Verified Web

கிழக்கு மக்கள் அமையம் : சிவில் சமூகத்தை ஓரம் கட்டும் உருவாக்கமா?

2017-04-09 08:39:19 junaid-naleemi

கிழக்கு மக்கள் அமையம் என்ற அமைப்பு முன்னாள் அமைச்சர் அதா­வுல்­லாவின் ஏற்­பாட்டில் அக்­க­ரைப்­பற்றில் உதயம் பெற்­றுள்­ளது.இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு முயற்­சியின் இறு­திக்­கட்­ட­மாக அர­சியல் யாப்பு திருத்த நட­வ­டிக்கை அர­சினால் முடுக்கி விடப்­பட்­டுள்ள நிலை­மையில் முஸ்லிம் சமூக அர­சியல் கட­சி­களோ, சிவில் சமூக அமைப்­புக்­களோ ஒன்று பட்டு எவ்­வித முன்­மொ­ழி­வு­க­ளையும் முன்வைக்­காத நிலையில் அர­சியல் தலை­வர்கள் என்ற ரீதியில் சிவில் சமூக அமைப்­பினை விழிப்­பு­ணர்­வூட்டி இயங்கு சக்­தி­யாக மாற்ற எடுத்­துள்ள முயற்சி காத்­தி­ர­மான ஒன்­றாகவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. 

வட, ­கி­ழக்­கினை இணைப்­பதன் மூலமே தமி­ழர்­க­ளுக்­கான தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க முடியும் என்ற வகையில் திரை­ம­றைவில் அரசு செயற்­ப­டு­வதும் தமிழ் அர­சியல் கட்­சிகள் மௌனித்­தி­ருப்­பதும் பலத்த சந்­தே­கங்­களை முஸ்­லிம்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லையில் முஸ்லிம் தரப்பு இன்னும் வில்­பத்து விட­யத்தில் ஒரு­வ­ருக்­கொ­ருவர் குற்றம் சுமத்­திக்­கொண்டு அர­சியல் நடாத்த முற்­ப­டு­கின்­ற­வேளை அர­சியல் யாப்பு திருத்தம் தொடர்பில் முஸ்­லிம்­களின் கவ­னத்தை ஈர்க்கும் நட­வ­டிக்­கை­யாக இதனை கொள்ள முடியும். 

ஆனால் குறித்த அமைப்பின் ஏற்­பாட்டு நிகழ்­வு­களை அவ­தா­னிக்­கும்­போது சில வினாக்­க­ளுக்கும் விடை தேடி நிற்­க­வேண்­டி­யுள்­ளது. கடந்த பல மாதங்­க­ளுக்கு முன்னர்  தமிழ் மக்கள் பேரவை தீர்­வுத்­திட்டம் குறித்த தனது முன்­மொ­ழி­வு­களை சமர்ப்­பித்த வேளை, தமிழர் அர­சியல் கட்­சிகள் வட­கி­ழக்கு இணைப்­பிற்­கான தம்­பக்க நியா­யங்­களை ஒப்­பு­வித்­துக்­கொண்­டி­ருந்­த­போது மௌனித்­தி­ருந்த முன்னாள் அமைச்சர் அதா­வுல்லாஹ் போன்றோர் இன்னும் சில மாதங்­களில் தேர்தல் வரு­மென அரசு அறி­விப்பு செய்­துள்ள நிலையில் மேடை­யே­றி­யுள்­ளமை ஆழ்ந்து அவ­தா­னிக்­கத்­தக்­கது. 

முஸ்லிம்  சிவில் அமைப்­புக்­களின் உரு­வாக்­கத்­தினை ஏன் கண்­டு­கொள்­ள­வில்லை.

கடந்த பெப்­ர­வரி மாதம் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் சம்­மே­ளனம் என்ற பெயரில் கிழக்கின் முக்­கிய சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள், சமூக அமைப்­புக்கள், உல­மாக்கள், புத்­தி­ஜீ­விகள், பள்­ளி­வாசல் சம்­மே­ள­னங்­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்ட சிவில் அமைப்­பொன்று உரு­வாக்­கப்­பட்டு கிழக்கு முஸ்­லிம்­களின் அர­சியல் யாப்­புத்­தொ­டர்­பான அழ­கிய நகல் ஒன்­றிற்­கான கருத்­தொ­ரு­மைப்­பாட்­டிற்கு வந்­தி­ருந்­தது.

அதன் அடுத்த கட்­ட­மாக கல்­மு­னையில் இடம்­பெற்ற இவ்­வ­மைப்பின் அமர்வில் கிழக்கு முஸ்­லிம்­களின் வட­கி­ழக்கு இணைப்பு தொடர்­பான நிலைப்­பாட்­டி­னையும், அர­சியல் யாப்பு திருத்­தத்­தின்­போது முஸ்­லிம்­க­ளது அபி­லா­சை­க­ளையும் முன்­மொ­ழிந்­த­துடன் ஊடக அறிக்கை ஒன்­றி­னையும் வெளி­யிட்­டி­ருந்­தது. இவ்­வ­மைப்பின் செயற்­பாடு கிழக்கின் பல பகு­தி­க­ளிலும் முன்­னெ­டுத்­துச்­செல்­லப்­பட்­டது.

ஆனால் பலம்­மிக்க இவ்­வ­மைப்பின் உரு­வாக்கம் முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளுக்கு சவா­லாக அமைந்­த­துடன் முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் பலம் பெறு­மாயின் ஏமாற்று அர­சி­யலில் இருந்து முஸ்லிம் சமூகம் விடு­தலை பெற்று மாற்று அர­சியல் பாதை­யினை தேர்ந்­தெ­டுக்கும் வாய்ப்பு ஏற்­பட்­டு­விடும் என்ற அச்­சமும் குடி­கொண்­டி­ருந்­த­தனை அதற்­க­டுத்து நடந்த நிகழ்­வுகள் எடுத்­துக்­காட்­டின.

முஸ்­லிம் ­கட்­சி­யொன்றின் செயற்­பாட்­டா­ள­ராக இருந்து இவ்­வ­மைப்பில் முக்­கிய பத­வி­யினை வகித்த ஒரு மார்க்க அறிஞர் இரா­ஜி­னாமா செய்­து­கொண்டார்.

தொடர்ந்து வட­கி­ழக்கு இணைந்­த­தாக தீர்­வுத்­திட்­டத்­தினை ஏன் முஸ்லிம் சமூகம் சிந்­திக்க கூடாது என்ற கோஷத்­துடன் இவ்­வ­மைப்பின் செயற்­பாட்­டா­ளர்கள், பங்­கா­ளர்கள் அனை­வ­ரு­டனும் இர­க­சிய சந்­திப்­புக்­களை முஸ்­லிம்­கட்­சி­களின் முக­வர்கள் கறுப்­பா­டு­க­ளாக நுழைந்து மேற்­கொண்­டனர். மாத்­தி­ர­மல்­லாது தமது கட்சி ஆத­ர­வா­ளர்­களை அழைத்து அர­சியல் யாப்­புத்­தி­ருத்தம் தொடர்பில் கட்­சியின் நிலைப்­பாடு குறித்து தெளி­வற்ற வியாக்­கி­யா­னங்­களை செய்­தனர்.

சில கட்­சிப்­பி­ர­தி­நி­திகள் தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் நிகழ்ச்சி நிர­லுக்குள் இருந்­து­கொண்டே கருத்­துக்­களை முன்­வைத்­தனர். இத்­த­கைய செயற்­பா­டு­களின் தொடர்ச்­சி­யாக முன்னாள் அமைச்சர் அதா­வுல்­லாவின் கிழக்கு மக்கள் அமை­யத்தின் உரு­வாக்­கத்தை நோக்க வேண்­டி­யுள்­ளது.

ஏனெனில் அமைச்­ச­ரினால் முன்­மொ­ழி­யப்­பட்ட தனது இணைப்­பா­ளரும் இந்­நி­கழ்வை ஒருங்­கி­ணைக்க செயற்­பட்­ட­வ­ரு­மான சகோ­தரர் பஹிஜ் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் சம்­மே­ள­னத்தின் பல அமர்­வு­களில் பங்கு கொண்­டி­ருந்த நிலையில் இங்கும் மேடை­யேறி இருப்­பது கடசி அர­சியல் சிவில் சமூக பலம்­பெ­று­தலை நசுக்­கி­விட முயற்­சிக்­கின்­றதோ என எண்­ணத்­தோன்­று­கின்­றது.

மாத்­தி­ர­மல்­லாமல் இம்­மே­டையில் பங்­கேற்ற பலரும் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் சம்­மே­ள­னத்தின் அமர்­வு­களில் பங்கு கொண்­ட­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இத்­த­கைய சூழ்­நி­லையில் முற்­றிலும் சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளைக்­கொண்ட அமைப்­பினை வலுப்­ப­டுத்­தாமல் இன்னும் புதி­தாக அமைப்­புக்­களை அர­சியல் தலை­மைகள் உரு­வாக்க நினைப்­ப­தன் நியா­யத்­தன்­மை­யினை தெளிவு படுத்த வேண்­டிய தேவை முன்னாள் அமைச்சர் அதா­வுல்­லா­விற்கு தார்­மிக பொறுப்­பாக உள்­ளது. 

முன்­கூட்­டியே திட்­ட­மிட்ட அமைப்பு முறைமை
நடந்து முடிந்த கிழக்கு மக்கள் அமை­யத்தின் கூட்­டத்­தினை உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கி­ன்ற போது ஜன­நா­யக ரீதி­யி­லன்றி குறிப்­பிட்ட ஒரு குழு­மத்தின் ஆதிக்­கத்­துக்குள் இவ்­வ­மைப்பு வழி­ந­டாத்­தப்­ப­ட­வேண்டும் என்­ப­தைப்போல் நிகழ்­வுகள் நடந்­தே­றின.

நாட்­டாமை அர­சியல் கிரா­மங்­களில் பள்­ளி­வாசல் தெரி­வு­களில் சில ஆதிக்க பிர­புக்கள் நான் தலை­வ­ராக இருக்கின்றேன் அவர் செய­லா­ள­ராக இருக்­கட்டும் இவர் பொருளா­ள­ராக இருக்­கட்டும் இன்னும் இரு உறுப்­பி­னர்­களை நீங்கள் தெரிவு செய்­யுங்கள் போன்­ற­தாக ஏற்­பாட்­டா­ளர்­களே அமைப்பின் பத­வி­வ­ழி­யி­ன­ரையும் உறுப்­பி­னர்­க­ளையும் தெரிவு செய்­த­மையை அவ­தா­னிக்க முடிந்­தது.

குறைந்த பட்சம் பங்­கு­பற்­று­னர்­க­ளி­டையே இது தொடர்பில் கருத்து பெற­மு­டி­யாத சர்­வா­தி­கார சிவில் அமைப்­பொன்று உருப்­பெ­ற­மு­னை­வதை உண­ர­மு­டி­கின்­றது.
 
புத்­தி­ஜீ­வி­களின்  முதல் அமைப்பு
குறித்த அமர்வில் புத்­தி­ஜீ­விகள், சிவில் சமூக அமைப்பின் பிர­தி­நி­திகள், உலமா சபை­யினர் அனை­வரும் கலந்­து­கொண்­டுள்­ள­தாக ஏற்­பாட்­டா­ளர்கள் அடிக்­கடி குறிப்­பிட்­டுக்­கொண்­ட­போதும் குறித்த அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் பெரும்­பா­லா­ன­வர்கள் கலந்து கொள்ளாமை குறித்து சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. இது ஒரு­புறம் இருக்க, கிழக்கு முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புக்­களின் சம்­மே­ளனம் தோற்றம் பெற்­ற­போது பல்­வேறு தரப்பும் அதில் பங்கு கொண்­டமை குறிப்­பி­டத்­தக்க விடயம். ஆனால் அதனை அர­சியல் தலை­வர்கள் கண்­டு­கொள்­ளாமை சிவில் சமூ­கத்­துக்கும் அர­சியல் தலை­மை­க­ளுக்கும் இடையில் உள்ள இடை­வெ­ளி­யினை புடம்­போ­டு­கின்­றது. அவுஸ்­தி­ரே­லி­யாவில் இருந்து பேரா­சி­ரியர் அமீ­ரலி அவர்­க­ளது வாழ்த்­துச்­செய்தி காணொ­ளி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

இல­ங்கை முஸ்­லிம்கள் தொடர்பில் நாடு­க­டந்து வாழ்­கின்ற புத்­தி­ஜீ­விகள் வாய்­தி­றக்க நினைப்­பது ஆரோக்­கி­ய­மான ஒன்றே. இருந்­த­போதும் வானத்தில் இருந்து விழுந்­த­வர்கள் போன்று 'இலங்கை முஸ்லிம் சமூ­கத்தில் முதன்­மு­றை­யாக இத்­த­கைய ஏற்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­ட­மைக்கு வாழ்த்­துக்­களை தெரி­வித்­துக்­கொள்­வ­துடன் எதிர்­கா­லத்தில் எனது பங்­க­ளிப்­பி­னையும் மேற்­கொள்வேன் என கருத்து தெரி­விக்க முனைந்­ததன் பின்­னணி குறித்து சிந்­திக்க வேண்­டிய சூழ்­நி­லைக்கு முஸ்லிம் சமூகம் தள்­ளப்­பட்­டுள்­ளது.

கிழக்கு கிழக்­கா­கவே இருக்­க­வேண்டும் என கிழக்கு முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புக்­களின் சம்­மே­ளனம் ஊடக அறிக்கை முதல் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னரும் சாட்சியம் அளித்­த­போது இத்­த­கைய புத்­தி­ஜீ­விகள் மௌனித்­தி­ருந்­ததன் நோக்கம் ஐயத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.
 
ஏற்­பாட்­டா­ளர்கள், பங்குபற்­று­னர்­க­ளி­டையே மாறு­பட்ட கருத்து
குறித்த நிகழ்வில் கிழக்கு வடக்­குடன் இணைக்க முடி­யாது என்ற கருத்தில் முன்னாள் அமைச்சர் அதா­வுல்லா அவர்­களின் பேச்சு அமைந்­தி­ருந்­த­வேளை கலந்து கொண்டு உரை­யாற்­றிய இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லா இணைந்த வட­கி­ழக்கில் முஸ்­லிம்­க­ளுக்­கான தீர்வு எவ்­வாறு அமைய வேண்டும் என்றும் பேசப்­ப­ட­வேண்டும் என யதார்த்­த­மான கருத்­தி­னையும் முன்­வைத்­த­தனை காண­மு­டி­கின்­றது. 

இவ்­வாறு பல்­வேறு கோணங்­களில் அலசி ஆரா­யப்­ப­ட­வேண்­டிய ஒரு நிகழ்­வாக கிழக்கு மக்கள் அமை­யத்தின் நிகழ்வு காணப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய அமைப்­புக்­களின் உரு­வாக்­கத்­திற்கு கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் சம்­மே­ளனம் போன்ற அமைப்­புக்­களின் தொய்வு நிலை­களும் கார­ண­மாக அமைந்­துள்­ள­மையை ஏற்­றுக்­கொண்­டுதான் ஆக­வேண்டும். ஏனெனில் இவ்­வ­மைப்­புக்கள் முஸ்லிம் சமூ­கத்­தினுள் ஆதிக்க சக்­தி­க­ளான அர­சியல் பிர­தி­நி­தி­களை கூடு­த­லாக உள்­வாங்க தயங்­கி­ய­மையும், குறைந்­த­பட்சம் அவர்­க­ளுடன் தொடர்ந்­தேச்­சையான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்ள தவ­றி­ய­மை­யையும் குறிப்­பிட்­டுக்­கூ­ற­மு­டியும்.

மாத்­தி­ர­மல்­லாமல் கிழக்கில் வாழும் ஏனைய சமூ­கங்­க­ளுடன் திறந்த கலந்­து­ரை­யா­டல்­களை வட­கி­ழக்கு இணைப்­புத்­தொ­டர்பில் மேற்­கொள்­ளத்­த­வ­றி­ய­மையும் குறிப்­பிட்­டுக்­கூற வேண்­டிய அம்­சமே.

கிழக்கு வடக்­குடன் இணைக்க கூடாது என்ற வாதத்­தினை தமிழர் தரப்பும் மாற்றுக்கருத்தாக கொண்டுள்ளமைக்கான ஆதாரமாக சகோதரர் ஸ்டார்லினின் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்ட நூல் விபரிக்கின்றது. கிழக்கின் பெரும்பான்மை சிங்கள சமூகமும் இத்தகைய நிலைப்பாட்டில் அமைந்துள்ளமை யதார்த்தமாகும். 

எது எவ்வாறிருந்தபோதும் அரசியல் தீர்வு குறித்து, வடகிழக்கு இணைப்பு குறித்து அரசியல் தலைவர்கள் சிலர் முன்னெடுப்புக்களை முதன் முதலில் மேற்கொள்வது வரவேற்கத்தக்க அம்சமாகும். என்றபோதும் அரசியலின் தீவிர செயற்பாட்டாளர்களாகவும், கட்சிகளின் முக்கிய பதவிநிலைகளை அலங்கரிப்பவர்களாகவும் இருந்துகொண்டு சிவில் சமூக கட்டமைப்பினை முன்னெடுத்துச் செல்ல முனைவது அரசியலில் மாற்றுக்கருத்துக்கொண்டவர்களை இவ்வமைப்பில் உள்ளீர்க்க சாதகமாக அமையாது.

எனவே சுயாதீன சிவில் சமூக பிரதிநிதிகளிடம் இவ்வாறான அமைப்புக்கள் கையளிக்கப்பட அரசியல் தலைமைகள் ஒப்புரவாகவும், பக்க பலமாகவும் இருந்து செயற்படும் பட்சத்தில் பலமான சிவில் சமூக அமைப்பொன்றினை நிறுவ முடியும் என்பதுதான் முஸ்லிம்களது கோரிக்கைக்கு சாதகமான முடிவினையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்.