Verified Web

உழ்ஹிய்யா எனும் வணக்கத்தில் பேணப்பட வேண்டிய ஒழுக்கங்கள்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2016-09-13 14:06:58 T.M.Mufaris Rashadi

உ­ழ்ஹிய்யா என்ற வணக்கம் அனைத்து மனி­தர்­களும் பெருநாள் தினங்­களில் சந்­தோ­ஷ­மாக இருப்­ப­தற்கே விதி­யாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது, 
அந்த வகையில் இஸ்­லா­மிய சட்­ட­வி­திகள் முஸ்­லிம்­க­ளுக்கு சந்­தோ­ஷத்­தையும் மகிழ்ச்­சி­யையும் வழங்கும் அதே நேரம் முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளுக்கு தொந்­த­ர­வாக அமையும் பட்­சத்தில் அந்த வணக்கம் குறை­பா­டுள்­ள­தா­கவே இஸ்­லாத்தில் கரு­தப்­ப­டு­கி­றது. 

உழ்­ஹிய்­யாவின் உன்­னத இலக்­கு­களை அடைந்து கொள்­வ­தற்கு அதனை ஊரின் தலைமை பள்­ளி­வா­ச­லி­னூ­டாக கூட்­டாக கொடுப்­பதே சிறந்த வழி­யாகும். குடும்­பத்தில் ஏழை­களை ஒதுக்கி விட்டு வசதி படைத்­த­வர்கள் மட்டும் உழ்­ஹிய்­யாவை  தமக்­குள்ளே பங்கு வைத்­துக்­கொள்­வ­தாலும் தமக்குள் மாத்­திரம் சந்­தோ­ஷங்­களை பரி­மாறிக் கொள்­வ­தாலும் ஒரு பொழுதும் அதன் நன்­மையை முழு­மை­யாக அடைந்து கொள்ள முடி­யாது. 

பள்­ளி­வா­சலில் கூட்­டாக கொடுக்­கின்ற போது பிற மத சகோ­த­ரர்­களின் உணர்­வு­களை காயப்­ப­டுத்தி தாம் மட்டும் சந்­தோ­ஷ­மாக இருக்க நினைப்­ப­துவும் இதன் உன்­னத இலக்­கு­களை அடைந்து கொள்­வதை விட்டும் எம்மை தூர­மாக்கி விடு­கின்­றது. 

ஊர் ஒற்­றுமை என்ற அடிப்­ப­டையில் பள்­ளி­வா­சல்­களை மையப்­ப­டுத்தி குர்­பானி கொடுக்க முயலும் போது அங்கு மாடு­களை அதி­க­மாக கட்டி வைக்க வேண்­டி­யேற்­படும், இது மாற்று மத சகோ­த­ரர்­க­ளுக்கு வெறுப்பை ஏற்­ப­டுத்­தலாம் அந்த வெறுப்பு இஸ்லாம் பற்­றிய தப்­பான பார்­வையை அவர்­க­ளி­டத்தில் விதைத்­து­விட அதிக வாய்ப்­பி­ருக்­கி­றது. 

எனவே முடி­யு­மான வரை உழ்­ஹிய்யா பிரா­ணியை பிற மத சகோ­த­ரர்கள் பார்க்க முடி­யாத மறை­வான இடத்தில் அறுப்­பது நல்­லது. பெருநாள் தவிர்ந்த அய்­யாமுத் தஷ்­ரீக்­கு­டைய நாட்­களில் நில­மை­களை அவ­தா­னித்து சூரியன் உத­ய­மாக முன்­னரும் அது மறைந்த பின்­னரும் இறைச்­சி­களை விநி­யோ­கிப்­பது பற்றி முடி­வெ­டுக்க வேண்டும். மேலும் உழ்­ஹிய்யா கொடுக்­கும்­போது அரச விதி­மு­றை­களை மீறாது நடந்­து­கொள்­ள­வேண்டும்.

உழ்­ஹிய்யா பிரா­ணி­களை கொண்டு வரு­வதில் சிரமம் ஏற்­பட்டால் விற்­ப­வரின் இடத்­தி­லேயே வைத்து அறுத்து இறைச்­சியை மறை­வான பைக­ளி­லிட்டு கொண்டு செல்ல வேண்டும், 

ஆடு மாடு­களை கொண்­டு­வ­ருதல், கட்­டி­வைத்தல், அறுத்தல், பங்­கிடல், துப்­ப­ரவு செய்தல், விநி­யோ­கித்தல், போன்ற எல்லாக் கட்­டங்­க­ளையும் பிற மத சகோ­த­ரர்­களின்  பார்­வை­யி­லி­ருந்து முடி­யு­மா­ன­வரை மறைத்­தே­ செய்ய வேண்டும். 

இஸ்லாம் சுத்­தத்­திற்கு அதிக முக்­கி­யத்­துவம் வழங்­கு­கின்­றது என்ற வகையில் ஆடு மாடு போன்­ற­வற்றை அறுப்­ப­தனால் வெளி­யே­றக்­கூ­டிய இரத்­தத்தை நன்­றாக தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும்.

அத்­துடன் அவற்றின் கழி­வு­களை நிலத்தில் குழி தோண்டி புதைக்க வேண்டும். அல்­லது நன்­றாக பைகளில் வைத்து கட்டி பொதி செய்து குப்பை அள்­ளு­வோ­ரிடம் கைய­ளிக்க வேண்டும். கண்ட கண்ட இடங்­களில் வீச­வி­டாது பார்த்துக் கொள்ள வேண்டும்,

மேலும் அவை­களை குப்­பைக்குள் வீசுவோர் நாற்றம் எடுக்­காத வகையில் பொதி செய்து அவற்றை வீச வேண்டும். சூழலை மாசு­ப­டுத்­தாது அடுத்து வரும் ஆண்­டு­களில் நமது அசிங்­க­மான செயற்­பா­டு­களால் இந்த வணக்­கத்­திற்கே தடை­யேற்­ப­டா­தி­ருக்க இவ்­வ­ரு­டத்தின் செயற்­பா­டு­களை நல்ல முறையில் மேற்­கொள்ள வேண்டும். 

அத்­தோடு முஸ்­லி­மல்­லாத சகோ­த­ரர்­க­ளா­கிய நம் அய­ல­வர்கள், ஊர்­வா­சிகள், உற­வி­னர்கள் என்று எம்­மோடு கலந்து  வசிக்கும் முஸ்­லி­மல்­லாத சகோ­த­ரர்­க­ளுக்கு அவர்கள் விரும்பும் பட்­சத்தில் இன நல்­லு­றவைப் பேணும் நோக்­குடன்  உழ்­ஹிய்யா இறைச்­சியை வழங்க முடியும் என்­பதே பொருத்­த­மான நிலைப்­பா­டாகும். 

முஜாஹித் ரஹி­ம­ஹுல்லாஹ் கூறு­கி­றார்கள் அப்­துல்லாஹ் இப்னு அம்ரு ரழி­யல்­லாஹு அன்ஹு அவர்­க­ளது குடும்­பத்தில் ஆடு அறுக்­கப்­பட்­டது. அவர் வீடு வந்­த­வுடன் எனது யூத அய­ல­வ­ருக்கு இதி­லி­ருந்து வழங்­கி­னீர்­களா? எனது யூத அய­ல­வ­ருக்கு இதி­லி­ருந்து வழங்­கி­னீர்­களா? என இரு­முறை கேட்­டு­விட்டு நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அண்டை அய­ல­வர்கள் பற்றி ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் எனக்கு வலி­யு­றுத்திக் கூறி­னார்கள்.

அவரை எனக்கு அனந்­த­ரக்­கா­ர­ராக ஆக்கி விடு­வாரோ என்று நான் அஞ்சும் அள­விற்கு எனக் கூறி­னார்கள் (- திர்­மிதி 1943)
அல்­லாமா அல்­பானி அவர்கள் இந்த செய்­தியின் அறி­விப்­பாளர் வரிசை பல­மா­னது எனக்­கூ­றி­யுள்­ளார்கள், 
இப்னு குதாமா ரஹி­ம­ஹுல்லாஹ் கூறு­கி­றார்கள் - முஸ்­லி­மல்­லா­த­வர்கள், சிறைக்­கை­திகள், திம்­மிக்­க­ளுக்கு ஏனைய ஸத­காக்கள் வழங்­கு­வது போன்று உழ்­ஹிய்யா இறைச்­சி­யையும் வழங்க முடியும்.  (நூல் : அல்­முக்னீ 9/450)

பதாவா அல்­லஜ்­னதுத் தாயி­மாவின்  (11/424) தீர்ப்பின் படி முஸ்­லிம்­க­ளோடு இணங்கிப் போகும் இறை நிரா­க­ரிப்­பா­ளர்­க­ளுக்கும் சிறைக் கைதி­க­ளுக்கும், அய­ல­வர்கள், இஸ்­லாத்தின் பால் ஈர்க்­கப்­ப­டு­பவர்கள், உற­வி­னர்கள் போன்ற கார­ணியை வைத்து உழ்­ஹிய்யா இறைச்­சியை அவர்­க­ளுக்கு வழங்க முடியும். 

முப்­தியுல் மதீனா அல்­லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ் ரஹி­ம­ஹுல்லாஹ் அவர்கள் முஸ்­லிம்­க­ளோடு போர் தொடுக்­காத காபிர்­க­ளாக இருக்கும் பட்­சத்தில் அவர்­க­ளுக்கு உழ்­ஹிய்யா இறைச்­சியை வழங்க முடியும் என தீர்ப்பு வழங்­கி­யுள்­ளார்கள். ( மஜ்­மூஉ பதாவா இப்னு பாஸ் - (48/18)

முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளுக்கு உழ்­ஹிய்யா இறைச்­சியை வழங்கக் கூடாது என்று தடை செய்யக்கூடிய தெளிவான ஒரு நஸ் இல்லாமையின் காரணமாகவும் இலங்கை போன்ற முஸ்லிம் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் இன நல்லுறவைப் பேணும் நோக்குடன் அயலவர்கள், ஊர்வாசிகள், உறவினர்களாக எம்மோடு வசிக்கும் முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்க முடியும் என்பதே பொருத்தமான நிலைப்பாடாகும். 

நாம் மகிழ்வுற்று நம்மால் பிறரும் மகிழ்வுறும் இப்புனித தினங்களில் இறைவனின் திருப்பொருத்தத்தை இலக்காகக் கொண்டு இந்த வணக்கத்தில் பேண வேண்டிய மேற்சொன்ன ஒழு­ங்­குகளையும் கடைப்பிடிப்போமாக.