Verified Web

பால் பொங்கி வரும்போது பானையை உடைக்கலாமா?

SNM.Suhail

 ஊடகவியலாளர், 
விடிவெள்ளி

2017-03-21 11:05:55 SNM.Suhail

அன்று வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தினம் ஏப்ரல் 20, 2012 பிற்­பகல் இரண்டு மணி தாண்டி நம் காது­க­ளுக்கு எட்­டிய செய்தி எம்மை பெரிதும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது. "தம்­புள்ளை ஹைரிய்யா ஜும்ஆப் பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ராக பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வி­னரின் ஆர்ப்­பாட்­டமும் தாக்­கு­தலும்" என்­ப­துதான் அந்த கசப்­பான செய்­தி.2009 ஆம் ஆண்டு இறுதி யுத்­தத்­தின்­போது தமிழ் மக்­க­ளுக்கு இருந்த அச்­ச­நி­லையை விட குறை­வான பதற்­ற­மெ­னினும் தெற்­கி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு இந்த அனு­பவம் புதி­தா­கவே இருந்­தது. இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு அனு­ரா­த­பு­ரத்தில் பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வி­னரால் தர்கா தகர்க்­கப்­பட்­ட­போது கொந்­த­ளிக்­காத முஸ்­லிம்கள், தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கு­த­லை­ய­டுத்து கொஞ்சம் கொதிக்­க­லா­னார்கள்.

இதன்­பின்னர் குரு­நா­கலில் ஆரிய சிங்­க­ள­வத்தை, தெது­ரு­ஓயா கம, தெஹி­வ­ளையில் கல்­வி­காரை வீதி, பீரிஸ்­மா­வத்தை மற்றும் கட­வத்தை வீதி, ராஜ­கி­ரிய, கொஹி­ல­வத்தை, காலி, ஹிரும்­புர, கேகாலை, கிராண்பாஸ், பொரளை, மஹர , மஹி­யங்­கனை உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன-. இன்னும் மத்­ர­ஸாக்கள் நடத்­து­வ­தற்கும் சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­தின. இதனால் முஸ்­லிம்­க­ளி­டத்தில் பெரும் பதற்­ற­மா­ன­தொரு நிலைமை ஏற்­பட்­டது. இவற்­றுக்­கப்பால் அளுத்­கம, தர்­கா­நகர், பேரு­வளை பகு­தி­களில் இன­வா­தி­களின் வெறி­யாட்டம், பாணந்­துறை, பொர­லஸ்­க­முவ, பெபி­லி­யான, நீர்­கொ­ழும்பு உள்­ளிட்ட பல பகு­தியில் முஸ்­லிம்­களின் வியா­பா­ரத்­திற்கும் பல இடை­யூ­றுகள் விளை­விக்­கப்­பட்­டன.

அப்­போது கொதித்­தெ­ழுந்த முஸ்­லிம்கள் தெவட்­ட­கஹ பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பா­கவும் கோட்டை ரயில் நிலை­யத்­திற்கு முன்­பா­கவும் ஆங்­காங்கே முஸ்லிம் பிர­தே­சங்­க­ளிலும் வீதி­யி­லி­றங்கி அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் செய்­தனர். கையெ­ழுத்து வேட்­டையில் ஈடு­பட்­டனர்.  முஸ்­லிம்­களின் எதிர்ப்­பு­க­ளுக்கு மஹிந்த அர­சாங்கம் செவி­சாய்க்­கவே இல்லை, மாறாக இன­வா­தி­க­ளுக்கு பாது­காப்பும் அனு­ச­ர­ணையும் வழங்கி போசித்­தது. 

இதனால் முஸ்­லிம்கள் மஹிந்த அர­சாங்­கத்தை அடி­யோடு வெறுத்து 2014 ஆம் ஆண்டு ஜூன் அளுத்­கம தர்­கா­நகர், பேரு­வ­ளையில் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­மு­றைக்கு பின்­ன­ரான ஊவா மாகா­ண­சபை தேர்தல், ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்­தலில் மஹிந்­த­வுக்கு எதி­ராக தமது வாக்­குப்­ப­லத்தை பிர­யோ­கித்­தனர்.

பெரும்­பான்மை மக்­களின் ஆத­ர­வுடன் முஸ்­லிம்­களும் இணைந்து ஆட்சி மாற்­றத்­திற்கு வித்­திட்­டதன் மூலம் மைத்­திரி ஆட்சி உரு­வாக்­கப்­பட்­டது. மழை நின்ற பின்பும் தூறல்­போல, புதிய ஆட்சி மாற்­றத்தின் பின்­னரும் ஆங்­காங்கே ஓரிரு பள்­ளி­வாசல் மீதான தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. இந்த அர­சாங்கம் இவ்­வா­றான தாக்­கு­தல்­க­ளுக்கு எதி­ராக  ஓர­ளவு நட­வ­டிக்­கை­யையும் மேற்­கொண்­டது.   அரசின் பங்­க­ளிப்­பு­டனும் சில அமைச்­சர்­களின் நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­யவும் தொல்­பொருள் ஆய்வு என்ற பெயரில் முஸ்­லிம்­களின் காணிகள் ஆக்­கி­ர­மிப்பும் முஸ்லிம் பிர­தே­சங்­களில் அத்­து­மீ­றல்­களும் இடம்­பெற்­றமை மறுக்­க­மு­டி­யாது. 

எனினும் நாம் தற்­போது தம்­புள்ளை பள்­ளி­வாசல் விட­யத்­துடன் தொடர்­பு­ப­டுத்தி விட­யங்­களைப் பார்ப்போம். 

தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டமை பாரி­ய­ளவில் இலங்கை முஸ்லிம் அர­சி­யலில் தாக்கம் செலுத்­தி­யி­ருக்­கி­றது. முஸ்லிம் தலை­மை­களை மக்கள் சென்ற திசைக்கு திரும்பிப் பார்க்க வைத்­தது எனலாம். இன்னும் ஒரு மாதத்தில் ஐந்­தாண்­டுகள் கடக்­க­வி­ருக்கும் நிலையில் அதற்­கான தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்கை எந்­த­ள­விற்கு இருக்­கி­றது என்­ப­தற்கு பதில் பூச்­சி­யத்தில் இருக்­கி­றது என்­ப­தாகும். 

பள்­ளி­வாசல் நிரு­வா­கத்­தி­னரின் அறி­வார்ந்த முன்­னெ­டுப்­பு­களால் ஓர­ள­விற்கு பிரச்­சி­னைக்கு தீர்வைப் பெற்­றுக்­கொள்ளும் நிலைமை தோன்­றி­யி­ருக்­கி­றது.

இதற்கிடையில், குறிப்­பாக சமா­தான ஐக்­கிய முன்­னணி என்ற கட்சி  தம்­புள்ளை பள்­ளி­வாசல் தற்­போது அமைந்­தி­ருக்கும் இடத்­தி­லி­ருந்து இட­மாற்றக் கூடாது என வலி­யு­றுத்தி கடந்த 03 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கை­யை­ய­டுத்து மரு­தானை ஸாஹிரா கல்­லூரி பள்­ளி­வா­சலின் முன்­பாக கையொப்­பங்கள் சேக­ரிக்கும் நட­வ­டிக்­கை­யொன்றை முன்­னெ­டுத்­தது.

மேல் மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் உட்­பட சுமார் 3000 பேர் மக­ஜரில் கையொப்­ப­மிட்­டுள்­ள­தாக ஐக்­கிய சமா­தான முன்­ன­ணியின் தலைவர் ஐ.என்.எம்.மிப்லால் தெரி­வித்­தி­ருந்தார். கொழும்பு மாவட்­டத்­தி­லுள்ள மேலும் பல பள்­ளி­வா­சல்­களில் கையொப்­பங்கள் சேக­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மெ­னவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இலட்­சக்­க­ணக்­கா­னோரின் கையொப்­பங்­களை சேக­ரித்து ஜனா­தி­ப­திக்கு அனுப்ப அக்­கட்சி தீர்­மா­னித்­தி­ருந்­தது. 

இது இவ்­வா­றி­ருக்க, தம்­புள்ள நகரில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சலை வேறு இடத்­துக்கு அகற்­றக்­கூ­டாது என்றும் குறித்த அந்த பள்­ளி­வாசல் அதே இடத்­தி­லேயே அமைந்­தி­ருக்க வேண்டும் என்­கின்ற கோரிக்­கையை ஜனா­தி­ப­திக்கு சமர்ப்­பிக்­க­வுள்ள மக­ஜ­ருக்­காக கையொப்பம் திரட்டும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி ஜும்ஆ தொழு­கையை தொடர்ந்து புத்­தளம் முஹி­யத்தீன் ஜும்ஆ பெரிய பள்­ளிக்கு முன்­பா­கவும் இடம்­பெற்­றது.

முன்னாள் யாழ் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டொக்டர் ஐ.எம். இல்யாஸ் தலை­மையில் நடை­பெற்ற இந்த கையொப்பம் திரட்டும் நிகழ்­வை புத்­தளம் பீ.சி.எம்.எச். நல்­லி­ணக்க அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

இந்த இரு கையெ­ழுத்து சேக­ரிக்கும் செயற்­பா­டு­களும் தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிரு­வா­கத்தின் முன்­னெ­டுப்­பு­க­ளுக்கு முட்­டுக்­கட்­டை­யா­கவே அமைந்­தி­ருக்­கி­றது. நமது உரி­மை­க­ளுக்­கா­கவே இவ்­வாறு செய்­கிறோம் என இவ்­வாறு கையெ­ழுத்து சேக­ரிக்கும் திட்­டத்தை முன்­னெ­டுத்தோர்  வாதி­டலாம். ஆனாலும் வேறு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்

இவ்­வாறு , அதா­வது சில கடும்­போக்­கா­ளர்கள் தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு புதி­தாக அர­சாங்கத்தால் 20 பேர்ச்சஸ் காணித்­துண்டு வழங்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து கையெ­ழுத்து சேக­ரிக்க முடி­யு­மானால் தம்மால் ஏன் கையெ­ழுத்து சேக­ரிக்க முடி­யாது என கையெ­ழுத்து சேக­ரித்தோர் மற்­று­மொரு விதத்தில் தமது செயற்­பாட்டை நியா­யப்­ப­டுத்­தலாம். ஆனால், மஹிந்த அர­சாங்­கத்தில் இருந்த சூழ்­நி­லைக்கும் இன்­றைய சூழ்­நி­லைக்கும் பாரி­ய­ளவில் வித்­தி­யா­சங்கள் காணப்­ப­டு­கின்­றன.

முன்­னைய அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பகி­ரங்­க­மாக செயற்­பட்­டது. தற்­போ­தைய அர­சாங்கம் அப்­ப­டி­யல்ல. ஆனாலும் முஸ்­லிம்­க­ளுக்கு தீர்வை பெற்­றுக்­கொ­டுப்­பதில் ஆமை வேகத்­தி­லேயே இந்த அர­சாங்­கமும் செயற்­ப­டு­கின்­றது என்ற குற்­றச்­சாட்டு பர­வ­லாக இருக்­கின்­றது. எனினும் அர­சாங்­கமும் தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிரு­வா­கமும் மேற்­கொள்ளும் முன்­னெ­டுப்­பு­க­ளுக்கு நமது செயற்பாடுகள் முட்­டுக்­கட்­டை­யாக இருக்­கக்­ கூ­டாது என்­பதே எமது அபிப்­பி­ரா­ய­மாகும்.

இவ்­வி­டயம் தொடர்பில் தம்­புள்ளை பள்­ளி­வாசல் விடுத்­தி­ருக்கும் செய்­தியை நாம் கூர்ந்து அவ­தா­னிக்க வேண்டும்.

குறிப்­பாக பள்­ளி­வாசல் புதிய இடத்­திற்கு மாற்­றப்­ப­ட­வேண்டும் எனும் நிலைப்­பாட்­டிற்கு நிரு­வா­கத்­தினர் வந்­தி­ருக்­கின்­றனர். அதுவே அங்­குள்ள மக்­களின் இருப்­புக்கு பாது­காப்­பாக அமையும் என்றும் கரு­து­கின்­றனர். குறித்த பிர­தேச மக்­களின் அபிப்­பி­ரா­யங்­க­ளுக்கு நாம் மதிப்­ப­ளிக்க வேண்டும். 

தம்­புள்ளை பள்­ளி­வா­சலை இட­மாற்­றிக்­கொள்­வ­தற்கு தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாகம் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. அதனால் எந்­த­வொரு அமைப்பும் பள்­ளி­வா­சலை இடம் மாற்­றக்­கூ­டாது என கையொப்­பங்­களை சேக­ரிப்­பதைத் தவிர்க்க வேண்­டு­மென பள்­ளி­வாசல் நிர்­வாக சபை தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது. இது வர­வேற்­கத்­தக்க வேண்­டிய விட­ய­மாகும். 

இது குறித்து பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை உறுப்­பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் மேலும் விப­ரிக்­கையில், 
முஸ்­லிம்கள் ஏனைய இனத்­த­வர்­க­ளுடன் நல்­லுற­வைப்­பேணி வாழ்­ப­வர்கள். அவர்கள் அபி­வி­ருத்­திக்குத் தடை­யா­ன­வர்­க­ளல்லர். சமூ­கத்­தி­னதும், நாட்­டி­னதும் நலன்­க­ருதி, அபி­வி­ருத்­திக்கு பங்­கா­ள­ராகும் நோக்­கு­டனே பள்­ளி­வா­சலை இடம் மாற்­றிக்­கொள்ளத் தீர்­மா­னித்­துள்ளோம்.

பள்­ளி­வா­சலை இடம் மாற்­றக்­கூ­டாது என கையொப்­பங்கள் சேக­ரிப்­ப­வர்கள் அந்த நட­வ­டிக்­கையை உடனே நிறுத்­திக்­கொள்ள வேண்டும் என தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

தம்­புள்ளை விகா­ரையின் விகா­ரா­தி­பதி இனா­ம­லுவே ஸ்ரீ சுமங்­கள தேரரே கடந்த காலங்­களில் தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு கடு­மை­யாக எதிர்ப்பை வெளி­யிட்­டவர். அவர் குறித்த பத­வியில் இருந்து நீக்­கப்­பட்டு தம்­புள்ளை விகா­ரைக்கு விகா­ரா­தி­ப­தி­யாக ஸ்ரீ ராஹுல தேரர்  நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்றார். 

குறித்த விவ­கா­ரத்தை மிகவும் நாசூக்­காக கையாள வேண்டும் என குறிப்­பிடும் ஸ்ரீ ராஹுல தேரர்  தம்­புள்ளை மக்கள் அமை­தி­யையே விரும்­பு­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

அத்­துடன், தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டாது தொடர்ந்தும் இழுத்­த­டிக்­கப்­பட்டால் அது இன முரண்­பா­டு­க­ளுக்கு கார­ண­மாக அமையும். அதனால் இரு தரப்­பி­னரும் இப்­பி­ரச்­சி­னையை சமா­தா­ன­மாக தீர்த்­துக்­கொள்ள வேண்டும்.இதற்கு அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்க தேரரின் ஆலோ­ச­னை­களும் பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். பிரச்­சி­னையை சமா­தா­ன­மாகத் தீர்த்துக் கொள்ள எனது முழு ஆத­ர­வி­னையும் வழங்­குவேன் என  ஸ்ரீ ராஹுல தேரர்  குறிப்­பிட்­டி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது.

இவ்­வா­றா­ன­தொரு சூழலில் முஸ்லிம் தரப்பும் மிகவும் புத்­தி­சா­துர்­யத்­துடன் நடந்­து­கொள்ள வேண்டும்.

இது இவ்­வா­றி­ருக்க, மத்­திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்­க­நா­யக்­கவின் கருத்தை நாம் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும். 

"முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான மகஜர் ஒன்று தம்­புள்­ளையில் கைச்­சாத்­தாகிக் கொண்­டி­ருக்­கி­றது. அது தம்­புள்ளை பள்­ளிக்கு எதி­ரா­ன­தாகும். சில பிக்­குமார் இதன் முன்­ன­ணியில் நிற்­கின்­றனர்.

தம்­புள்­ளையில் அமைக்­கப்­ப­ட­வுள்ள பள்­ளி­வாசல் தேவை­யில்லை என இவர்கள் மக்­களின் கையொப்­பங்­களைப் பெறு­கின்­றனர். எமது நாட்டின் அர­சியல் யாப்­பின்­படி மதங்­களைப் பின்­பற்றும் சுதந்­திரம் இருக்­கி­றது. அதற்கு முஸ்­லிம்­க­ளுக்கு பள்­ளி­வாசல் தேவை. இதை எதிர்க்க முடி­யாது என குறிப்­பிட்­டி­ருந்தார்  மத்­திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்­க­நா­யக்க.

அத்துடன் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல கருத்துக்கள் அடங்கிய புத்தகம் வெளியிட்டவரும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவருமான சம்பிக்க ரணவக்க இன்று தம்புள்ளை பள்ளிக்கு காணியை பெற்றுக்கொடுக்க துணை நிற்கின்றார். 
இவ்வாறு முஸ்லிம்களின் நியாயத்திற்கு சாதகமாக பல தரப்பினராலும் செயற்பட்டுக்கொண்டிருக்கும்போது நாம் அதற்கு குந்தகம் விளைவிப்பது, பால் பொங்கிவரும் தறுவாயில் பானையை உடைத்தாற்போல் ஆகிவிடும்.

கடந்த ஆட்சியின்போது பல முஸ்லிம் அமைப்புகள்  மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றியிருந்தன. அக்காலகட்டத்தில் அதற்கு நியாயங்கள் பலவும் இருந்தன. அப்போது எதிர்ப்பை காட்டவேண்டிய தேவையும் முஸ்லிம் சமூகத்திற்கு இருந்தது. இன்றும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது, அதனை புத்திசாதுரியமாக மேற்கொள்ள வேண்டும் என்பதே காலத்தின்தேவை.