Verified Web

வாய்ச்சவடால் வேண்டாம்

SNM.Suhail

 ஊடகவியலாளர், 
விடிவெள்ளி

2016-12-27 11:13:49 SNM.Suhail

நகைச்­சுவை நடிகன் வடி­வே­லுவை ஒரு கதா­நா­ய­கனாக மாற்­றி­ய­மைத்த படம் 'இம்சை அரசன் 23 ஆம் புலி­கேசி' அந்த படத்தின் ஆரம்­பத்­தி­லேயே இலங்­கையின் கடந்த ஆட்­சி­யுடன் ஒப்­பிடும் அள­வுக்கு ஒரு காட்சி இருந்­தது. அதா­வது, புலி­கேசி மன்னன் ஜாதிச் சன்­டைக்­காக மைதானம் அமைத்­துக்­கொ­டுத்து ஜாதி வன்­மு­றை­க­ளுக்கு ஊக்­க­ம­ளிப்­பது போல் காட்சி அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. 

அதற்கு ஒப்­பா­ன­தாக முன்­னைய மஹிந்த ஆட்­சியில் அதி­கா­ரத்தில் இருந்த முக்­கி­யஸ்தர் ஒரு­வரின் துணை­யுடன் பொது­ப­ல­சேனா என்ற அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. அத்­துடன், பொது­ப­ல­சேனா என்ற கடும்­போக்கு அமைப்பு நாட்டில் சுதந்­தி­ர­மாக இயங்­கு­வ­தற்கு அரசும் பாது­காப்பு வழங்­கி­ய­தோடு அவர்­களை கடந்த மஹிந்த அரசு பல வகை­யிலும் போஷித்­தது. 

அரச ஆத­ர­வுடன் நாட்டில் தாண்டவம் ஆடிய பொது­ப­ல­சேனா அமைப்பு பெரும்­பான்மை மக்­க­ளி­டையே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பகைமை உணர்வை வளர்க்கப் பாடு­பட்­டது. இதனால் 30 வருட கால யுத்த முடி­வுக்­கு­ப் பின்னர் நாட்டில் உரு­வான அமைதி சீர்­கு­லைந்­த­துடன் சிறு­பான்மை மக்­க­ளி­டையே மீண்டும் அச்ச உணர்வு ஏற்­ப­ட­லா­னது.

இது இப்­ப­டி­யி­ருக்க, 'இம்சை அரசன் 23 ஆம் புலி­கேசி' திரைப்­ப­டத்தில் மன்­னனுக்கு துணைக் கதாபாத்­தி­ர­மாக வரக்­கூ­டிய மங்­குணி மந்­தி­ரியர் என்­கிற கதா­பாத்­தி­ரம் மன்னன் எதைச் செய்­தாலும் ஆமாம் போடும் ஒரு­வ­ராக சித்­த­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதற்கு ஒப்ப கடந்த ஆட்­சி­யின்­போது பல முஸ்லிம் அமைச்­சர்­களும் பிர­தி­ய­மைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இருந்­தனர் என்­பது உண்­மையே. 

தம்­புள்ளை பள்­ளி­வாசல் மீது குண்டுத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்பட் போது 'தம்­புள்ளை பள்­ளி­வா­சலில் பட்­டாசு வெடித்­தது' என ஒரு அமைச்சர் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் தெரி­வித்தார்.

'மஹிந்­தவின் பெயரை உச்­ச­ரித்தால் மறு­ஜென்­மத்தில் அவ­ரது குடும்­பத்தில் பிறக்­கலாம்' என இன்­னு­மொ­ருவர் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார். 

அப்­போ­தைய எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அநி­யா­ய­மி­ழைக்­கப்­ப­டு­வ­தாக பாரா­ளு­மன்­றத்தில் கூறி­ய­போது ' அதை முஸ்லிம் அமைச்­சர்­க­ளா­கிய நாம் பார்த்­துக்­கொள்­கிறோம். நீங்கள் இது­பற்றி பேசத்­தே­வை­யில்லை' என்று முஸ்லிம் கட்­சி­யொன்றின் தலை­வ­ரான அமைச்சர் ஒருவர் குறிப்­பிட்டார். 

'எமது கைகள் கட்­டப்­பட்­டி­ருக்­கி­றன' என இன்­னு­மொரு முஸ்லிம் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ஒருவர் குறிப்­பி­டி­ருந்தார். 
அத்­துடன் மஹிந்­தவை தீர்காயுசு காலமும் ஜனா­தி­ப­தி­யாக்கும் சர்­வா­திகார சட்­ட­மூ­ல­மான 18 ஆம் திருத்­த­திற்கு கண்­மூடி ஆத­ர­வ­ளித்­த­துடன் முன்னாள் பிர­தம நீதி­ய­ர­ச­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கும் ஆத­ர­வ­ளித்­தனர்.  இப்­படி கடந்த மஹிந்த ஆட்­சியின் நெருக்­க­டி­யான கால­கட்­டத்தில் இம்சை அரசன் படத்­துக்கு ஒப்ப முஸ்லிம் அமைச்­சர்கள் நகைச்­சுவை காட்­சி­களை அரங்­கேற்­றினர். 

அன்று ஆட்­சி­யாளர் சொல்­வ­தற்­கெல்லாம் தலை­ய­சைத்­துக்­கொண்­டி­ருந்த முஸ்லிம் தலை­மைகள் இன்று வீர வச­னங்­களை பேசி இன­வா­தி­க­ளுக்கு களம் அமைத்­துக்­கொ­டுக்கும் செயற்­பா­டு­களில் இறங்கி சுய­லாபம் தேடிக்­கொள்­கின்­ற­னரா என்­கிற சந்­தேகம் தோன்­றி­யுள்­ளது. 

முஸ்லிம் அமைச்­சர்கள் அன்று எதுவும் பேசாது அமை­தி­யாக இருந்து இன­வாத நட­வ­டிக்­கை­களை வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ந்தமை மக்­க­ளுக்கு வெறுப்பை ஊட்­டி­யது. இன்று முஸ்லிம்  சமூ­கத்தின் மீது இவர்­க­ளுக்கு திடீர் அக்­கறை வந்­தது ஏன் என்றும் மக்கள் கேட்­கின்­ற­னர்.

கடந்த வியா­ழக்­கி­ழமை  2017ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்­டத்தின் புத்­த­சா­சன அமைச்சு, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சு, சுற்­றுலா அபி­வி­ருத்தி கிறிஸ்­தவ சமய அலு­வல்கள் அமைச்சு ஆகி­ய­வற்றின் செல­வுத்­த­லைப்­புக்கள் மீதான  குழு நிலை விவா­தத்தில் கலந்­து­கொண்டு இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ் பாரா­ளு­மன்றில் ஆற்­றிய உரை இன­வா­தி­க­ளுக்கு தீனி­யா­கி­யுள்­ளது. அத்­துடன் முஸ்­லிம்­க­ளி­டத்தில் சர்ச்­சை­க­ளுக்கும் வித்­திட்­டுள்­ள­து.

குறிப்­பாக ' உயிர்­மூச்­சான இஸ்­லாமும், குர் ஆனும் நிந்­திக்­கப்­பட்டால் முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்­து­வதை எவரும் தடுக்­க­மு­டி­யாது போய்­விடும்' என்ற அமைச்சர் ஹிஸ்­புல்­லா­ஹ்வின் கூற்று ஒரு சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இலங்கை முஸ்­லிம்கள் எப்­போதும் தீவிர தேச பக்­தர்­களே அவர்கள் ஒரு­போதும் தீவி­ர­வாத தேச பக்­தர்­க­ளாக இருந்­த­தில்லை. அப்­படி இருக்­க­வும் ­போ­வ­தில்லை. 

ஜன­நா­ய­கத்தை நேசிக்கும் முஸ்­லிம்கள் தமது போராட்­டத் தீர்வை ஜன­நா­யக ரீதி­யி­லாக பெற்­றுக்­கொள்­வ­தற்கே விரும்­பு­கின்­றனர். இன்று ஜன­நா­யக வழியில் போரா­ட­வேண்­டிய அர­சியல் தலை­வர்கள் பொறுப்­பற்ற விதத்தில் வீண் வாய்ச்சவடால் விடுவதால் முஸ்­லிம்­களின் இருப்­புக்கு பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டுமோ என்­கிற அச்­சமே தோன்­றி­யுள்­ளது. 

''இஸ்­லாமும், குர்­ஆனும் தொடர்ச்­சி­யாக சில­ரினால் நிந்­திக்­கப்­பட்டு வரு­கி­றது. இதனால் முஸ்லிம் இளை­ஞர்கள் மிகுந்த மன­வே­த­னை­ய­டைந்­துள்­ளனர். இவற்­றுக்கு எதி­ராக முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. கைகட்டி வாய்­மூடி மௌனி­க­ளாக இருக்­கின்­றார்­க­ளென சமூக வலைத்­த­ளங்­களில் விமர்­சித்து வரு­கின்­றனர்.

கடந்த காலத்தில் தமி­ழர்­களின் உரி­மைகள் மறுக்­கப்­பட்­ட­போது ஆயு­த­மேந்­திய தமிழ் இளை­ஞர்கள் முதலில் தமிழ் தலை­வர்­க­ளையே படு­கொ­லை­ செய்­தனர். அதே­போல முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயுதம் தூக்­கினால் முஸ்­லிம்­களின் தலை­வர்­க­ளாக இருக்கும் எம்­மையே முதலில் படு­கொலை செய்­வார்கள்'' என அமைச்சர் ஹிஸ்­புல்லா குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 

அமைச்சர் ஹிஸ்­புல்லா பல முக்­கிய விட­யங்­களை முஸ்­லிம்கள் சார்பில் அன்­றைய தின உரையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தாலும் நாம் மேலே குறிப்­பிட்ட ஓரிரு கருத்­துக்களுக்கே பல ஊட­கங்கள் முக்­கி­ய­ம­ளித்­தன. 

எனவே நாம் எந்தச் சந்­தர்ப்­ப­த்திலும் நிதா­னத்தை கையாள வேண்­டி­யி­ருக்­கி­றது. ஆவே­சத்தில் வீண் வார்த்­தை­களை கொட்­டி­விட்டால் அதனை ஒரு­போதும் மீளப் பெற­மு­டி­யாது. அத்­துடன் தற்­போது சிங்­கள ஊட­கங்­களும் பேரி­ன­வா­தி­களும் தூக்­கிப்­பி­டித்­துக்­கொண்­டி­ருக்கும் குறித்த கருத்­துக்­க­ளை­ய­டுத்து பல முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான வெறுப்புப் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.  

இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்­லாவின் உரைக்கு நீதி­ய­மைச்சர் விஜ­தாஸ ராஜ­பக்ஷ கடும் எதிர்ப்பை சபை­யி­லேயே வெளி­யிட்டார். 
'நல்­லாட்­சியில் இப்­படிப் பேசு­கி­றீர்கள் எனினும் அளுத்­கம சம்­ப­வத்தின் போது அங்­குள்ள முஸ்லிம்  எம்.பி.க்கள்  ஒருவர் கூட எதிர்த்துப் பேச­வில்லை. நானும் கிரி­யெல்ல அமைச்­ச­ருமே சபையில் கடும் எதிர்ப்பு வெளி­யிட்டு பேசினோம்.' 

'நீங்கள் அதன் போது ேவறு எத­னையோ பேசி­னீர்கள். ஆனால், தற்­போது வாய்­கி­ழிய  கத்­து­கி­றீர்கள். நீங்கள் அங்கம் வகித்த முன்­னைய ஆட்­சியின் போதே இந்த நிலைமை ஏற்­பட்­டது. பாது­காப்பு செய­லாளர் மற்றும் மஹிந்த ராஜபக் ஷ எம்மை பாது­காப்­பார்கள் என எண்­ணி­னீர்கள். அமைச்சு பத­வியும் வரப்­பி­ர­சா­தங்­களும் பெறு­வ­தற்­காக நீங்கள் எதனை வேண்­டு­மா­னாலும் செய்­வீர்கள். மக்கள் மீது அக்­கறை இல்­லா­த­வர்கள்  நீங்கள்.'

'இன­மு­றுகல் நிலை­மையை நினைத்­த­வுடன் தீர்க்க முடி­யாது. எமக்கு கால அவ­காசம் வேண்டும். எனக்கு சமூக வலை தளங்­களில் முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் கடு­மை­யாக விமர்­சிக்­கின்­றனர். மிகவும் கேவ­ல­மான செயல்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். '
காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான சமூ­கத்தை நீங்­களே உரு­வாக்­கி­யுள்­ளீர்கள்.

அவர்­களை நேர்­வ­ழிப்­ப­டுத்­தவே நாம் முனை­கிறோம். வீண்­வாதம்  வேண்டாம். இன­வாத அர­சி­யலை முன்­னெ­டுக்க வேண்டாம். வரப்­பி­ர­சா­தங்­களை பெறவே நீங்கள் சரி'' என்­றார்.

இதன்­போது இரு­வரும் சர­மா­ரி­யாக விவா­தித்துக் கொண்­டனர். தொடர்ந்தும் ஞான­சார தேரரின் அடா­வ­டித்­தனம் அதி­க­ரிக்­கி­றது. இதற்கு  என்ன செய்யப் போகி­றீர்கள் என பிரதி அமைச்சர் ஹிஸ்­புல்லா வின­வினார். 

''இதற்கு உடன் நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது.  காலம் தேவை. அமைச்சு பத­வி­க­ளுக்கு ஏன் எப்­படி செயற்­ப­டு­கி­றார்கள்'' என்றார். 
இதற்­கி­டையில் அமைச்சர் ஹிஸ்­புல்­லாஹ்வின் கூற்­றுக்கு பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் கிரு­ல­ப்ப­னையில் இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் உரை­யாற்­றும்­போது இவ்­வாறு பதி­ல­ளித்­தி­ருக்­கிறார், 

''இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ் முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்­டிய காலம் வரும் என்று பாரா­ளு­மன்­றத்தில் கூறி­யி­ருந்தார். அவர் கூறி­யது உண்மை. முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்­து­வார்கள். அதற்­கான பயிற்­சிகள் அங்கு வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஹிஸ்­புல்லாஹ் அமைச்­ச­ரு­டனும் ஏனைய முஸ்லிம் அமைச்­சர்கள் எம்.பி.க்களு­டனும் ஒன்­றாக அமர்ந்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு நாம் தயா­ராக இருக்­கிறோம். எமக்­கி­டையில் நிலவும் கசப்­பு­ணர்­வு­களைத் தீர்த்துக் கொள்ள முடி­யு­மாக இருக்கும்.

அத்­தோடு முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம், ஆக்­கி­ர­மிப்பு ஏனைய முஸ்லிம் தீவி­ர­வாதக் குழுக்கள் தொடர்­பா­கவும் நாம் பேசு­வ­தற்குத் தயார். நாம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களை நிறுத்­தி­விட்டோம்.

நீங்­களும் எங்­களை எதிர்ப்­பதை நிறுத்திக் கொள்­ளுங்கள்.
பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் அதா­வது சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் எம்­முடன் நல்­லு­ற­வு­ட­னேயே இருக்­கி­றார்கள். அவர்கள் புத்­தி­ஜீ­விகள், படித்­த­வர்கள், சக­வாழ்­வையும் நல்­லி­ணக்­கத்­தையும் விரும்­பு­ப­வர்கள்.

முஸ்லிம் சமூ­கத்தில் சில குழுக்­களே அடிப்­ப­டை­வா­தத்தைக் கடைப்­பி­டிக்­கின்­றன. சம்­பி­ர­தாய முஸ்­லிம்­களைக் காப்­பாற்­ற­வ­தற்­காக அவர்­க­ளது உற­வினைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­கா­கவே நாம் எமது போராட்­டத்தை ஆரம்­பித்தோம். அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்கள் சவூதி வஹாபிஸ் வாதத்துக் அடி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

சுதேச சம்­பி­ர­தாய நற்­கு­ண­முள்ள முஸ்­லிம்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கிறோம். வஹா­பி­ஸத்தை அடியோடு ஒழிப்பதற்கு எம்முடன் இணையுங்கள். வஹாபிஸ வாதிகளே அடிப்படைவாதிகள். அவர்களே எங்களுக்குள் பிரச்சினைகளை உருவாக்கு கிறார்கள் '' என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இதே­வேளை, வெறுப்புப் பேச்சு பேசி­ய­தனால் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­த­லை­யான டான் பிரி­யசாத் கூட அமைச்சர் ஹிஸ்­புல்­லா­வுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்­பிட்டு வீடியோ ஒன்றை சமூக ஊட­கங்கள் மூலம் வெளியிட்­டி­ருக்­கிறார். வெறுப்புப்  பேச்சில் ஈடு­பட்ட குற்­ற­வா­ளி­யொ­ருவர் ஒரு அமைச்­சரை நோக்கி கைநீட்டும் அள­வுக்கு நிலைமை இன்று சென்றுள்ளது.
பார்ப்பதற்கு சிறிய பிரச்சினை போல்தான் இனவாதம் இருக்கும்.

அதை ஊதி ஊதி பெரிதாக்கி அக்கினிக் குண்டம்போல் வளர்த்து காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக அதன்வெப்பத்தில் குளிர்காய சில அரசியல் சக்திகள் முயற்சிக்கின்றன. சுயலாப அரசியல் சக்திகளின் சதி வலையில்  குறுகிய மனப்பான்மை கொண்ட முஸ்லிம் தலைமைகளும் சிக்கியுள்ளன. இதன் விளைவை சந்திப்பது அப்பாவி முஸ்லிம்களே!

அஷ்­ரபும் முஸ்­லிம்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது. ஆயு­தப்­போ­ராட்­டத்தில் நம்­பிக்கை வைக்­கக்­கூ­டாது என்ற கார­ணத்­திற்­கா­கவே  முஸ்லிம் காங்­கி­ரஸை ஸ்தாபித்தார் என்­பதை நாம் நினை­விற்கொள்ள வேண்டும். 

தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்ட போது அங்கு ஒரு தகரம் கூட அகற்­றப்­ப­ட­வில்லை எனக் கூறிய ஹிஸ்­புல்லாஹ் இன்று நல்­லாட்­சியில் அநி­யா­யங்­க­ளுக்கு எதி­ராக முஸ்­லிம்கள் கொதிப்­ப­டைந்து ஆயுதம் ஏந்­துவர் என கூறி­யி­ருக்­கின்­றமை அர­சியல் சுய­லா­பத்­திற்­காவா என்றே எண்ணத் தோன்றுகிறது. 

குட்டக் குட்டக் குனிந்து கட்­டுப்­பட்டுக் கிடந்த காலம் முடிந்­தா­யிற்று. எனினும் எடுத்­த­தற்­கெல்லாம் ஆவே­சப்­பட்டு சிறு­பிள்ளைத் தன­மாக வீறாப்புப் பேசு­வதால் பிர­தி­ப­லிப்பு ஆபத்­தா­ன­தா­கவே இருக்கும். 

அர­சியல் அரங்கில் நகைச்­சுவை நடிகர் கதாப்­பாத்­திரம் வகிப்­பதை விடுத்து தேசத்­திற்கும் முஸ்லிம் சமூ­கத்­திற்கும் பிர­யோ­ச­ன­ம­ளிக்கும் தலை­மை­யாக மாற­வேண்டும் என்­பதே அனை­வ­ரி­னதும் எதிர்பார்ப்பாகும்.