Verified Web

அம்பாறை காணி ஆக்கிரமிப்பு : ஏகாதிபத்தியத்தின் தந்திரோபாயம்

2017-04-23 11:40:24 Rauff Zain

ஒரு குறிப்­பிட்ட மக்கள் குழு­மத்தின் அல்­லது சமூ­கத்தின் சனத்­தொகை செறிவைக் குறைப்­ப­தற்கு ஒன்றில் இனச் சுத்­தி­க­ரிப்பை அல்­லது சட்­ட­வி­ரோதக் குடி­யேற்­றத்தை ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் ஒரு கரு­வி­யாகப் பயன்­ப­டுத்­து­வது அவர்­களின் நீண்ட கால அர­சியல் தந்­தி­ரோ­பா­ய­மாகும்.அதன் மூலம் குறிப்­பிட்ட சமூ­கத்தின் நிலத்­தொ­டர்ச்­சியை இல்­லா­­தொ­ழித்து அவர்­க­ளுடன் பேரி­னத்தை கலப்­பதன் மூலம் சனத்­தொகையை ஐதாக்கி, அர­சியல் பலத்தை சிதைப்­பது ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் உள்­நோக்­க­மாகும். 

இரண்டாம் உலக யுத்­தத்தின் பின்னர் உலகின் பல நாடு­களில் இந்தத் தந்­தி­ரத்தை ஏகா­தி­பத்­திய அர­சுகள் மிக இலாவ­க­மாகக் கையாண்­டுள்­ளன. அயர்­லாந்தில் பிரிட்டன் மேற்­கொண்ட குடி­யேற்­றங்­களும் போல்­கனில் சோவியத் யூனி­ய­னினால் பொஸ்­னியா போன்ற முஸ்லிம் நா­டு­களில் மேற்கொள்ளப்பட்ட சட்­ட­வி­ரோதக் குடி­யேற்­றங்­களும் இதற்குத் தெளி­வான உதா­ர­ணங்கள்.

கால­னித்­து­வத்­தி­லி­ருந்து விடு­பட்ட இலங்­கையில் சுதந்­தி­ரத்­திற்குப் பிந்­திய முதல் மூன்று தசாப்­தங்­க­ளிலும் இலங்கை பேரி­ன­வாத அர­சுகள் வடக்கு, கிழக்கில் இது­போன்ற குடி­யேற்­றத்­திட்­டங்­களை திட்­ட­மிட்டு மேற்­கொண்டு வந்­துள்­ளன. அதன் மூலம் சிறு­பான்மை மக்­களின் அர­சியல் பலமும் பேரம் பேசும் ஆற்­றலும் மழுங்கடிக்­கப்­பட்­டது. நிலம் சார்ந்த பெரும் சமூக நெருக்­க­டி­யொன்­றுக்குள் அவர்­களைத் தள்­ளி­யது. 

கிழக்கில் முஸ்­லிம்­களின் சமூக பலத்­தையும் அர­சியல் சக்­தி­யையும் ­ம­ழுங்கச் செய்­வதில் அங்கு மேற்­கொள்­ளப்­பட்ட சிங்­களக் குடி­யே­ற்­றங்கள் முக்­கிய பங்­காற்­று­கின்­றன. கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள மூன்று மாவட்­டங்­க­ளான திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை என்­ப­வற்றின் பரப்­ப­ளவில் பெரி­யது அம்­பாறை. இலங்­கையின் 25 மாவட்­டங்­களில் நான்­கா­வது இடத்தில் அது உள்­ளது. ஏழு மாவட்­டங்­களை அம்­பாறை மாவட்டம் எல்­லை­க­ளாகக் கொண்­டி­ருப்­பது அதன் பரந்­து­பட்ட நிலப்­ப­ரப்­புக்கும் சமச்­சீ­ரற்ற தன்­மைக்கும் தெளி­வான ஆதா­ர­மாகும். 

மொன­ரா­கலை, ஹம்­பாந்­தோட்டை, பொலன்­ன­றுவை, மாத்­தளை, கண்டி, பதுளை, மட்­டக்­க­ளப்பு ஆகிய ஏழு மாவட்­டங்­களை அது உள்­ள­டக்­கி­யுள்­ளது. திரு­கோ­ண­மலை 2226 சதுர கி.மீ பரப்­பையும், மட்­டக்­க­ளப்பு 2633 சதுர கி.மீ. பரப்­பையும் கொண்­டி­ருக்கும் அதே வேளை அம்­பா­றையின் பரப்பு 4415 சதுர கி.மீ. ஆகும்.

1940 களுக்குப் பின்னர் இலங்­கையில் அப்­போது நடை­மு­றை­யி­லி­ருந்த dro பிரி­வுகள் அர­சாங்க அதிபர் பிரி­வு­க­ளாக மாற்­றப்­பட்­டன.  முஸ்லிம் பிர­தேச சபைகள் பெரும்­பாலும் முஸ்லிம் குடி­யி­ருப்புப் பிரி­வு­க­ளாக மட்­டுமே மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. பெரும் பகுதி அர­சாங்க பூமியும் நீர் நிலை­களும் சிங்­க­ள-­, தமிழ் பெரும்­பான்மை கொண்ட பிர­தேச செய­லக நிர்­வா­கத்தின் கீழ்  கொண்டு வரப்­பட்­டன. முஸ்­லிம்­க­ளுக்கு சட்­ட­பூர்­வ­மாக அவ்­வு­ரிமை மறுக்­கப்­பட்­டது.

1921 இல் அம்­பாறை மாவட்­டத்தில் சிங்­க­ள­வர்கள் 4 வீதமே இருந்­தனர். 1981இல் அவர்கள் தொகை 24 வீத­மாக அதி­க­ரித்­தது. தற்­போது 38.73 வீத­மாக அவர்கள் அதி­க­ரித்­துள்­ளனர். 80 ஆண்டு கால இடை­வெ­ளியில் சிங்­கள மக்கள் தொகையில் ஏற்­ப­ட்ட சடு­தி­யான இந்த உயர்­வுக்கு ஜே.ஆர். ஜய­வர்­த­னவும் அவரைத் தொடர்­ந்து பிரே­ம­தா­சவும் இம்­மா­வட்­டத்தில் திட்­ட­மிட்டு முன்­னெ­டுத்த சிங்­கள குடி­யேற்ற திட்­டங்­களே கார­ண­மாகும். 

மாத்­தறை, காலி, ஹம்பாந்­தோட்டை ஆகிய தென் மாகாண சிங்­க­ள­வர்­களும் கேகாலை, கண்டி மாவட்ட சிங்­க­ள­வர்­க­ளுமே இம்­மா­வட்­டத்தில் அதிகம் குடி­யேற்­றப்­பட்­டனர். படிப்­ப­டி­யாக இரா­ணு­வ­ம­ய­மாக்­கப்­பட்ட சிங்­கள குடியேற்றப் பகு­தி­களில் உப அர­சாங்க அதிபர் பிரி­வு­களும் கிராம சேவை பிரி­வு­களும் உரு­வாக்­கப்பட்­டன. அவற்றின் எல்­லைகள் அரச திணைக்­க­ளங்கள் மூலம் வரை­ப­டங்­க­ளாக வெளி­யி­டப்­பட்­டன.

நிர்­வாக அதி­கா­ரிகள் அனை­வரும் சிங்­க­ள­வர்­க­ளாக இருந்­த­தனால் தாம் விரும்பும் இடங்­களில் சிங்­கள மக்­களைக் குடி­யேற்­றவும் தற்­து­ணிவு மூலம் அவர்­களுக்கு காணி உரி­மை­களை வழங்­கவும் சிங்கள அதி­கா­ரி­க­ளுக்கு முடி­யு­மாக இருந்­தன. 
மாறி மாறி வந்த அர­சாங்­கங்­களின் பிராந்­திய முக­வர்­க­ளாக செயற்­பட்ட அர­சாங்க அதி­பர்­க­ளுக்கு உள்ள காணி பகிர்வு தொடர்­பான தற்­று­ணிவு அதி­காரம் தென்­னி­லங்கைச் சிங்­கள மக்கள் அநேகர் வடக்கு, கிழக்கில் குடி­யேற்­றப்­ப­டு­வ­தற்கு ஏதுவாய் இருந்­துள்­ளது. இன்னும் இருந்து வரு­கின்­றது.

அம்­பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேச செய­லாளர் பிரி­வு­களில் வாழும் முஸ்­லிம்­களின் எண்­ணிக்­கையும் அதற்­கென உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஒதுக்­கப்­பட்டு பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்ள காணி­களின் பரப்­பையும் சிங்­கள அர­சாங்க அதிபர் பிரிவு­களில் வாழும் சனத்தொகை­யுடன் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஒதுக்­கப்­பட்டு, பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்ள மயிர்க் கூச்­செ­றியும் சில உண்­மைகள் நமக்கும் துலங்கும். 

இலங்கையில் முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ஒரே மாவட்டம் அம்­பாறை. 282,484 முஸ்­லிம்கள் அங்கு வாழ்­கின்­றனர். இது மாவட்­டத்தின் மொத்த சனத்­தொ­கையில் 43.595% ஆகும். சிங்­க­ள­வர்­களின் சனத்­தொகை 251018 ஆகும்.

இது 38.13% எனலாம். ஆனால், இம்­மா­வட்­ட­த்தி­லுள்ள சிங்­க­ள­வர்­க­ளுக்கு முஸ்­லிம்­களை விட 13 மடங்கு அதி­க­மான காணிகள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் சனத்­தொகை வளர்ச்­சிக்கு ஏற்ப காணிகள் ஒரு­போதும் பெருகப் போவ­தில்லை. எனவே, கரை­யோ­ரங்­களில் செறிவாக வாழும் முஸ்­லிம்கள் இப்­போதே சில இடங்­களில் காணித் தட்­டுப்­பாட்டை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். மிகச் செறி­வான அவர்­களின் குடி­யேற்றம் எதிர்­கா­லத்தில் பாரிய சமூக, பொரு­ளா­தார நெருக்­க­டி­களை உரு­வாக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

கிட்­டிய எதிர்­கா­லத்தில் இது ஒரு பாரிய நெரு­டிக்­க­டியை ஏற்­ப­டுத்­தா­வி­டினும் எதிர்­வரும் அரை நூற்­றாண்­டுக்குப் பின்­ன­ரேனும் அதன் மோச­மான விளை­வு­களை முஸ்லிம் சமூகம் அனு­ப­விக்க நேரும். கொழும்பு மாவட்டம் இதற்கு தெட்டத் தெளி­வான உதா­ர­ண­மாகும். சனத்­தொகை விதா­சா­ரத்­திற்கு ஏற்ப நிலம் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதே இங்­குள்ள அடிப்­படைப் பிரச்­சி­னை­யாகும். 
திம்புப் பேச்­சு­வார்த்­தையின் போது 18 வீத­மான தமி­ழர்கள் 30 வீத நிலப்­ப­ரப்பைக் கொண்ட வட­கி­ழக்கைக் கோரு­வது எந்த வகை­யிலும் நியா­ய­மற்­றது எனக் கோரி சிங்­களத் தரப்பு தமிழர் கோரிக்­கையை நிரா­க­ரித்­தது. ஆனால், இன்று அம்பாறையில் 38 வீத­மான சிங்­க­ள­வர்கள் 66 வீத­மான காணி­க­ளையும் திரு­கோ­ண­ம­லையில் 34 வீத­மான சிங்­க­ள­வர்கள் 70 வீத­மான காணி­க­ளையும் அப­க­ரித்­தி­ருப்­பது எப்­படி நியா­ய­மாக முடியும்? மட்­டு­மல்ல, மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 72 வீதம் வாழும் தமி­ழர்கள்  இன்று 95 வீத­மான நிலத்­திற்கு உரிமை கோரு­கின்­றனர். இது எந்­த­வ­கையில் நியா­ய­மாகும்?

ஒவ்­வொரு சமூ­கமும் நீதி­யாகச் சிந்­திக்க வேண்டும். நேர்­மை­யான அணு­கு­முறை மூலமே நிலப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்டும். கிழக்கு மாகா­ணத்தில் அம்­பாறை மாவட்­டத்தின் வரைபடத்தை மிக விகா­ர­மாகச் சிதைப்­ப­திலும் ஜே.ஆர். இன் தந்­தி­ர­மிக்க திட்டம் பின்­பு­ல­மாக இருந்­துள்­ளது. அவ­ருக்கு முன்னர் டி.எஸ். சேன­நா­யக்­க­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட கல்­லேயா அபி­வி­ருத்தித் திட்டம் அதனைத் தொடங்கி வைத்­தது.

கல்­லோயா அபி­விருத்தி திட்டத்தின் போது அங்கு வந்து குடி­யே­று­மாறு எல்லா இன மக்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­ட­தா­கவும் சிங்கள மக்கள் மட்­டுமே அதற்குப் பதி­ல­ளித்­த­தா­கவும் எனவே, இவ்­வி­ட­யத்தில் பேரி­ன­வா­தத்தை குறை­கூற முடி­யாது என்று கலா­நிதி ராஜினி திரா­ண­கம முன்­வைக்கும் கருத்தில் எமக்கு உடன்­பா­டில்லை. ஏனெனில், சிங்­கள மக்­க­ளுக்கு மட்­டுமே குடி­யே­று­வ­தற்­கான வசதி வாய்ப்­புகள் வழங்­கப்­பட்­டன. அவர்கள் குடி­யேற்­றப்­பட்­டனர். சனத்­தொகைக் கட்­ட­மைப்பில் சமச்சீர் குலைவு உரு­வா­னது.
அம்­பாறை மாவட்­டத்தின் பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள காணி­களின் அளவைக் கணிப்பிட்டால் காணிப் பகிர்வில் நிகழ்ந்­துள்ள பாரிய இனப்­பா­கு­பாட்­டையும் அநீ­தி­யையும் தெளி­வாகப் புரிந்துகொள்­ளலாம். 

51 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய, 75,257 மக்களைக் ெகாண்ட சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்கு 132.8 சதுர கி.மீ. நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொத்துவிலைச் சார்ந்துள்ள 12 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட வெறும் 8900 மக்களைக் கொண்டுள்ள லஹுகல எனும் சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு 815 சதுர கி.மீ. காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய அநீதி?

32 கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய, 43,499 மக்களைக் கொண்ட அட்டாளைச்சேனை முஸ்லிம் செயலாளர் பிரிவுக்கு 62 சதுர கி.மீ. காணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 20 கிராம சேவர்கள் பிரிவைக் கொண்ட 18,209 மக்களைக் கொண்ட பதியதலாவ சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி 464 சதுர கி.மீ ஆகும்.

இப்படி ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் நாம் ஒப்பிட்டுச் சொல்லலாம். இங்குள்ள அட்டவணையிலிருந்து இவ்வுண்மைமை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.