Verified Web

இனவாத களத்தில் மீண்டும் ஞானசார தேரர்

A.R.A Fareel

சிரஷே்ட ஊடகவியலாளரான .ஆர்..பரீல் உடத்தலவின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவி வகிக்கிறார்.

 

2017-05-21 09:00:23 A.R.A Fareel

மதங்கள் கருணை, அன்பு,சகோ­த­ரத்­துவம், நேர்மை என்­ப­ன­வற்­றையே போதிக்­கின்­றன. ஆனால் எமது நாட்டில் ஏன் இதில் மாற்­றங்கள்-? பௌத்த மத குரு­மார்கள் சிலர் தடிகள், பொல்­லுகள் ஏன் ஆயு­தங்கள் கூட ஏந்திக் களத்தில் இறங்கி அடா­வ­டித்­தனம் புரியும் குழு­வி­ன­ருடன் இணைந்­தி­ருக்­கி­றார்கள் என்­ப­துதான் புரி­ய­வில்லை.கடந்­த­வாரம் நாடெங்கும் புத்­தரின் வாழ்க்கை வர­லாற்­றைச்­சித்தி­ரிக்கும் அலங்­கா­ரப்­பந்­தல்­களை நாம் பார்த்தோம். இலட்­சக்­க­ணக்­கான மின்­கு­மிழ்கள் இதற்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. தன்­ச­லை­களில் மக்கள் நீண்ட வரி­சையில்(கியூ) நின்­றார்கள். அங்கே சாதி, சமய வேறு­பா­டுகள் காணப்­ப­ட­வில்லை. முஸ்­லிம்கள், தமி­ழர்கள் என்று பல மதத்­த­வர்­களும் கலந்­து­கொண்டு பசி தீர்த்­தார்கள்.

வெசாக் நிகழ்­வுகள் நிறை­வு­பெற்ற கையோடு பொது­ப­ல­சேனா அமைப்பு, சிங்­கள ராவய மற்றும் சிங்­ஹலே அபி அமைப்­பு­க­ளுடன் கைகோர்த்து கௌதம புத்­தரின் போத­னை­க­ளுக்கு மாறாக கள­மி­றங்கி முஸ்­லிம்­க­ளையும் அல்­லாஹ்­வையும் நபிகள் நாய­கத்­தையும் அவ­தூ­றாகப் பேசி­வ­ரு­கின்­றமை ஏதோ­வொரு திட்­டத்தை அமு­லாக்கும் முயற்­சி­யா­கவே எண்­ணத்­தோன்­று­கி­றது.


பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சா­ர­தேரர் கடந்த வாரம் கள­மி­றங்கி செயற்­பட்ட முறை­யா­னது முஸ்­லிம்­களை ----பெரிதும் கவ­லைக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. பொல­ன­றுவை – ஒனே­கம ஜல­கெ­லும்­மின்ன வன பாது­காப்பு பிர­தேச எல்­லையில் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் மேற்­கொண்ட அட்­ட­கா­சங்கள் அனு­ம­திக்­கப்­பட முடி­யா­த­ன­வாகும்.

ஊடக மாநாட்டில் ஞான­சார தேரர்
பொது­ப­ல­சேனா அமைப்பின் ஞான­சார தேரர் கடந்த இரு­வா­ரங்­களில் இரு ஊடக மாநா­டு­களை நடாத்தி முஸ்­லிம்­க­ளையும் குர்­ஆ­னையும் முஹம்மத் நபி (ஸல்) அவர்­க­ளையும் அவ­மா­னப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். குர்ஆன் அவ­ம­திப்பு தொடர்­பாக அவர் நீதி­மன்றில் ஏற்­க­னவே வழக்­கொன்­றினை எதிர்­கொண்­டுள்ள நிலையில் குறு­கி­ய­கால அமை­திக்­குப்பின் மீண்டும் மெளனம் கலைந்­தி­ருக்­கிறார். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் ஞான­சார தேரர் இவ்­வா­றான கருத்­து­களை வெளி­யிட்டார்.

இலங்­கையில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் உச்­சத்தை எட்­டி­யுள்­ளது. சவூதி அரே­பியா அரசு இங்கு வஹா­பி­ஸத்தை போஷித்து வரு­கி­றது. அல்­லாஹ்வின் பாதை என்று கூறிக்­கொண்டு முஸ்­லிம்கள் எமது காணி­களை ஆக்­கி­ர­மிக்­கி­றார்கள். தொல்­பொ­ருட்­களை அழிக்­கி­றார்கள். வன பாது­காப்பு பிர­தே­சங்­களை ஆக்­கி­ர­மித்து அழிக்­கி­றார்கள். அர­சாங்கம் இதற்கு எதி­ராக முஸ்­லிம்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இல்­லையேல் அவர்­களை சவூ­திக்கு ஏற்றி அனுப்­பி­விட வேண்டும்.

குர்ஆன், இஸ்­லாத்தை பரப்­பு­வ­தற்­காக ஏனைய மதத்­த­வர்­களின் காணி­களை அப­க­ரிக்கும் படி­யும்­அ­வர்­க­ளுக்கு எதி­ராக செயற்­படும் படியே கூறு­கி­றது. அல்லாஹ் இவ்­வா­றான செயற்­பா­டு­களை விரும்­பு­கிறான் என்றே தெரி­விக்­கி­றது. குர்ஆன் ஆயத்­துகள் 3:28, 3:58, 9:14, 8:39, 3:157 என்­ப­வை­களை உதா­ர­ண­மாகக் குறிப்­பி­டலாம்.

இந்­நாட்­டி­லுள்ள சம்­பி­ர­தாய முஸ்­லிம்­களும் சவூ­தி­யி­லி­ருந்து கிடைக்கும் உத­வி­க­ளுக்கு ஆசைப்­பட்டு வஹா­பி­ஸத்­துக்கு அடி­மை­யாகி வரு­கி­றார்கள். ஐ.ஐ.ஆர்.ஓ, ஐ.ஆர்.ஓ, அல்­ஷபாப், முஸ்­லிமாத், முஸ்லிம் எயிட், ஹிரா, நிதா, செரண்டிப் போன்ற 10 அரச சார்­பற்ற அமைப்­புகள் இலங்­கையில் தீவி­ர­வா­தத்தைப் பரப்பி வரு­கின்­றன. ஹிரா அமைப்பின் தலை­மை­யகம் தெஹி­வ­ளையில் இயங்­கு­கி­றது. இங்கு ஜமா­அத்தே இஸ்­லாமி மதம் மாற்றும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்கள் இன்று அல்­தக்­கி­யாவை தீவி­ர­மாக செயற்­ப­டுத்­து­கி­றார்கள். அல்­தக்­கியா என்றால் இஸ்­லா­மி­யர்கள் முஸ்லிம் அல்­லா­த­வர்­களை தம் கீழ் அடி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ள மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­க­ளாகும். இதை அல்­லா­ஹவின் பாதை என்று கூறு­கி­றார்கள்.
இஸ்­லா­மிய அடிப்­படைவாதத்தின் பயங்­க­ரத்தை நாம் கடந்­த­கால அர­சுக்கு கூறினோம். இந்த அர­சுக்கும் கூறினோம். சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளி­டமும் தெரி­வித்தோம். இதனால் ஏற்­ப­டப்­போகும் பயங்­கர விளை­வு­களை சாட்­சி­யங்­க­ளுடன் கூறினோம். முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களால் எமது அர­சியல் தலை­மைகள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளார்கள்.

முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளுக்­காக எமது அர­சியல் தலை­மைகள் மெளனம் சாதிக்­கின்­றன. முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளுக்கு ஏமாந்து அவர்­க­ளுக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளா­ம­லி­ருக்­கி­றார்கள். இது மீதொட்­ட­முல்ல குப்­ப­மேடு போன்ற பிரச்­சி­னை­யாகும். பந்­தினை இரு தரப்பும் கைமாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன. சிறி­தாக ஆரம்­பித்த மீதொட்­ட­முல்ல குப்­பை­மேடு பிரச்­சினை போல முஸ்லிம் தீவி­ர­வாத பிரச்­சினை விரைவில் பூதா­க­ர­மா­க­வுள்­ளது. இஸ்­லாத்தில் தீவி­ர­வாதம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

குர்­ஆனில் கூறப்­பட்­டுள்­ள­வை­க­ளையே அவர்கள் அரங்­கேற்­று­கி­றார்கள்.

நாடு சுதந்­திரம் பெற்று 69 வரு­டங்கள் கடந்­து­விட்­டன. என்­றாலும் சிங்­க­ள­வர்கள் இந்­நாட்டில் போர்டிங் காரர்­க­ளாக விடு­தியில் தங்­கி­யி­ருப்­ப­வர்கள் போலாகி விட்­டார்கள். நாட்டின் சொந்­தக்­கா­ரர்­க­ளாக முஸ்­லிம்கள் மாறி விடு­கி­றார்கள். எனவே பௌத்­தர்கள் நாட்­டைக்­காப்­பாற்ற முன்­வர வேண்டும்.

புத்­தரின் போத­னைகள் பின்­பற்­றப்­ப­டா­மை­யி­னாலே உலகில் அதர்மம் தலை தூக்­கி­யுள்­ளது. எமது நாட்­டிலும் மாடு அறுக்­கப்­ப­டு­வ­தனால் அதர்மம் நில­வு­கி­றது. மாடுகள் அறுக்­கப்­ப­டு­வ­தற்­காக ஏனைய மிரு­கங்கள் கூட அழு­தன என்று கூறப்­ப­டு­கி­றது. இன்று முஸ்­லிம்கள் தமது வீடு­களில் மாடு­களை அறுக்­கி­றார்கள். இதனால் நாட்டில் அதர்மம் தலை­தூக்­கி­யுள்­ளது.

இது இஸ்­லா­மிய நாடு அல்ல. இஸ்­லா­மி­யர்கள் நாட்­டி­லி­ருந்தும் வெளி­யேற்­றப்­ப­ட­வேண்டும். முஸ்­லிம்­களின் பௌத்­தத்­துக்கு முர­ணான செயற்­பா­டு­களை நாம் எதிர்த்தால் அர­சாங்கம் எம்­மீது இன­வாத லேபலை ஒட்­டு­கி­றார்கள் இதையே நாம் அல்­தக்­கியா என்­கிறோம். அல்­தக்­கி­யா­வுக்கு நாம் பயப்­படப் போவ­தில்லை.

காணி ஆக்­கி­ர­மிப்பு
இன்று கிழக்கில் முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­களின் காணி­யையும் தொல் பொருள் பிர­தேங்­க­ளையும் அப­க­ரித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.
ஏறாவூர் இன்று முழு­மை­யான முஸ்லிம் பிர­தே­ச­மாக மாறி­யுள்­ளது.1983 ஆம் ஆண்டு 3000 சிங்­கள குடும்­பங்கள் வாழ்ந்­தன. அன்று ஏறாவூர் நகரில் இருந்த 62 கடை­களில் 53 கடைகள் சிங்­க­ள­வர்­க­ளுக்கே சொந்­த­மாக இருந்­தன. யுத்­தத்­திற்குப் பின்பு முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­களின் கடை­களை அப­க­ரித்துக் கொண்­டார்கள். இன்று இரு ­க­டை­களே சிங்­க­ள­வர்­க­ளுக்குச் சொந்­த­மாக உள்­ளன.

சிங்­க­ள­வர்­களின் காணி­களை அப­க­ரித்து காணி உறு­தி­க­ளையும் ஏதோ வகையில் பெற்­றுக்­கொண்­டுள்­ளார்கள். இப்­போது இக்­கா­ணிகள் எமக்கே சொந்தம். எம்­மிடம் காணி உறு­திகள் உள்­ளன என்­கி­றார்கள். ஜனா­தி­பதி இந்த சட்­ட­வி­ரோத ஆக்­கி­ர­மிப்­பு­களில் தலை­யி­டு­வ­தில்லை ஏன்-? சிங்­க­ள­வர்கள் இரண்டாம் தரப் பிர­ஜையா?

முகுது விகா­ரை­யிலும் இப்­ப­டியே. முகுது விகாரை காணி­க­ளையும் முஸ்­லிம்கள் அப­க­ரித்­துக்­கொண்­டுள்­ளார்கள். முகுது விகா­ரைக்குச் சொந்­த­மாக 236 ஏக்கர் காணி இருந்­தது. இக்­காணி ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு இன்று 3,4 ஏக்­கர்­க­ளாக குறை­வுற்­றுள்­ளது. முகுது விகாரைக் காணி­களைக் கைப்­பற்றிக் கொண்டு நாம் இங்­கி­ருந்து போக­மாட்டோம் என்று முஸ்­லிம்கள் கூறு­கி­றார்கள். இவர்­க­ளையும் நாம் விரட்­டி­ய­டிப்போம்.

மாணிக்­க­மடு மலைப்­பி­ர­தே­சத்­திலும் முஸ்­லிம்­களே காணி­களை அப­க­ரித்துக் கொண்­டுள்­ளார்கள். அந்தக் காணிகள் தீக­வாபி சைத்­தி­ய­வுக்குச் சொந்­த­மா­ன­தாகும். அங்கு முஸ்­லிம்கள் இருவர் 2½ ஏக்­கர்­கா­ணியை ஆக்­கி­ர­மித்துக் கொண்­டுள்­ளார்கள். இக்­காணி பௌத்த விகா­ரைக்­குச்­சொந்­த­மா­ன­தாகும். இன்று இந்­தக்­கா­ணி­யி­லி­ருந்து நாம் போகிறோம் எமக்கு மாற்­றுக்­காணி தாருங்கள் என்­கி­றார்கள். அவர்கள் அல்லாஹ் கூறி­யுள்­ளதைப் போன்று மாற்று மதத்­த­வர்­களின் காணி­களை அப­க­ரித்­துக்­கொண்­டுள்­ளார்கள். இதுதான் இஸ்­லா­மிய கோட்­பாடு.

சிங்­க­ள­வர்­களும் வன பிர­தே­சங்­க­ளையும் ஏனை­ய­வர்­களின் காணி­க­ளையும் அப­க­ரிக்க வேண்டும். பின்பு நாம் காணி­க­ளி­லி­ருந்து அகல வேண்­டு­மென்றால் மாற்­றுக்­காணி தாருங்கள் என்று அர­சாங்­கத்­திடம் பேரம் பேச வேண்டும்.

மலிக் அப்­துல்லாஹ் பல்­க­லைக்­க­ழகம்
கிழக்கில் ஹிரா பவுண்­டே­சனின் தலை­மையில் 1500 கோடி ரூபா செலவில் இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழகம் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. சமூ­கத்­துக்கு வழி­காட்­டு­வ­தற்­கா­கவே இப்­பல்­க­லைக்­க­ழகம் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தாகக் கூறு­கி­றார்கள்.

இங்கு அரபு மொழி போதிக்­கப்­ப­ட­வுள்­ளது. குர்ஆன் போதிக்­கப்­ப­ட­வுள்­ளது. ஷரிஆ சட்­டத்தில் பட்டம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. மொத்­தத்தில் இங்­கி­ருந்து இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­களே உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளார்கள். இந்நிலையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா----? இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க முடியுமா---? இன்று சைட்டம் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் ஏன்-? மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகத்தை எதிர்க்கவில்லை.

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
இலங்கையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளால் வஹாபிஸம் போஷிக்கப்பட்டு வருவதால் நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் வஹாபிஸம் பரப்பப்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்று அலவி மௌலானா பலவருடங்களுக்கு முன்பு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.ஆனால் அரசு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை. இதனால்தான் கிழக்கில் காத்தான்குடியில் மற்றும் பரகஹதெனிய போன்ற பகுதியில் முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்கியுள்ளது. நாட்டில் ஷரீஆ சட்டம், வக்பு சட்டம் என்ற தனியான சட்டங்கள் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைத்துள்ளன என்றார்.

இலங்­கையில் வெளி­நாட்டு முஸ்லிம் அக­திகள்
கடந்த 8 ஆம் திகதி ஞான­சார தேரர் நடத்­திய ஊடக மாநாடு இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் வெளி­நாட்டு முஸ்லிம்கள் தொடர்­பா­கவே அமைந்­தி­ருந்­தது. மியன்­மா­ரி­லி­ருந்து வெளி­யே­றிய ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் இலங்­கையில் கடல் எல்­லைக்குள் பிர­வே­சித்­த­தை­ய­டுத்து கைது செய்­யப்­பட்டு மிரி­ஹான தடுப்பு முகாமில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவ­ரது உரை மியன்மார் – ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­களை இலக்கு வைத்­த­தா­கவே அமைந்­தி­ருந்­தது.

‘இலங்­கையில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள அக­திகள் இலங்­கை­யி­லி­ருந்து நாடு­க­டத்­தப்­பட வேண்டும். அக­திகள் என்ற போர்­வையில் அவர்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மிக்க இட­ம­ளிக்கக் கூடாது. கட­லோரப் பாது­காப்பு பலப்­ப­டுத்த வேண்டும் என்று ஞான­சார தேரர் கோரிக்கை விடுத்தார். மாலை­தீ­வி­லி­ருந்து மாத்­திரம் 50 ஆயிரம் முஸ்­லிம்கள் இலங்கை வந்து தங்­கி­யி­ருப்­ப­தா­கவும் அவர் கூறினார். சவூதி அரே­பியா அக­தி­க­ளுக்கு புக­லிடம் வழங்க மறுக்கும் போது ஏன் நாம் புக­லிடம் அளிக்க வேண்டும்? என்றும் கேள்­வி­யெ­ழுப்­பினார். 

அமைச்சர் மனோ­க­ணேசன் – ஞான­சார தேரர் சந்­திப்பு
அர­ச­மொ­ழிகள் தேசிய கலந்­து­ரை­யாடல் மற்றும் நல்­லி­ணக்கம் அமைச்சர் மனோ­க­ணே­ச­னுக்கும், பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சா­ர ­தே­ர­ருக்­கு­மி­டையில் அமைச்சர் மனோ­க­ணே­சனின் அமைச்சில் சந்­திப்­பொன்று நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை இடம்­பெற்­றது. 

கடந்த 16 ஆம் திகதி ஞான­சார தேரர் நடத்­திய ஊடக மாநாட்டில் அவர் அமைச்சர் மனோ­க­ணே­சனை விமர்­சித்­தி­ருந்தார். அவ­ரது அமைச்சு சிங்­க­ளவர் ஒரு­வ­ருக்கே வழங்­கப்­பட வேண்­டு­மென கோரிக்கை விடுத்­தி­ருந்தார். அமைச்சர் மனோ­க­ணேசன் அடிப்­படை வாதி­க­ளு­டனும், பயங்­க­ர­வா­தி­க­ளு­ட­னுமே நல்­லி­ணக்கம் பற்றி பேசு­கிறார். ஏன் எங்­க­ளுடன் பேசு­வ­தில்லை? என்று கேள்­வி­யெ­ழுப்­பினார். பேச்­சு­வார்த்­தைக்கு வாருங்கள் என்றும் அழைப்பு விடுத்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்தே அமைச்சர்  மனோ­க­ணே­சனின் அழைப்­பை­யேற்று ஞான­சார தேரர் அவ­ரது அமைச்­சுக்கு சென்­றி­ருந்தார். பேச்­சு­வார்த்­தையும் நீண்ட நேரம் நடை­பெற்­றது. 

இந்தச் சந்­திப்பில் கருத்து தெரி­வித்த ஞான­சார தேரர் ‘இலங்கை பௌத்­தர்­க­ளுக்கே சொந்­த­மான நாடு. ஏனை­ய­வர்கள் வேறு பகு­தி­க­ளி­லி­ருந்த வந்து குடி­யே­றி­ய­வர்கள். எனவே சிங்­க­ள­வர்­களே நாட்டின் உரி­மை­யா­ளர்கள் என்று ஏற்றுக் கொண்டால் மாத்­தி­ரமே நல்­லி­ணக்­கத்­துக்கு பொறுப்­பான அமைச்­ச­ராக நீங்கள் இருக்க முடியும். .

இந்த நாட்டில் நீங்கள் தமிழ் நாட்டு முத­ல­மைச்சர் போன்று நடந்து கொள்ள வேண்டாம். இது பௌத்­தர்­க­ளுக்கு மட்டும் சொந்­த­மான நாடு. இங்கு வாழ வேண்­டு­மென்றால் எல்­லோரும் சிங்­களம் படிக்க வேண்டும். இன்று சிங்­க­ள­வர்கள் தமிழ் படிக்க நேரிட்­டுள்­ளது. 
வடக்­கிலும் கிழக்­கிலும் புத்தர் சிலை­யொன்று வைக்க முடி­யாத அள­வுக்கு தடைகள் ஏற்­பட்­டுள்­ளன. அண்­மையில் அம்­பா­றைக்குச் சென்றேன். ஏன் புத்தர் சிலை வைக்க அனு­ம­திக்­க­வில்லை என ஆணை­யா­ள­ரிடம் வின­வினேன். புத்தர் சிலை வைத்தால் முஸ்லிம் மனது புண்­ப­டு­கி­றது என்றார் அவர். நாட்டின் எல்லாப் பகு­தி­க­ளிலும் முஸ்­லிம்கள் பள்­ளி­வா­சல்கள் நிறுவிக் கொண்­டி­ருக்கும் போது நாம் எதிர்க்­க­வில்­லையே. எமது மனது புண்­ப­ட­வில்­லையே.

பொது­ப­ல­சேனா ஒரு இன­வாத அமைப்பு, நாம் இன­வாதம் பேசி ஏனைய இனங்­களை எதிர்க்­கிறோம். அதனால் எம்மை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என சிலர் கூறு­கி­றார்கள். நாம் அதற்கு பயப்­ப­ட­மாட்டோம். இந்­நாட்டில் பிரச்­சி­னை­யொன்று உள்­ளது. சிங்­க­ள­வர்கள் சிறு­பான்­மை­யாக வாழும் பகு­தி­களில் அவர்கள் தாக்­கப்­ப­டு­கி­றார்கள். இது தொடர்பில் நாம் பேச வேண்டும். .

தமிழ் இந்து மக்­க­ளுடன் எமக்கு எந்தப் பிரச்­சி­னையும் இல்லை. அவர்கள் இங்கு இருந்­த­வர்கள். ஆனால் முஸ்­லிம்­களும், கிறிஸ்­த­வர்­களும் இந்த மண்­ணுக்கு சொந்­த­மா­ன­வர்கள் அல்ல. அம்­பா­றையில் பௌத்த சதுக்கம் ஒன்­றினை உரு­வாக்க முயற்­சிக்கும் போது முஸ்­லிம்கள் தடுக்­கி­றனர். அந்த இடத்­தையும் சொந்தம் கொண்­டா­டு­கி­றார்கள். 

50 வரு­டங்­க­ளுக்கு முன்பு ஆடு, மாடு அறுக்கக் கூடாது என சிங்­கள, தமிழ் தலை­வர்கள் கூறி­னார்கள். ஆனால் ஆடு, மாடு அறுப்­பதை தடை­செய்ய முடி­யா­மற்­போ­னது. இதனால் அன்று தொழு­வத்தில் மாட­றுத்­த­வர்கள் இன்று வீட்­டுக்குள் மாடு­களை அறுக்­கி­றார்கள். இது மாத்­தி­ர­மல்ல, முஸ்­லிம்கள் தேசிய வளங்கள், புனித பூமி பிர­தேசம், தொல்­பொருள் பிர­தே­சங்­களை ஆக்­கி­ர­மித்துக் கொள்­கி­றார்கள். 
முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும் இந்­நாட்டின் பௌத்தம், கலா­சாராம் என்­ப­வற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். 

கிழக்கில் முஸ்­லிம்கள் தனி ஆட்சி நடத்­து­கி­றார்கள். கல்­முனை அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­கி­றது. ஆனால் தமிழ் பகு­திகள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­வ­தில்லை. அண்­மையில் இந்­திய பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியின் விஜ­யத்தின் போது பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்­திற்குள் கத்­தி­யுடன் நுழைய முற்­பட்ட ஒருவர் கைது செய்­யப்­பட்டார். அவர் முஸ்லிம் என்­பதால் அங்­கொ­டைக்கு அனுப்­பப்­பட்டார். அவர் சிங்­க­ள­வ­ராக இருந்தால் சிறைக்கு அனுப்­பப்­பட்­டி­ருப்பார். இதுதான் இன்று இங்­குள்ள நிலைமை என்றார். 

அரசு ஏன் மௌனம்?
ஞான­சார தேரர் தொட­ராக ஊடக மாநா­டு­களை நடத்­தியும் முஸ்­லிம்­களின் குடி­யி­ருப்­பு­க­ளுக்கு திடீர் விஜ­யங்­களை மேற்­கொண்டு முஸ்­லிம்­களை எதிர்ப்­ப­துடன் மாத்­திரம் ஆறு­த­ல­டை­ய­வில்லை.

அவர் அல்­லாஹ்­வையும் முஹம்மத் நபி­யையும் தூசிக்­கிறார். குர்­ஆனை அவ­ம­திக்­கிறார். குர்ஆன் அத்­தி­யா­யங்கள் சில­வற்றின் குறிப்­பிட்ட சில வச­னங்­களை மனப்­பாடம் செய்து வைத்­தி­ருக்­கிறார். 

நீதி­மன்­றத்­தினால் குர்­ஆனை அவ­ம­தித்­த­தற்­காக எச்­ச­ரிக்­கப்­பட்­டவர் அவர். சிறிது காலம் மௌனம் காத்த அவர் இப்­போது மௌனம் களைந்­தி­ருக்­கிறார். அவர் மௌனம் களைந்­துள்ள இச்­சந்­தர்ப்­பத்தில் அரசு மௌனம் காப்­பது வேடிக்­கை­யாக இருக்­கி­றது. 
‘நான் எவ­ருக்கும் பயப்­ப­டப்­போ­வ­தில்லை. அல்­லாஹ்­வுக்கு நான் பயந்­த­வ­னல்ல’ என்று அவர் கூறு­கின்­றமை அவரை எவ­ராலும் தடுக்க முடி­யாது என்ற இறு­மாப்­பாகும். 

அண்­மையில் அவர் நடத்­திய ஊடக  மாநாட்டில் இவ்­வா­றான கருத்­தொன்­றி­னையும் கூறி­யி­ருந்தார். 

‘எனக்கெதிராக பொலிஸ்மா அதிபரிடம் யார் வேண்டுமென்றாலும் முறைப்பாடு செய்யுங்கள். பொலிஸ்மா அதிபர் முறைப்பாடுகளை எழுதிக் கொள்ளட்டும். முறைப்பாடுகளை எழுதுவதற்கான தாள்கள் போதாவிட்டால் நான் அனுப்பி வைக்கிறேன்" என்றார். அப்படியென்றால் அவருக்கு எதிரான முறைப்பாடுகளால் பயன் ஏதும் இல்லை என்பது தானே அர்த்தம். 

நேற்றும் அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், எம்.எஸ்.மரிக்கார் என்போர் பொலிஸ்மா அதிபரைச் சந்தித்து ஞானசாரதேரருக்கு எதிராக முறையிட்டார்கள். இந்த முறைப்பாடுகளினால் பயன் ஏதும் ஏற்படுமா?