Verified Web

விகாரை அமையுமா : மாயக்கல்லியில்?

A.R.A Fareel

சிரஷே்ட ஊடகவியலாளரான .ஆர்..பரீல் உடத்தலவின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவி வகிக்கிறார்.

 

2017-05-07 05:58:42 A.R.A Fareel

‘எந்­த­வொரு பௌத்த மகனும் வாழாத மாயக்­கல்லி மலையில் வைக்­கப்­பட்­டுள்ள சிலையை கடந்த ஆறு மாத­மாக பாது­காத்து வருகின்றோம். ஆனால் அதன் அரு­கி­லுள்ள முஸ்­லிம்­களின் காணி­களில் எவ்­வித அனு­ம­தியும் பெறப்­ப­டாமல் விகாரை அமைப்­ப­தற்கு எடுத்த முயற்சி நியா­ய­மற்ற செய­லாகும். இதற்கு நாம் ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம்’. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இறக்­காமம் பிர­தே­சத்தைச் சேர்ந்த பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம், மற்றும் பொது அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெத­சிங்­கவை நேரில் சந்­தித்து இவ்­வாறு தமது நிலைப்­பாட்­டினை முன்­வைத்தனர். 
இதே­வேளை அம்­பாறை மாவட்ட செய­ல­கத்தில் மாவட்ட செய­லாளர் துஷித்த வணி­க­சிங்க தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்த சிங்­கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதந்த தேரர் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்ள கருத்­துகள் மாயக்­கல்­லியில் விகாரை அமைக்கும் முயற்­சியின் பெளத்த தேரர்­க­ளது நிலைப்­பாட்­டினை தெளி­வாக விளக்­கு­கின்­றன.

‘எந்த தடைகள் வந்­தாலும், எங்­களை சிறையில் அடைத்­தாலும் ஜனா­தி­ப­தி­யினால் எம் மீது எத்­தனை அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டாலும் மாய­கல்­லியில் விகாரை அமைத்தே தீரு­வ­தென உறு­தி­பூண்­டுள்ளோம். அமைச்சர் ரவூப் ஹக்­கீ­மி­னாலோ, முத­ல­மைச்­ச­ரிலோ எம்மைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என அவர் உறு­தி­யாகத் தெரி­வித்­தி­ருக்­கிறார். 

இதுதான் மாயக்­கல்லி விவ­கா­ரத்தின் இன்­றைய நிலைமை, முஸ்­லிம்­களும், பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­களும், பௌத்த தேரர்­களும் தமது நிலைப்­பா­டு­களில் உறு­தி­யாக இருக்­கி­றார்கள். இரு தரப்­பிலும் விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுக்கு இட­மில்லை. 
ஆனால் முஸ்லிம் தரப்­பிலே நீதி­யி­ருக்­கி­றது. நியாயம் இருக்­கி­றது. மாயக்­கல்­லியில் விகாரை அமைப்­ப­தற்கு அப்­ப­கு­தியில் பௌத்­தர்கள் எவரும் வாழ­வில்லை. ஆறு மாத­கா­லத்­துக்கு முன்பு பலாத்­கா­ர­மாகவே புத்தர் சிலை வைக்­கப்­பட்­டது.

தமிழ் முஸ்லிம் தரப்­புகள் இணைந்து செயற்­படத் திட்டம்
மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் முஸ்­லிம்கள் இரு­வ­ருக்கு சொந்­த­மான 2 ½ ஏக்கர் காணியை சுவீ­க­ரித்து விகாரை நிர்­மா­ணிக்­க தீர்மானிக்கப்­பட்­ட­த­னை­ய­டுத்து கடந்த மாதம் 26 ஆம் திகதி நில அள­வை­யா­ளர்­களால் காணி அள­வீடு செய்­யப்­பட்டு எல்­லை­யி­டப்­பட்­டது. 

இத­னை­ய­டுத்து மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் பலாத்­கா­ர­மாக விகாரை அமைக்கும் முயற்­சியை தடுப்­ப­தற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்­புகள் இணைந்து செயற்­பட தீர்­மா­னித்துள்­ளமை வர­வேற்­கப்­ப­டக்­கூ­டி­ய­தாகும். முஸ்­லிம்கள் தனித்து போராட்டக் களத்தில் இறங்­கு­வதை விட தமிழ் தரப்­பையும் இணைத்துக் கொண்­டமை விவே­க­மான முன்­னேற்­ற­மாகும். 

மாணிக்­க­மடு – மாயக்­கல்லி மலை காணி சுவீ­க­ரிப்பு மற்றும் விகாரை நிர்­மா­ணிக்கும் விவ­காரம் தொடர்பில் தான் உட­ன­டி­யாகக் கவனம் செலுத்­து­வ­தா­கவும்    அநீ­தி­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒரு போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டா­தெ­னவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நகர திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், எதிர் கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அஹமட் ஆகி­யோரிடம் உறு­தி­ய­ளித்­துள்­ளமை முஸ்­லிம்­க­ளுக்கு இவ்­வி­கா­ரத்தில் ஆறு­தலைத் தந்­துள்­ளது.

சில தினங்­க­ளுக்கு முன்பு ஜனா­தி­ப­திக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன், கிழக்கு முத­ல­மைச்சர் நஸீர் அஹமட் ஆகி­யோர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு  பாரா­ளு­மன்ற வளா­கத்தில் இடம்­பெற்­ற­போதே ஜனா­தி­பதி குறிப்­பிட்ட உறுதி மொழி­களை வழங்­கி­யுள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்­கீமும் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­தனை சந்­தித்து மாயக்­கல்லி மலை விவ­கா­ரத்தில் இணைந்து செயற்­ப­டு­வ­தென தீர்­மா­னித்­ததன் பின்பே ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

ஜனா­தி­ப­தி­யிடம் விளக்கம்
ஜனா­தி­ப­தியைச் சந்­தித்த எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­தனும் அமைச்சர் ரவூப் ஹக்­கீமும் மாயக்­கல்லி விவ­காரம் தொடர்பில் முறை­யிட்­ட­துடன் சம்­ப­வங்­க­ளையும் எடுத்து விளக்­கினர். பௌத்த தேரர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­படும் இச் செயல்கள் அப்­பி­ர­தே­சத்தில் இன­நல்­லு­ற­விற்கும் நல்­லி­ணக்­கத்­திற்கும் பாதிப்­பினை ஏற்­ப­டுத்தும் என்­பதை அவர்கள் விளக்­கி­னார்கள்.
மாயக்­கல்லி மலையை அடுத்து வாழும் தமிழ், முஸ்லிம் மக்­களின் காணி உறு­தி­களின் பிர­திகள் மற்றும் ஆவ­ணங்கள் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டன.

கடந்த கால அர­சாங்­கத்­தினால் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்டு வந்த நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்தும் மீட்சி பெறு­வ­தற்­கா­கவே நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கும் ஜனா­தி­ப­திக்கும் முஸ்­லிம்கள் பூரண பங்­க­ளிப்பை வழங்­கி­னார்கள்.  என்­றாலும் அவ்­வா­றான அநீ­திகள் தொடர்ந்தும் நடை­பெற்று வரு­கின்­றன என்­பதை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனா­தி­ப­தி­யிடம் விளக்­கினார். இவ்­வா­றான நிலை­மைகள் இந்த அர­சாங்­கத்தில் தொட­ரக்­கூ­டாது என இரு தலை­வர்­க­ளாலும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

மாயக்­கல்லி மலைப்­பி­ர­தே­சத்தைச் சூழ  சிறு­பான்­மை­யி­னரே வாழ்­கின்­றனர். அவர்­க­ளிடம் சட்­ட­ரீ­தி­யான காணி உறு­திகள் உள்­ளன. கிழக்கு மாகாண சபையில் இது தொடர்­பாக  பிரே­ர­ணை­யொன்றும் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. சம்பவத்தை ஆராய குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. குழு தனது அறிக்­கையைச் சமர்ப்­பிக்கும் வரை எவ்­வித நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளக்­கூ­டாது என சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனும் விப­ரங்­களை கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அஹமட் ஜனா­தி­ப­தி­யிடம் விளக்­கினார். விளக்­கங்­களை செவி­ம­டுத்த ஜனா­தி­பதி இறு­தியில் மாயக்­கல்லி பிர­தே­சத்தில் எந்­த­வித நிர்­மாணப் பணி­க­ளுக்கும் இடம் வழங்­கப்­ப­ட­மாட்­டது என்ற உறுதி மொழி­யினை வழங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அமைச்சர் ஹக்­கீமின் இறக்­காமம் விஜயம்
அமைச்சர் ஹக்­கீமும் எதிர்­கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதையடுத்து கடந்த 30 ஆம் திகதி அமைச்சர் ஹக்கீம் இறக்காமம் பகுதிக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டார்.

இறக்காமத்தில் மக்களைச் சந்தித்து ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் தொடர்பில் விளக்கங்களை வழங்கினார். " மாயக்கல்லி மலைப் பிரதேசத்தில் எந்தவிதமான புதிய கட்டட நிர்மாணங்களையும் அமைக்காதவாறு தான் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி எங்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கின்றார். என்ற விபரத்தையும் அமைச்சர் அங்கு வெளியிட்டார்.
அம் மக்கள் முன்னிலையில் அவர் ஆற்றிய உரை அவரது கட்சியின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது எனலாம். அவரது உரை இவ்வாறு அமைந்திருந்தது.

‘இந்த நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் என்ற வகையில் நாங்கள் ஒன்றைப் புரிந்­து­கொள்ள வேண்டும். இன்று வன­ப­ரி­பா­லன திணைக்­களம், வன­வி­லங்கு திணைக்­களம், தொல் பொருள் திணைக்­களம் எனும் மூன்று திணைக்­க­ளங்­களும் தாம் சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­க­ளையே மேற்­கொள்­கிறோம் என்று கூறிக் கொண்டு மேற்­கொள்­கின்ற நட­வ­டிக்­கை­களின் பின்­ன­ணி­களைப் பார்த்தால் அவை­யாவும் ஏனைய மாவட்­டங்­க­ளோடு ஒப்­பிடும் போது அம்­பாறை மாவட்­டத்தில் அதி­க­மா­கவும் தீவி­ர­மா­கவும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதா? என்ற கேள்வி எழு­கின்­றது. 

குறிப்­பாக யுத்த முடி­வுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு முதல் இந்த மூன்று திணைக்­க­ளங்கள் ஊடா­கவும் மிக அவ­ச­ர­மாக வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்ற வர்த்­த­மானி அறி­வித்­தல்­களின் ஒரு தொகுப்பை ஏனைய மாவட்­டங்­களில் இது தொடர்­பாக வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­த­லுடன் ஒப்­பிட்டுப் பார்த்தால் இதன் உண்மை நிலை புரியும். இப்­பி­ரச்­சி­னையை விவே­க­மாக, விரைவில் அணுக வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலே நாம் இருக்­கின்றோம். 

இதில் நிறைய விட­யங்கள் மூடி­ம­றைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இப்­பி­ர­தே­சத்தின் அர­சி­யல்­வா­திகள் யாரும் கலந்து கொள்­ளாத ஒரு இடத்தில் இதற்­கான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது எனும் விட­யங்­களை நாம் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருக்­கிறோம். இத­ன­டிப்­ப­டையில் இதனை பக்­கு­வ­மா­கவும் தூர­நோக்­கு­டனும் கையாண்டு ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து இதற்­கான நல்­ல­தொரு தீர்வு கிடைக்கும் என்­பதை நாம் நம்ப வேண்டும். 

மேலும் கிழக்கு மாகா­ண­ச­பையில் எங்­க­ளு­டைய கட்­சியின் சார்­பாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்ற பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­வர்­க­ளாக அதன் கீழுள்ள அரச நிர்­வா­கிகள் செயற்­பட வேண்டும் என்­ப­திலும் கடு­மை­யான இறுக்­கத்தை நாங்கள் கடைப்­பி­டிப்­ப­தற்­கான அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. 

எதிர்­கட்சித் தலைவர் சம்­பந்­தனைச் சந்­தித்த போது இங்­குள்ள தமிழ் மக்­களின் குடி­யி­ருப்­புகள் பற்­றியும் அதற்­கான ஆபத்­துகள் பற்­றியும் கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். அப்­போது அவர் மாகாண சபை­க­ளுக்­கான காணி அதி­கா­ரங்­களை நாங்கள் வைத்­தி­ருக்க வேண்டும் என்­ப­தி­லுள்ள நியா­யங்கள் இவைகள் தான் என்று விளக்­கி­ய­தோடு, இந்த நல்­லாட்­சி­யிலே நாங்கள் இனப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணாது விட்டால் இனி­வ­ரு­கின்ற எந்த ஆட்­சி­யிலும் இதற்­கான தீர்­வினை எட்ட முடி­யாது என அவர் ஆதங்­கப்­பட்டார். அவ­ரு­டைய ஒத்­து­ழைப்பு இந்த விட­யத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்­டிய தேவை இருக்­கி­றது என்றார். 

நிச்­ச­ய­மாக கிழக்கில் உரு­வா­கி­யுள்ள காணிப்­பி­ரச்­சி­னைகள், மற்றும் இன­வா­தி­களின் எமக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு நாம் தமிழ் சமூ­கத்­தி­னதும் ஒத்­து­ழைப்பைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். பிரிந்து செயற்­பட்டால் அது இன வாதி­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­து­விடும். 

நட­வ­டிக்­கைகள் தற்­கா­லி­மாக இடை­நி­றுத்தம்
மாயக்­கல்லி மலைப்­பி­ர­தே­சத்தில் விகாரை அமைக்கும் ஆரம்ப நட­வ­டிக்­கைகள் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளமை எமக்கு கிடைத்­துள்ள வெற்­றி­யெ­னலாம். மாயக்­கல்லி மலைப்­பி­ர­தே­சத்தில் தற்­போ­தைக்கு எந்­த­வித நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. அனைத்து நட­வ­டிக்­கை­களும் தற்­கா­லி­க­மாக பிற்­போ­டப்­பட்­டுள்­ளது என மாணிக்­க­மடு பரி­வார சைத்­திய மகா விகா­ரையின் அதி­பதி அம்­பே­பிட்­டிய சீல­ரத்­ன­தேரர் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 

கடந்த மே மாதம் 1 ஆம் திகதி மாயக்­கல்லி மலை­ய­டி­வார காணியில் நடாத்­தப்­ப­ட­வி­ருந்த பூஜை வழி­பா­டுகள் இடை நிறுத்­தப்­பட்­டமை அவ­ரது கூற்­றினை உறுதி செய்­கி­றது. 

பிரச்­சி­னைக்­குள்­ளா­கி­யுள்ள காணியில் எதிர்­வரும் 17 ஆம் திக­தி­வரை எவரும் உள்­நு­ழை­யக்­கூ­டாது என்று நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இந்த நீதி­மன்ற உத்­த­ரவு அமுலில் உள்­ளதாலே அக்­கா­ணியில் நட­வ­டிக்­கைகள் ஏதும் இடம்­பெ­றா­தி­ருக்­கிறது என்று எண்­ணத்­தோன்­று­கி­றது. 

விகாரை அமைத்தே தீருவோம்
பௌத்த அமைப்­புகள் மாயக்­கல்லி மலைப்­பி­ர­தே­சத்தில் விகாரை அமைத்தே தீருவோம் என சூளு­ரைத்­துள்­ளன. 
‘எந்த தடைகள் வந்­தாலும், எங்­களை சிறையில் அடைத்­தாலும் ஜனா­தி­ப­தி­யினால் எம்­மீது எத்­தனை அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டாலும் மாயக்­கல்­லியில் விகாரை அமைத்தே தீரு­வ­தென உறு­தி­பூண்­டுள்ளோம்.

அமைச்சர் ரவூப் ஹக்­கீ­மி­னாலோ, முத­ல­மைச்­ச­ரி­னாலோ எம்மைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என சிங்­கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதந்­த­தேரர் தெரி­வித்­துள்­ளதை நாம் கவ­னத்திற் கொள்­ள­வேண்டும்.  அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்,
‘மாயக்­கல்லி பிர­தேசம் தொல்­பொருள் வல­ய­மாக தொல்­பொ­ருள் சட்­டத்தின் கீழ் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மாயக்­கல்லி மலையில் எமது புரா­தன சைத்­திய ஒன்று இருந்­துள்­ளது. அந்த சைத்­தி­ய­வையும், தொல்­பொ­ருட்­க­ளையும் முஸ்­லிம்கள் அகழ்ந்து எடுத்­துள்­ளார்கள். 

மாணிக்­கக்கல் தீக­வாபி சைத்­தி­யவில் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­காக சிங்­கள மன்­னரால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இத­னாலே இப்­ப­குதி மாணிக்­க­மடு என தமி­ழர்­களால் அழைக்­கப்­ப­டு­கின்­றது. மதத்­த­லங்கள் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் நல்­லி­ணக்­கத்தை போதிப்­ப­தற்­கா­க­வுமே நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன. அப்­ப­டி­யென்றால் கிழக்கில் எம்மால் விகாரை அமைக்க முடி­யாதா?
கிழக்கில் உள்ள முஸ்­லிம்கள் நாம் விகாரை அமைப்­பதை எதிர்ப்­ப­தென்றால் அவர்கள் தெற்கில் இருக்கும் பள்­ளி­வா­சல்கள் அனைத்­தையும் அங்­கி­ருந்து அகற்றி கிழக்­குக்கு மாற்­றிக்­கொள்­ள­வேண்டும். 

மாயக்­கல்­லியில் விகாரை அமைக்கும் எமது திட்­டத்தை எவ­ராலும் தடுத்து நிறுத்த முடி­யாது. பௌத்த தேரர்கள் நாம் இரத்தம் சிந்­தி­யா­வது விகாரை அமைத்தே தீருவோம். விகாரை நிர்மாணிப்பதை எதிர்ப்பது, தடுப்பது நல்லிணக்கத்தையும் இன நல்லுறவையும் இல்லாமற் செய்வதற்குச் சமமாகும். 

முஸ்லிம் அடிப்படை வாதிகளும், தங்களது சுயநலத்திற்காக அரசியல் செய்யும் ரவூப் ஹக்கீம் போன்றவர்களுமே விகாரை நிர்மாணிக்கப்டுவதை எதிர்க்கின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை எதிர்க்கமாட்டாரென நாம் நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரரின் கூற்று எந்தளவுக்கு இனவாதம் நிறைந்தது என்பது தெளிவாகிறது. பெரும்பான்மை இனத்தவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் அவரது கருத்துகள் அமைந்துள்ளன. இவரது கருத்துகளால் மாயக்கல்லி இறக்காமம் மக்களும் பீதியடைந்துள்ளனர். 

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி
அநீ­தி­யான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் விகாரை அமைப்­பது என்ற தீர்­மானம் பல அமைப்­பு­க­ளினால் எதிர்க்­கப்­பட்­டுள்­ளது. கண்­டனம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

‘மாயக்­கல்லி’ பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் ஆக்­கி­ர­மிப்பு தொடர்பில் அர­சாங்கம் உரிய தீர்­வினை உட­ன­டி­யாக வழங்­காது போனால் இவ்­வி­வ­கா­ரத்தை ஐக்­கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்­வ­தற்கு நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி நட­வ­டிக்கை எடுக்கும் என முன்­ன­ணியின் தவி­சாளர் எம்.எம். அப்துல் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.

இறக்­காமம் பிர­தே­சத்தின் பிர­மு­கர்­க­ளுக்கும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் நடை­பெற்ற சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார்.

மேலும் அவர் மாயக்­கல்லி மாணிக்­க­மடு பிர­தே­சத்தில் இடம்­பெற்று வரும் சம்­ப­வத்­தினால் சிறு­பான்மை மக்கள் அச்­ச­ம­டைந்து, நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நம்­பிக்கை இழந்து வரு­கின்­றனர். எந்தத் தரப்­பி­ன­ரா­க­வி­ருந்­தாலும் அரசும் பொலி­ஸாரும் சட்­டத்­தையும் நீதி­யையும் உரிய முறையில் அமுல்­ப­டுத்தி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தீர்­வினை வழங்க முன்­வர வேண்டும்.

இப்­பி­ர­தே­சத்தில் ஏற்­பட்­டி­ருக்கும் இழு­பறி நிலைக்கு ஆரம்­பத்­தி­லேயே தீர்வு வழங்­கா­து­விடின் அது பிற்­கா­லத்தில் பாரிய இன­வி­ரி­சலை ஏற்­ப­டுத்தும் இன நல்­லி­ணக்­கத்­திற்கும் பாதிப்­பாக அமையும். இப் பிரச்­சி­னையில் அர­சியல், இன, மத வேறு­பா­டு­களை மறந்து அனைத்து தரப்­பி­னரும் ஒன்­றி­ணைந்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க முன்­வர வேண்டும் எனத் தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்­றத்­திலும் மாயக்­கல்லி விவ­காரம்
நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை நடை­பெற்ற பாரா­ளு­மன்ற அமர்­விலும் இறக்­காமம் மாயக்­கல்லி விவ­காரம் சூடு பிடித்­தது. ஜனா­தி­ப­தியின் உத்­த­ர­வையும் மீறி பல­வந்­த­மாக இறக்­காமம் பகு­திக்குள் நுழைந்த பொது­ப­ல­சேன அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேர­ரையும் சிங்­கள ராவய அமைப்பின் தேரர்­க­ளையும் உடன் கைது செய வேண்­டு­மென விளை­யாட்­டுத்­துறை பிர­தி­ய­மைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளமை பாராட்­டத்­தக்­க­தாகும்.

அவர் பாரா­ளு­மன்­றத்தில் உரையாற்றுகையில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு அநீதி இழைத்த அர­சாங்­கத்தைத் தோற்­க­டித்து விட்டு ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் சிறு­பான்மை மக்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கி­றது.

அம்­பாறை மாவட்­டத்தில் அனைத்து இன மக்­களும் ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரு­கி­றார்கள். இவ்­வா­றான பிர­தே­சத்தில் ஞான­சார தேரரும் சிங்­கள ராவய அமைப்பின் தேரர்­களும் பல­வந்­த­மாக பிர­வே­சித்­தி­ருக்­கி­றார்கள். முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்கு கார­ண­மாக இருந்­தி­ருக்­கி­றார்கள். 

மாயக்­கல்லி பகு­தியில் பல­வந்­த­மாக காணி சுவீ­க­ரிப்­பதை தடுத்து நிறுத்­து­வ­தாக ஜனா­தி­பதி ஏற்­க­னவே குறிப்­பிட்­டி­ருந்தும் அத­னையும் மீறி ஞான­சார தேரர் அங்கு சென்­றி­ருக்­கிறார் என்­றாலும் பொலிஸார் தலை­யிட்டு அதனைத் தடுத்து நிறுத்­தி­னார்கள். இல்­லையேல் இனக்­க­ல­வரம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்கும்.

இவ்­வா­றான நிலைமை ஏற்­படும் என முன்­னைய ஆட்­சி­யிலும் நாம் குறிப்­பிட்டோம். என்­றாலும் இது தொடர்­பாக அர­சாங்கம் செவி­ம­டுக்­கா­த­தி­னா­லேயே அளுத்­க­மவில் இனக்­க­ல­வரம் ஏற்­பட்­டது.

எனவே ஜனா­தி­ப­தியின் உத்­த­ர­வி­னையும் மீறி செயற்­படும் ஞான­சார தேர­ரையும் சிங்­கள ராவய தேரர்­க­ளையும் உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும் என பிர­தி­ய­மைச்சர் கோரி­யுள்ளார்.

ஞான­சார தேரரை இன­வாத செயற்­பா­டு­களில் ஈடு­பட வேண்­டா­மென நீதி­மன்றம் எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்தும் அவர் இவ்­வா­றான இன நல்­லு­ற­வினைச் சீர்­கு­லைக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கும் நல்­லி­ணக்­கத்­துக்கும் பாத­க­மாக அமையும் என்­பதை சம்­பந்­தப்­பட்ட அனை­வரும், நாட்டின் தலை­வரும் உணர்ந்து அதற்­கு­ரிய நட­வ­டிக்­கைளை மேற்­கொள்ள வேண்டும்.

பொது­ப­ல­சே­னாவை ஜனா­தி­பதி ஆத­ரிக்­கி­றாரா?
தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் நல்­லி­ணக்­கத்­தையும் சீர்­கு­லைத்து மீண்டும் அளுத்­கம போன்­றதோர் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்கும் ஞான­சார தேரரை அர­சாங்கம் ஆத­ரிக்­கின்­றதா-? நாட்டின் தலை­வ­ரான ஜனா­தி­பதி பொது­ப­ல­சேனா அமைப்­புக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றாரா? என்ற சந்­தே­கங்கள் முஸ்­லிம்கள் மத்­தியில் வலுப்­பெற்று வரு­கி­றது.

இதற்கு உதா­ர­ண­மாக ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் மஹி­யங்­கனை தொகுதி அமைப்­பா­ள­ராக அண்­மையில் பொது­ப­ல­சேனா முக்­கி­யஸ்தர் கே.பி. குண­வர்த்­தன நிய­மிக்­கப்­பட்­டுள்­ளதைக் குறிப்­பி­டலாம்.

கே.பி. குண­வர்த்­தன மஹி­யங்­கனை பிர­தே­சத்தின் பொது­ப­ல­சே­னாவின் செயற்­பாட்­டா­ளரும் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரரின் நெருங்­கிய நண்­ப­ரு­மாவார். 

மஹிங்­க­னையில் அண்­மையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பெரும்­பான்­மை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களின் பின்­ன­ணியில் தற்­போது சுதந்­திரக் கட்­சியின் தொகுதி அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள கே.பி. குண­வர்த்­த­னவே செயற்­பட்­டுள்ளார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதனை ஜாதிக பல­சே­னாவின் செய­லாளர் வட்­ட­ரக்க விஜித தேரர் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
பாரா­ளு­மன்­றத்தில், ஞான­சார தேரரை கைது செய்­யு­மாறு குரல்கள் ஓங்கி ஒலிக்­கும்­போது ஞான­சார தேர­ருக்கு எதி­ராக எத்­த­னையோ வழக்­குகள் நீதி­மன்றில் விசா­ர­ணையில் இருக்­கும்­போது அந்த அமைப்­பினைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு தொகுதி அமைப்­பாளர் பதவி வழங்­கி­யுள்ள ஜனா­தி­பதி ஞான­சார தேரரை கைது செய்­வதை ஆத­ரிப்­பாரா? என்ற சந்­தேகம் எழு­கின்­றது.

அளுத்­கம சம்­பவம் அம்­பா­றையில் இடம்­பெ­றாது
அளுத்­க­மையில் இடம்­பெற்­றது போன்­றதோர் சம்­பவம் அம்­பா­றையில் நடக்க இட­ம­ளிக்­க­மாட்டேன் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெத­சிங்க உறு­தி­ய­ளித்­துள்­ளமை பாராட்­டத்­தக்­கது. இவர் போன்ற அரச அதி­கா­ரிகள் ஒவ்வோர் பிர­தே­சத்­துக்கும் அவ­சியம் தேவை­யாகும்.

மாயக்­கல்லி சிலை வைப்பு, விகாரை அமைப்பதற்கு காணி சுவீ­க­ரிப்பு போன்ற விட­யங்­களில் அளுத்­க­மையில் நடை­பெற்ற சம்­பவம் போன்று நடை­பெ­று­வதற்கு ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டேன் என அவர் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

தனது அலு­வ­ல­கத்தில் தன்னைச் சந்­தித்த இறக்­காமம் பிர­தேச பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளன பிர­தி­நி­திகள் மற்றும் முக்­கி­யஸ்­தர்­க­ளி­டமே அவர் இந்த உறு­தியை வழங்­கி­யுள்ளார்.

நல்­லாட்­சியின் செயற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்ற வேளையில் இரண்டு சமூ­கங்­களின் பிணக்­கு­க­ளுக்கும் தூப­மி­டு­கி­ற­வர்­களை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. பிரச்­சி­னைகள் ஒரே மேசையில் அமர்ந்து பேசித் தீர்க்­கப்­பட வேண்டும் என்றும் அவர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

தீர்வு கிட்­டுமா?
மாயக்­கல்லி விவ­கா­ரத்­துக்கு விரைவில் தீர்வு கிட்டுமா? இன்றேல் தீர்வின்றி பிரச்சினை நகருமா? இதுவே அனைவரினதும் கேள்வியாகும்.

இது விடயத்தில் ஸ்ரீ லங்காமுஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ள கருத்துகள் நோக்கப்பாலதாகும்.

மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை இருக்கும்வரை அங்கு பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். பேரினவாதிகள் தமது செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளமாட்டார்கள்.

அங்கு சிலை அமைக்க அனுமதி வழங்கியதே பிரச்சினைக்கு மூல காரணம் என்று தெரிவித்துள்ளார். மலையில் சிலையொன்று இருக்கும்போது நிச்சயம் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். பௌத்த குடும்பங்கள் ஒன்றேனும் இல்லையே என்று நாம் வாதிட்டுக் கொண்டிருப்பதில் பயனேதும் ஏற்படப் போவதில்லை.
ஜனாதிபதியே பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு வழங்க வேண்டும்.