Verified Web

ஞான­சார தேரரை கைது­செய்ய பொலிஸார் திடீர் நட­வ­டிக்கை

2017-05-22 09:07:47 MFM.Fazeer

குரு­நாகல் - தம்­புள்ளை வீதியில் பதற்றம்
பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர தேரரை விஷேட பொலிஸ் குழு­வொன்று கைது செய்ய திடீர் நட­வ­டிக்கை ஒன்­றினை எடுத்­துள்ள நிலையில் பிக்­குகள் மற்றும் அவ­ருடன் இருந்த ஆத­ர­வா­ளர்­களின் கடும் எதிர்ப்பு, அச்­சு­றுத்தல் கார­ண­மாக அந் நட­வ­டிக்கை தோல்­வி­ய­டைந்­துள்­ளது. 

இச்­சம்­பவம் நேற்று முன் தினம் இரவு இடம்­பெற்­றுள்­ளது. இந் நிலையில் இன்று ஞான­சார தேர­ரிடம் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் விஷேட பொலிஸ் குழு­வொன்­றினால் சிறப்பு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

குரு­நாகல் இப்­பா­க­முவ பகு­தியில் நிகழ்­வொன்றில் கலந்­து­கொள்ள கல­கொட அத்தே ஞான­சார தேரர் செல்­வ­தாக பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்ள தகவல் ஒன்­றுக்கு அமை­வாக அவரைக் கைது செய்ய விஷேட பொலிஸ் குழு­வொன்று சென்­றுள்­ளது. குரு­நாகல் - தம்­புள்ளை பிர­தான வீதியின் தோர­யாய எனும் முஸ்லிம் கிரா­மத்தை அண்­மித்­துள்ள பட­க­முவ - மூக்­க­லான காட்டுப் பகு­தியில் வைத்தே இந் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளது. 

ஞான­சார தேரரின் வாக­னத்தை இடை மறித்து பொலிஸார் அவரை கைது செய்ய முயன்­றுள்­ளனர். எனினும் இதன்­போது அதற்கு ஞான­சார தேரரும் அவ­ருடன் இருந்த சிங்­கள ராவய அமைப்­பினர் உள்­ளிட்ட தேரர்­களும் ஏற்­க­னவே இன­வாதம் தொடர்பில்  கைது செய்­யப்­பட்­டுள்ள டான் பிரசாத் என அறி­யப்­படும் நபர் உள்­ளிட்டோர் கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டனர்.

இதன்போது அங்கு சென்­றிருந்த பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஒருவர் உள்­ளிட்­டோரின் கட­மைக்கு அவர்கள் பாரிய இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­தினர். 

இதனால் அப்­ப­கு­தி­யெங்கும் பெரும் பதற்­ற­மான சூழல் நில­வி­ய­துடன் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் நிலை­மையைக் கட்­டுப்­ப­டுத்த ஸ்தலம் வர­வ­ழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். 

பொலி­ஸாரை மிகக் கேவலமாக ஏசி­யுள்ள ஞான­சார தேரர் உள்­ளிட்ட குழு­வினர், குரு­நாகல் -– தம்­புள்ளை பிர­தான வீதியின் போக்கு வரத்­தையும் இடை­ம­றித்து ரகளை செய்­தனர். ஞான­சார தேரரைக் கைது செய்தால் தாம் அனை­வரும் தீக்­கு­ளிப்­ப­தாக பெற்றோல் போத்­தல்­க­ளுடன் அங்­கி­ருந்த பலர் கோஷம் எழுப்­பிய நிலையில் கைது நட­வ­டிக்­கைக்கு சென்ற பொலிஸார் பாரிய சங்­க­டத்தை எதிர்­கொன்­டனர்.

இதன்போது கைது நட­வ­டிக்கை தொடர்பில் சென்ற பொலி­ஸாரை மிகக் கேவ­ல­மாக வசை­பா­டிய நிலையில் ஞான­சார தேரர்,'நான் இந்த  நாட்­டிற்கு செய்­துள்ள அநி­யாயம் என்ன, இந்த நாட்டில் புரா­தன சொத்­துக்­களை சீர­ழிப்­பதும், தேசிய  வனத்தை நாசம் செய்­வதும் எமது செயற்­பா­டுகள் அல்ல அதனால் பொலிஸார் எமது செயற்­பா­டு­களை தடுக்க முடி­யாது.

எவ­ரு­டைய உத்­த­ரவின் பேரிலும் எமது செயற்­பா­டு­க­ளுக்கு முட்­டு­கட்­டை­யிட முடி­யாது, ரணில் உத்­த­ர­வா­கவே இருந்­தாலும் அதனை ஏற்று எம்மை தடுக்க முடி­யாது. இந்த நாட்டை விடுக்க இந்த அர­சாங்­கத்தை வீட்­டிற்கு விரட்­டி­ய­டிப்­ப­தற்கு நாட்டு மக்கள் கண் திறந்­துள்ள தருணம் இது என கூறி­ய­தோடு, மிகக் கேவ­ல­மாக உயர் தொனியில் அங்கு கூக்­கு­ர­லிட்டார்.

இந் நிலையில் பாதையில் நில­விய போக்குவரத்து நெரிசல், பதற்­ற­மான சூழல் ஆகி­ய­வற்றை தொடர்ந்து பொலிஸார் ஞான­சார தேரரை கைது செய்­யாது அவரை பய­ணத்தை முன்­னெ­டுக்க அனு­ம­தித்து விலகிச் சென்­றனர்.

இத­னி­டையே ஞான­சார தேர­ருக்கு எதிராக முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்டவர்களால் பொலிஸ் தலைமையகத்துக்கு வழங்கப்பட்ட முறைப்பாடு இன்று விசாரணை செய்யப்படவுள்ளதாக அறிய முடிகிறது. இது தொடர்பில் இன்று ஞானசார தேரர் பொலிஸ் தலைமையகத்தின் விசாரணைக் குழு முன்னிலையில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.