Verified Web

அரசியல் நிகழ்ச்சி நிரலை விட்டு நாட்டு நலனில் அக்கறை காட்டுவோம் : தம்பர அமில தேரர்

2017-03-12 12:01:10 Administrator

சிங்­க­ளத்தில்: தரிந்து உட­வ­ர­கெ­தர
தமிழில்: ஏ.எல்.எம். சத்தார் 

புதிய யாப்பு ஒன்று கொண்டு வரு­வது குறித்து தற்­போது எதிரும் புதி­ரு­மான கருத்­துகள் நிலவி வரு­கின்­றன. இது விட­ய­மாக நாட்டு நல­னிலும் சிறு­பான்மை மக்­களின் நிலைப்­பா­டு­க­ளிலும் நல்ல அபி­மானம் கொண்­டுள்ள பௌத்த தேரர்­க­ளில் ஒரு­வ­ராக விளங்கும் தம்­பர அமில தேர­ருடன் ராவய சிங்­கள ஊடகம் மேற்­கொண்ட நேர்­கா­ணலின் தமி­ழாக்கம் இங்கு இடம்­பெ­று­கி­றது.

கேள்வி: இறு­தி­யாக நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் போது புதிய யாப்பு ஒன்று கொண்­டு­வ­ரு­வது பற்றி குறிப்­பி­டப்­ப­ட­வில்­லையே என்று ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் கூறு­கின்­றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: 2015 ஜன­வரி 8 ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் 49 அமைப்­புகள் ஒன்­றி­ணைந்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொது வேட்­பா­ள­ராக நிறுத்­தின. அதன்­போது செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்­திற்­க­மைய விகா­ர­ம­கா­தேவி பூங்­கா­விலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கண்­டியில் நடை­பெற்ற பிர­சாரக் கூட்­டத்­திலும் புதிய யாப்பு கொண்டு வரு­வது பற்­றியும் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நிய­மிப்­பது தொடர்­பாக ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் ஏனைய பொது அமைப்­பு­களும் இணைந்து மேற்­கொள்­ள­ப்பட்ட உடன்­பாட்டில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லாமல் செய்­வது என்ற அடிப்­ப­டையில் புதிய யாப்பு ஒன்றும் கொண்டுவர வேண்டும் என்ற நிலைப்­பாட்­டுக்கு வந்­தி­ருந்­தனர். 

அப்­போது இடம்­பெற்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­பன நிகழ்வு நினை­வி­ருக்­கலாம். அந்த வைப­வத்­துக்கு நானும் அழைக்­கப்­பட்­டி­ருந்தேன்.

எனக்கும் உரை­யாற்ற சந்­தர்ப்பம் தரப்­பட்­டது. அதன்­போது புதி­ய­தொரு யாப்பு கண்­டிப்­பாக கொண்டு வரப்­பட வேண்டும் என்ற கருத்தை நான் வலி­யு­றுத்­தி­யி­ருந்தேன். அந்த தேர்தல் விஞ்­ஞா­­ப­னத்­திலும் அது உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது. அப்­போது குறித்த அமைப்­பு­க­ளோடு முன்­னணி வகித்த சோபித தேரரும் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழித்துக் கட்­டு­வதில் உறு­தி­யா­கவே இருந்தார். அத்­துடன் சோபித தேரரின் மரண இறுதிக் கிரி­யையின் போதும் ஜனா­தி­பதி இதனை உறு­தி­ய­ளித்­திருந்தார்.

இவ்­வி­டயம் குறித்து மாற்றுக் கருத்து தெரி­விக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த சுசில் பிரேம்­ஜ­யந்த, டிலான் பெரேரா, எஸ்.பீ .திஸா­நா­யக்க ஆகியோர் உட்­பட அவர்கள் சார்ந்தோர் மேற்­படி விவ­காரம் தொடர்­பான எந்­த­வித கலந்­து­ரை­யா­டல்­களின் போதும் இருக்­க­வில்லை. 

இவர்கள் எல்­லோரும் அப்­போது மஹிந்­தவின் பின்­னா­லேதான் இருந்­தார்கள். இதனால் இந்த விடயம் குறித்து விமர்­சிக்கும் உரிமை இவர்­க­ளுக்கு இல்லை. இவர்­க­ளுக்கு இது பற்­றிய தெளிவும் இல்லை. எனவே அவர்­களின் கூற்­றுக்கு செவி­ம­டுப்­ப­திலும் பய­னில்லை. சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நிறை­வே­றாது என்று அவர்­களால் சொல்­லவும் முடி­யாது. மக்கள் சமூகம் ஒன்று திரண்­டது இந்த அர­சாங்­கத்­தையும் ஆட்சி பீடம் ஏற்­று­வ­தற்­கல்ல. நடந்து கொண்­டி­ருந்த சர்­வா­தி­கார ஆட்­சியை அகற்­றி­விட்டு அரா­ஜக முறையை மாற்­றி­ய­மைக்­கவே மக்கள் சக்தி அன்று அணி திரண்­டது.

ஜனா­தி­பதி – ஹெல உறுமய கட்­சி­யு­ட­னான உடன்­பாட்டில் வேறு நோக்­கங்­களும் இருந்­த­னவா? 

பதில்: இல்லை. நிறை­வேற்று அதி­கார முறை­மையை நீக்க வேண்டும் என்­பதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை போல இலங்கை வர­லாற்றில் வேறு எந்த ஜனா­தி­ப­தியும் முன்­வ­ர­வில்­லை­யென்­பதே யதார்த்­த­மாகும். நிறை­வேற்று அதி­கா­ரங்­களை குறைப்­ப­தற்கே 19 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் கொண்டு வரப்­பட்­டது. ஜனா­தி­ப­தியின் 100 நாள் செயல் திட்­டத்தில் இந்த விவ­கா­ரமும் உள்­ள­டக்­கப்­பட்டே அது நிறை­வேற்­றப்­பட்­டது.

100 நாட்­களின் பின் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு புதிய தேர்தல் ஒன்­றுக்கு போகும் உடன்­பாடும் இருந்­தது. 100 நாட்­க­ளுக்­குள்­ளான பாரா­ளு­மன்­றத்தில் ஸ்ரீல.சு. கட்­சி­யி­னரே பெரும்­பான்­மை­யா­க­வி­ருந்­தனர். எனவே மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெற்றே 19 ஆவது திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டது. சர்­ஜ­வன வாக்­கெ­டுப்­புக்குப் போகத் தேவைப்­ப­ட­வில்லை.

அவ்­வாறு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சி­யப்­படும் பட்­சத்தில் நாடா­ளு­மன்ற கலைப்பும் மேலும் நீடிக்­கப்­படும் வாய்ப்பே இருந்­த­து.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை தமக்கு நல்­ல­தென்று சிறு­பான்­மை­யினர் கூறி வந்­தனர். மறு­பு­றத்தில் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­காக நிறை­வேற்று ஜன­தி­பதி முறை­மையே பயன்­பட்­டது என்ற கருத்தும் நில­வி­யி­ருந்­தது. இவற்­றை­யெல்லாம் கருத்­திற்­கொண்டு அவற்றை முகா­மைத்­து­வப்­ப­டுத்திக் கொள்­வது தவ­றல்­லவே. அதி­காரப் பகிர்வில் நிறை­வேற்று அதி­காரம் முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது என்ற கருத்தும் இருந்­தது. இத்­த­கைய கருத்­துகள் எந்த வகையில் எழு­கின்­றன என்­பதைத் தேடிப் பார்த்து அத­னையும் தீர்த்து வைக்க முன்­வ­ரு­வதும் தவ­றல்­ல­தானே!

சு.க. புதிய யாப்பு கொண்டு வரு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­விக்­கிற போதிலும் முன்பு யாப்பு குறித்த பிரே­ர­ணைக்கு பார­ளு­மன்­றத்தில் பூரண ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தது. லால் விஜே­நா­யக்க குழு, பாரா­ளு­மன்ற உப­குழு என்­ப­னவும் நிய­மிக்­கப்­பட்­டன. புதிய யாப்பு கொண்டு வரவே இத்­த­கைய ஏற்­பா­டுகள் என்­பது தெளிவு. அப்­ப­டி­யி­ருந்தும் இப்­போதும் யாப்புத் தேவை­யில்லை என்ற வாதம் முன்­வைக்­கப்­ப­டு­வது குறித்து உங்கள் அபிப்­பி­ராயம் என்ன?

பதில்: அர­சியல் ஆதாயம் கரு­தியே இவர்­க­ளது நகர்­வுகள் அமை­கின்­றன என்­பது உங்கள் கேள்வி மூலம் நன்கு தெளி­வா­கின்­றது. கட்­சியின் நிகழ்ச்சி நிர­லுக்­கேற்­பவே இவர்­க­ளது திடீர் மாற்றம் நிகழ்ந்­தி­ருக்­கி­றது. 

கேள்வி: ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிகழ்ச்சி நிர­லுக்­க­மை­யவே புதிய யாப்பு கொண்டு வரப்­ப­டு­கி­றது என்று சொல்­ப­வர்­களும் இருக்­கி­றார்கள் அல்­லவா? எங்கள் எல்­லோ­ரையும் விட வாசு­தேவ நாண­யக்­கார போன்­ற­வர்கள் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை மாற்ற வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றுவிட்டு இப்­போது ரணில் விக்­ர­ம­சிங்க இல்­லாத கால கட்­டத்தில் தான் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை நீக்­குவோம் என கூறு­கி­றார்கள். இந்த விடயம் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: அதி­கா­ரத்தை இலக்கு வைத்­துதான் இவர்­க­ளது கூற்­றுகள் அமை­கின்­றன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் கையில் அதி­காரம் சென்­ற­டை­யாது. அது ஜனா­தி­ப­தியின் பிடியில் இருக்­கட்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே இவர்கள் இருக்­கி­றார்கள். 

ஒரு காலத்தில் ஐ.தே.க. கட்சி கடு­மை­யாக மக்கள் எதிர்ப்பு ஆட்சி அதி­காரம் செலுத்­தி­யது. பிற்­பட்ட காலத்தில் ஸ்ரீல.சு. கட்சி மக்­களை வதைக்கும் வகையில் கோரப்­பி­டியைக் காட்­டி­யது. இரண்டு கட்­சி­களும் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நன்கு பயன்­ப­டுத்திக் கொண்­டன. இது  சரி­யாக புகை­யி­ரதத்  தண்­ட­வா­ளத்தில் பய­ணிப்­பது போன்­றதே. 

சார­தி­யாக யாரும் அம­ரலாம். ஆனால் தண்­ட­வா­ளத்­தில்தான் ஓட வேண்டும். பாதையை விட்டு விலகிச் செல்ல முடி­யாது. போகும் வேகம், நிறுத்த வேண்­டிய இடங்­களை மாத்­தி­ரமே சாரதி தீர்­மா­னித்துக் கொள்ள வேண்டும். சாரதி அவர் விருப்­பத்­திற்­கேற்ப அதி­வே­க­மாக புகை­யி­ர­தத்தை செலுத்­தினால் அதனைத் தடுத்து நிறுத்த எங்­களால் முடி­யாது. அவரை மாற்றி வேறு சார­தி­யொ­ரு­வரை அமர்த்­தவும் எங்­க­ளுக்கு இய­லாது. ஆனால் எங்­க­ளது விருப்­பு­வெ­றுப்­புக்கு ஏற்­ற­வாறு புகை­யி­ரதம் ஓடச் செய்­யவும் சார­தியை மாற்­றவும் கூடிய முறை­மை­யொன்று தேவை. 

யாப்பு என்­பது தண்­ட­வாளம் அமைப்­பது போன்­ற­தொரு பணி­யாகும். ஐ.தே.க. பய­ணித்த பின் ஸ்ரீல.சு.க. பய­ணிக்க ஆரம்­பித்­தது. தொடர்ந்தும் இது ஐ.தே.க. வின் பிடிக்குள் சிக்கும் என்ற பீதியில் இதே தண்­ட­வா­ளத்தை மாற்­றாது விட்டால் மாறி மாறி இரு சார­தி­க­ளுமே ஓடி ஓடி இதே தண்­ட­வா­ளமே நிலைத்து நிற்கும். இப்­ப­டியே அடிமைச் சேவகம் புரிந்­தது போதும். இனி நாட்டு நலனைப் பற்றிச் சிந்­தித்து செய­லாற்ற வேண்டும்.

கேள்வி: தமிழ்த் தலை­வர்­களின் ஒத்­து­ழைப்பும் கிடைத்துக் கொண்­டி­ருக்­கிற இதே நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புத் தலைவர் சம்­பந்தன் இருக்­கி­ற­போ­துதான் அதி­காரப் பகிர்­வினை வழங்­கலாம் என்று கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்­தின கூறு­கிறார். இக் கூற்று குறித்து நீங்கள் என்ன நினைக்­கி­றீர்கள்? 

பதில்
: வடக்கு, தெற்கில் உள்ள அனை­வரும் வர­லாற்றில் பாடம் படித்­தி­ருப்­பார்கள் என நாம் நினைக்­கிறோம். இந்த யாப்பு பற்­றியும் அதன் முறைமை குறித்தும் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம் இருக்­கின்­றன. எமது வெற்றிப் பயணம் ஓரி­டத்தில் தடைப்­பட்டு போதி­ய­ளவு அடி உதை, குட்­டுக்கள் எல்லாம் அனு­ப­வித்து பாடம் கற்றுக் கொண்டோம். இப்­போது நல்­ல­தொரு சூழ்­நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. 

வடக்கின் பெரும்­பான்­மை­யி­னரின் அங்­கீ­காரம் பெற்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் மற்றும் சுமந்­திரன் உடன்­பாட்­டுக்கு வந்­தி­ருக்­கி­றார்கள். இந்த வாய்ப்பை நாம் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்த் தரப்­பி­னரின் நம்­பிக்கை சிதை­யு­மானால் மீண்டும் தவ­றான திசைக்கே அது இட்டுச் செல்லும். சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ரான நிகழ்வும் மிகவும் முக்­கி­யத்­துவம் வாயந்­த­தாகும்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் இயற்­றப்­பட்­ட­மைக்கு கிடைத்த வர­வேற்பைக் கவ­னித்­தீர்­களா? நாம் ஓர் அடி நகர்ந்தால் அவர்கள் பத்­த­டிகள் முன் நகர்ந்து வரு­வ­தாக விக்­னேஸ்­வ­ரனும் பச்சை கொடி காட்டி வரு­கிறார். நாம் நல்­ல­தொரு மாற்றம் கொண்டு வரு­வோ­மாயின் அதற்கு அவர்­களும் உடன்­ப­டு­வார்கள். 

நாம் முன்னர் மாகாண சபை முறை­மைக்கு கடும் எதிர்ப்பை வெளி­யிட்டோம். புலி­களை அழிக்கும்படி கருத்­து­களை முன்­வைத்தோம். ஆனால் இப்­போது அதி­க­பட்ச அதி­காரத்தை பகிர்ந்­த­ளிக்­கும்­படி சொல்­கிறோம். இன்று ஜனா­தி­பதி, பிர­தமர் உட்­பட புத்­தி­ஜீ­விகள் அனை­வரும் நல்­ல­தொரு நிலைப்­பாட்­டுக்கு வந்­தி­ருக்­கி­றார்கள். இந்த வாய்ப்பு வீண் போகக் கூடாது.

கேள்வி: யாப்பு தொடர்­பாக பொது அமைப்­பு­களின் அங்­கீ­கா­ரத்தை பெற்றுக் கொள்­வது எப்­படி?

பதில்: சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளாக இந்த முயற்­சி­யி­லேயே கழித்தோம். அது தொடர்­பான செயற்­பா­டு­களில் இறங்­கினோம். லால் விஜே­நா­யக்க குழு நல்ல முறையில் இயங்­கி­யது. அறிக்கை சமர்ப்­பித்­தது. முழு பாரா­ளு­மன்­றத்­தையும் உள்­ள­டக்­கி­ய­வாறு யாப்பு நிர்­ணய சபை ஒன்றை உரு­வாக்­கி­யது. 

பாரா­ளு­மன்­றத்தால் குழு ஒன்றும் நிய­மிக்­கப்­பட்­டது. அத்­துடன் 6 பெரிய செயற்­பாட்டுக் குழுக்­களும் அமைக்­கப்­பட்­டன. அவற்றால்  அறிக்­கை­களும் முன்­வைக்­கப்­பட்­டன. அவற்றில் ஒன்­றுக்கு பந்­துல குண­வர்­த­னவும் மற்­றொன்­றுக்கு தர்­ம­லிங்கம் சித்­தார்த்­தனும் தலைமை வகித்­தனர்.

இன, மத, கட்சி பேதங்கள் எது­வு­மின்றி அக் குழுக்கள் செயற்­பட்­டன. பல்­வேறு சிறு சிறு குழுக்­களின் அறிக்­கை­களை மைய­மாக வைத்து செயற்­பாட்டுக் குழு அடிப்­படைத் திட்டம் ஒன்­றாக யாப்பு தயா­ரிக்­கப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தது. இந்த சிறப்­பான படித்­த­ரங்­களை நாம் மகிழ்­வோடு நோக்­கினோம்.

ஆனால் அண்மைக் காலத்தில் அது தவ­றான திசைக்கு திருப்­பப்­பட்டு வரு­வதைப் பரி­தா­ப­மாகப் பார்க்­கிறோம். எனவே பொது அமைப்­பு­களை மீண்டும்  சந்­தித்து உரை­யா­டு­வ­தற்கு நாம் இப்­போது சிந்­திக்­கிறோம். டியூ குண­சே­க­ர­வுடன்  கலந்­து­ரை­யா­டினோம். அவ­ரது  கட்சி  இந்த விட­யத்­திற்கு தம் பல­மான ஆத­ரவை தெரி­வித்­தது. சரத் அமு­னு­க­ம­வுடன் கதைத்தோம்.
 
அவரும் அதே ஆத­ரவைத் தெரி­வித்தார். ஈ.பி.டி.பி. கட்சித் தலைவர் டக்ளஸ் தேவா­னந்தாவை அணு­கினோம். அவரும் பூரண ஆத­ரவை அள்ளித் தந்தார். சரத் பொன்­சே­காவைத் தொடர்பு கொண்டோம். அவரும் திருப்­தி­யான பதிலைத் தந்தார். இவர்­களைத் தொடர்ந்து மக்கள் விடு­தலை முன்­னணி, முற்­போக்கு சோஷ­லிச முன்­னணி உட்­பட மற்றும் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த உத்­தே­சித்­தி­ருக்­கிறோம். பேரணி ஒன்­றையும் முன்­னெ­டுக்­க­வுள்ளோம். கிரா­மங்கள் தோறும் சென்று மக்­களைத் தெளி­வூட்­ட­வுள்ளோம்.

கேள்வி: ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் புதிய யாப்­புக்கு பங்­க­ளிப்பு வழங்­கு­வ­தாகத் தெரி­ய­வில்­லையே? 

பதில்: நாம் இவர்கள் இரு­வ­ரு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். புதிய யாப்பு தயா­ரிப்­பது குறித்து இரு­வரும் ஒரு முகப்­பட்டு கருத்து வெளி­யி­டும்­படி கூறினோம். இரு­வ­ரதும் நிலைப்­பாடு குறித்தும் தெளி­வு­ப­டுத்தும் படியும் எடுத்துச் சொன்னோம். பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க புதிய யாப்­புக்கு உடன்­பாடு தெரி­வித்து தனது கருத்தை வெளி­யிட்டார். மாகாண சபை­யொன்று பிரிந்து செல்­வது குறித்து பேசி­ய­போது அதனை முழு­மை­யாக இல்­லாமல் செய்­வது பாது­காப்பு, ஒரு­மைப்­பாடு, புத்த சம­யத்­துக்­கான முன்­னு­ரிமை போன்ற விட­யங்கள் குறித்தும் கலந்­து­ரை­யா­டினோம்.

கிராம ராஜாங்க சபை அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்க எதிர்­பார்க்­கப்­படும் முறை­மைகள் குறித்தும் ஜனா­தி­பதி எடுத்­து­ரைத்தார். இவை இவர்­களின் அபிப்­பி­ரா­யங்­க­ளாகும்.

இவை குறித்து கருத்துப் பரி­மாறிக் கொள்ள முடியும். உடன்­பாட்­டுக்கும் வர முடியும். யாப்பு குறித்து பொய் வதந்­தி­களைப் பரப்பி வரு­வோ­ருக்கு சரி­யான பதில்கள் இவர்­களின் கருத்­து­களில் அடங்கியுள்ளன. ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது துமிந்த திஸாநாயக்கவுடனும் உரையாடினோம். 

2020 இல் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவை பதவியில் அமர்த்துவது குறித்தும் அவரிடம் வினவினோம். கட்சி அங்கத்தவர்களிடமே மேற்படி கருத்து நிலவுகிறபோதிலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கலாம் என்ற போதிலும் தம் கட்சியினரே மேற்படி அபிப்பிராயத்தை வெளியிடுவதால் இந்த விடயத்தில் ஜனாதிபதி மௌனம் சாதித்து வருகிறார் . எவ்வாறான போதிலும் அவர்கள் தம் நிலைப்பாட்டை அடுத்து வரும் நாட்களில் எப்படியும் வெளியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று அவர் தற்போதுள்ள சூழ்நிலையை தெளிவுபடுத்தினார். 

புதிய யாப்பு கொண்டு வருவதற்கான தேசிய மட்டத்திலான செயற்பாடுகளை இவர்களேதான் முன்னெடுத்திருந்தார்கள். மறுபுறத்தில் இதற்கு மறுதலையாக இதனைக் கொண்டு வருவதற்கு தடைகளை உண்டு பண்ணுவார்களேயானால் நாம் கட்சிகளின் தலைவர்களது நிலைப்பாடு குறித்து உரசிப் பார்க்கவும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு இல்லாவிட்டால் அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புகளையும் ஒன்று திரட்டி ஒரு சக்தியாக தொழில்பட்டு முயற்சியில் இறங்கவும் உத்தேசித்திருக்கிறோம் என்று துமிந்த திஸாநாயக்க அவரது கருத்தை வெளியிட்டார்" என்று அமில தேரர் கூறினார்.

நன்றி: ராவய