Verified Web

என்னைக் கைது செய்தால் முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டுவேன்

2017-05-22 09:29:52 Administrator

ஏ.எல்.எம். சத்தார்
ஞான­சார தேரர் மல்­வத்­தையில் சபதம்
தான் கைது செய்யப்பட்டால் இலங்கை முஸ்­லிம்கள் வர­லாற்றில் கண்­டு­கொள்­ளாத பெரும் பாடம் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டி ஏற்­படும் என்று பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் சூளு­ரைத்தார்.தற்­போது நில­வி­வரும் சூழ்­நிலை குறித்து தனது ஆதங்­கத்தை வெளி­யி­டு­வ­தற்­காக மல்­வத்த மகா­நா­யக்க தேரரைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டும்­போதே தேரர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

நேற்று முன்­தினம் மல்­வத்த பீடத்தில் இடம்­பெற்ற மேற்­படி உரை­யா­டலில் ஞான­சார தேரர் மேலும் கூறி­ய­தா­வது;
இன்று முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் அனை­வரும் எத்­த­கைய பேதங்­க­ளு­மின்றி ஒன்­று­பட்டு என்னைக் கைது செய்­யும்­படி ஜனா­தி­பதி, பிர­த­மரிடம் முறை­யீடு செய்­தி­ருக்­கி­றார்கள்.

ஆனால் எமது சிங்­கள அர­சி­யல்­வா­தி­களோ இவ்­வாறு ஒன்­று­பட முன்­வ­ரு­வ­தில்லை. எனக்­கெ­தி­ரா­கத்தான் அவர்­களும் கருத்து தெரி­வித்து வரு­கி­றார்கள். எமது நாட்டின் தலை­விதி இப்­ப­டித்தான் கேலிக் கூத்­தாக இருக்­கி­றது.

இங்­குள்ள முஸ்­லிம்­க­ளுக்கு நாட்டு சட்ட திட்­டங்கள் தெரி­ய­வில்லை. நாட்டின் தொல்­பொருள் என்றால் என்­ன­வென்று கூட தெரி­யா­த­வர்­க­ளா­கத்தான் இருக்­கி­றார்கள். இத­னால்தான் எமது பெரும்­பான்மை பௌத்த சமூ­கத்­துக்கு எதி­ரா­கவும் எமது மனம் புண்­படும் வகை­யிலும் நடந்து கொள்­கி­றார்கள். இதனை எதிர்த்து நாம் நியாயம் பேசப் போனால் எம்மை இன­வா­திகள் என்று இனம்­காட்டி விடு­கி­றார்கள். தொடர்ந்தும் இதனை அனு­ம­திக்க முடி­யாது. எனக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கப் போனால் என்னைச் சூழ­வுள்ள எமது வாலிப சமூ­கத்­தினர் பொறுத்துக் கொண்­டி­ருக்­க­மாட்­டார்கள். முஸ்லிம் பள்­ளி­களைத் தகர்த்­தெ­றி­வார்கள். வர­லாறு காணாத பாடம் ஒன்றைத்தான் கற்­பிப்­பார்கள்.

வெயங்­கொ­டையில் எமது வெசாக் தோரணம் ஒன்றை இந்த வருடம் நிர்­மா­ணிக்க இடம்­கொ­டுக்­க­வில்லை. காரணம் அங்­குள்ள முஸ்­லிம்கள் அதைப் பார்க்­க­மாட்­டார்­களாம். இதே­போன்று அம்­பா­றையில் 100 வீதம் சிங்­கள பௌத்­தர்கள் கட­மை­யாற்றும் நிறு­வனம் ஒன்றில் அங்­குள்­ள­வர்கள் சுவை­யாக சமைத்த உணவின் முதல் பகு­தியை புத்த பெரு­மா­னுக்கு படைப்­ப­தற்­காக புத்தர் சிலை ஒன்றை அங்கு நிறு­வப்­போ­ன­போது அதனால் முஸ்­லிம்­களின் மனம் புண்­படும் என்று அந்நிறு­வன தலைவர் மறுத்­து­விட்டார்.

எமது பௌத்த நாட்டின் இலட்­சணம் இப்­ப­டி­யி­ருக்­கி­றது. தொல்­பொ­ருளா முதலில் வந்தது அல்­லது முஸ்­லி­ம்­களா என்­ப­தற்கும் விவஸ்­தையே இல்லை.

முஸ்­லிம்கள் எங்­கா­வது பத்துக் குடும்­பங்கள் இருந்தால் அங்கு பள்ளி கட்டிக் கொள்­கி­றனர். இதற்­கெல்லாம் அவர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­ப­டு­கி­றது.

சவூதி அரே­பி­யாவின் வஹா­பி­ஸத்தை இங்கு நிலை நிறுத்தப் பார்க்­கி­றார்கள். முன்­பெல்­லாம் வீடு­களில் மாடுகள் அறுக்­கப்­ப­ட­வில்லை. இப்­போது அத­னையும் செய்து வரு­கி­றார்கள். புத்த பெரு­மான் மாடுகள் கொல்­லப்­ப­டு­வ­தற்கு எதி­ராக குரல் கொடுக்­கும்­படி போதனை செய்­தி­ருக்­கிறார். எம்மால் அத­னையும் இன்று செய்ய முடி­யாத கையா­லா­காத நிலைக்கு நாம் தள்­ளப்­பட்­டி­ருக்­கிறோம். 

முல்­லைத்­தீவில் ரிஷாத் பதி­யுதீன் ஈரா­னி­யர்­களைக் கொண்டு வந்து அங்கு வீடுகள் நிர்­மா­ணிக்கப் போகிறார். அவ­ருக்கு எதி­ராக வழக்­குகள் இருக்­கின்­றன. அதற்குத் தீர்வு இல்­லாது இழு­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் எமக்கு எதி­ரான வழக்கு என்றால் அவ­ச­ர­மாகத் தீர்ப்பு வழங்கி தண்­டனை வழங்கும் நிலைதான் உள்­ளது?

எனவே மகா­நா­யக்க தேரர் அவர்கள் நீங்கள் தான் எமக்கு உதவ முன்­வர வேண்டும். எம்மை இம்­சித்­து­வரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சரி­யான சாட்டை அடி கொடுத்­தாக வேண்டும்.

இன்று நல்ல முஸ்லிம் யார் கெட்ட முஸ்லிம் யார் என்று இனம் காண முடி­யா­துள்­ளது. நாம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்லர். ஆனால் எமது பௌத்த நாட்டில் பௌத்த கொள்­கையை நிலை நாட்டத் தடை­யாக இருப்­ப­தைத்தான் கண்­டிக்க வேண்டும்.

இதற்காக எம்மையும் முஸ்லிம் தலைவர்களையும் இங்கு அழைத்து கலந்துரையாடல் ஒன்று நடத்துங்கள். அதில் நாம் எமது பக்க நியாயங்களை முன்வைப்போம். முஸ்லிம்கள் அதனை எதிர்த்தால் யார் பொய்யர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். நாட்டில் உள்ள அனைவராலும் இந்த உண்மையை அப்போது உணர்ந்து கொள்ளலாம். எமக்கு நியாயத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.