Verified Web

மனித நேயத்தைப் போதிக்கும் இறுதி நபியின் இறுதிப் பேருறை

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2016-09-19 15:30:21 T.M.Mufaris Rashadi

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இரு­பத்து மூன்று வரு­டங்கள் ஆற்­றிய தூதுப் பணியின் மொத்த சாராம்­சத்­தையும் தனது ஹஜ்ஜின் இறுதிக் கட்ட ஐந்து நாட்கள் பய­ணத்தில் சாறாகப் பிழிந்து முழு உல­குக்­கு­மான திறந்த பொது­வான அழைப்­பாக முன்­வைத்­தார்கள் என்­ற­வ­கையில் அது வர­லாற்றில் மிக முக்­கிய இடத்தைப் பிடித்­தது, இஸ்லாம் மனித நேயம் , ஐக்­கியம் , சமா­தானம் , சக­வாழ்வு , சகோ­த­ரத்­துவம் , போன்ற விழு­மி­யங்­களை தன்­ன­கத்தே கொண்­டது என்­ப­தனை கியாமத் நாள் வரை­யி­லான முழு உலக மக்­க­ளுக்கும் சென்­ற­டையும்  படி அந்த நாளிலே உரைத்­தார்கள். 

அப்­துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள் நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது ஸஹா­பாக்­களை நோக்கி, 
இது எந்த நாள் என்­பதை நீங்கள் அறி­வீர்­களா? எனக் கேட்­டார்கள். அதற்கு மக்கள் அல்­லாஹ்வும் அவன் தூத­ருமே நன்­க­றிவர்!  என்­றனர். உடனே அவர்கள் இது புனி­த­மிக்க தின­மாகும்!

இது எந்த நகரம் என்­பதை நீங்கள் அறி­வீர்­களா? என்று கேட்க மக்கள் அல்­லாஹ்வும் அவன் தூத­ருமே நன்­க­றிவர்! என்­றனர் அவர்கள் (இது) புனி­த­மிக்க நக­ர­மாகும்!'' என்­றார்கள். 

பிறகு நபி (ஸல்) அவர்கள் இது எந்த மாதம் என்­பதை அறி­வீர்­களா? என்­றதும் மக்கள் அல்­லாஹ்வும் அவ­னது தூத­ருமே நன்­க­றிவர் என்­றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது புனி­த­மிக்க மாத­மாகும் எனக் கூறி­விட்டு உங்­க­ளு­டைய இந்த புனித நக­ரத்தில் உங்­க­ளு­டைய இந்த புனித மாதத்தில் உங்­க­ளு­டைய இந்த நாள் எவ்­வ­ளவு புனி­த­மா­னதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்­க­ளையும் உடை­மை­க­ளையும் உங்கள் மானம் மரி­யா­தை­க­ளையும் புனி­த­மாக்­கி­யுள்ளான்! எனக் கூறி­னார்கள்.

மற்றோர் அறி­விப்பில் நபி (ஸல்) அவர்கள் தாம் ஹஜ் செய்த போது நஹ்­ரு­டைய நாளில் ஜம்­ராக்­க­ளுக்கு மத்­தியில் நின்று கொண்டு இது மிகப் பெரிய ஹஜ்ஜின் தின­மாகும்'' என்று கூறி­னார்கள்.

மேலும் இறைவா! நீயே சாட்சி!'' என்று கூறி மக்­க­ளிடம் இறுதி விடை பெற்­றார்கள்.

எனவே மக்­களும் இது (நபி­ய­வர்கள் உலகை விட்டு) விடை பெற்றுச் செல்­கின்ற ஹஜ்­ஜாகும்'' என்று பேசிக் கொண்­டார்கள். நூல்: புகாரி 1742 நபி­க­ளாரின் புனித இறுதி உரையின் ஆரம்­பப்­ப­குதி மனித உயிர்கள், உடை­மைகள் , மானம் மரி­யா­தைகள் , போன்­றவை இந்த புனித நக­ரத்தில் இந்த புனித மாதத்தில் இந்த நாள் எவ்­வ­ளவு புனி­த­மா­னதோ அது போலவே புனி­த­மா­னவை என்று பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். 

இன்று உலகில் மனித உயிர்கள் விலை மதிப்­பற்ற செல்லாக் காசு­களாய் மாறி கொலை செய்­பவன் நான் ஏன் கொலை செய்தேன் என்­ப­தனைத் தெரி­யா­த­வ­னா­கவும் கொலை செய்­யப்­பட்­டவன் நான் ஏன் கொலை செய்­யப்­பட்டேன் என்­பதைத் தெரி­யாத நிலை­யி­லுமே பெரும்­பா­லான கொலைகள் நிகழ்­கின்­றன, ஆனால் இஸ்லாம் அன்றே மனித உயிர்கள் யாவும் புனி­த­மா­னவை என்று மனித உயிர்­களை புனி­தமாய் மதிக்­கும்­படி போதித்­துள்­ளது, 

 'எவ­னொ­ருவன் மற்­றொரு ஆத்­மாவைக் கொலை செய்­த­தற்குப் பிர­தி­யா­கவோ அல்­லது பூமியில் குழப்­பத்தைத் தடை செய்­வ­தற்­கா­கவோ அன்றி (அநி­யா­ய­மாகக்) கொலை செய்­கி­றானோ அவன் மனி­தர்கள் யாவ­ரையும் கொலை செய்­தவன் போலா­கின்றான்.

அன்றி எவன் ஒரு ஆத்­மாவை வாழ வைக்­கி­றானோ, அவன் மனி­தர்கள் யாவ­ரையும் வாழ வைத்­தவன் போலாவான்'. (5:32)
ஒருவர் ஒரு உயிரைக் கொலை செய்­வது முழு மனித வர்க்­கத்­தையும் கொலை செய்­த­தற்கு சம­மா­னது என்று அல்­குர்ஆன் மிகத்­தெ­ளி­வாக சுட்­டிக்­காட்­டு­கி­றது.

போர்­க­ளத்­திலும் கூட மனித உயிர்­களை மதிக்க கற்­று­க்கொ­டுத்­தது இஸ்லாம் பொது­வாக போர் என்று வந்து விட்டால் அக்­கா­லத்தில் இருந்து இக்­காலம் வரை உலகம் எந்த மனி­தா­பி­மான மர­பு­க­ளையும் மதிப்­ப­தில்லை .

ஆனால் இதில் இஸ்லாம் விதி விலக்­கா­னது . இறை தூதர் (ஸல்) அவர்கள் போருக்கு செல்லும் தங்கள் படை வீரர்­க­ளுக்கு அழுத்­த­மான இரண்டு அறி­வு­ரை­களை பகிர்ந்­துள்­ளார்கள் .

1.போர் செய்­வ­தற்கு தகுதி இல்­லாத பெண்­களை , குழந்­தை­களை ,வயோ­தி­கர்­களை ,நோயா­ளி­களை கொல்­லா­தீர்கள் .

2.எதி­ரா­ளிகள் சமா­தா­னத்­திற்கு இணங்கி வந்து விட்டால் போரை நிறுத்தி விடுங்கள் .அதன் பிறகு அத்துமீறி தாக்கிக் கொள்­ளா­தீர்கள் (நூல்: புகாரி) 

மனித உயிர்­க­ளுக்கு மாநபி [ஸல்] அவர்கள் மதிப்­ப­ளித்த கார­ணத்­தினால் தான் மேற்­கூ­றிய உப­தே­சத்தை சொன்­ன­தோடு மட்­டு­மல்­லாமல் தங்கள் வாழ்க்­கையில் நடை­முறை படுத்­தியும் காட்­டி­னார்கள் - -(புகாரி -3587-3566) 

யார் ஒருவர் வேண்­டு­மென்றே ஒரு முஃமினைக் கொலை செய்­வது நிரந்­தர நர­கத்தைப் பெற்­றுத்­தரும் செய­லா­கவே அல்­குர்ஆன் அடை­யாளப்படுத்­தி­யுள்­ளது ,நியா­ய­மற்ற முறையில் ஒரு உயிரைக் கொலை செய்­தவன் மிகப்­பெ­ரிய குற்­ற­வாளி என்­ப­த­னையும் அவர் பிற மனித உயிரைக் கொலை செய்­த­மைக்­காக அவ­ரது உயிரும் போக்­கப்­பட வேண்டும் என்­ப­தனை இஸ்லாம் சட்­ட­மாகக் கொண்டு மனித உயிர்­களை வாழ வைக்­கி­றது. 

பிற மனி­தனின் உட­மைகள் , மானம் மரி­யா­தைகள் புனி­த­மா­னவை என்­ப­தையும் நபி­க­ளாரின் இறு­திப்­பே­ரு­ரையின் ஆரம்­பப்­ப­குதி சுட்­டி­நிற்­கி­றது, 

அபூ­ஹு­ரைரா (ரழி) அறி­விக்­கி­றார்கள் அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்:

நீங்கள் மற்­றவர் மீது பொறாமை கொள்­ளா­தீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்­ப­தற்­காக விற்­பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்­கா­தீர்கள். கோபம் கொள்­ளா­தீர்கள்.

பிணங்கிக் கொள்­ளா­தீர்கள். ஒருவர் வியா­பாரம் செய்து கொண்­டி­ருக்­கும்­போது மற்­றவர் தலை­யிட்டு வியா­பாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்­லாஹ்வின் அடி­யார்­களே! (அன்பு காட்­டு­வதில்) சகோ­த­ரர்­களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் மற்­றொரு முஸ்­லி­முக்குச் சகோ­தரர் ஆவார்.

அவர் தம் சகோ­த­ர­ருக்கு அநீ­தி­யி­ழைக்­கவோ, அவ­ருக்குத் துரோ­க­மி­ழைக்­கவோ, அவரைக் கேவ­லப்­ப­டுத்­தவோ வேண்டாம்.

இறை­யச்சம் (தக்வா) இங்கே இருக்­கி­றது. (இதைக் கூறி­ய­போது) அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்­தார்கள். ஒருவர் தம் சகோ­தர முஸ்­லிமைக் கேவ­லப்­ப­டுத்­து­வதே அவ­ரு­டைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும். (முஸ்லிம் (50,10)

மனித உயிர்கள், உடைமைகள் , மானம் மரியாதைகள் போன்ற விடயத்தில் இஸ்லாம் எவ்வளவு தூரம் பிரயத்தனத்துடன் போதனைகளை மனித சமூகத்துக்கு முன்வைத்துள்ளது என்பதனை மிம்பர்கள் முழங்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும். 

மனித நேயத்தைப் பறைசாற்றும் இறுதி நபியின் இறுதிப் பேருரையின் அடுத்த பகுதியை அடுத்த இதழில் நோக்குவோம்.