக்திகளின் தீவிரப்போக்கை தோற்கடிப்பதற்கு ஒன்றிணைய வேண்டும்.