Verified Web

ஞானசார தேரரை அரவணைத்துக் கொண்டாரா ஜனாதிபதி?

A.R.A Fareel

சிரஷே்ட ஊடகவியலாளரான .ஆர்..பரீல் உடத்தலவின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவி வகிக்கிறார்.

 

2017-05-14 10:12:58 A.R.A Fareel

நாங்கள் இந்­நாட்டின் காவ­லர்கள். எமக்குச் சொந்­த­மான நாட்டில் எமது விருப்­பப்­ப­டியே முஸ்­லிம்கள் வாழ வேண்டும். இந்­நாட்டின்  உத்­தி­யோ­கப்­பற்­றற்ற பொலிஸார் நாம் என்று தனித்துக் கள­மி­றங்கி  இன­வா­தத்தைப் போஷித்து வந்த பொது­ப­ல­சேனா அமைப்பு தற்­போது ஏனைய சில இன­வாத அமைப்­பு­க­ளையும் கூட்டுச் சேர்த்­துள்­ளமை நாட்டின்  தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கும் இன நல்­லு­றவு மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்கு பாத­க­மா­கவே அமைந்­துள்­ளது. சிங்­கள ராவய, ராவணா பலய ஆகிய இன­வாத அமைப்­புகள் பொது­ப­ல­சே­னா­வுடன் கைகோர்த்­துள்­ளன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களில் இந்த அமைப்­பு­களும் தற்­போது பொது­ப­ல­சேனா அமைப்­புடன்  கூட்டுச் சேர்ந்து குரல் கொடுப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. 

2013 ஆம் ஆண்டு ஹலால் சான்­றி­த­ழுக்கு எதி­ரான  போராட்­டத்தை  ஆரம்­பித்த ஞான­சார தேரர் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து போராட்­டங்­களை நடத்­தினார். 

சிங்­கள மக்கள் நாட்டைக் காப்­பாற்­றி­யாக வேண்டும். இன்னும் சில தசாப்­தங்­களில் முஸ்­லிம்­களின் சனத்­தொகை பௌத்­தர்­களின்  சனத்­தொ­கையை  விஞ்­சி­விடும். அதனால் ஒவ்வோர் சிங்­கள குடும்­பமும்  குறைந்­தது. 5–6 குழந்­தை­களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

முஸ்­லிம்கள் நாட்­டுக்குள் போதைப் பொருளை  கடத்தி கொண்டு வரு­கி­றார்கள். இதைத் தடுப்­ப­தற்கு தேசத்தின் பொலி­ஸா­ராக நாம் எம்மை பிர­க­ட­னப்­ப­டுத்தி போதைப்­பொருள் கடத்தி வரும் முஸ்­லிம்­களை கைது செய்­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு உத­வி­யாக இருப்போம் என்று பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் அறை­கூவல் விடுத்­ததை மறக்க முடி­யாது. 

இவ்­வா­றான கால­கட்­டத்தில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக முஸ்லிம் சிவில் அமைப்­பு­களும், முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் குரல் கொடுத்­தார்கள். ஞான­சார தேரர் கைது செய்­யப்­ப­ட­வேண்டும் என்று கோஷங்கள் எழுந்­தன. ஞான­சார தேரர் அர­சாங்­கத்­துக்கோ,  நாட்டின்  நீதித்­து­றைக்கோ பயப்­ப­ட­வில்லை. 

'பௌத்த தேரர்கள் நாம் சிறைக்குச் செல்­வ­தற்குத் தயா­ராக இருக்­கிறோம். எமக்கு எதி­ராக  சட்ட நட­வ­டிக்கை எடுத்தால் நாட்­டி­லுள்ள  தென்னை மரங்­களை எல்லாம்  தூக்கு மரங்­க­ளாக  மாற்ற வேண்­டி­யேற்­படும்.  சிறைகள் எல்லாம் நிரம்பி வழியும்' என்று  பதி­லடி கொடுத்தார். 

மீண்டும் தலை­தூக்­கி­யுள்ள  இன­வாதம்
 பொது­ப­ல­சேனா  அமைப்பின் செய­லாளர் ஞான­சார  தேரர் கடந்த சில மாதங்­க­ளாக அமைதி காத்து வந்தார். நீதி­மன்றம் அவரை  எச்­ச­ரித்­தி­ருந்­த­மையே காரணம். இன­வா­தத்தைத் தூண்டும் பேச்­சு­களை பேச வேண்டாம் என நீதி­மன்றம் எச்­ச­ரித்­தி­ருந்­தது. என்­றாலும் குறு­கிய மௌனத்­துக்குப் பின்பு, அமை­திக்குப் பின்பு அவர் மீண்டும் களத்தில் இறங்­கி­யுள்ளார். 

ஞான­சேர தேர­ருக்கு எதி­ராக நீதி­மன்­றங்­களில் 12 வழக்­கு­களும், அளுத்­கம கல­வரம் தொடர்­பாக 50 க்கும் மேற்­பட்ட முறைப்­பா­டு­களும் இருக்­கின்­றன. ஞான­சார தேரர் உட்­பட பொது­ப­ல­சே­னாவைச் சேர்ந்த பிர­தி­வா­திகள் சுமார் 21 பேர் பிணை­யிலே விடப்­பட்­டுள்­ளார்கள். 
சில மாதங்­க­ளாக அமை­தி­யாக இருந்த ஞான­சார தேரர் மீண்டும் இன­வாத களத்தில் இறங்­கி­யி­ருக்­கிறார். அண்­மையில்  ஊடக மாநா­டு­களில் அவர்  தெரி­வித்­துள்ள  கருத்­துகள் இதனை உறுதி  செய்­கின்­றன. 

மியன்மார் முஸ்லிம் அக­திகள் 
மியன்மார் – ரோஹிங்யா  முஸ்லிம் அக­திகள்  தமது நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் முஸ்லிம் படு­கொ­லை­க­ளி­லி­ருந்தும் தப்பி புக­லிடம் தேடி வேறோர் நாட்­டுக்குப்  பய­ணித்துக் கொண்­டி­ருந்த போது  இலங்­கையின் வடக்கு கடல் எல்­லையில் கட­லோரப் பாது­காப்புப்  படை­யி­னரால் கைது செய்­யப்­பட்டு  தற்­போது  நீதி­மன்ற உத்­த­ரவின்  பேரில் மிரி­ஹான  தடுப்பு முகாமில் தடுத்து  வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். 
மல்­லாகம் நீதிவான்  நீதி­மன்றம்  இவ்­வா­றான  உத்­த­ர­வொன்­றினை வழங்­கி­யி­ருக்கும்  நிலையில்  பொது­ப­ல­சேனா  அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் மியன்மார் முஸ்­லிம்­க­ளுக்கு  எதி­ராக  குரல் கொடுத்­துள்­ளமை அவ­ரது இன­வாத வெறி­யாட்டத்தை வெளிப்படையாக உறுதி செய்­கி­றது. 

இலங்­கையில் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருக்கும் மியன்மார் முஸ்லிம் அக­திகள் உட­ன­டி­யாக அவர்­க­ளது நாட்­டுக்குத் திருப்­பி­ய­னுப்­பப்­பட வேண்டும் என்று அவர் அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்ளார். அக­திகள் என்ற போர்­வையில் முஸ்­லிம்கள் இலங்­கையை  ஆக்­கி­ர­மிப்­ப­தற்கு இட­ம­ளிக்கக் கூடாது. கட­லோர பாது­காப்புப் பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும் எனவும்  அரசைக் கோரி­யுள்ளார். 

படகு ஒன்றின் மூலம்  தப்பி வந்­துள்ள மியன்மார்  முஸ்­லிம்கள் தற்­போது திரும்பிப் போக முடி­யாது என்­கி­றார்கள். பௌத்­தர்கள்  நாம் கரு­ணை­யுள்­ள­வர்கள். எமது கருணை, உதவும் மனப்­பான்­மையைப் பயன்­ப­டுத்திக் கொண்டு இங்கு தங்­கி­விட முயற்­சிக்­கி­றார்கள். 

பொது­ப­ல­சேனா அமைப்பைப்  பற்­றியும் எம்மைப் பற்­றியும் இலங்கை முஸ்­லிம்கள்  தவ­றான செய்­தி­களை உள்­நாட்­டிலும் சர்­வ­தே­சத்­திலும் பரப்பி விடு­கி­றார்கள்.  சர்­வ­தேசம் நாம் கொலை­யாளி எனக் கரு­து­கி­றது. இவ்­வா­றான நிலையில் வெளி­நாட்டு முஸ்­லிம்­களும் இங்கு வந்து நாட்டை ஆக்­கி­ர­மிக்க முயற்சி செய்­கி­றார்கள். நாம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் என்றால் ஏன் வெளி­நாட்டு முஸ்­லிம்கள் இங்கு வர வேண்டும்? என்று ஞான­சார தேரர் நியாயம் பேசு­வது தனது இன­வாத செயற்­பா­டு­களை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே என்­பது தெளி­வா­கி­றது. 

மேலும், மியன்மார் அக­திகள் அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யே­று­வ­தற்கு அல்­லது வில்­பத்­துவில் குடி­யே­று­வ­தற்கு வந்­தி­ருக்க வேண்டும். ரோஹிங்யா  முஸ்­லிம்கள் அவர்­க­ளது  நாட்டில் பௌத்­தர்­க­ளுக்கு  எதி­ராக செயற்­ப­டுபவர்கள். இவர்­களைப் பற்றி அறி­யாது கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் அவர்­களை கிழக்கில் அல்­லது நாட்டில் எங்­கா­வது குடி­யேற்ற வேண்டும் என்று அறிக்கை  வெளி­யிட்­டி­ருப்­ப­தையும்  அவர் கண்­டி­த்திருக்கிறார். 

உண்­மையில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் இலங்­கையில் புக­லிடம் கோரி வர­வில்லை. அவர்கள் புக­லிடம் கோரி அவுஸ்­தி­ரே­லியா போன்ற ஒரு நாட்­டுக்குச் செல்லும்  போது அவர்­க­ளது படகு இலங்கை  கடலில் தத்­த­ளித்த போதே கட­லோர கடற்­ப­டை­யி­னரால் கைது  செய்­யப்­பட்டு இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்­டார்கள். இதனை  தனது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்­திற்கு ஞான­சார தேரர் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டுள்ளார். 

கிழக்கில் காணி அப­க­ரிப்பு
கிழக்கில் முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­களின் காணி­களை பல­வந்­த­மாக  அப­க­ரித்து சொந்தம் கொண்­டா­டு­வ­தாக கூறி கிழக்கில் ஓர் இன­மோ­தலை ஏற்­ப­டுத்த ஞான­சார தேரர் முயற்­சித்து வரு­கின்­றமை அவ­ரது இன­வாத உரை­யி­லி­ருந்து தெளி­வா­கி­றது.
ஞான­சார தேரர் இவ்­வாறு கூறி­யுள்ளார்;

கிழக்கில் எங்­க­ளுக்­கென்று புரா­தன வர­லாறு ஒன்று இருக்­கி­றது. பௌத்த தொல்­பொ­ருட்கள் பரந்து கிடக்­கின்­றன என்­றாலும் அங்கே சிங்­க­ள­வர்கள் அக­திகள் போன்றே வாழ்க்கை நடத்­து­கி­றார்கள். முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் எப்­போதும் அவர்­களை எதிர்த்தே வரு­கி­றார்கள். முஸ்­லிம்கள் எங்­க­ளது காணி­களை அப­க­ரித்­தி­ருக்­கி­றார்கள். அர­சாங்­கமோ, கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரோ  இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­வில்லை. ஆனால் கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரோ எங்­கி­ருந்தோ வந்த முஸ்லிம் அக­தி­களை கிழக்கில் குடி­யேற்ற முயற்­சிக்­கிறார் என்று ஞான­சார தேரர் கிழக்கு   மாகாண முத­ல­மைச்­ச­ருக்கும் இன­வாத சாயம் பூச முயற்­சிக்­கிறார். 

அத்­தோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய ஷூரா கவுன்ஸில், முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் என்போர் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்குப் பிரச்­சினை, முஸ்­லிம்கள் தாக்­கப்­ப­டு­கி­றார்கள். பள்­ளி­வா­சல்கள்  தாக்­கப்­பட்டு வரு­கின்­றன. பௌத்­தர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வதால் பீதி­யுடன் வாழ்­கி­றார்கள் என்­றெல்லாம் உள்­நாட்­டிலும், சர்வதேசத்திலும் பிரசாரம் செய்தவர்கள் இன்று மியன்மார் முஸ்லிம் அகதிகளை இலங்கையில்  குடியேற்றுவதற்கான  முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். 

10 வருடங்களுக்கு முன்பு ரோஹிங்யாவில் பௌத்த, முஸ்லிம் கலவரங்கள் நடைபெறவில்லை. ஆனால் ரோஹிங்யா முஸ்லிம்கள் இது எமது நாடு என்று கூறி பௌத்த மதகுருமாரையும், பௌத்தர்களையும்,  தாக்க முற்பட்டதனாலேயே பிரச்சினைகள் ஏற்பட்டன. பங்களாதேஷிலிருந்தும் அதிகமான முஸ்லிம்கள் ரோஹிங்யாவுக்கு செல்கிறார்கள். அதனால் அங்கு முஸ்லிம் சனத்தொகை அதிகரித்துள்ளது. இதனால் மியன்மார் அரசாங்கத்திற்கு பல சவால்கள் ஏற்பட்டுள்ளன என்று ஞானசார தேரர் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களும், பங்களாதேஷ் முஸ்லிம்களுமே காரணம் என நியாயப்படுத்த முயற்சிக்கிறார்.

இலங்­கையில் முஸ்லிம் அக­திகள் 
வெளி­நாட்­டி­லி­ருந்து  முஸ்­லிம்கள் குறிப்­பாக  ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான், இந்­தியா, பங்­க­ளாதேஷ்,  இந்­தோ­னே­ஷியா, மாலே போன்ற நாடு­க­ளி­லி­ருந்து  இலங்­கைக்கு வந்து தங்­கி­யி­ருக்­கி­றார்கள். இலங்­கையின்  சில பகு­திகள் வெளி­நாட்டு முஸ்­லிம்­களின் கொல­னி­யா­கவும், வில்­பத்­துவில் ஓர் பகுதி அரபுக்  கொல­னி­யா­கவும் மாறி­யுள்­ளது என்று தொடர்ச்­சி­யாக ஞான­சார தேரர் குற்றம் சுமத்தி வந்­துள்ளார். 

அண்­மையில் அவர் நடத்­திய ஊடாக மாநாட்டில் இவ்­வி­வ­காரம் தொடர்­பாக சில புதிய தக­வல்­களை  வெளி­யிட்­டுள்ளார். இத்­த­க­வல்­களை எங்­கி­ருந்து பெற்றார் என்­பதே சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­தாகும். 

'வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து தொடர்ந்து முஸ்­லிம்கள் அக­தி­க­ளாக வந்து குடி­யே­று­கி­றார்கள். நீர்­கொ­ழும்பில்  மாத்­திரம் 1500 பேர் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். இவர்கள்  போதைப் பொருள் விற்­பனை  உட்­பட  சட்ட விரோத  செயல்­களில் ஈடு­பட்டு  வரு­கி­றார்கள். இவர்­களால் எமது கலா­சாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. 

பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து முஸ்­லிம்கள் பௌத்த  மத­கு­ருக்கள்  போல் வேட­மிட்டு இலங்கைக்கு வந்து சட்ட விரோ­த­மாகத் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். பாது­காப்பு மற்றும் உளவுப் பிரி­வி­னரின் தக­வல்­களின் படி  இந்­தி­யாவில் 14 ஆயிரம் பேர் அக­தி­க­ளாக இலங்­கைக்கு அனுப்பி  வைக்­கப்­ப­டு­வ­தற்கு தயா­ராக  இருக்­கி­றார்கள்.  

சவூதி அரே­பியா முஸ்லிம் அக­தி­க­ளுக்கு புக­லிடம் வழங்­கு­வ­தில்லை. இந்­நி­லையில் ஏன் நாம் முஸ்லிம் அகதி­க­ளுக்குப் புக­லிடம்  வழங்க வேண்டும். எனவே  மியன்மார் அக­திகள் உட­ன­டி­யாக நாட்­டி­லி­ருந்தும்  வெளி­யேற்­றப்­பட வேண்டும் என்று  அவர் கோரிக்கை விடுத்­துள்­ளது முஸ்­லிம்கள் மீது அவர் எந்­த­ள­வுக்கு  வெறுப்புக்  கொண்­டுள்ளார் என்­பதை தெளி­வு­ப­டுத்­து­கி­றது. 

மாலை­தீ­வி­லி­ருந்து மாத்­திரம் 50 ஆயிரம் பேர் இலங்கை வந்து தங்­கி­யி­ருக்­கி­றார்கள். என ஞான­சார  தேரர்  வெளி­யிட்ட கருத்து எவ்­வ­ளவு தூரத்­துக்கு உண்­மை­யா­னது என்­பதை குடி­வ­ரவு– குடி­ய­கல்வு திணைக்­களம் தான் உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

மாலை தீவி­லி­ருந்து  இலங்கை வந்து தங்­கி­யி­ருப்­ப­வர்கள் பல்­வேறு சட்­ட­வி­ரோத  செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ள ஞான­சார தேரர் அந்த சட்ட விரோத செயல்­களைப் பட்­டி­ய­லிட்டுக் கூற­வில்லை. பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த முஸ்­லிம்­களால் கொழும்பு மீதொட்டமுல்ல குப்பை மேடு போலா­கி­யுள்­ளது. எதிர்­கா­லத்தில் மீதொட்­ட­முல்ல அனர்த்­தத்­தை­விட பாரிய அனர்த்தம் ஏற்­படும் எனவும்  ஆருடம்  கூறி­யுள்ளார். இந்த விட­யங்­களை எடுத்துக் கூறினால் நாம் சதி செய்­ப­வர்கள், இனக்­க­ல­வ­ரத்தை உரு­வாக்க முயற்­சிப்­ப­வர்கள் என எம் மீது குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது என்றும் கவலை வெளி­யிட்­டுள்ளார்.

ஞான­சார தேரரின் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­துகள் நிச்­சயம் பெரும்­பான்மை சமூ­கத்தின்  மத்­தியில் பல சந்­தே­கங்­களை உரு­வாக்கும். முஸ்­லிம்கள் பௌத்த  நாடான இலங்­கையை ஆக்­கி­ர­மிக்­கி­றார்கள் என்று கிளர்ந்­தெ­ழு­வ­தற்கும் வாய்ப்­புண்டு. 

நீதி­மன்­றத்­தினால்  எச்­ச­ரிக்­கப்­பட்டு, இன­வாத  கருத்­து­களை வெளி­யிட வேண்டாம் என்று  உத்­த­ர­வி­டப்­பட்டே ஞான­சார தேரர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். எனவே சட்­டத்­தையும்  ஒழுங்­கி­னையும் நிலை­நி­றுத்தும் பொலிஸார்  இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யிட்டு ஞான­சா­ர­தே­ருக்கு  எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

மாணிக்­க­மடு விவ­காரம் 
மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில்  விகா­ரை­ய­மைக்கும் முயற்­சியின் முக்­கிய பங்­கா­ள­ராக பொது­ப­ல­சே­னாவின் கூட்டுச் சேர்ந்­துள்ள அமைப்பு விளங்­கு­கின்­றது. கடந்த மாதம் அம்­பாறை  மாவட்டச் செய­ல­கத்தில் அர­சாங்க அதி­பரின் தலை­மையில்  நடை­பெற்ற  கூட்­டத்­திலும் பொது­ப­ல­சே­னாவின் செய­லா­ள­ரான ஞான­சா­ர­தே­ரரும், சிங்­கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல் கந்தே சுதந்த தேரரும் கலந்து கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

  மாவட்ட காணி ஆணை­யாளர், தொல் பொருள் திணைக்­கள  அதி­கா­ரிகள், பொலிஸ் உயர்­மட்ட அதி­கா­ரிகள், இறக்­காமம் பிர­தேச செய­லாளர் உட்­பட அரச அதி­கா­ரிகள் கலந்து கொண்ட அக்­கூட்­டத்தில் ஞான­சார தேரர் ஆற்­றிய உரை மிகவும்  மோச­மாக, இன­வா­தத்தை  மேலோங்கச் செய்­வ­தாக  அமைந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

'இது பெளத்த நாடு. முஸ்­லிம்கள் பௌத்­தர்­களின் காணி­களை பலாத்­கா­ர­மாக அப­க­ரித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். நாம் தொடர்ந்தும் பொறுமை காக்­க­மாட்டோம்' என அங்கு அவர் சூளு­ரைத்­துள்ளார்.

இன­வாதம் பேசக்­கூ­டாது என எச்­ச­ரிக்­கப்­பட்டு நீதி­மன்­றினால் பிணையில் விடப்­பட்­டுள்ள ஒருவர் பாது­காப்பு உயர் அதி­கா­ரிகள் கலந்து கொண்­டி­ருந்த   கூட்­டத்தில் அவர்­க­ளுக்கு சமாந்­தி­ர­மாக அமர்ந்து ஞான­சார தேரர் இன­வாதம்  பேசி­யுள்ளார். அப்­ப­டி­யென்றால் அதற்கு அவ­ருக்கு உய­ர­தி­கா­ரி­களால் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டதா? என்­பதே எமது கேள்­வி­யாகும். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னான சில கலந்­து­ரை­யா­டல்­களில், பேச்­சு­வார்த்­தை­களில் அண்­மைக்­கா­ல­மாக ஞான­சார தேரரை காண முடி­கி­றது. அப்­ப­டி­யென்றால் அவர் ஜனா­தி­ப­தி­யுடன்  நெருக்­க­மாகிக் கொண்­டாரா? இன்றேல் ஜனா­தி­பதி தனது அர­சியல் நலத்­துக்­காக  அவரை அர­வ­ணைத்துக் கொண்­டாரா என்­பது  தான் விடை­காண வேண்­டிய விவ­கா­ர­மாகும். 

பௌத்­தர்கள் ஒரு­வ­ரேனும் வாழாத பகு­தியில் விகாரை அமைத்தே தீருவோம். இது பெளத்த நாடு எம்மால் எங்கும் விகாரை அமைக்­கலாம். இதைத் தடுப்­ப­தற்கு முஸ்­லிம்கள் யார்? என்று அவர் சவால் விட்­டி­ருப்­பது அவர் எதற்கும் அஞ்­சா­தவர்  என்ற செய்­தியை எமக்குச் சொல்­கி­றது. 

கடந்த திங்­கட்­கி­ழமை நடந்த ஊடக மாநாட்­டிலும் அவர்  இவ்­வா­றான கருத்­தி­னையே வெளி­யிட்டார். ‘மாணிக்க மடுவில் விகாரை அமைக்கும் விட­யத்தில் நாம் தொடர்ந்தும்  பொறுமை காக்­க­மாட்டோம். கிழக்கு முத­ல­மைச்சர் மாணிக்­க­மடு தமது என்­கிறார். மே மாதம் 30 ஆம் திகதி வரை அங்கு எந்த நிர்­மா­ணப்­ப­ணி­களும் மேற்­கொள்ள முடி­யாது என்று தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்ளார். இவ­ரது நட­வ­டிக்­கையால் மாயக்­கல்­லியில் தர்கா நகரில் நடந்­தது போன்ற சம்­ப­வங்கள் நடக்­கலாம் என எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். 
விகாரை அமைக்கும் முயற்­சி­யினை முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களே எதிர்க்­கி­றார்கள். ஆனால் அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்கள் எதிர்ப்­பினை அங்­கீ­க­ரித்து சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் மௌன­மாக  இருப்­பது எமக்கு கவ­லை­ய­ளிக்­கி­றது. 

நாம் மாணிக்­க­மடு பகு­திக்குச் சென்­ற­போது அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்கள் பொல்­லு­க­ளு­டனும் கம்­பு­க­ளு­டனும் வந்து எம்மை எதிர்த்­தார்கள். அப்­ப­குதி அர­சி­யல்­வா­தி­களும் எம்மை எதிர்த்­தார்கள். அப்­ப­குதி  காணி உறு­திகள் சட்­ட­வி­ரோ­த­மா­கவே பெறப்­பட்­டுள்­ளன.  அரச அதி­கா­ரிகள் தமது கட­மையைச் செய்­வ­தற்கு அப்­ப­குதி  மக்கள் இடை­யூறு விளை­விக்­கி­றார்கள். அப்­ப­கு­தியைச் சேர்ந்த காணி உரி­மை­யா­ளர்கள் இருவர் தமது காணி­களை  வழங்­கு­வ­தற்கு  இணக்கம் தெரி­வித்­துள்­ளார்கள். தமக்கு  மாற்­றுக்­காணி வழங்கும்படி கோரியுள்ளார்கள். ஆனால் அடிப்படைவாத முஸ்லிம்கள் அவர்களைத் தடுத்துள்ளார்கள். 

கிழக்கில் பௌத்த மதமும், பௌத்தர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள். அங்கு சில உணவுசாலைகளில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. புத்தர் சிலைகள் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துவதாக கூறியே அகற்றப்பட்டுள்ளன. ஆனால் கண்டியில் ஒரு தலதா மாளிகாவ  இருக்கும்  போதுபல பள்ளிவாசல்கள் இருக்கின்றவே எமது மனது புண்படாதா? என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். 

கிழக்கில் முஸ்லிம்  தீவிரவாதம் பலமாகியுள்ளது.  இதைத்  தடைசெய்ய  அரசாங்கம் நடவடிக்கை  எடுக்க வேண்டுமெனவும்  கோரிக்கை விடுத்துள்ளமை இனவாதத்தின் உச்ச நிலையை உறுதிப்படுத்துகிறது. 

நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ
கிழக்கில் பௌத்­தர்கள் வாழாத பகு­தியில் விகாரை அமை­யக்­கூ­டாது என்று மாயக்­கல்­லியில் முஸ்­லிம்கள் போராட்டம் நடத்திக் கொண்­டி­ருக்கும் நிலையில் நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ இன­வாத செயற்­பா­டு­க­ளுக்­காக வடக்கு கிழக்கில் பௌத்த அடை­யா­ளங்­களை அழிக்க முடி­யாது என்ற கருத்தைக் தெரி­வித்­துள்ளார். அவ­ரது கருத்து இன­வாதம் பேசும் தேரர்­க­ளுக்கு வலுச்­சேர்ப்­ப­தா­கவும் அங்­கீ­க­ரிப்­ப­தா­கவும் அமைந்­துள்­ளது.

நீதி­ய­மைச்சர் இவ்­வாறு கருத்து தெரி­வித்­துள்ளார். ‘வடக்கு – கிழக்கு பகு­தி­களில் பௌத்த விகா­ரை­களைப் பாது­காப்­பது அர­சாங்­கத்தின் பிர­தான கட­மை­யாகும். எவ­ரதும் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு அஞ்சி வடக்கு – கிழக்கில் பௌத்த அடை­யா­ளங்­களை அழிக்க முடி­யாது. தெற்கில் தமி­ழர்கள் அச்­ச­மின்றி வழி­படும் நிலையில் வடக்கில் சிங்­க­ள­வர்கள் அச்­சத்­துடன் வாழ வேண்­டிய நிலைமை உள்­ளது. 

வடக்கு – கிழக்கில் அமைந்­துள்ள இலங்­கையின் பிர­தா­ன­மான பௌத்த விகா­ரைகள் எவற்­றையும் காக்­கவோ அல்­லது அபி­வி­ருத்தி செய்­யவோ முன்­னைய அர­சாங்கம் எந்த நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை. என்­றாலும் கடந்த இரண்டு ஆண்­டு­களில் வடக்கு மற்றும் கிழக்கு பகு­தி­களில் உள்ள பௌத்த விகா­ரை­களை பாது­காக்­கவும் பரா­ம­ரிக்­கவும் அர­சாங்கம் அனைத்து வேலைத் திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்­துள்­ளது.

வடக்­கிலும் கிழக்­கிலும் உள்ள பௌத்த புனித பூமியை பாது­காக்­காது அதன் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தாது அழிப்­ப­தாக ஒரு சிலர் பொய்­யான கருத்­து­களை முன்­வைத்து மக்­களைக் குழப்­பு­கி­றார்கள் . அவ்­வா­றான எந்த அழிவும் இடம்­பெ­ற­வில்லை.

இவ்­வ­ருடம் நாட்­டி­லுள்ள விகா­ரை­களில் 300 அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதற்­கென பல கோடி ரூபா செல­வி­டப்­படும். இந்­நாட்டில் சகல மக்­களும் சகல பகு­தி­க­ளிலும் வாழவும் தமது மத வழி­பா­டு­களை மேற்­கொள்­ளவும் உரிமை உள்­ளது. என்ற நீதி­ய­மைச்­சரின் கருத்­தினை நாம் ஊன்றிக் கவ­னிக்க வேண்­டி­யுள்­ளது.

இந்­நாட்டில் சகல மக்­களும் சகல பகு­தி­க­ளிலும் வாழவும் தமது மத வழி­பா­டு­களை மேற்­கொள்­ளவும் உரிமை உள்­ளது என்றால், மாயக்­கல்லில் விகா­ரை­யொன்று அமைய முடி­யு­மல்­லவா? இதுவே அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்று  கூறலாம். பொறுப்பு வாய்ந்த அமைச்­சரே இந்தத் தக­வலை தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் அர­சியல் தலை­மைகள்
பேரி­ன­வா­தி­களால் தொடர்ச்­சி­யாக தாக்­கங்­க­ளுக்­குள்­ளாகும் சமூ­க­மா­கவே நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறோம். 

முஸ்லிம் சமூ­கத்­திற்கு பிரச்­சி­னைகள் உரு­வாகும் போது அறிக்கை விடு­வதும் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருடன் தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு முறை­யி­டு­வதும் எமது அர­சியல் தலை­மை­களின் பழக்­க­மாக மாறி­விட்­டது.

தமிழ் அர­சியல் தலை­மைகள் போன்று எமது அர­சியல் தலை­மைகள் ஒன்­று­பட்டு குரல் கொடுப்­பதை நாம் காண­வில்லை. வில்­பத்து விவ­கா­ரத்தில் நாம் இந்த நிலை­மையை அவ­தா­னித்தோம். அர­சியல் சுய­ந­லமே எமது தலை­மை­களின் இலக்காக அமைந்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில் நாங்கள் பாவப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இச்சந்தர்ப்பத்தில் மக்கள்பலம் ஒன்று சேர வேண்டும். தவறு செய்யும் சுயநல அரசியல்வாதிகளை ஓரங்கட்ட வேண்டும். இதுவே மக்களின் தீர்மானமாக அமைய வேண்டும்.