Verified Web

இனவெறியை ஒழித்து சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இறுதி நபியின் இறுதிப் பேருரை

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2016-09-26 17:06:43 T.M.Mufaris Rashadi

நபி­க­ளாரின் இறு­திப்­பே­ரு­ரையின் அடுத்த பகுதி இஸ்­லாத்தில் இன வெறி­யென்­பது கிடை­யாது; அது அழித்­தொ­ழிக்­கப்­பட வேண்­டிய ஒன்று என்­ப­த­னையும் உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்­க­ளு­டைய தந்தை ஒருவர் தான் என்று குறிப்­பிட்டு சக­வாழ்­வையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் போதிக்­கி­றது 

நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி­னார்கள். மக்­களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்­க­ளு­டைய தந்தை ஒருவர் தான். ஓர் அர­பி­ய­ருக்கு அர­பி­யல்­லா­த­வரை விடவும் ஓர் அர­பி­யல்­லா­த­வ­ருக்கு அர­பி­யரை விடவும் ஒரு கறுப்­ப­ருக்கு சிவப்­பரை விடவும் ஒரு சிவப்­ப­ருக்கு ஒரு கறுப்­பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை இறை­யச்­சத்தைத் தவிர!  (நூல்: அஹ்மத் 22391) 
"நிச்­ச­ய­மாக நாம் உங்­களை ஒரே ஆணி­லி­ருந்தும் ஒரே பெண்­ணி­லி­ருந்தும் சிருஷ்­டித்தோம். பின்னர் கோத்­தி­ரங்­க­ளா­கவும் குழுக்­க­ளா­கவும் ஆக்­கினோம். நீங்கள் ஒரு­வரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்­ப­தற்­காக" (சூரா அல் ஹுஜுராத் - 13)

இந்த அல்­குர்ஆன் வச­னமும் மேற்­சொல்­லப்­பட்ட நபி மொழியும் இன­வெறி இஸ்­லாத்தில் கூடாது. உலக மக்கள் யாவரும் சகோ­த­ரர்­களே மேலும் அவர்கள் குலம், நிறம், மொழி, பலம், பெரும்­பான்மை, சிறு­பான்மை, நாக­ரிகம், என்­ப­வை­யி­னூ­டாக ஒரு தரப்பு இன்­னொரு தரப்­பி­னரை மிகைத்து ஆதிக்கம் செலுத்தும் சக்­தி­யாக ஆக முடி­யாது என்று யாவ­ருக்கும் பொது­வான ஒரு அறை­கூ­வலை விடுக்­கி­றது. அத்­தோடு உங்­களில் அல்­லாஹ்­வி­டத்தில்  சிறந்­தவர் இறை­யச்­ச­மு­டை­ய­வரே என்ற மேல­திக செய்­தி­யையும் தெளிவு படுத்­து­கி­றது. 
முஸ்­லிம்கள் பிற முஸ்­லிம்­களின் சகோ­த­ரர்கள் என்­ப­தனை அல்­குர்ஆன் குறிப்­பி­டு­கி­றது.

நிச்­ச­ய­மாக விசு­வா­சிகள் ஒருவர் மற்­ற­வ­ருக்கு சகோ­த­ரர்­களே! 
உங்­களில் இரண்டு சகோ­த­ரர்­க­ளுக்கு மத்­தியில் பிணக்கு ஏற்­பட்டால் அதனைத் தீர்த்து வையுங்கள். (சூரா அல் ஹுஜுராத் - 10)
அதே வேளை முஸ்­லி­மல்­லா­த­வர்­களும் முஸ்­லிம்­களின் சகோ­த­ரர்­களே என்ற விட­யத்­தையும் அல்­குர்ஆன் சொல்­லி­யுள்­ளது. 
நூஹு­டைய சமூ­கத்தார் தூதர்­களைப் பொய்­யாக்­கி­னார்கள்.

அவர்­க­ளு­டைய சகோ­தரர் நூஹ் அவர்­க­ளிடம் நீங்கள் அல்­லாஹ்­வுக்கு பயப்­ப­ட­மாட்­டீர்­களா? எனக்­கூ­றிய போது.... (சூரா அஷ்­ஷு­அரா - 105/106)
இவ்­வ­ச­னங்­களில் நூஹை அவர்கள் பொய்­யாக்­கி­னார்கள் என்று வந்­துள்­ளது. ரஸூல்மார்­களை பொய்­யாக்­கி­ய­வர்கள் இறை மறுப்­பா­ளர்­க­ளா­யி­ருந்­தாலும் அல்­குர்ஆன் அவர்­க­ளு­டைய சகோ­தரர் நூஹ் என்றே அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. எனவே முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளா­க­யி­ருந்­தாலும் நாம் எமது சகோ­த­ரர்கள் போன்றே அவர்­க­ளோடு உற­வா­ட­வேண்டி கட்­ட­ளை­யிட்­டி­ருக்­கி­றது. 

நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி­னார்கள். ஒரு முஸ்லிம் இன்­னொரு முஸ்­லி­முக்குச் சகோ­த­ர­னாவான். (நூல்: ஹாகிம் 318)

நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி­னார்கள் அல்­லாஹ்வின் அடி­யார்­களே! (அன்பு காட்­டு­வதில்) சகோ­த­ரர்­களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் மற்­றொரு முஸ்­லி­முக்குச் சகோ­தரர் ஆவார். அவர் தம் சகோ­த­ர­ருக்கு அநீ­தி­யி­ழைக்­கவோ, அவ­ருக்குத் துரோ­க­மி­ழைக்­கவோ, அவரைக் கேவ­லப்­ப­டுத்­தவோ வேண்டாம். (முஸ்லிம் -5010)

நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி­னார்கள், முஃமின்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் அன்பு காட்­டு­வ­திலும், இரக்கம் கொள்­வ­திலும், ஒரு­வ­ருக்­கொ­ருவர் கருணை காட்­டு­வ­திலும் ஓர் உடம்பைப் போன்­ற­வர்­க­ளாக இருக்க வேண்டும். அந்த உடம்பின் ஓர் உறுப்பு நோயால் அவதிப்பட்டால் ஏனைய உறுப்­புக்கள் காய்ச்சல், விழித்­தி­ருத்தல் என்­ப­ன­வற்றின் மூலம் அந்­நோயில் பங்கு கொள்­கின்­றன- (புகாரி- 5665 முஸ்லிம்-2586)

மேலும் நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி­னார்கள். 

ஒரு­வ­ருக்­கொ­ருவர் நீங்கள் வெறுப்புக் கொள்­ளா­தீர்கள். ஒரு­வ­ருக்­கொ­ருவர் உற­வு­களை துண்­டித்து நடக்­கா­தீர்கள். ஒரு­வ­ருக்­கொ­ருவர் நீங்கள் பொறாமை கொள்­ளா­தீர்கள். அல்லாஹ் உங்­க­ளுக்கு கட்­டளை இட்­டி­ருப்­பது போல் அல்­லாஹ்வின் அடி­யார்­க­ளாக - சகோ­த­ரர்­க­ளாக இருங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோ­த­ரனை மூன்று நாட்­க­ளுக்கு மேல் (பகைத்து) ஒதுக்கி வாழ­லா­காது. (புகாரி- 6065)

முஸ்­லிம்­க­ளோடு போர்­தொ­டுக்­காத அவர்­க­ளுக்கு தீங்­கி­ழைக்­காது அவர்­க­ளோடு கலந்து வாழ்­கின்ற முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளோடும் இதே அணு­கு­மு­றையை கடைப்­பி­டிக்கும் படியே இஸ்லாம் நமக்கு போதிக்­கி­றது. 

இன­வெ­றியை ஒழிக்கும் படி கூறிய நபி­க­ளாரின் இறுதிப் பேருரை மனி­தர்கள் தமக்­குள்ளே சமத்­து­வத்­தையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் பேணிக்­கொள்­வதை வலி­யு­றுத்­து­கின்­றது.

பிற சகோ­த­ரர்­க­ளோடு உற­வா­டு­கின்ற போது அவர்­க­ளது உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டு­வ­தையும் இஸ்லாம் அதன் முக்­கிய அம்­சங்­களுள் ஒன்­றா­கவே கரு­தி­யி­ருக்­கி­றது.

நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி­னார்கள். மன­மு­வந்து தராத தன் சகோ­தர முஸ்­லிமின் பொருள் எதுவும் அடுத்த முஸ்­லி­முக்கு ஆகு­மா­னது அல்ல. (நூல்: திர்­மிதீ 3012 ஹாகிம் 318)

சகோ­த­ரத்­து­வத்தை சீர்­கு­லைக்­கக்­ கூ­டிய சண்டை சச்­ச­ர­வுகள் பிரச்­சி­னைகள் அத­னூ­டாக ஏற்­படும் கொலை போன்ற கொடிய செயல்­களை இறை நிரா­க­ரிப்­புக்கு ஒத்த மிகப்­பெரும் குற்­ற­மா­கவே இஸ்லாம் எச்­ச­ரித்­துள்­ளது.

நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி­னார்கள் '' அறிந்து கொள்­ளுங்கள்! உங்­க­ளது இந்த நக­ரத்தில் உங்கள் இந்த மாதத்தில் உங்­க­ளது இந்த நாள் எப்­படிப் புனி­த­மா­ன­தாக விளங்­கு­கின்­றதோ அவ்­வாறே அல்லாஹ் உங்­க­ளுக்கு உங்கள் இரத்­தங்­க­ளையும் உங்கள் செல்­வங்­க­ளையும் புனி­த­மான வையாக ஆக்­கி­யுள்ளான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­விட்டு நான் (இறை செய்­தியை உங்களிடம்) சேர்த்து விட்­டேனா?'' என்று கேட்­டார்கள். மக்கள் ஆம் என்று பதி­ல­ளித்­தனர். இறைவா! நீ சாட்­சி­யாக இரு!'' என்று மூன்று முறை கூறி­னார்கள். 

பின்னர் உங்­க­ளுக்கு என்ன நேரப் போகின்­றதோ!'' அல்லது அந்தோ பரிதாபமே! கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறை மறுப்பாளர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள்'' என்று சொன்னார்கள்.
(நூல்: புகாரி 4403)

சகோதரத்துவத்தை பலப்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்களது பலத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். அதற்கு மாற்றமாக இன, குல, சாதி பாகுபாடுகளுக்கு ஆற்பட்டு அதனடியாக நீங்கள் உங்களுக்குள் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு உங்களது பலத்தை இழந்து இறை நிராகரிப்பை நோக்கிச் சென்று விடாதீர்கள் என்ற கட்டளையையும் இறுதி நபியின் இறுதிப் பேருரை வலியுறுத்திக் கூறியுள்ளது.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் இறுதிப் பேருரை சொல்ல வரும் மற்றொரு செய்­தியை நோக்­கு­­வோம்.