Verified Web

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் : திருத்தம் இலக்கை எட்டுமா?

M.S.M.ANAS

பேராதனை பல்கலைக்கழகம்,
மெய்யியல் துறை பேராசிரியர்

2016-12-19 11:35:07 M.S.M.ANAS

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டங்கள் இது­வரை தேவை­யான திருப்­தி­யான சட்­டங்கள் என்ற இலக்கை அடை­ய­வில்லை என்­பது தான் இங்கு எழும் பெரும் பிரச்­சி­னை­யாகும். முஸ்­லிம்­க­ளி­டையே இது பற்­றிய  விவா­தங்­களும் ஆய்­வு­களும் மிகக்­கு­றை­வாக நடந்­துள்­ளன.1770 களி­லி­ருந்து தனியார் சட்­டத்தில் அதுவும் விவாகம், விவா­க­ரத்து தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு அவை மாற்­றப்­பட வேண்டும் என்று தொடர்ச்­சி­யான கோரிக்­கை­களும் முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளன.

1770 களி­லி­ருந்து அடுக்­க­டுக்­காகச் சீர்­தி­ருத்­தங்கள் நடந்தும் தேவை­யான இலக்­குகள் எட்­டப்­ப­ட­வில்லை. சட்ட ரீதி­யிலும் சமய ரீதி­யிலும் மனித உரி­மைகள் ரீதி­யிலும் தேசத்தின் சட்­டங்கள் என்ற பார்­வையில் இருந்தும் முஸ்லிம் தனியார் சட்­டங்கள் தொடர்ச்­சி­யான கண்­ட­னங்­க­ளுக்கும் விமர்­ச­னங்­க­ளுக்கும் முகம் கொடுத்து வரு­கின்­றன.

வர­லாற்று ரீதியில் டச்­சுக்­காரர் இலங்கை முஸ்­லிம்­களின் அங்­கீ­கா­ரத்­துடன் அமுல் செய்த சட்­டத்தில் பத்­தா­வி­யாவின் முஸ்லிம் சட்­டங்­களின் அடிப்­ப­டைகள் பேணப்­பட்­டுள்­ளன.  இன்று இந்­தோ­னே­சி­யாவில் பல மாற்­றங்கள் நடந்­துள்­ளன. புதிய மாற்­றங்­க­ளுக்­கான கோரிக்­கைகள் அங்கு முன்­வைக்­கப்­ப­டு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

இந்­தோ­னே­சிய அரசும் சம­யமும் பெண்­களின் சுதந்­தி­ரத்தைப் பாதித்து வரு­வ­தா­கவும் பெண்­களின் தகு­தி­களும் பால்­நிலை சமத்­து­வமும் விளிம்பு நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அண்­மைக்­கால ஆய்­வுகள் கூறு­கின்­றன. சட்டத் துறையில் பால் நிலை சமத்­து­வ­மின்மை பாரிய பிரச்­சினை என்றும் அவ்­வாய்­வுகள் கூறு­கின்­றன.

சரி­யாகக் கூறு­வ­தாயின் இலங்­கையின் முஸ்லிம் தனியார் சட்­டத்தின் பிரச்­சி­னை­களும் இத்­த­கைய குறை­பா­டு­க­ளைத்தான் வெளிப்­ப­டுத்­து­கின்­றன. அதைத் தான் நாம் இன்று எமது சமூ­கத்தில் விவாதப் பொரு­ளாக்கி இருக்­கிறோம். 

சிந்தி முஷ்தா மூவி­யாவின் "நீதி­யான திரு­மணம் சட்டம்: இந்­தோ­னே­சியப் பெண்­களை வலு­வூட்­டுதல்” என்ற கட்­டு­ரையில் குடும்பச் சட்டச் சீர்­தி­ருத்­தத்­திற்­கான தேவைகள் என்ற பிரிவில் பின்­வரும் கருத்து  கூறப்­ப­டு­கின்­றது. இஸ்­லா­மிய நாடு­களில் குடும்பச் சட்­டங்கள் சீர்­தி­ருத்­தப்­ப­டு­வ­தற்கு மூன்று முக்­கிய கார­ணங்கள் தரப்­ப­டு­கின்­றன.

1.பல இஸ்­லா­மிய சிந்­தனைப் பள்­ளிகள் உள்­ளன. அதனால் ஒரு­மைப்­பா­டான சட்டம் தேவை. 
2. பெண்­களின் நிலையை அபி­வி­ருத்தி செய்­யும்­ப­டி­யான கோரிக்­கை­க­ளுக்கு இட­ம­ளிக்கக் கூடிய மாற்­றங்கள்.
3. உல­க­மய சமூ­கத்தின் முன்­னேற்­ற­மான நடை­மு­றைக்­கேற்­ற­தான கருத்­து­களை கவ­னத்திற் கொள்­ளுதல்.
குடும்பச் சட்­டங்­களில் நிகழ வேண்­டிய சீர்­தி­ருத்­தங்கள் எவை என்­பதை தாஹிர் முஹம்­மதின் ஆய்வுக் கட்­டு­ரையில் இருந்து சிந்தி முஷ்தா பின்­வரும் குறிப்பைத் தரு­கிறார்.

திரு­மணம் கோட்­பாட்டு ரீதி­யான விளக்கம், திரு­மணம் செய்­வ­தற்­கான வய­தெல்லை, தந்தை அல்­லது ஆண் உற­வி­னரின் மணப் பெண்­ணுக்­கான வலி அதி­கா­ரத்தின் வகி­பாகம், திரு­மணப் பதிவு திரு­ம­­ணத்­திற்­கான நிதித் தகைமை, பல­தார மணம், வீட்டு வரு­மானம் விவா­க­ரத்துத் தொடர்பில் ஆணின் உரிமை மீதான வரை­யறை, விவா­க­ரத்தின் பின்னர் கண­வ­னதும் மனை­வி­யி­னதும் கடப்­பா­டுகள், சமய நன்­கொடை தொடர்­பி­லான பிரச்­சி­னைகள் என்று தாஹிர் மஹ்மூத் 13 பிரச்­சி­னை­களை இனங்­கண்டு தனது ஆய்வில் கூறி­யுள்ளார்.

இப் பதின்­மூன்று அம்­சங்­களும் இலங்­கையின் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டப் பிரச்­சி­னையில் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டிய விட­யங்­க­ளா­கவே அமைந்­துள்­ளன. இக் கட்­டுரையில் இதனை ஒரு முன்­னோட்­ட­மாகக் கொண்­டுதான் இலங்கை முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்ட வர­லாற்­றையும் அங்கு எழும் கோரிக்­கை­க­ளையும் கவ­னத்தில் கொள்ளப் போகிறோம்.

1951 ஆம் ஆண்டுச் சட்டம் பல குறை­பா­டு­களைக் கொண்­ட­தென்றும் பல தவ­றான நடை­மு­றை­க­ளுக்கு இச்­சட்டம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தென்றும் புதிய  தேவை­களை கருத்­திற்­கொள்­ளாத சட்­ட­மென்றும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தோ­னே­சி­யாவில் எழுப்­பப்­படும் கோரிக்­கை­க­ளுக்கும் 1951 ஆம் ஆண்டு திரு­மண விவா­க­ரத்துச் சட்டப் பிரச்­சி­னை­க­ளுக்கும் இடையில் அதிக வேறு­பா­டுகள் இல்லை. ஷரீ­ஆவும் நவீன சீர்­தி­ருத்­தங்­களும் பற்­றிய கருத்து இஸ்­லா­மிய உலகம் முழுக்க இன்று பரவி வரு­கி­றது.

1951 இலங்கைச் சட்­டத்தில் திரு­மண வய­தெல்­லையில் தற்­போ­துள்ள சிறுவர் திரு­மணம் பாரிய சர்ச்­சையை கிளப்­பி­யுள்­ளது. இது தவிர நியா­ய­மற்ற விவா­க­ரத்து, திரு­மண பந்­தத்­திற்குள் நிகழும் வன்­பு­ணர்வு, பல­தார மணம்  எனப் பல பிரச்­சி­னைகள் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றன. பெண்­களின் பாது­காப்பு, உரி­மைகள் தொடர்பில் 1951 ஆம் ஆண்டுச் சட்டம் விமர்­ச­னத்­திற்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது.

இக் குற்­றச்­சாட்­டுகள் குறை­பா­டு­க­ளுக்குத் தீர்வு காணும் நோக்­கில்தான் 2009 இல் குறைகள் கண்­ட­றி­யப்­பட்டு தீர்­வு­க­ளையும் சீர்­தி­ருத்­தங்­க­ளையும் முன்­வைக்கும் வகையில் முன்னாள் உச்ச நீதி­மன்ற நீதி­பதி சலீம் மர்­சூஃபின் தலை­மையில் ஒரு குழுவை அர­சாங்கம் அமைத்து ஏழு வரு­டங்­க­ளா­கியும் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இது ஏன்?

சலீம் மர்சூஃப் இக் குழு­வுக்குத் தலைமை தாங்க எல்லாத் தகு­தி­களும் உள்­ளவர். முக்­கி­ய­மாக சீர்­தி­ருத்தம் தேவை என்­பதில் உறு­தி­யான கருத்­துள்­ளவர். அவ­ருடன் நேரில் பேசும்­போதும் அவ­ரது கட்­டு­ரைகள், நூல்கள் மூலமும் இவற்றை நாம் அறிந்து கொள்­கிறோம்.
ஷரீ­ஆ­வுக்கு ஏற்ற விதத்­திலும் இஜ்­திஹாத் மூலமும் முன்­னேற்­ற­மான கருத்­து­களை உல­மாக்­க­ளி­ட­மி­ருந்து அவரும் அவ­ரது குழுவும் எதிர்­பார்த்­தி­ருந்­த­தாக நான் அறிந்தேன். சீர்­தி­ருத்­தங்கள் நடை­பெற வேண்டும்.

சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் எல்லாத் தரப்­பி­ன­ரதும் அங்­கீ­கா­ரமும் இருப்­பது நல்­லது என்றும் அக்­குழு கரு­தி­யதா­கவும் தெரி­கி­றது. ஒரு வகை­யான அழுத்தம் குழு­விற்கு இருந்­த­தா­கவும் உணர முடி­கி­றது.

இந்தச் சிந்­த­னை­களில் இருக்­கும்­போது தான் அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் 2013 ஆம் ஆண்டு உரையை அண்­மையில் 'விடி­வெள்ளி' பத்­தி­ரி­கையில் படிக்கக் கிடைத்­தது. கடந்த ஆட்சிக் காலத்தில் நீதி அமைச்­ச­ராக இருக்­கும்­போது புத்­த­ளத்தில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட காதி நீதி­மன்ற கட்­டடக் கைய­ளிப்­பின்­போது முஸ்லிம் தனியார் சட்டப் பிரச்­சினை குறித்த உரை­யி­னையே ரவூப் ஹக்கீம் ஆற்­றி­யி­ருந்தார்.

அவர் ஆற்­றிய நல்ல உரை­களில் ஒன்று அது. பிரச்­சி­னையைத் தெளி­வா­கவும் சரி­யா­கவும் அவ்­வு­ரையில் அவர் குறிப்­பிட்­டுள்ளார். சீர்­தி­ருத்தக் குழுத் தலைவர் சலீம் மர்­சூப்ஃ­பிற்கு இருந்த சீர்­தி­ருத்தம் அவ­சியம் என்ற நோக்கும், பழைய சட்­டத்­தி­லி­ருந்த குறை­பா­டுகள் பற்­றிய சலீம் மர்­சூப்ஃபின் கவ­லையும் ஹக்­கீ­முக்கும் இருந்­தது. இரு­வரும் சட்டத் துறையைச் சேர்ந்­த­வர்கள். புதிய தலை­மு­றைக்­கு­ரிய சிந்­த­னை­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க விரும்­பு­ப­வர்கள் என்­பதும் இதில் வெளிப்­ப­டை­யாகத் தெரிந்­தது.

“இந்த நாட்டின் நீதி, நிர்­வாகம் குறித்த பிரச்­சி­னை­களில் முஸ்லிம் விவாகம், விவா­க­ரத்துச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வதில் பிரச்­சி­னைகள் உள்­ளன" என்று தான் ஹக்­கீமின் உரை ஆரம்­ப­மா­கி­றது. இது போது­மா­னது. ஏனெனில் இது தான் முக்­கி­ய­மா­னது. போதிய விளக்­கமும் பரந்த வாசிப்­ப­றிவும் இன்றி அவ­சர முடி­வு­க­ளுக்குச் சில பிரி­வினர் சென்­றி­ருப்­பது கவலை தரு­கி­றுது. “இதில் பிரச்­சி­னைகள் உள்­ளன” என்று கூறி­யது முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ரல்ல. இந்த நாட்டின் முன்னாள் நீதி­ய­மைச்சர்.

“முஸ்லிம் விவாக, விவா­க­ரத்­துச சட்­டத்தில் காணப்­படும் குறை­பா­டு­களை ஆராய்ந்து அச் சட்­டத்தில் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்­பது பல தரப்­பி­ன­ராலும் முன்­வைக்­கப்­பட்ட விட­ய­மாகும்” என்றும் ஹக்கீம் தனது உரையில் குறிப்­பிட்­டுள்ளார்.
ஹக்கீம் பின்­வ­ரு­ம் விட­யத்­தை சுருக்­க­மாகக் கூறி­யுள்ளார்.

(விவாக, விவா­க­ரத்து சட்­டங்­களில்) அவ்­வப்­போது சில மாற்­றங்கள் செய்­யப்­பட்­டாலும் இச்­சட்­டத்தில் முழு­மை­யான மாற்­றங்கள் (அழுத்தம் கட்­டு­ரை­யா­சி­ரி­யரால் இடப்­பட்­டது) செய்­யப்­பட வேண்­டி­யி­ருந்­தது.
நடை­மு­றையில் இருந்த 1951 ஆம் ஆண்டுச் சட்­டத்­தினால் அதிகம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் பெண்கள் தான் என்­பது பெண்கள் உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­க­ளாலும் பல அறி­ஞர்­க­ளாலும் அடிக்­கடி முன்­வைக்­கப்­பட்ட முக்­கி­ய­மான குற்­றச்­சாட்­டாகும்.

நீதி­ய­மைச்­ச­ராக இருந்­த­போது தனது அமைச்­சுக்கும் நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வுக்கும் வந்த முறைப்­பா­டு­களைப் பார்த்து தாம் கவ­லை­ய­டைந்­த­தா­கவும் ஹக்கீம் கூறு­கிறார். குறிப்­பாக காதி நீதி­மன்ற அலு­வல்கள் சம்­பந்­த­மான விட­யங்­களில் பெண்கள் எதிர்­நோக்­கு­கின்ற உள ரீதி­யான பாதிப்­புகள் பற்றி அவர் குறிப்­பி­டு­கிறார்.

ஷரீஆ தொடர்பில் விட்டுக் கொடுக்­கவே  முடி­யா­தென்று மர­பு­வா­திகள் வழக்­காடும் திரு­மண வய­தெல்லை பற்றி ஹக்கீம் பின்­வ­ரு­மாறு கூறி­யுள்ளார். திரு­மணம் புரிய வேண்­டிய வய­­தெல்லை சம்­பந்­த­மாக சாதா­ரண (பொது)  திரு­மண கட்­டளைச் சட்டம் மற்றும் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் என்­ப­வற்­றுக்கு இடையே முரண்­பா­டுகள் உள்­ளன. இதனை நாம் சரி­யான தீர்­வு­க­ளுக்­குட்­ப­டுத்­தா­விட்டால் இன்று தலை­தூக்­கி­யுள்ள (2013 இல்) தீவி­ர­வாத, இன­வாத சக்­திகள் தேவை­யற்ற சர்ச்­சை­க­ளுக்கு இதைப் பயன்­ப­டுத்­தக்­கூடும் என்று தான் அஞ்­சு­வ­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

பெண்கள் பூப்­பெய்­திய அதா­வது பருவ வய­தெய்­திய உட­னேயே மணம் செய்து கொள்­ளலாம். என்ற ஓர் அங்­கீ­காரம் இஸ்­லாத்தில் இருந்­தாலும் தீவி­ர­வா­தத்­திற்கும் இன­வா­தத்­திற்கும் பலி­யா­காது. சரி­யான வய­தெல்லை எது என்­பதை ஆராய்ந்து நாம் முடி­வெ­டுக்க வேண்டும். ஒரு­வேளை வய­தெல்லை 16 ஆக அமை­ய­லாமா என்று ஒரு தொகுதி முஸ்­லிம்கள் சிந்­திப்­பது பற்­றியும் அவர்  கருத்து வெளி­யிட்­டுள்ளார். 

பொதுச் சட்டம் 18 வயது என்று கூறு­கின்­றது. ஷரீஆ சட்­டங்கள் பற்­றிய விவா­தங்­களும் சர்ச்­சை­க­ளு­மின்றி இதனைச் செய்ய வேண்டும். இந்த அச்சம் இந்த ஆணைக்­குழு உறுப்­பினர் சில­ரிடம் இருப்­ப­தாகத் தான் உணர்­வ­தா­கவும் ஹக்கீம் தனது புத்­தளம் உரையில் குறிப்­பிட்­டுள்ளார்.

சற்று மறை­மு­க­மாக ஆனால் உண்­மை­யான நிலை­மை­களை ரவூப் ஹக்­கீமின் புத்­தளம் உரை சுட்­டிக்­காட்­டு­கின்­றது. 
சர்ச்­சை­க­ளையும் கருத்து முரண்­பா­டு­க­ளையும் எவ்­வாறு வெல்­வது? எவ்­வாறு அடுத்த தலை­மு­றை­க­ளுக்கு  முன்­மா­தி­ரி­யாக இருக்கக் கூடிய முடி­வு­களை இஸ்­லா­மிய வரம்­பு­க­ளுக்­குள்­ளி­ருந்து எடுப்­பது? உண்­மையில் ஒரு சவா­லான விட­ய­மாகும்.
“முஸ்­லிம்­களின் நிலையும் சீர்­தி­ருத்­தங்­களும்” என்ற கட்­டு­ரையில் 1990 ஆம் ஆண்டில் தற்­போ­தைய தனியார் சட்ட வழி­காட்­டு­தலால் முஸ்லிம் பெண்­களின் பிரச்­சி­னைகள் மேலும் சிக்­க­ல­டைந்­தி­ருப்­பதை சலீம் மர்சூஃப் எடுத்துக் காட்­டி­யி­ருந்தார்.

சில விட­யங்­களில் இலங்கை முஸ்லிம் பெண் அவ­ளுக்­கான உரி­மைகள், அதி­கா­ரங்­களைச் செய­லூக்கம் உள்ள வகையில் அனு­ப­விக்கும் வாய்ப்பு அவ­ளுக்கு இல்லை என்று அக்­கட்­டு­ரையில் கூறு­கிறார்.

1951 ஆம் ஆண்டு சட்­டத்தின் வழி எழுந்­துள்ள பெண்­களின் திரு­மண வய­தெல்லைப் பிரச்­சினை, தலாக்கின் பின்னர் மனை­விக்­கான பரா­ம­ரிப்புப் பணம் வழங்­கு­வதில் உள்ள பிரச்­சினை என்று பல பிரச்­சி­னை­களை ஆராய்ந்து ஷரீ­ஆ­வினால் பெண்கள் அடை­யக்­கூ­டிய பலன்கள் கூட தற்­போ­தைய நிலையில் தடைப்­பட்­டி­ருக்கும் விதத்தை உதா­ர­ணங்கள் மூலம் விளக்­கு­கிறார்.

சிறுவர் திரு­மணம் சரி­யா­னதா? அது ஏற்­ப­டுத்தும் பிரச்­சி­னைகள் என்ன என்­பது பற்­றியும் சலீம் மர்சூப் ஆராய்ந்­துள்ளார். முஹிய்­யத்தின் பாவா வழக்குத் தொடர்பில் ஆராய்ந்த காதிச் சபை கடு­மை­யான தொனியில் பின்­வரும் கருத்தை வெளி­யிட்­டுள்­ளது.

"இந்த வழக்கில் பதி­வா­கி­யுள்ள சாட்­சி­யங்கள் மூலம் இலங்­கையில் சில பாகங்­களில் குறிப்­பாகக் கிழக்கு மாகா­ணத்தில் சிறுவர் திரு­மணம் நிகழ்­வது தெரி­யந்­துள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தின் மீதுள்ள உயர்ந்த அக்­கறை கார­ண­மாக இந்தச் சமூ­கத்­தீமை இல்­லா­தொ­ழிக்­கப்­பட வேண்டும் என்று கூறக் கட­மைப்­பட்­டுள்ளோம்”

“சிறுவர் திரு­ம­ணமும் முஸ்லிம் தனியார் சட்­டமும்” என்ற தலைப்பும் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சிறுவர் திரு­ம­ணத்­திற்கு அங்­கீ­காரம் தரப்­பட்­டுள்­ளது என்ற கருத்தும் இன்று நான்கு சுவர்­க­ளுக்குள் பேசப்­படும் விட­யங்கள் அல்ல. ஐ.நா. ஐரோப்­பிய ஒன்­றியம் மட்­டு­மல்ல இலங்கைப் பாரா­ளு­மன்­றத்­திலும் பேசப்­படும் விட­ய­மா­கி­விட்­டது.

இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்குள் காணப்­படும் சிறுவர் திரு­ம­ணத்­திற்குத் தீர்­வுகள் வேண்டும் என்ற தொனியில் இன்று பிரச்­சி­னை­களை ஆராய்ந்து ஷரீ­ஆ­வினால் பெண்கள் அடை­யக்­கூ­டிய பலன்கள் கூட தற்­போ­தைய நிலையில் தடைப்பட்டிருக்கும் விதத்தை உதாரணங்கள் மூலம் விளக்குகிறார்.

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் காணப்படும் சிறுவர் திருமணத்திற்குத் தீர்வுகள் வேண்டும் என்ற தொனியில் இன்று பிரச்சினை பாராளுமன்ற உரையாடல்களிலும் ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன என்­பது சுட்­டிக்­காட்­டத்­தக்­க­தா­கும்.