Verified Web

முஸ்லிம் தனியார் சட்டம் : திருமண வயதெல்லையும் சில தெளிவுகளும்

A.R.A Fareel

சிரஷே்ட ஊடகவியலாளரான .ஆர்..பரீல் உடத்தலவின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவி வகிக்கிறார்.

 

2016-11-20 10:40:09 A.R.A Fareel

இன்று நாடெங்கும் முஸ்லிம் தனியார் சட்டம் பற்­றியே பேசப்­ப­டு­கி­றது. சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­னா­யக்க அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில்  ஜி.எஸ்.பி. வரிச்­ச­லு­கைக்­காக முஸ்லிம் தனியார் சட்டம் திருத்­தி­ய­மைக்க வேண்­டி­யுள்­ளது ஐரோப்­பிய ஒன்­றியம் இதற்­கான அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­துள்­ளது என்று  தெரி­வித்து அதற்­கென அமைச்­ச­ரவை உப குழு­வொன்­றையும்  நிய­மித்­த­மையே இத்­த­னைக்கும் காரணம்.அவர் அன்று அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி  வாய் திறக்­கா­தி­ருந்தால் முஸ்லிம்  சமூகம் கிளர்ந்­தெ­ழுந்­தி­ருக்­காது. 

இதே­வேளை ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தூதுவர் டங்மார்க் மாறு­பட்ட கருத்தை தெரி­வித்­தி­ருக்­கிறார். முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­யு­மாறு நாம் கோர­வில்லை.

அவ்­வாறு எம்மால்  கோரவும் முடி­யாது. சட்­டத்தை திருத்­து­வதும் திருத்­தா­ம­லி­ருப்­பதும் நாட்டின்  அர­சாங்­கத்தைச் சார்ந்­த­தாகும். சர்­வ­தேச சம­வா­யங்­க­ளுக்கு அமை­வாக முஸ்லிம் பெண்­களின்  திரு­மண வய­தெல்­லையை 16 வரை நீடிக்­கு­மாறே  கோரினோம் என்று  தெரி­வித்­துள்ளார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின்  தூதுவர் டங்மார்க் எந்த விளக்­கத்தை வழங்­கி­னாலும் இலங்­கையின் முஸ்­லிம்­களும் சிவில் அமைப்­பு­களும் மார்க்க இயக்­கங்­களும் அமைதி காப்­ப­தாக இல்லை. முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தங்­களைப் பற்­றியே பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். விமர்­சித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். 

இலங்கை முஸ்லிம்  பெண்­களின் திரு­மண வய­தெல்லை
இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு திரு­ம­ணத்­திற்­கான வய­தெல்லை இல்லை. இலங்­கையில் ஆரம்ப காலத்தில் அதா­வது 1877 இல் இடம்­பெற்ற வழக்­கொன்றில்  ஒரு நான்கு வயதுக் குழந்­தையின் திரு­மணம் சட்ட ரீதி­யற்­ற­தாகக் கொள்­ளப்­பட்­ட­போதும் (Dc Batt.icaloa 18614,1877 1 MMDR 20) சிறு பிள்ளைத் திரு­மணம் அதன் பின்பு அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. 

(S.LEBBE  V  MOHAMADO THAMBI 1901 1 MMDR 40, NABISA UMMAH V  SALIH 1940 2 MMDR 118)  இந்தக் குழப்­ப­மான நிலை­மையைச் சீராக்­கு­மு­க­மாக 1937இல் காதி­சபை பின்­வ­ரு­மாறு பிர­க­டனம்  செய்­தது. 

'முஸ்லிம் சமு­தா­யத்தின் நன்மை கருதி இத்­த­கைய சமூக நோய்­களை அகற்­று­வ­தற்கு பொது­மக்­களின் கருத்­துக்கள் உரு­வாக்­கப்­படல் வேண்டும் என்பதாகும். பால்ய திரு­ம­ணத்தை ஊக்­கப்­ப­டுத்­தா­மைக்­கான முயற்சி 1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தின் பிரிவு 23 இல் இணைத்துக் கொள்­ளப்­பட்­டது.

இதன்­படி 12 வய­துக்­குட்­பட்ட பெண்ணின்  திரு­ம­ண­மா­னது காதி நீதிவான் பூர­ண­மான விசா­ரணை செய்து அதி­கா­ர­ம­ளித்த பின்­னரே பதிவு செய்­யப்­ப­டலாம். இதனை  மீறு­கின்ற  ஒரு பதி­வாளர் 100 ரூபா அப­ராதத் தொகை அல்­லது 6 மாதத்­திற்கு மேற்­ப­டாத சிறைத்­தண்­டனை அல்­லது இரண்டும் தண்­ட­னை­யாக அளிக்­கப்­ப­டக்­கூ­டிய தண்­ட­னைக்­கு­ரிய குற்­றத்­தினைப் புரிந்­தவர் ஆவார் என இச்­சட்­டத்தின் பிரிவு 82 கூறு­கின்­றது. 

முஸ்­லிம்கள் தமது பெண் பிள்­ளை­களை அவர்கள் பரு­வ­ம­டைந்­ததும் சிறிய வய­தி­லேயே திரு­மணம் செய்து வைக்­கி­றார்கள். பாட­சா­லை­யி­லி­ருந்து இடை­நி­றுத்தி திரு­மணம் செய்து வைக்­கி­றார்கள்.  

அவர்­க­ளுக்கு  இல்­லற வாழ்க்கை என்ன என்­பதே தெரி­யாது. அவர்கள் மைதா­னத்தில் ஓடிப்­பி­டித்து விளை­யாட வேண்­டி­ய­வர்கள்.

பாவம் அந்தப் பிள்­ளைகள் என்­றெல்லாம் எம்மைச் சூழ வாழும் மாற்று மதத்­த­வர்கள் அங்­க­லாய்க்­கின்­றனர். 

முஸ்லிம்  தனியார் சட்­டத்தில் முஸ்லிம் பெண்­களின் திரு­மண  வய­தெல்லை தொடர்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­வைகள்  இன்று பல­ரதும் விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளன. 

சில தினங்­க­ளுக்கு முன்பு நீண்ட கால இடை­வெ­ளியின் பின்பு எனது நண்பர் ஒரு­வரை தலை­ந­கரில் சந்­தித்தேன். அவர் எனது பல்­க­லைக்­க­ழக நண்பர். வங்­கி­யொன்றின்  முகா­மை­யா­ள­ராக இருந்து ஓய்வு பெற்­றவர். அவர் என்­னிடம் முஸ்லிம்  தனியார் சட்டம் பற்றி விளக்கம் கோரினார்.  

முஸ்லிம் சட்டம் பால்ய வயது திரு­ம­ணத்தை ஆத­ரிக்­கி­றதா? அப்­ப­டி­யென்றால் ஏன்? இவ்­வாறு பல கேள்­வி­களை என்­னிடம் தொடுத்தார். 

உங்கள் நபிகள் நாயகம் முஹம்மத் அவர்கள் ஆறு வயது சிறு பிள்­ளையைத் திரு­மணம் செய்­த­தாக கூறு­கி­றார்­களே? ஒரு மெள­ல­வியே இந்த விப­ரத்தை என்­னிடம் தெரி­வித்தார். இது உண்­மையா? என்று  வின­வினார். நான் அவ­ருக்கு  உரிய விளக்­க­ம­ளித்து தெளி­வு­ப­டுத்­தினேன். உண்­மையில் மாற்று  மதத்­த­வர்கள் இப்­ப­டித்தான் இஸ்­லாத்தை அறிந்து வைத்­தி­ருக்­கி­றார்கள். 

திரு­ம­ணமும்  குர்­ஆனும் 
புனித  குர்­ஆனில் நிக்காஹ் பற்றி கூறப்­பட்­டுள்­ள­தே­யன்றி வயது தொடர்­பாக எதுவும்  தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. பால்ய திரு­மணம் பற்றி கூறும் எந்த ஏற்­பா­டு­களும் இல்லை. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து சந்­த­தி­களை உரு­வாக்­கு­வ­தற்கும் ஒரு­வ­ருக்­கொ­ருவர்  திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கு­மான ஒரு ஒப்­பந்­தமே திரு­மணம் என்று குர்ஆன் விளக்­கி­யுள்­ளது.

இதனைக் கொண்டு குர்ஆன், இஸ்லாம் பால்ய திரு­ம­ணத்­துக்கு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது எனப் பொருள் கோடல் செய்­வது தவ­றாகும். 

பால்ய வயது திரு­மணம் தொடர்பில் உல­மாக்­க­ளி­டையே பல கருத்து வேறு­பா­டுகள் நில­வு­கின்­றன. புனித திருக்­குர்­ஆனின் 65 ஆவது சூறா  4 ஆம் திரு­வ­ச­னத்தில் பருவ வய­தை­ய­டை­யாத பெண் பிள்­ளையின் திரு­மணம் பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என சில உல­மாக்கள் வாதங்­களை முன்­வைக்­கின்­றனர். 

குறிப்­பிட்ட 65 ஆவது சூறா 4 ஆம் திரு­வ­சனம்  என்ன கூறி­யி­ருக்­கி­றது என்­பதை நாம் மிகவும் உன்­னிப்­பாக கவ­னத்திற் கொள்­ள­வேண்டும். 

தலாக்  சொல்­லப்­பட்ட பெண்­களின் மாத­விடாய் காலத்தில் சந்­தேகம் ஏற்­பட்டால் அவர்­களின் இத்தா காலம் மூன்று  மாதங்­க­ளாகும். மாத­வி­டா­யே  ஏற்­ப­டாத  பெண்­க­ளுக்கும் இத்­தாவின் காலம் மூன்று மாதங்­க­ளாகும் என்று குர்ஆன் வசனம் தெரி­விக்­கி­றது. இதைச் சுட்­டிக்­காட்டி பருவம் அடை­யாத பெண்­களும் திரு­மணம் செய்ய முடியும் என உல­மாக்கள்  சவால்  விடு­கி­றார்கள். 

தலாக் சொல்­லப்­பட்ட பெண்கள் ‘இத்தா’ காலத்தைப் பூர்த்தி செய்த பின்பே மீண்டும் திரு­மணம் செய்து கொள்­ள­மு­டியும். ஆனால் குறிப்­பிட்ட திருக்­குர்ஆன் வசனம் உண்­மை­யி­லேயே  மாத­விடாய் ஏற்­ப­டாத, பருவ வய­தை­ய­டை­யாத பெண்­களைக் கரு­தாமல் மாறாக வேறு ஏதா­வது உட­லியற்  கார­ணங்­க­ளுக்­காக மாத­விடாய் ஏற்­ப­டாத பெண்­களைக் கரு­தி­யி­ருக்­கலாம் என மொஹமத் அஸாத் எழு­தி­யுள்ள  (The Message of the quran)  எனும் நூலில் குறிப்­பிட்­டுள்ளார். 

இவ்­வி­டயம் தொடர்­பாக உலமா மெள­லானா உஸ்­மானி தனது கடு­மை­யான விமர்­ச­னங்­களை வெளி­யிட்­டுள்ளார்.  பால்ய வயது திரு­ம­ணத்தை  ஆத­ரிப்­ப­வர்கள், இதனை ஆத­ரித்து விமர்­ச­னங்­களை வெளி­யி­டு­ப­வர்கள். உட­லு­றவு எதுவும் இடம் பெறாத போது விவா­க­ரத்துச் செய்யும் சந்­தர்ப்­பத்தில் ‘இத்தா’ அனுஷ்­டிக்கத்  தேவை­யில்லை என புனித குர்ஆன் கூறி­யுள்­ளதை கவ­னத்திற் கொள்­வ­தற்குத் தவ­றி­யுள்­ளனர். 

‘இத்தா’ என்­பது உட­லு­றவு நடை­பெற்­றி­ருக்­கக்­கூ­டிய சாத்­தியம் எனும் விட­யத்தில் மாத்­தி­ரமே தங்­கி­யுள்­ளது என்ற கருத்தை ஆத­ரிப்­ப­வர்கள் மாத­விடாய்  ஏற்­படக் கூடிய வய­தினை எய்­தாத ஒரு பெண் பிள்­ளை­யு­ட­னான உட­லு­றவு எனும் விடயம் பற்­றியும் சிந்­திக்க  வேண்டும். குர் ஆன் இத்­த­கைய உட­லு­ற­வுக்கு  எப்­படி அனு­மதி வழங்கும்.
 
நபிகள் நாய­கத்தின் திரு­மணம்
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்­களின் மனைவி ஆயிஷா (ரழி) அவர்­க­ளது திரு­மண  வயது பற்றி  பல்­வேறு  கருத்­துகள்  முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அது பால்ய திரு­மணம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஆயிஷா (ரழி)யை நபிகள் நாயகம் திரு­மணம் செய்து கொண்ட போது வயது 6 என்றே அநேகர் நம்­பிக்கை கொண்­டுள்­ளனர். 

ஆனால் நபிகள் நாயகம் ஆயிஷா (ரழி) யை திரு­மணம் செய்து கொண்­ட­போது ஆயிஷா (ரழி) க்கு வயது ஆறு அல்ல பதி­னாறு  அல்­லது பதி­னே­ழாக இருக்க வேண்­டு­மென உலமா மெள­லானா உஸ்­மானி நிரூ­பிக்க முயற்­சித்­துள்ளார். நபிகள் நாய­கத்தின் சுன்­னாவும் கூட பால்ய வயது திரு­ம­ணத்தை அனு­ம­திக்­க­வில்லை என்­பது  இதி­லி­ருந்து தெளி­வா­கி­றது.

பால்ய வயது திரு­ம­ணத்தை  ஆத­ரிக்கும் மார்க்க அறி­ஞர்­க­ளான  உல­மாக்கள் பொது­வாக  நபிகள் நாயகம் (ஸல்) அவர்­களின் வாழ்க்கை வர­லாற்­றையே உதா­ர­ண­மாகக் கொள்­கி­றார்கள். 

இவ் விவ­காரம் தர்க்க ரீதி­யா­ன­தாகும். அத்­தோடு எது  சரி­யென்று ஆவலைத்  தூண்­டக்­கூ­டி­ய­தொன்­ற­ாகும். புனித குர்­ஆ­னுக்கும் சுன்­னா­வுக்கும் செல்­வாக்கு  வழங்­கப்­ப­டாத ஒரு கால கட்­டத்தில் இப்­பால்ய திரு­மணம் இஸ்­லாத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட நிகழ்­வாக இருந்­தி­ருக்­கலாம். ஆனால் குர்­ஆ­னுக்கும் ஹதீ­ஸுக்கும் மதிப்­ப­ளிக்கும் இக்­கா­ல­கட்­டத்தில் பால்ய திரு­ம­ணத்தை நியா­யப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மற்­ற­தாகும்.
 
பால்ய வயது திரு­மணம் 
இன்று பால்ய வயது திரு­ம­ணத்தை ஆத­ரித்துப் பேசும் உல­மாக்கள் பால்ய திரு­மண பந்­தத்தில் இணையும் சிறுமி தொடர்­பாக  அச்­சி­று­மியின்  தந்தை எடுக்கும்  தீர்­மா­னத்­தினால், அச்­சி­றுமி வய­துக்கு வந்த பின்  என்ன நடக்கும் அவ­ளது எதிர்­காலம் எவ்­வாறு அமையும் என்­பதைப் பற்றி வலி­யு­றுத்திக் கூற­வில்லை. 

ஒரு சிறு­மிக்கு அவ­ளது பால்ய வயதில் அவ­ளது ‘வலி’ அல்­லது  திரு­மணப் பாது­கா­வலர்  மூலம் திரு­மணம் செய்து வைக்­கப்­பட்­டி­ருந்தால், அச்­சி­றுமி வய­துக்கு வந்­ததும் அத்­தி­ரு­ம­ணத்தை ஏற்­றுக்­கொள்­வ­தற்கோ அல்­லது மறுப்­ப­தற்கோ அவ­ளுக்கு உரி­மை­யுண்டு.  அவ­ளது இந்த உரிமை பூர­ணத்­துவம் வாய்ந்­த­தாகும். இந்த விட­யத்தில் அவ­ளது தகப்­பனோ, உற­வி­னர்­களோ எவரும் தலை­யிட முடி­யாது. 

ஒரு முஸ்லிம் தான் பால்ய வயதில், தனது பாது­கா­வலர் மூலம் திரு­மணம் செய்து வைக்­கப்­பட்­டி­ருந்தால், அம் முஸ்லிம் பராய வய­தை­ய­டைந்ததும், அத்­தி­ரு­ம­ணத்­தற்கு மறுப்புத் தெரி­விக்கும் உரிமை  அவ­ருக்கு உண்டு என ஏ.ஏ.பைஸி எழு­தி­யுள்ள  OUTLINK OF MUHAMMADAN LAW எனும் புத்­த­கத்தில் குறிப்­பிட்­டுள்ளார். 

எனவே பால்ய வயது திரு­மணம்  ஒன்று சந்­தர்ப்ப வசத்தால் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தாலும் கூட  பருவ வய­தை­ய­டைந்தும் அப்­பெண்ணின் திரு­மணம் தொடர்­பான உரி­மைகள் இஸ்­லா­மிய  சட்­டத்­தினால் பாது­காக்­கப்­ப­டு­கின்­ற­மையை அவ­தா­னிக்க முடி­கி­றது. 
1990 ஆம் ஆண்டு சிறுவர்  உரி­மைக்­கான சர்­வ­தேச பிர­க­ட­னத்தின் பிர­காரம் 18 வய­துக்கு குறைந்­த­வர்கள் அனை­வரும்  சிறு­வர்­க­ளா­கவே கரு­தப்­ப­டு­வார்கள்.

ஆனால் அச்­சி­று­வர்கள் ஆளப்­படும் சட்­டத்தில் பராய வயது 18 ஐ விடக் குறை­வா­னது எனக் கரு­தப்­பட்டால் அவர்கள் அச்­சட்­டத்தின் பிர­கா­ரமே ஆளப்­ப­டு­வார்கள்.
 
சர்­வ­தேச பிர­க­டனம் 
திரு­ம­ணத்­திற்­கான வய­தெல்லை, திரு­மணப் பதிவு, திரு­ம­ணத்­திற்­கான சம்­மதம்  என்­ப­வற்றின் மீதான 1964 ஆம் ஆண்டின் சர்­வ­தேச பிர­க­டனம் பின்­வ­ரு­மாறு  தெரி­விக்­கி­றது. 

இப்­பி­ர­க­ட­னத்­தினால் ஆளப்­படும்  திறத்­த­வர்கள் திரு­ம­ணத்­திற்­கான ஆகக்­கு­றைந்த வய­தெல்­லையைத் தீர்­மா­னிப்­ப­தற்­காக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கலாம்.  அவ்­வாறு தீர்­மா­னிக்­கப்­பட்டு, திரு­ம­ணத்­திற்­கான ஆகக்­கு­றைந்த வய­தெல்­லையைத் தீர்­மா­னிப்­ப­தற்­காக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கலாம். அவ்­வாறு தீர்­மா­னிக்­கப்­பட்டு, திரு­ம­ணத்­திற்­கான ஆகக் குறைந்த வய­தெல்­லையை விடக் குறை­வான வய­து­டை­ய­வர்­களின் திரு­மணம் சட்ட வலி­து­டை­மை­யா­ன­தா­காது. 

ஆனால் மிகவும் பார­தூ­ர­மான கார­ணங்­களின் மீது, சம்­பந்­தப்­பட்ட திறத்­த­வர்­களின் மீதான நன் நோக்கின் அடிப்­ப­டையில் ஒரு அதி­கா­ரபூர்­வ­மான சபையின் அனு­ம­தி­யுடன் இச்­சட்டம் தளர்த்­தப்­ப­டலாம்.
 
நாட்­டுக்கு நாடு வேறு­படும் திரு­மணம் வய­தெல்லை
நாட்­டுக்கு நாடு திரு­மணம் செய்து கொள்­வ­தற்­கான வய­தெல்லை வேறு­ப­டு­கின்­றன. வய­தெல்­லைகள் சட்­டத்தின்  மூலம் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் சில  நாடு­களில் விதி­வி­லக்­கு­களும்  அளிக்­கப்­பட்­டுள்­ளன. 

துருக்கி நாட்டில் பெண்­க­ளுக்­கான திரு­மண வய­தெல்லை 15 வய­தி­லி­ருந்து 18 ஆக  அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்­றாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டக்­கூ­டிய கார­ணங்­களை  முன்­வைத்து இவ்­வ­ய­தெல்­லையை 18 வய­தி­லி­ருந்து 16 வய­தாகக் குறைக்க முடியும். 

பிஜி நாட்டில் ஆண், பெண்  திரு­மண வய­தெல்லை 21 ஆகும். 21 வய­துக்குக் குறை­வா­ன­வர்கள் திரு­மணம் செய்து கொள்­வ­தென்றால் பெற்­றோரின் சம்­மதம் அவ­சி­ய­மாகும். 

டியு­னி­சி­யாவில் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 17 ஆகவும் ஆணின் வய­தெல்லை 20 ஆகவும் இருக்­கி­றது. இந்த திரு­மண வய­தெல்லை இரு திறத்­த­வர்­க­ளி­னதும் நன் நோக்கின் அடிப்­ப­டையில் இரு திறத்­த­வர்­க­ளி­னதும் பாது­கா­வ­லர்­களின் அனு­ம­தி­யுடன்  அல்­லது நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் குறைக்­கப்­ப­டலாம். 

உஸ்­பெ­கிஸ்தான் நாட்டில் பெண்­க­ளுக்­கான திரு­மண வய­தெல்லை 17 ஆகவும்  ஆண்­க­ளுக்­கான திரு­மண வய­தெல்லை 18 ஆகவும் இருக்­கி­றது.விசேட சந்­தர்ப்­பங்­களில் உள்ளூர் அதி­கார சபை­களின் அனு­ம­தி­யுடன்  இவ்­வ­ய­தெல்­லைகள் ஆகக்­கூ­டி­யது ஒரு வரு­டத்­தினால் குறைக்­கப்­ப­டலாம். 

பாகிஸ்­தானில் பெண்ணின் திரு­மண வய­தெல்லை16 ஆகவும் ஆணின் திரு­மண வய­தெல்லை 18 ஆகவும்  அமைந்­துள்­ளது. 16 வய­தினை அடைந்த பெண்­க­ளுக்கு திரு­மண தேர்­விற்­கான உரி­மை­யுண்டு.  ஒரு பெண் 15 வய­து­டை­ய­வ­ளாக  இருந்­தாலும் கூட திரு­ம­ணத்­திற்கு சம்­மதம் தெரி­வித்­தலைப் பற்­றிய அறிவும் தெளிவும் உடை­ய­வ­ளாக இருந்தால் திரு­மணம் செய்­யப்­ப­டலாம்.

16 வய­துக்குக் குறைந்த பெண்­களின்  திரு­மணம் சட்­டத்தின் பிர­காரம் குற்­ற­மாக இருந்­தாலும் அவள் பராய வய­தை­ய­டைந்­த­வ­ளாயின் அத்­தி­ரு­மணம் வலி­தா­ன­தாகும். 

கம்­பி­யாவில் திரு­மண வய­தெல்லை ஆண்­க­ளி­னதும் பெண்­க­ளி­னதும் 21 வய­தா­கவே இருக்­கி­றது. இரு­வரில் ஒரு­வ­ரேனும் 21 வய­துக்குக் குறை­வா­ன­வ­ராக இருந்தால் பெற்­றோரின் அனு­மதி அவ­சி­ய­மாகும். 

எகிப்து நாட்டில் திரு­மண வய­தெல்லை பெண்­ணுக்கு 16 ஆகவும் ஆணுக்கு 18 ஆகவும் இருக்­கி­றது. பராய வயதை அடை­யா­த­வர்­களின் திரு­ம­ணத்­திற்கு ‘வலி’ அவ­சி­ய­மா­ன­தாகும். ‘வலி’ நியா­ய­மின்றி  திரு­ம­ணத்­திற்கு மறுப்பு தெரி­வித்தால் நீதி­பதி அனு­மதி வழங்­குவார். 
மலே­சி­யாவில் திரு­மண வய­தெல்லை பெண்­ணி­னது 16 ஆகவும் ஆணி­னது 18 ஆகவும் இருக்­கி­றது.

சில சந்­தர்ப்­பங்­களில் பராய வய­தை­ய­டை­யா­த­வர்­களின் திரு­ம­ணத்­திற்கு அனு­மதி வழங்கும் தனி அதி­காரம் ஷரீஆ  நீதி­ப­திக்கு உண்டு. 
கெம­ரூனில் பெண்ணின் திரு­மண வய­தெல்லை 15 ஆகவும் ஆணின் திரு­மண வய­தெல்லை 18 ஆகவும் நிச்­ச­யிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த குறிப்­பிட்ட வய­தெல்­லைக்குக் குறைந்­த­வர்கள் நாட்டின் தலை­வ­ரி­னதும் பெற்­றோரின் அனு­ம­தி­யு­டனும் திரு­மணம் செய்­யலாம். அனு­மதி வழங்­கப்­ப­டாத திரு­மணம் வெறி­தா­ன­வை­யாகும் என்­றாலும் தாம­த­மாக அனு­மதி வழங்­கப்­பட்டால் வலி­தா­ன­தாக மாறலாம். 
தஜி­கிஸ்­தானில் ஆணி­னதும் பெண்­ணி­னதும் திரு­மண வய­தெல்லை 17 ஆக இருக்­கி­றது.

பெண் கர்ப்பம் தரித்­தி­ருத்தல், பெற்றோர் இல்­லா­ம­லி­ருத்தல் போன்ற விதி­வி­லக்­கான சந்­தர்ப்­பங்­களில் இவ்­வ­ய­தெல்லை  ஆகக்­கூ­டிய ஒரு வரு­டத்­தினால் குறைக்­கப்­ப­டலாம். 

செனகல் நாட்டில் பெண்­ணி­னது திரு­மண வய­தெல்லை 16 ஆகவும் ஆணி­னது திரு­மண வய­தெல்லை 20 ஆகவும் அமைந்­துள்­ளது. இக்­கு­றிப்­பிட்ட வய­தெல்­லை­யிலும் குறை­வான வய­தி­லுள்­ள­வர்­க­ளுக்கு தவிர்க்க முடி­யாத  சந்­தர்ப்­பங்­களில் (பெண் கர்ப்பம் தரித்தல்)  நீதி­பதி அனு­மதி வழங்­கலாம்.  இதற்கு விசா­ர­ணையும் பெற்­றோரின் சம்­ம­தமும் அவ­சி­ய­மாகும்.

இவ்­வ­யது எல்லையைவிட குறைந்­த­வர்­க­ளது திரு­ம­ணத்தைப் பெற்­றோர்கள் வெறி­தாக்க முடியும். ஆனால் உரிய வய­தை­ய­டை­வ­தற்கு முன்­னரே பெற்­றோரின் உட்­கி­டை­யான அல்­லது வெளிப்­ப­டை­யான சம்­மதம்,  திரு­மணம் நடை­பெற்று ஒரு வரு­டத்­திற்கு மேலாகப் பெற்றோர் எது­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கா­தி­ருத்தல், திறத்­த­வர்­க­ளுக்கு 19 வய­தான பின்­னரே ஏதேனும் நட­வ­டிக்­கை­களை எடுத்தல் என்­பன பெற்­றோரின்  உரி­மை­களைச் செல்­லு­ப­டி­யற்­ற­தாக்கும். 

இலங்­கையில் முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 
இலங்­கையில் அமு­லி­லுள்ள 1951 ஆம் ஆண்டின்  முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் முஸ்லிம்  பெண்­களின்  திரு­மண வய­தெல்­லையைத் தெளி­வாக விளக்­கி­யுள்­ளது. எமது நாட்­டி­லுள்ள பொது­வான சட்டம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையை 18 ஆக வரை­ய­றுத்­துள்­ளது.

இதே­வேளை முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 12 என்றே வரை­ய­றுத்­துள்­ளது. 

12 வய­துக்குக் குறை­வான பெண்­களின் திரு­மணம் பதிவு செய்­யப்­ப­டக்­கூ­டாது என்று தெரி­வித்­துள்ள  அதே­வேளை 12 வய­துக்குக் குறைந்த ஒரு முஸ்லிம் பெண் திரு­மணம் செய்து கொள்ள  வேண்­டு­மென்றால் அவள் தான் வசிக்கும் பிர­தே­சத்து காதி நீதி­மன்­றுக்கு விண்­ணப்­பிக்க வேண்டும்.

காதி நீதி­பதி விசா­ரணை ஒன்­றினை நடத்தி திரு­ம­ணப்­ப­தி­வுக்கு அனு­மதி வழங்­கினால் மாத்­தி­ரமே திரு­மணம் பதிவு செய்­யப்­பட வேண்டும். 

அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் இவ்­வாறு முஸ்லிம் பெண்ணின் திரு­மண  வய­தெல்­லையை வரை­ய­றுத்­தி­ருந்­தாலும் எமது நாட்டில்12 வய­துக்குக் குறைந்த முஸ்லிம் பெண்­களின் திரு­மணப் பதிவு நடை­பெ­று­வது அரி­தா­கவே உள்­ளது. 
இஸ்­லாத்தில் திரு­மணம் செய்ய வய­தெல்லை எதுவும் வரை­ய­றுத்துக் கூறப்­ப­ட­வில்லை. இஸ்லாம் ஒரு ஆண் அல்­லது பெண் திரு­மண ஒப்­பந்­தத்தில் இணைய வயதுக் கட்­டுப்­பாடு  எதுவும் முன்­வைக்­க­வில்லை.

 ஷாபிஈ மத்­ஹபின்  முக்­கிய நூல்­களில் ஒன்­றான ‘துஹ்­பதுல் முஹ்தாஜ்’ எனும் நூலில் இந்த விடயம் தெளி­வாக விளக்­கப்­பட்­டுள்­ளது. 

இல்­லற வாழ்க்­கைக்கு சக்­தி­யற்ற சிறிய, நோயுள்ள, மெலிந்த பெண் பிள்ளை அவ­ளுடன் இல்­லற வாழ்வைத் தொடர்­வ­தற்கு ஏற்­பட்­டி­ருக்கும் தடை நீங்கும் வரை அவள் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­மாட்டாள். இவ்­வா­றான பெண்­களை ஒப்­ப­டைப்­பது ‘வலி’க்கு மக்ரு ஆகும். எனவே ஒரு பெண் இல்­லற வாழ்க்­கையில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்பு அவள் இதற்கு சக்தி பெற்றுள்ளவரா என்பதைக் கவனிக்க வேண்டும். 
சில சந்தர்ப்பங்களில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சிறிய வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டிய  நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக வேண்டி ஏற்படலாம்.

எனவே இதற்கு அனுமதியளிப்பது தான் அவர்களது பிள்ளைகளுக்கும் சமூகத்திற்கும் பாதுகாப்பாக இருக்கிறது. இதனைக் கருத்திற் கொண்டே இஸ்லாம் தடைகளை விதிக்கவில்லை. 

நோயாளியான, வாரிசுகள் இல்லாத ஒருவர் தனது மரணத்திற்கு முன்பு தனது மகளை நல்ல ஒருவருக்கு மனைவியாக ஒப்படைக்க நினைக்கின்றமை, ஒரு விதவைப் பெண் தான் வாழ்வதற்கு வசதியில்லாத நிலையில் தனது மகளை பராமரிக்க முடியாத சூழ்நிலை இருக்கின்றமை இதனால் தனது சிறிய வயது பெண் பிள்ளையை திருமணம் செய்து வைத்து அவளது மகிழ்வான வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்ய நினைக்கின்றமை ஆகிய காரணங்களைக் கருத்திற் கொண்டு இஸ்லாம் பெண்களின்  திருமண வயதெல்லையை வரையிட்டுக் கூறவில்லை எனலாம்.

முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூபின் அறிக்கை 
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் குழுவொன்று 2009 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. 

இக்குழுவில் சிரேஷ்ட சட்டத்தரணிகள், நீதிவான்கள், உலமாக்கள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், புத்தி ஜீவிகள் அடங்கியுள்ளனர். அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவரும் பொதுச் செயலாளரும் அங்கத்துவம் பெற்றுள்ளார்கள். 

இக்குழு தனது அறிக்கையை எதிர்வரும் 27 ஆம் திகதி நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவிடம் கையளிக்கவுள்ளது. 

இக்குழு இலங்கையில் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை 16 ஆக நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அகில இலங்கை  ஜம் இய்யத்துல் உலமா சபை உட்பட அனைத்து அங்கத்தினர்களும் இவ்வயதெல்லையை அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 16 ஆக அமைந்து விட்டால்  அது சர்வதேச சமவாயங்களுக்கு அமைவானதாகிவிடும்.