Verified Web

மதவழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்

Ash Sheikh SHM Faleel

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகவும் விளங்குகிறார்.

2016-12-08 11:51:23 Ash Sheikh SHM Faleel

அண்­மைக்­கா­ல­மாக இனங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்­வின்­மையும், மோதல்­களும் ஏற்­பட்­டு­வ­ரு­வதன் விளை­வாக தெய்வ நிந்­தனை செய்­யப்­ப­டு­வதும், மத­வ­ழி­பாட்­டுத்­த­லங்கள் மீது அத்­து­மீ­றல்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதும், மத­சு­தந்­தி­ரத்­திற்கு தடைகள் விதிக்­கப்­ப­டு­வதும் சர்­வ­சா­தா­ரண நிகழ்­வு­க­ளா­கி­விட்­டன.இது மிகுந்த கவ­லையைத் தரு­கி­றது. பல்­லின சமு­தா­யத்தில் மிகவும் உயர்ந்த பட்­ச­மாகப் பாது­காக்­கப்­பட வேண்­டிய மத மற்றும் வழி­பாட்டு சுதந்­தி­ரங்­க­ளுக்கு வேட்­டு­வைக்­கப்­பட்டு வரு­கி­றது. இது மனித மனங்­களில் நிலவும் வன்­மைக்கும் ஆவே­சத்­துக்­கு­மான தெளி­வான வெளிப்­பா­டுகள் என்­பதில் எவ்­வித ஐய­மு­மில்லை.

இஸ்­லா­மிய நோக்கு
(1)உயிர், (2)உடமை, (3)மானம், (4)உடல், (5)மதம், (6)ஞானம் என்ற மனி­த­னுக்­கான அடிப்­படை ஆறு உரி­மை­க­ளையும் வழங்கி அவற்றை பாது­காத்துக் கொடுக்க உத்­த­ர­வாதம் வழங்­கப்­பட வேண்டும் என்று இஸ்­லா­மிய ஷரீ­ஆவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவற்­றுக்கு “மஸாலிஹ்” என்று கூறப்­படும். அந்த வகையில், நாக­ரீ­க­ம­டைந்த - மனித விழு­மி­யங்­க­ளுக்கு மதிப்பு வழங்கும் எந்­த­வொரு சமூ­கமும் இவற்றை பாது­காக்­க­வன்றி அழிப்­ப­தற்கு முயற்­சிக்­க­மாட்­டாது.


இஸ்­லா­மிய நோக்கில் எந்த வொரு மதத்தை சார்ந்­த­வர்­க­ளது மத நம்­பிக்­கை­க­ளுக்கும் அவர்­க­ளது வழி­பாட்டுத் தலங்­க­ளுக்கும், வழி­பா­டு­க­ளுக்கும், கலா­சார தனித்­து­வங்­க­ளுக்கும் ஊறு விழை­விக்­கப்­படக் கூடாது. இஸ்லாம் தவி­ர­வுள்ள அனைத்து மத­நம்­பிக்­கை­களும் வழி­பா­டு­களும் பிழை­யா­னவை என்று ஒரு முஸ்லிம் நம்­பி­னாலும் தனது மதத்தை பிறரில் திணிப்­ப­தற்கோ அதற்­காக எவ­ரையும் நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ பலாத்­கா­ரப்­ப­டுத்­து­வ­தற்கோ அவ­னுக்கு உரிமை வழங்­கப்­ப­ட­வில்லை. “மார்க்­கத்தில் பலாத்­கா­ர­மில்லை’’, “அவர்கள் அழைத்துப் பிரார்த்­திக்­கின்ற அல்லாஹ் அல்­லா­த­வர்­களை(தெய்­வங்­களை) நீங்கள் ஏச வேண்டாம்.

அவ்­வாறு நீங்கள் ஏசும்­பட்­சத்தில் அதன் விளை­வாக எவ்­வித அறி­வு­மின்றி அத்­து­மீறி அவர்கள் அல்­லாஹ்வை ஏசு­வார்கள்”(6:108) என அல்லாஹ் குர்­ஆனில் கூறு­கின்றான்.

அந்­த­வ­கையில், மார்க்கப் பிர­சாரம் பலாத்­கா­ர­மாக மாறு­வதை இஸ்லாம் அங்­கீ­க­ரிப்­ப­தில்லை. “அவர்­க­ளுடன் நீங்கள் மிகவும் அழ­கிய முறையில் கருத்துப் பரி­மா­றுங்கள்”.(16:125) என்று கூறி­யதன் மூலம் பிர­சா­ரத்­துக்­கான வழி­மு­றை­யா­னது ‘அழ­கி­ய­து’­என்ற நிலை­யி­லி­ருந்து “மிக­வுமே அழ­கி­யது” என்ற பண்பைப் பெற்­றி­ருக்க வேண்டும் என்று அல்லாஹ் வலி­யு­றுத்­து­கிறான். ‘மிகவும் அழ­கிய வழி­முறை’ எனும் போது ஆதா­ரங்­க­ளோடு பேசு­வது, அறிவு பூர்­வ­மா­கவும் இங்­கி­த­மா­கவும் இனி­மை­யா­கவும் உரை­யா­டு­வது, பிற­ருக்­கான மதிப்­பையும் மரி­யா­தை­யையும் கொடுத்து கருத்துப் பரி­மா­று­வது போன்ற பண்­பு­களை அது பெற்­றி­ருக்க வேண்டும் என்­ப­தனைப் புரிய முடி­கி­றது.

மிக­வுமே அழ­கிய வழி­மு­றை­களில் ஒரு முஸ்லிம் தனது பிர­சா­ரத்தை மேற்­கொண்ட பின்­னரும் பிற சம­யத்­தவர் ஏற்றுக் கொள்­ளா­விட்டால் அவர்­களைப் பலாத்­காரப் படுத்­தாமல் அவர்­களை முழு­மை­யாக சகித்துக் கொள்­வ­துடன் அவர்­க­ளுடன் சக­வாழ்வை மேற்­கொள்­வது கடமை என்று இஸ்லாம் வலி­யு­றுத்­து­கி­றது. இதற்கு குர்­ஆனின் பல வச­னங்கள் உதா­ர­ண­மாக அமை­கின்­றன.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த பின்னர் யூதர்கள், கிறிஸ்­த­வர்கள், சிலை வணங்­கிகள் அனை­வ­ரையும் ‘தீம்மீ’ க்கள் (பாது­காக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள்) எனப் பெய­ரிட்டு மதீனா சாச­னத்தின் கீழ் அவர்­க­ளுக்­கான சகல உரி­மை­க­ளையும் வழங்­கி­னார்கள். அவ­ரவர் தத்­த­மது மத நம்­பிக்கைக் கோட்­பா­டு­க­ளி­லேயே தொடர்ந்தும் இருப்­ப­தற்கும் வழி­பா­டு­களை மேற்­கொள்­ளவும் உரிமை வழங்­கப்­பட்­டது.

குர் ஆனின் (22:40) இல் இடம் பெற்­றுள்ள வச­னத்தில் இஸ்­லா­மிய ஆயுதப் போராட்­டத்தின் நோக்­கங்­களில் ஒன்று பிற மத ஆல­யங்­களைப் பாது­காப்­ப­தாகும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வா­ல­யங்கள் மீது எவரும் அத்து மீறல் செய்யும் போது அவற்றை தடுத்து நிறுத்த முஸ்­லிம்கள் முன் வரு­வார்கள் என்­பது அந்த வசனம் உணர்த்­த­வரும் கருத்­தாகும்.

“மனி­தர்­களிற் சிலரைக் கொண்டு சிலரை அல்லாஹ் தடுக்­கா­தி­ருந்தால் கிறிஸ்­தவ பாதி­ரிகள் தங்கும் மடங்­களும் கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களும் யூதர்­க­ளது வழி­பாட்டுத் தலங்­களும் அல்­லாஹ்வின் நாமம் அதி­க­மாக ஞாப­கப்­ப­டுத்­தப்­படும் பள்­ளி­வா­சல்­களும் இடித்து நொறுக்­கப்­பட்­டி­ருக்கும். அல்லாஹ் தனக்கு உதவி செய்­ப­வர்­க­ளுக்கு கட்­டா­ய­மாக உதவி செய்வான், நிச்­ச­ய­மாக அல்லாஹ் வலிமை மிக்­கவன், யாவ­ரையும் மிகைத்­தவன்”(22:40) என அல்லாஹ் கூறு­கிறான்.

இந்த வசனம் அற்­பு­த­மான கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றது. இதற்கு விளக்கம் கூறும் கலா­நிதி முஸ்­தபா சிபாஈ அவர்கள், 'ஜிஹாதின் நோக்கம் தேவா­ல­யத்தின் இடி­பா­டுகள் மீது பள்­ளி­வா­சல்­களை அமைப்­ப­தல்ல. மாறாக தேவா­ல­யத்­துக்குப் பக்­கத்தில் பள்­ளி­வா­சலை அமைப்­ப­தாகும்.” என்­கிறார்.

ஸையித் குதுப் இவ்­வ­ச­னத்தை விளக்­கு­கையில், “மேற்­படி குர்ஆன் வச­னத்தில் அல்­லாஹ்வின் நாமம் அதிகம் உச்­ச­ரிக்­கப்­படும் பள்ளி வாசல்­களைப் போல வேறு ஏனைய சம­யத்­த­வ­ரது வழி­பாட்டுத் தலங்­களும் பாது­காக்­கப்­பட வேண்டும் என்று கூறப்­ப­டு­கி­றது. பள்ளி வாசல்­களைப் பற்றி குறிப்­பி­டு­வ­தற்கு முன்­னரே பிற வழி­பாட்­டுத்­த­லங்கள் பற்றிக் குறிப்­பிட்­டி­ருப்­பது அவற்றின் மீது அத்து மீறு­வதை தடுப்­பதை வலி­யு­றுத்­து­வ­தாகும். அப்­ப­டி­யாயின், இது வழி­பாட்டு உரி­மையை அனை­வ­ருக்கும் நிச்­ச­யப்­ப­டுத்த விடுக்­கப்­படும் அழைப்­பாகும். இஸ்லாம் தன்னைப் பின்­பற்­று­வோ­ருக்கு மட்டும் வழி­பாட்டு உரி­மையை விரும்­பாமல் தன்­னுடன் முரண்­பட்­டுள்ள மதங்­களைச் சார்ந்­தோ­ருக்கும் அதனை நிச்­ச­யப்­ப­டுத்­து­கி­றது. மேலும், இந்த உரி­மையை சக­ல­ருக்கும் பெற்றுக் கொடுக்க அதற்­காகப் போராடும் படியும் முஸ்­லிம்­களைக் கட்­டா­யப்­ப­டுத்­து­கி­றது. இந்தக் கொடியின் கீழ் போராட அவர்­க­ளுக்கு அனு­ம­திக்­கி­றது. இதன் மூலம் அது ஒரு சுதந்­தி­ர­மான சர்­வ­தேச உலக ஒழுங்கு என்­பதை வலி­யு­றுத்­து­கி­றது' என்­கிறார்.

முஸ்­லிம்கள் பிற நாடு­களை வெற்றி கொண்ட சந்­தர்ப்­பங்­களி லெல்லாம் அவ்வப் பிர­தே­சங்­களில் வாழ்ந்­த­வர்­க­ளது மத உரி­மை­க­ளுக்கு பூரண உத்­த­ர­வா­தங்­களை வழங்­கி­யுள்­ளார்கள். அதற்­கான பல சான்­றுகள் இருப்­பினும் அவற்றில் ஒன்றை இங்கு குறிப்­பி­டலாம்:-
உமர் (ரலி) அவர்­க­ளது கிலா­பத்தின் போது ஜெரூ­ஸலம் கைப்­பற்­றப்­பட்ட போது அங்கு வாழ்ந்த கிறிஸ்­த­வர்­க­ளுக்கு அவர்கள் வழங்­கிய உத்­த­ர­வாதம் வரு­மாறு :
-
“இது விசு­வா­சி­களின் தலைவர் உமர், ‘ஈலியா’ மக்­க­ளுக்கு வழங்கும் பாது­காப்­பாகும். அவர்­க­ளுக்கும் அவர்­க­ளது சொத்­துக்­க­ளுக்கும் தேவா­ல­யங்­க­ளுக்கும் சிலு­வை­க­ளுக்கும் அவர்­க­ளது மார்க்­கத்தின் ஏனை­ய­வற்­றுக்கும் அவர் பாது­காப்பு வழங்­கி­யுள்ளார். அவர்­க­ளது தேவா­ல­யங்­களில் எவரும் குடி­யி­ருக்­க­லா­காது. அவை இடிக்கப் பட­லா­காது. கட்­டங்­களின் பகு­திகள் குறைக்­கப்­ப­ட­லா­காது. அவற்­றிற்­கு­ரிய காணி­களோ சிலு­வை­களோ அவர்­க­ளது செல்­வங்­களோ குறைக்­கப்­ப­ட­லா­காது. அவர்­க­ளது மார்க்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறும் படி அவர்கள் பலாத்­கா­ரப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டார்கள்.'(இப்னு ஹிஷாம்-­சீ­ரத்­துன்­நபி - 4/181)

முஸ்­லிம்கள் புதி­தாக வெற்றி கொண்டு ஆட்சி நடாத்­திய எகிப்து, லிபியா உள்­ளிட்ட ஆபி­ரிக்க நாடு­க­ளாக இருக்­கட்டும், ஸ்பெய்ன், இந்­தியா, ஆப்­கா­னிஸ்தான், இந்­தோ­னே­சியா ஆகிய நாடு­க­ளாக இருக்­கட்டும் அவற்றில் அன்று முதல் இன்று வரை முஸ்லிம் அல்­லா­த­வர்கள் வாழ்ந்து வரு­வ­தாயின் அவர்­க­ளது வழி­பாட்டுத் தலங்கள் இன்றும் பாது­காப்­பாக இருப்­ப­துடன் அவற்றில் வழி­பா­டு­களும் நடந்து வரு­வ­தாயின் அது இஸ்­லாத்தின் மத சகிப்புத் தன்மை (RELIGIOUS TOLERANCE) க்கான ஆதா­ரங்­க­ளாகும்.

ஆனால், வர­லாற்றில் ஒரு சில முஸ்லிம் ஆட்­சி­யா­ளர்கள் அல்­லது தள­ப­திகள், தனி மனி­தர்கள் பிற மத­ஆ­ல­யங்­க­ளுக்கு ஊறு விளை­வித்­தி­ருந்தால் அதனை வைத்து இஸ்­லாத்தை எவரும் மதிப்­பீடு செய்­வது முறை­யல்ல. பாமியான் புத்தர் சிலை விவ­கா­ரமும் அப்­ப­டித்தான் நோக்­கப்­பட வேண்டும். அது அவ­ர­வ­ரது தனிப்­பட்­ட­மு­டி­வு­க­ளா­கவே பார்க்­கப்­பட வேண்டும். தலதா மாளி­கையை சிலர் தாக்­கி­னார்கள் என்றால் அவ்­வாறு தாக்­கி­ய­வர்கள் சார்ந்­தி­ருக்கும் அவர்­க­ளது மதம் தான் அவர்­களை அதற்­காகத் தூண்­டி­யது என எவரும் பார்க்­க­லா­காது. அந்த மதங்­க­ளது வேதங்கள் அப்­படிச் செய்யும் படி கூறி­யுள்­ள­னவா என்­ப­தையே பார்க்க வேண்டும்.

அந்த வகையில், இஸ்லாம் பிற­ருக்­கான மத சுதந்­தி­ரத்­திற்கு உத்­த­ர­வா­த­ம­ளிப்­ப­துடன் நிறுத்­திக்­கொள்­ளாமல் மதக்­கி­ரி­யைகள் கூட அச்­ச­மற்ற, சுதந்­தி­ர­மான சூழலில் மேற்­கொள்­ளப்­பட இட­ம­ளிக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டைக் கொண்­டுள்­ளது. இதற்­காக ஏகப்­பட்ட சான்­றுகள் உள்­ளன.

வர­லாற்றுத் தவ­றுகள்
எனவே, ஒரு காலத்தில் தலதா மாளி­கையின் மீதும் ஸ்ரீமகா போதியின் மீதும் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் முதல் புத்­த­க­யா­வி­லுள்ள பௌத்­தர்­க­ளது புனிதத் தலத்தின் மீதான தாக்­கு­தல்கள், கிறிஸ்­தவ தேவா­வ­ல­யங்கள் மீதான தாக்­கு­தல்கள் வரை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்கிறோம். இவற்றை யார் எந்த நோக்­கங்­க­ளோடு செய்­தி­ருந்­தாலும் அவை மாபெரும் தவ­று­க­ளாகும். அதே­வேளை, வடக்கு கிழக்கில் நடந்த யுத்­தத்தின் போது பல பள்­ளி­வா­யல்­களும் விகா­ரை­களும் கோயில்­களும் தேவா­ல­யங்­களும் சேதப்­ப­டுத்­தப்­பட பலர் கார­ண­மாக அமைந்­தனர். இது இஸ்லாம் கூறும் யுத்த தர்­மத்­துக்கு முர­ணான செய­லாகும்.

பள்­ளி­வா­யல்கள் பற்றிப் பேசும் போது புலிகள் பள்­ளி­வா­யல்­களை சேதப்­ப­டுத்­தி­ய­துடன் நிறுத்திக் கொள்­ள­வில்லை. பள்­ளி­வா­யல்­க­ளுக்குள் தொழு­து­கொண்­டி­ருந்த நிரா­யுத பாணி­களைக் கூட கொன்­றார்கள்.

இது புலிகள் தரப்­பினர் செய்த கண்­டிக்­கத்­தக்க செய­லாகும்.

அதே­வேளை, அனு­ரா­த­பு­ர­த்தி­லி­ருந்த ஸியாரம் தாக்­கப்­பட்­ட­மை­யி­லி­ருந்து அண்மைக் கால சம்­ப­வங்கள் ஆரம்­பித்­தன. முஸ்­லிம்­க­ளது பள்­ளி­வா­யல்­களும் தாக்­கப்­பட்டு வரு­கின்­றன. தம்­புள்ளை, கேகாலை, மஹி­யங்­கனை, தர்கா நகர் ,தெல்­லி­யா­கொன்ன, நிக­வெ­ர­டிய போன்ற பல இடங்­க­ளி­லுள்ள பள்­ளி­வா­யல்­களும் திட்­ட­மி­டப்­பட்ட குழுக்­களால் தாக்­கப்­பட்­டன.

முஸ்­லிம்கள் உண்­ப­தற்கு தடுக்­கப்­பட்ட பன்­றியின் உடற்­பா­கங்கள் மஹி­யங்­கனைப் பள்­ளி­வா­ச­லுக்குள் போடப்­பட்­டமை மத வைராக்­கி­யத்தின் உச்­ச­நி­லைக்கு ஆதா­ர­மாகும்.

முஸ்­லிம்­க­ளது தனித்­து­வங்­க­ளா­கவும் வர­லாற்றுத் தொன்­மைக்கு சான்­றாக உள்ள அடை­யாளச் சின்­னங்­க­ளா­கவும் இருக்கும் பள்­ளி­வா­யல்கள் மீதான இந்த அத்­து­மீ­றல்­களை அவர்கள் தமது உயிர்கள், உடை­மைகள் மீதான தாக்­கு­தலை விட கொடூ­ர­மா­ன­வை­யா­கவே கணிக்­கி­றார்கள். மியன்­மா­ரிலும் பிரித்­தா­னி­யா­விலும் உள்ள பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­படும் அல்­லது தீக்­கி­ரை­யாக்­கப்­படும் காட்­சி­களை முஸ்­லிம்கள் பார்க்கும் போது அது அவர்­க­ளது உள்­ளங்­க­ளுக்கு தீ மூட்­டப்­ப­டு­வ­தாக உண­ரு­கி­றார்கள்.

மனித விழு­மி­யங்­களும் பள்ளிவாசல்­களும்
முஸ்­லிமின் வாழ்­வோடு பள்­ளி­வா­யல்கள் பின்னிப் பிணைந்­தவை. ஐவேளை தொழு­கையை ஒரு முஸ்லிம் பள்­ளி­வா­யலில் நிறை­வேற்ற வேண்டும் என்­பது வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. வீட்டில் தொழு­வதை விட பள்­ளியில் தொழு­வதால் 27 மடங்கு நன்மை கிடைக்கும் என முஹம்மத்(ஸல்) கூறி­யி­ருக்­கி­றார்கள்.

பள்ளி என்­பது முஸ்லிம் சமூ­கத்தின் இத­ய­மா­கவும் பல்­துறை சார்ந்த நட­வ­டிக்­கை­களின் மத்­திய தல­மா­கவும் கணிக்­கப்­ப­டு­கின்­றது. அங்கு முழுக்க முழுக்க மனி­தனின் ஆன்­மீக, ஒழுக்க மேம்­பாட்­டுக்­கான போத­னை­களும் கிரி­யை­களும் மாத்­தி­ரமே நடை பெறு­கின்­றன. கடும் போக்குக் கொண்­ட­வர்­களைக் கூட நிதா­னப்­ப­டுத்தும் இடங்­க­ளாக பள்­ளிகள் திகழ்­கின்­றன.

பள்­ளிகள் என்­பவை இழி­கு­ணங்கள் கொண்­ட­வர்­களை மகத்­தான குண நலன்கள் கொண்­ட­வர்­க­ளாக மாற்­று­வ­தற்­கா­கவே உரு­வாக்­கப்­பட்­டன. “நிச்­ச­ய­மாக தொழுகை மானக் கேடா­ன­வற்­றி­லி­ருந்தும் பாவங்­க­ளி­லி­ருந்தும் தடுக்கும்” (29;:45) என பள்­ளிக்குள் இடம்­பெறும் பிர­தா­ன­மான கிரி­யை­யான தொழு­கையைப் பற்றி அல்லாஹ் கூறு­கிறான். அங்கு இடம் பெறும் மற்­று­மொரு கிரி­யை­யான ‘திக்ர்’ எனப்­படும் இறை தியானம் பற்றிக் கூறும் போது “அறிந்து கொள்­ளுங்கள் இறை­தி­யானம் (ஞாபக மூட்­டலின்) மூலம் உள்­ளங்கள் அமை­தி­ய­டை­கின்­றன' .(13:28) எனக் கூறு­கிறான்.

அந்தப் பள்­ளி­வா­யில்­க­ளுக்குள் இடம்­பெ­ற­வேண்­டிய பேச்­சுக்கள் எப்­ப­டி­யாக அமை­ய­வேண்டும் என்று கூறும் போது அல்லாஹ்: “(பள்­ளி­வா­யில்­க­ளா­கிய) இறை இல்­லங்­களில் அவ­னது பெயர் கூறப்­ப­ட­வேண்­டு­மென்றும் (அவற்றின் கண்­ணியம்) உயர்த்­தப்­ப­ட­வேண்­டு­மென்றும் அல்லாஹ் கட்­ட­ளை­யி­டு­கிறான். அவற்றில் காலை­யிலும் மாலை­யிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்­டி­ருப்­பார்கள்.

(அவ்­வாறு துதி செய்யும்) மனி­தர்­களை அல்­லாஹ்வை தியா­னிப்­பதை விட்டும், தொழு­கையை முறை­யாக நிறை­வேற்­று­வதை விட்டும் ஜகாத் கொடுப்­பதை விட்டும் அவர்­க­ளு­டைய வாணி­பமோ கொடுக்கல் வாங்­கல்­களோ பரா­மு­க­மாக்­க­மாட்டா; இத­யங்­களும், பார்­வை­களும் கலங்கித் தடு­மாற்­ற­ம­டை­யுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்­சு­வார்கள். அவர்கள் செய்த (நற்­செ­யல்­க­ளுக்கு) மிக அழ­கா­னதை அவர்­க­ளுக்கு அல்லாஹ் கூலி­யாகக் கொடுப்­ப­தற்­கா­கவும், அவ­னு­டைய நல்­ல­ருளைக் கொண்டு (அவன் கொடுப்­பதை) மேலும் அவன் அதி­கப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் (பய­பக்­தி­யுடன் இருப்­பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடி­ய­வர்­க­ளுக்குக் கணக்­கின்றிக் கொடுக்­கிறான். (24:36,37,38)

எனவே, மேலுள்ள வச­னங்­களைப் பார்க்­கின்ற போது வணக்­கங்­களும் இறை ஞாப­க­மூட்­டல்­க­ளுமே பள்­ளி­களில் இடம்­பெறும். அங்கு இருப்­ப­வர்­க­ளது உள்­ளங்­களில் உலக மோகம் இருக்­கவே இருக்­காது. அவர்கள் மறுமை நாளில் விமோ­சனம் கிட்­டுமா என்று தான் சதாவும் சிந்­தித்துக் கொண்­டி­ருப்­பார்­களே தவிர, சிலர் கூறுவது போன்று பயங்­க­ர­வாத செயல்­பா­டு­களில் ஈடு­பட வேண்டும் என சிந்­திக்க மாட்­டார்கள்.அப்­படி அவர்கள் சிந்­தித்தால் அவர்­க­ளுக்கு அவர்­க­ளது இறைவன் தரு­வ­தாக 38 ஆம் வச­னத்தில் வாக்­க­ளிக்கும் மிக அழ­கான கூலியை அவர்கள் எப்­படிப் பெற முடியும்?

ஏழை எளி­ய­வர்­க­ளது துயர் துடைக்க உதவும் ‘ஸகாத்’ எனப்­படும் பணத்தின் மீதான கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் பள்­ளி­வா­யல்­களில் நடை பெறும். அதன் பலா­பலன் பற்றி அல்லாஹ் குர்­ஆனில்: “நீங்கள் அவர்­க­ளது செல்­வத்­தி­லி­ருந்து அவர்­க­ளது தர்மப் பணத்தை பிரித்து எடுங்கள். அதன் மூலம் நீங்கள் அவர்­களை தூய்­மைப்­ப­டுத்தி பரி­சுத்­தப்­ப­டுத்­து­கி­றீர்கள். அதன் மூலம் நீங்கள் அவர்­களை தூய்மைப் படுத்­து­கி­றீர்கள்” (9: 103) எனக் குறிப்­பி­டு­கிறான்.

எனவே, பள்ளி வாயல்­க­ளுக்குள் இடம் பெறும் வழி­பா­டு­களும் கிரி­யை­களும் மனி­தர்­களைப் பாவங்கள், மனித விரோதச் செயல்­களில் இருந்து தூர­மாக்­கு­கின்­றன. உள்­ளத்தில் நிம்­ம­தியைத் தோற்­று­விக்­கின்­றன. உள நோய்­க­ளான அகம்­பாவம், கஞ்­சத்­தனம் போன்­ற­வற்­றி­லி­ருந்து ஆத்­மாவைப் பாது­காக்­கின்­றன. எனவே தான் முஸ்­லிம்கள் தாம் போய் குடி­ய­மரும் இடங்­க­ளி­லெல்லாம் பள்­ளி­களை அமைத்துக் கொள்­கி­றார்கள். அந்­த­வ­கையில் பார்த்தால், பள்­ளி­வா­யில்கள் என்­பவை பயங்­க­ர­வா­தத்­துக்­கான ’பங்கர்’ களாக இருக்­கின்­றன என்று ஒரு தடவை ஒரு மத குரு கூறி­யி­ருப்­பது அவர் இஸ்லாம் பற்றிக் கொண்­டுள்ள தப்­ப­பிப்­பி­ரா­யத்தின் வெளிப்­பா­டாகும்.

அகற்­றப்­ப­ட­வேண்­டி­யவை மதஸ்தலங்களா?
எனவே, இப்­ப­டி­யாக போற்­றத்­தக்க - வேண்­டத்­தக்க கைங்­க­ரி­யங்­க­ளுக்குக் கார­ண­மாக அமையும் புனித ஸ்தலங்­க­ளான பள்­ளி­வா­யல்கள் நிர்­மா­ணிக்­கப்­பட ஊக்­கு­விப்பு வழங்­கப்­பட வேண்­டுமே தவிர அவை அகற்­றப்­ப­டக்­கூ­டாது.

அகற்­றப்­பட வேண்­டி­யவை பள்­ளி­வா­யல்­களோ ஆல­யங்­களோ அன்றி மனி­தர்கள் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டு­வ­தற்கு தூண்­டு­த­லாக அமையும் இடங்­க­ளான மது பான­சா­லை­களும், சூதாட்ட விடு­தி­களும், ஆபாச சினிமாக் கொட்­ட­கை­க­ளு­மாகும். அவற்றால் கொலைகள் இடம் பெறு­கின்­றன. உடல் நலத்­துக்கு கேடு விளை­கி­றது, குடும்­பங்கள் சிதை­வ­டை­கின்­றன.

பாலியல் வக்­கி­ரங்கள் நடக்கின்றன. பொருளாதாரம் குட்டிச் சுவராகின்றது.

எனவே, மனிதர்களின் ஆன்மீக விமோசனத்துக்கும் விழுமியங்களது வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கன. அவற்றைச் செய்பவர்கள் நிச்சயமாக எந்தவொரு மதத்தையும் மிகச் சரியாக விசுவாசித்தவர்களாக இருக்கமுடியாது.

அவர்களது உள்நோக்கங்கள் நல்லவையாக இருக்க நியாயமில்லை. சுய நலன்களுக்காக மதக் குழுக்களை மோத விட்டு தத்தமது இழிவான இலக்குகளை அடைந்து கொள்ள முயற்சிப்பவர்கள், தாம் மகா பெரிய தவறுகளை செய்து கொண்டிருப்பதை உணர வேண்டும். ஆகவே, நாட்டில் சௌஜன்யமும் சமாதானமும் நிலவ வேண்டுமாயின் சகல மதத்தவரதும் மத உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதேவேளை, ஒவ்வொரு மதத்தையும் அனுஷ்டிப்பவர்கள் தத்தமது மதக்கிரியைகளை பிறருக்குத் தொந்தரவாகும் வகையில் அமைத்துக் கொள்ளலாகாது. குறிப்பிட்ட ஓர் இடத்தில் பள்ளிவாயலொன்றையோ அல்லது வேறொரு மத வழிபாட்டுத் தலமொன்றையோ அமைப்பதற்கு முன்னர் அந்த இடத்திற்கு அது தேவை தானா என்பதை நன்கு சிந்தித்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் பாங்குக்காகவும் உபந்நியாசங்களுக்காகவும் ‘பிரித்’ ஓதுவதற்காகவும் ஓலி பெருக்கிகளை பாவிப்பதில் ஏற்பட்டுள்ள ஒழுங்கீனங்களும் கூட இவ்வகையில் கண்டிக்கத் தக்கவையாகும்.

இந்த இழுபறிகளையும் பதட்டநிலைகளையும் களைந்து சுமுகமான ஒரு சூழலை உருவாக்குவது காலத்தின் அவசியத் தேவையாகும். இதற்காக மதத்தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் ஏற்பாடுசெய்யப்படவேண்டும்.

அதிகாரங்களில் இருப்பவர்கள் தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்ற வேண்டும். காலம்கடந்த ஞானமோ அசமந்தப்போக்கோ பாரிய விளைவுகளையே தோற்றுவிக்கும்.

பல நிறங்களைக் கொண்ட மலர்களால் ஜொலித்துக் கொண்டிருக்கும் பூந்தோட்டம் போல் பல்லினங்களைக் கொண்ட நாடு அபிவிருத்தியை நோக்கி நகர நாம் ஒவ்வொருவரும் எம்மால் முடியுமான பங்களிப்பை நல்குவோமாக! அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!