Verified Web

அக்குறணையை கிளர்ந்தெழச் செய்த பிரதி அதிபரின் கைது விவகாரம்..

SNM.Suhail

 ஊடகவியலாளர், 
விடிவெள்ளி

2017-01-29 06:53:03 SNM.Suhail

நல்­லாட்­சியில் இலஞ்ச, ஊழல், மோசடி தடுப்புப் பிரி­வுக்­குத்தான் அதி­க­மான வேலை. ஏனெனில் கடந்த ஆட்­சியில் இடம்­பெற்ற மோச­டிகள் குறித்து குவிந்­தி­ருக்கும் முறைப்­பா­டு­களை விசா­ரிக்­கவே பல நாட்கள் தேவை என ஆணைக்­கு­ழுவின் தலைவர் அண்­மையில் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்தார்.இவ்­வாறு பாரிய ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்ட அர­சி­யல்­வா­தி­களும் அதி­கா­ரி­களும் காலையில் ஜெயி­லுக்குப் போவதும் மாலையில் வெளியில் வரு­வதும் அண்­மைய நாட்­களில் வாடிக்­கை­யா­ன­தொன்­றா­கி­விட்­டது. 

இப்­படி இலஞ்ச, ஊழல் தொடர்பில் பர­ப­ரப்­பாக பேசப்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் எமது சமூ­கத்தில் வீணாக ஒருவர் இந்த வலைக்குள் சிக்க வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றமை கவ­லைக்­குரிய விட­ய­மா­கவே தெரி­கின்­றது. 

அக்­கு­றணை அஸ்ஹர்
கண்டி மாவட்­டத்தில் இருக்கும் பிர­தான முஸ்லிம் தேசிய பாட­சா­லை­களில் ஒன்று அக்­கு­றணை அஸ்ஹர் கல்­லூரி. 110 வருட வர­லாற்­றைக்­கொண்ட இப்­பா­ட­சாலை கடந்த 20 வரு­டங்­க­ளாக பல இன்­னல்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே கொண்­டு­ந­டத்­தப்­ப­டு­கின்­றது. தேசியப் பாட­சாலை என வகைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் சில பெரும்­பான்­மை­யின சாதா­ரண பாட­சா­லைக்கு வழங்­கப்­படும் வளங்­கள்­கூட இப்­பா­ட­சா­லைக்கு அர­சாங்­கத்தால் முழு­மை­யாக வழங்­கப்­ப­டாமலிருப்­பது உண்­மையே.

குற்­றச்­சாட்டும் கைதும்
இக்­கல்­லூ­ரியின் பிரதி அதிபர் 6 ஆம் தரத்­திற்கு பிள்­ளை­களை சேர்க்­கும்­போது மாண­வர்­களின் பெற்­றோர்­க­ளி­டத்தில் இலஞ்சம் பெற்­ற­தாக கூறி கைது செய்­யப்­பட்டார். இதுவே கடந்த சில தினங்­க­ளாக நாட்டின் பிர­தான ஊட­கங்­களின் முக்­கிய செய்­தி­யாக காணப்­பட்­டது. மட்­டு­மன்றி ஒரு முஸ்லிம் பெண் என்ற ரீதியில் இவ்­வி­டயம் மேலும் ஊதிப் பெருப்­பிக்­கப்­பட்­டமை மிகவும் கவ­லைக்­கு­ரிய­தா­கவே நோக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. 

இலஞ்சம் பெறப்­பட்­டதா?
அக்­கு­றணை அஸ்ஹர் கல்­லூ­ரியின் பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்கம் கலைக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் முழு நிர்வா­கமும் அதி­பரின் மேற்­பார்­வை­யி­லேயே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் இவ்­வ­ருடம் ஆறாம் தரத்­திற்கு புதிய மாண­வர்­களை இணைத்­து­க் கொள்­வ­தற்கு பெற்­றோர்­க­ளினால் ஒரு குழு நிய­மிக்­கப்­பட்டு அவர்­களால் பல தீர்­மா­னங்­க­ளும் எடுக்­கப்­பட்­டன. 

பாட­சா­லையில் மாண­வர்­க­ளுக்­கான கதிரை, மேசையின் தேவைப்­பாடு அதி­க­மாக காணப்­ப­டு­வ­தாலும், அவை அர­சாங்­கத்­தினால் முழுமையாக வழங்­கப்­ப­டா­மை­யி­னாலும் பெற்­றோர்­க­ளி­ட­மி­ருந்து அதற்­காக ஒரு தொகைப் பணத்தை அற­வி­டு­வ­தாக தீர்­மா­ன­மொன்று எடுக்­கப்­பட்­டது. இதற்­காக பெற்­றோர்கள் அடங்கும் குழுவொன்றும் நிய­மிக்­கப்­பட்டு அத­னூ­டா­கவே இவ்­வே­லைகள் செய்­யப்­பட்டு வந்­தன.

இடம்­பெற்­றது சதியே
கடந்த திங்­கட்­கி­ழமை பெற்றோர் ஒருவர் பாட­சா­லைக்கு வந்­துள்ளார். இதன்­போது அதிபர் பாட­சா­லையில் இல்­லா­ததன் கார­ண­மாக பிரதி அதி­பரே கட­மையில் இருந்தார். பெற்­றோர்­களின் தீர்­மா­னத்­திற்­க­மைய நிய­மிக்­கப்­பட்ட குழு மூலம் பாட­சாலை அபி­வி­ருத்­திக்­கான நிதி சேக­ரிக்­கப்­பட்டு வந்­த­நி­லையில், பிரதி அதி­ப­ரிடம் பணத்தை வழங்­கி­யி­ருக்­கிறார். பிரதி அதி­ப­ரான அந்தப் பெண் தான் அந்தப் பணத்தை அற­விட முடி­யாது என மறுத்தும் 7500 ரூபாவை கொடுத்துவிட்டுச் சென்­றுள்ளார்.

இதன்­போது அங்கு மேலும் சில ஆசி­ரி­யர்­களும் இருந்­துள்­ளனர். சில ஆசி­ரி­யர்கள் அங்கு இருந்த சந்­தர்ப்­பத்­தில பிரதி அதிபர் அதா­வது ஒரு பெண் தைரி­ய­மாக இலஞ்சம் பெற்­றாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. அத்­துடன், நகர்­ப்புற மற்றும் பிர­பல பாட­சா­லை­களில் இலட்­சக்­க­ணக்கில் இலஞ்­ச­மாக பணம் அற­விடும் சந்­தர்ப்­பத்தில் வெறு­மனே 7500 ரூபாய் தான் இலஞ்­ச­மாக பெற்­றாரா என்­றெல்­லாம் பலர் வின­வு­கின்­றனர்.

இந்­நி­லையில் இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவை தவ­றாக வழி­ந­டத்­தி­ய­வர்கள் பாட­சா­லையை பெரும் சிக்­கலில் மாட்­டி­விட்­டுள்­ளனர். அத்­துடன் ஒரு முஸ்லிம் பெண்ணை சிறைக்கு அனுப்­பி­யி­ருப்­பி­யி­ருப்­பது பெரும் மன வேத­னை­யையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. 

கோளாறு எங்கே?
பாட­சா­லையில் முதலாம் தரத்­திற்கோ அல்­லது ஆறாம் தரத்­திற்கோ மாண­வர்­களை அனு­ம­திக்­கும்­போது பணம் பெற முடி­யாது என கல்வி அமைச்சு குறிப்­பிட்­டி­ருக்­கி­றது. எனினும், பாட­சா­லை­யி­லுள்ள அதுவும் முஸ்லிம் தேசிய பாட­சா­லை­யொன்றின் குறை­களை மத்­திய அர­சாங்கம் தீர்த்து வைத்­த­தா என்­ப­தற்கு இல்லை என்றே பதில் கூற­முடியும். 

இப்­பா­ட­சா­லையின் உயர்­தர விஞ்­ஞானப் பிரி­வி­லி­ருந்து பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு பல மாண­வர்கள் சென்­றனர். ஆனாலும் கடந்த 20 வரு­டங்­க­ளாக இப்­பா­ட­சா­லை­யி­லி­ருந்து விஞ்­ஞானப் பிரி­வி­லி­ருந்து பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு ஒரு மாண­வ­ரேனும் தெரி­வா­க­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­யது. இதற்குக் காரணம் 20 வரு­டங்­க­ளாக விஞ்­ஞான பிரி­விற்கு ஆசி­ரி­யர்கள் வழங்­கப்­ப­ட­வில்லை.

பாடசாலையில் 13 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களும் 10 சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களும் நிரப்பப்படாமல் இருக்கின்றன.
அத்­துடன் பாட­ச­லையின் அபி­வி­ருத்­திக்­காக 40 ஆயிரம் ரூபா அர­சாங்­கத்தால் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது போது­மா­ன­தாக இல்லை. எனவே பெற்­றோ­ரி­டத்­தி­லி­ருந்து நிதியை திரட்­ட­வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. 

புதிய மாணவர்­களை பாட­சா­லையில் இணைத்­துக்­கொள்­ளும்­போது அவர்­க­ளுக்குத் தேவை­யான கதிரை, மேசைகள் மற்றும் வகுப்­ப­றைகளுக்குத் தேவை­யா­ன­வற்றை பெற்­றுக்­கொள்ள அர­சாங்க நிதி போதாமல் இருக்­கி­றது. இது அஸ்­ஹ­ருக்கு மட்­டு­மல்ல, எல்லாப் பாட­சா­லைகளுக்கும் இருக்­கின்ற சாதா­ரண பிரச்­சி­னையே. எனவே நிதி சேக­ரிக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டது.

கடும் எதிர்ப்பு
பாட­சாலை பிர­தி­ய­திபர் கடந்த திங்கட் கிழமை கைதா­ன­தை­ய­டுத்து ஆசி­ரி­யர்கள்,  செவ்­வாய்க்­கி­ழமை பாட­சாலை நிறை­வ­டைந்­த­பின்னர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

அக்­கு­றணை, அஸ்ஹர் தேசிய பாட­சா­லையின் கல்வி வளர்ச்­சியை சகிக்க முடி­யாத சிலர், திட்­ட­மிட்டு பாட­சா­லையின் பிரதி அதி­பரை இலஞ்ச வலையில்  சிக்க வைத்­துள்­ள­தாகக் கூறி, பாட­சாலை மாண­வர்­களின் பெற்றோர், பழைய மாண­வர்கள் மற்றும் நலன்­வி­ரும்­பிகள், கடந்த புதன் கிழமை பாட­சா­லையின் விளை­யாட்டு மைதா­னத்தில் ஒன்­று­கூடி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.
 சிலரின் திட்­ட­மிட்ட சதியால், அஸ்ஹர் தேசிய பாட­சா­லையின் பிரதி அதிபர் இலஞ்ச ஊழல் குற்­றச்­சாட்டில் கைது­செய்­துப்­பட்­டுள்­ள­தாக  ஆர்ப்­பாட்­டக்­காரர்கள் இதன்­போது கோஷ­மெ­ழுப்­பினர். 

அஸ்ஹர் தேசிய பாட­சாலை மைதா­னத்தில் ஒன்­று­கூ­டிய  பெற்­றோர்கள் உள்­ளிட்ட  ஆயி­ரக்­க­ணக்­கானோர், பின்னர்  சுலோக அட்­டை­களை  ஏந்­தி­யா­வறு, ஏ- 09 வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சுமார் இரண்டு மணித்தியாலம் நீடித்த ஆர்ப்பாட்டம் காரணமாக,  ஏ- 09 வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. 
இது இவ்வாறிருக்க, பழைய மாணவர்களும் பெற்றோர்களும் சம்பவம் தொடர்பில் விளக்கமளித்து இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கின்றனர். 

அத்துடன் இவ்விவகாரம் அக்குறணையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சியின் சிகரம் எனக் கருதப்படும் அஸ்ஹர் கல்லூரிக்குப் பெரும் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
 
பாடசாலையின் அபிவிருத்திக்காக பெற்றோராலும் நிர்வாகத்தாலும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய இடம்பெற்ற நிதி திரட்டல் இலஞ்ச ஊழல் என சித்திரிக்கப்பட்டுள்ளமை தவறானதாகும். இது விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதுடன் பிரதி அதிபர் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் கோரிக்கையாகும்.