Verified Web

இஸ்லாத்தில் பால் சமநிலை

2016-09-07 17:32:23 M.I.M.Nufail

சட்டம் மற்றும் உரி­மைகள் தொடர்­பான விழிப்பு நிலையும், அது தொடர்பில் பரந்­து­பட்ட அள­வி­லான அறி­வூட்டல் முயற்­சி­களும் நிறு­வ­ன­ம­யப்­பட்டு மிகப்­ப­ல­மா­கவும், முறை­யியல் சார்ந்தும் இருப்­பதை சம­கா­லத்தில் காணலாம்.இந்­நிலை முன்­னொ­ரு­போதும் இல்­லாத அள­விற்கு கூர்­மை­ய­டைந்­தி­ருப்­பது உண்மை என்­ப­துபோல் உலகில் அதற்­கான தேவை இல்­லா­ம­லு­மில்லை. இதன் பிர­தான அம்­ச­மாக மனித உரி­மைகள் தொடர்­பான விழிப்­பு­ணர்வும், சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­களும் அவை பாது­காக்­கப்­ப­டு­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டு­களும் வகுக்­கப்­பட்டு, மீறல்­களைக் கண்­கா­ணிக்­கின்ற ஏற்­பா­டு­களும் நடை­மு­றை­யி­லுள்­ளன.

தனி நபரோ, அல்­லது அர­சாங்­கமோ உரிமை மீறல் தொடர்பில் குற்­றவா­ளி­யாக நிரூ­ப­ண­மா­கி­ற­போது சர்­வ­தே­ச­ரீ­தி­யான தண்­ட­னைக்­கான ஏற்­பா­டு­களும் உள்ளன. சர்­வ­தேச மனித உரிமை சம­வாயம் மற்றும் அது தொடர்­பி­லான ஏனைய சாச­னங்­களும் இப்­ப­டி­யா­ன­தொரு கட்­ட­மைப்­பி­னையே கொண்­டி­யங்­கு­கின்­றன. அதிலும் குறிப்­பாக, சிறுவர் மற்றும் பெண்­க­ளுக்­கான உரி­மைகள் என்­கிற பகுதி மிக முக்­கி­யத்­துவம் பெற்றுத் தனி­யான விஷேட செயற்­பாட்டுக் களங்­க­ளா­கவும் மாறி­வ­ரு­கின்­றன.

இந்தப் பின்­ன­ணியில் குறிப்­பாக பெண்­களின் உரி­மைகள் சார்ந்து எழுந்­தி­ருக்கும் வாதப்­பி­ர­தி­வா­தங்­களை மன­திற்­கொண்டு, முஸ்லிம் பெண்ணின் உரிமைகள் சமூ­க-­ம­ர­புசார் புரி­த­லுக்கும் இஸ்­லா­மிய சட்­ட­வி­யலின் இலக்­குசார் (Objective Based)  பார்­வையில் எழும் புதிய புரி­தல்­க­ளுக்கும் இடையில் எவ்­வாறு விளக்­கப்­ப­டலாம் என்­பதை இக்­கட்­டுரை உரை­யாட முனை­கி­றது. முக்­கிய­மான சில உதா­ர­ணங்கள் மட்டும் இங்கு விவா­தத்­திற்­காக எடுத்­தா­ளப்­ப­டு­கின்­றன.

மனித உரிமை சம­வா­யத்தின் அடிப்­ப­டையில் பெண்­க­ளுக்கு கொடுக்­கப்­பட வேண்­டிய உரி­மைகள் என்ற ஒரு பகுதி இணைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தப்­ப­கு­தியில் சொல்­லப்­பட்­டி­ருக்கும் உரி­மை­க­ளினை மகளிர் அனு­ப­விப்­ப­தனை உறு­தி­செய்­ய­வேண்டும் என்­பதில் அனைத்து மதத்தை சேர்ந்­த­வர்­களும் ஒற்­று­மைப்­ப­டு­கின்­றனர். இருந்த போதிலும் இஸ்­லா­மிய மார்க்கம் மாத்­திரம் பெண்­க­ளு­டைய உரி­மைகள் தொடர்­பான விட­யத்தில் இறுக்க நிலை­யி­னையும் பிற்­போக்கு வாதத்­தி­னையும் கடைப்­பி­டிக்­கின்­றது என்ற பர­வ­லான குற்றச் சாட்டு தேசிய ரீதியில் மாத்­தி­ர­மல்ல சர்­வ­தேச ரீதி­யிலும் இருப்­பதை அவ­தா­னிக்­க முடி­கி­றது. இதனை மையப்­ப­டுத்தி பல்­வே­று­பட்ட பிரச்­சார நட­வ­டிக்­கைகள் இஸ்­லா­மிய மார்க்­கத்­திற்கு எதி­ராக இடம்­பெற்று வரு­கின்­றன. அதிலும் கவ­னிக்­கத்­தக்க விடயம் இப்­ப­டி­யான இஸ்­லா­மிய மார்க்­கத்­திற்கு எதி­ரான செயற்­பா­டு­களில் மார்க்கம் தொடர்­பான குறை அறி­வுள்ள புத்­தி­ஜீ­வி­களும் இணைந்து செயற்­ப­டு­வ­தாகும். ஆனால் முழு மனித சமு­தா­யத்தின் ஒட்­டு­மொத்த உரி­மையை பாது­காத்­த­வ­ராக நபி (ஸல்) அவர்­களை நாம் குறிப்­பிட முடியும்.

அதிலும் குறிப்­பாக பெண்­களின் உரி­மைகள் என்ற விட­யத்தில் நபி­ய­வர்கள் மிகவும் கவ­ன­மாக செயற்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை இஸ்­லா­மிய வர­லாற்றில் பார்க்க முடியும்.

இஸ்­லா­மிய மார்க்கம் பெண்­களின் உரி­மைகள் விட­யத்தில் குறை விடு­கின்­றது என்று குறிப்­பி­டு­கின்­ற­வர்கள் ஆண்­க­ளுக்கு எந்­த­ள­வுக்கு அனைத்து விட­யங்­க­ளையும் செய்­வ­தற்கு சுதந்­திரம் இருக்­கின்­றதோ அதே­அ­ளவு சுதந்­திரம் பெண்­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்டும் என்று கரு­து­கின்­றனர்.

இருந்த போதிலும் இவர்­களின் இந்தக் கருத்­தி­னூ­டாக ஒரு விட­யத்­தினை மறந்து விடு­கின்­றனர். அதா­வது ஒவ்­வொரு படைப்­பி­னமும் அவற்றின் இயல்­புக்கு ஏற்­பவே செயற்­படும்.

எனவே ஆண்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் இயல்­பு­க­ளுக்கும் பெண்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் இயல்­பு­க­ளுக்கும் பல வித்­தி­யா­சங்கள் காணப்­ப­டு­கி­றன. எனவே இஸ்­லா­மிய மார்க்கம் மனித இயல்­புடன் ஒன்­றித்து போகக் கூடிய மார்க்கம் என்ற வகையில் அவ­ரது இயல்­புக்கு பொருத்­த­மான உரி­மை­க­ளையும், பொறுப்­புக்­க­ளையும் அவற்­றுக்­காக முழு­மை­யான செயற் சுதந்­தி­ரத்­தையும்தான் இஸ்லாம் வழங்­கி­யி­ருக்­கின்­றது.

எனவே ஆண்­க­ளி­ட­மி­ருந்து அல்லாஹ் எதிர்­பார்க்கும் விட­யங்­களை பெண்­க­ளி­ட­மி­ருந்து எதிர்­பார்க்­க­மாட்டான். அதே­போல பெண்­க­ளி­ட­மி­ருந்து எதிர்­பார்க்கும் விட­யங்­களை ஆண்­க­ளி­ட­மி­ருந்தும் எதிர்­பார்க்க மாட்டான். ஆணையும் பெண்­ணையும் அல்லாஹ் வித்­தி­யா­ச­மாக படைத்­தி­ருப்­ப­தற்­கான நோக்கம் அவர்­க­ளி­ட­மி­ருந்து இயல்­புக்­கேற்ப வேறு­பட்ட செயல்­பா­டு­க­ளையும் அதன் விளை­வு­க­ளையும் எதிர்­பார்ப்­ப­தாகும். இந்த யதார்த்­தத்தை நாம் விளங்­கிக்­கொள்­கின்ற போதுதான் இஸ்லாம் பெண்­க­ளுக்கு கொடுத்­துள்ள அந்­தஸ்த்தை நாம் விளங்­கிக்­கொள்ள முடியும்.

இஸ்லாம் பெண்­களை எவ்­வாறு நடாத்­து­கின்­றது? அல்­லது இஸ்லாம் அநி­யாயம் இழைக்­கின்­றதா? என்ற வாதத்தை தொட­ரு­வ­தற்கு முன் இஸ்­லா­மிய மார்க்கம் இறங்கப் பெற்ற கால சூழலை அவ­தா­னிப்­பது பொருத்­த­மாகும். இஸ்லாம் என்ற புனித மார்க்கம் அரு­ளப்­பெ­று­வ­தற்கு முன் வாழ்ந்த காலம் ஜாஹி­லிய்­யா­காலம் என்று அழைக்­கப்­படும்.

இந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் பெண்­களை எவ்­வாறு நடாத்­தி­னார்கள் என்­பதை வர­லாறு எமக்குக் கற்றுத் தரு­கி­றது. இந்த காலத்தில் பெண்கள் ஓர் உயி­ரி­ன­மாக கூட கரு­தப்­ப­ட­வில்லை என்­பதே உண்மை. அந்­தக்­கா­லத்து மக்­க­ளிடம் இருந்த ஏனைய பிரா­ணி­க­ளுக்கு இருந்த பெறு­மதி கூட பெண்­க­ளுக்கு இருக்க வில்லை. பிரா­ணி­களை கவ­னித்த அள­வுக்குக் கூட பெண்­களை இந்தக் காலத்து மக்­களால் பார்க்­க­மு­டி­ய­வில்லை. அது­மாத்­தி­ர­மில்­லாமல் பெண்­களை பௌதீக ரீதி­யிலும் மான­சீக ரீதி­யிலும் பாதிப்­புக்­குட்­ப­டுத்­தி­னார்கள். அதே­போல அவர்­க­ளது ஆசைகள் புறக்­க­ணிக்­கப்­பட்­டன. அவர்­க­ளாது உணர்­வுகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. இந்த கொடு­மை­களின் உச்சக் கட்டம் தான் பெண்­பிள்­ளை­களை உயி­ருடன் புதைத்த செய­லாகும். பெண்­பிள்­ளைகளை தம் வாழ்க்­கைக்­கான அப­கீர்த்­தி­யாக பார்த்­தார்கள். எவ­ருக்­கா­வது பெண்­பிள்­ளைகள் பிறக்­கு­மாக இருந்தால் அவரை ஓரக்­கண்­கொண்டே பார்த்­தார்கள்.

அதே­போல கணவன் மனை­வி­யாக வாழ்ந்து கொண்டு இருக்கும் போது ஒரு­வ­ரது மனை­விக்கு மாத­விடாய் வந்­து­விடும் என்­றி­ருந்தால் அவ­ளது கணவன் அவளை நெருங்­கவே மாட்டான். அவளை தொட­வும்­மாட்டான். அவ­ளுடன் உரை­யா­டு­வ­தையோ அல்­லது அவ­ளுடன் உட்­கார்ந்து சாப்­பி­டு­வ­தையோ விரும்ப மாட்டான். எனவே இவர்­க­ளது பார்­வையில் மாத­விடாய் வந்த பெண்கள் தீண்­டத்­த­கா­த­வர்­க­ளா­கவே கரு­தப்­பட்­டனர். இப்­படி பெண்­க­ளுக்கு முழுக்க முழுக்க அநி­யாயம் இழைக்­கப்­பட்ட; பெண்­க­ளுக்கு எந்­த­வித அந்­தஸ்தும் பெறு­மா­னமும் வழங்­கப்­ப­டாத காலத்தில் தான் இஸ்­லா­மிய மார்க்கம் அரு­ளப்­பெற்­றது.

எப்­படி இஸ்லாம் அறி­வு­பூர்­வ­மான சமூ­க­மொன்றை உரு­வாக்­கு­வதை இலக்­காக கொண்­டுள்­ளதோ அதே­போல பெண்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­களை துடைத்­தெ­றி­வ­தையும் இலக்­காக கொண்­டுள்­ளது. மாத்­தி­ர­மன்றி இஸ்­லா­மிய சிந்­த­னையின் நோக்கில் மனித  வாழ்­வினைக் கட்­ட­மைக்கும் சட்­ட­ஒ­ழுங்கின் மிக அடிப்­படை   இலக்­கு­க­ளாக கரு­தப்­படும் விட­யங்­க­ளினுள் நீதி வழங்கல்  (Justice) , மனித கௌரவம் பாது­காக்­கப்­படல் (Protecting Human Dignity)  போன்­றன மிக முன்­னிலை வகிக்கும் இலக்­கு­க­ளாகும் என்­ப­தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்­பின்­ன­ணி­யில்­லாத போதுதான் பெண்­களின் விட­யத்தில் நீதி­யாக நடந்து கொள்­கின்ற மார்க்­கத்தை சம­கா­லத்து பெண்­வி­டு­தலை கருத்­தியல் செயற்­பாட்­டா­ளர்கள் குறை­கா­ணு­கின்­றனர். இப்­படி பெண்கள் தொடர்­பாக இஸ்­லாத்தின் சரி­யான நிலைப்­பாட்டை பிழை­யாக விளங்­கி­கொள்ளக் காரணம் மேற்படி விடயம் தொடர்­பான அல்­குர்­ஆ­னிய மூல வச­னங்­களை பிழை­யாக அர்த்­தம்­கொண்­ட­தே­யாகும்.

இங்கு நாம் சில முக்­கிய உதா­ர­ணங்­களை மாத்­திரம் நோக்­கு­வ­த­னூ­டாக பிழை­யான பொருள்­கோ­டலை தெளி­வாக அடை­யாளம் காண முயற்­சிக்­கிறோம். அத­னூ­டாக இஸ்லாம் பெண்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள அதி உயர் பெறு­மா­னங்­க­ளி­னையும் ( Higher  Values) புரிந்து கொள்­வது சாத்­தி­யப்­படும்

1.- பெண்கள் படைக்­கப்­பட்ட விதம்
இந்த விட­யத்­தினைப் பொறுத்­த­வ­ரையில் பொது­வாக பெரும்­பா­லான மனி­தர்­க­ளிடம் இருக்­கு­மொரு கருத்து பெண்கள் ஆண்­களின் விலா எலும்­பி­லி­ருந்து படைக்­கப்­ப­டுள்­ளார்கள் என்­ப­தாகும். ஆனால் இக் கருத்­தா­னது அல்­குர்­ஆ­னிய கருத்­துக்கு நேர் முர­ணா­ன­தாகும் என்­பது அஷ்ஷைக் ராஷித் அல் கன்­னூஷி, அஷ்ஷைக் முஹம்­மது அப்­துஹ போன்ற நவீன கால சிந்­த­னை­யா­ளர்­க­ளி­னதும் இமாம் அர்­ராஸி போன்ற பழைய இமாம்­க­ளி­னதும் கருத்­தாகும். இவர்கள் தம் கருத்­துக்கு கீழ்­வரும் அல்­கு­ரா­னிய வச­னத்தை ஆதா­ர­மாக கொள்­கின்­றனர்.

 மனி­தர்­களே! உங்கள் இறை­வ­னுக்குப் பயந்து நடந்து கொள்­ளுங்கள், அவன் உங்கள் யாவ­ரையும் ஒரே ஆத்­மா­வி­லி­ருந்து படைத்தான், அவ­ரி­லி­ருந்தே அவர் மனை­வி­யையும் படைத்தான்; பின்னர் இவ்­வி­ரு­வ­ரி­லி­ருந்து, அநேக ஆண்­க­ளையும் பெண்­க­ளையும் (வெளிப்­ப­டுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்­லாஹ்­வுக்கே பயந்து கொள்­ளுங்கள்; அவ­னைக்­கொண்டே நீங்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் (தமக்­கு­ரிய உரி­மை­களைக்) கேட்டுக் கொள்­கி­றீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்­பு­டைய உற­வி­னர்­க­ளையும் (ஆத­ரி­யுங்கள்) - நிச்­ச­ய­மாக அல்லாஹ் உங்கள் மீது கண்­கா­ணிப்­ப­வ­னா­கவே இருக்­கின்றான். சூறதுந் நிஸா 01

இந்த வச­னத்­தி­னூ­டாக அல்லாஹ் சொல்­லு­கின்ற மிக முக்­கி­ய­மான விடயம்; படைப்­புக்கள் எப்­போதும் சோடியாகப் படைக்­கப்­பட்­டுள்­ளன.

எந்த படைப்பும் தனது சோடி­யில்­லாமல் படைக்­கப்­ப­ட­வில்லை. அது­மாத்­தி­ர­மில்­லாமல் ஆணை அல்லாஹ் எப்­படி படைத்­தானோ அதேபோல் அல்லாஹ் பெண்­ணையும் படைத்­தி­ருக்­கின்றான் என்­பது இந்த வச­னத்தின் மூல­மாக விளங்க முடி­யு­மான கருத்­தாகும். எனவே ஆணின் விலா எலும்­பி­லி­ருந்து பெண் படைக்­கப்­பட்­டி­ருக்­கிறாள் என்ற கருத்து இந்த அல்­கு­ர் ஆ­னிய வச­னத்தின் கருத்­துக்கு முரணாக உள்­ளது.

எனவே அல்லாஹ் ஆணை எவ்­வாறு படைத்­தானோ அதே­மா­தி­ரிதான் பெண்­ணையும் படைத்­தி­ருக்­கிறான் என்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யு­மான கருத்­தாகும்.

2-. நபித்­துவம் வழங்­கப்­பட்­டதில் ஆண்­களும் பெண்­களும் உள்­வாங்­க­ப்பட்­டுள்­ளனர்.
இஸ்­லாத்தின் பார்­வையில் ஆண் பெண் என்ற இரு­பா­லாரும் அல்லாஹ்வின் பிர­தி­நி­தி­க­ளாக கரு­தப்­ப­டுவர். இரு­பா­லா­ருக்கும் அவர்கள் செய்த நன்­மை­க­ளுக்கு ஏற்­ற­வ­கை­யிலே தான் கூலியும் வழங்­கப்­படும். பால் வித்­தி­யாசம் என்­ப­தற்­காக அவர்­க­ளது கூலி­களில் எந்­த­வி­த­மான பாகு­பாடும் இருக்­காது.

எனவே அல்லாஹ் மனி­தர்­க­ளிடம் இருந்து எதிர்­பார்க்­கின்ற அதி­உயர் பணி­யாக அவ­னு­டைய மார்க்­கத்தை எத்­தி­வைக்கும் பணி காணப்­ப­டு­கி­றது.

இதில் அல்லாஹ் தனது கண்­கா­ணிப்பின் கீழ் ஒரு சில மனி­தர்­களை நிய­மித்து அவர்­க­ளுக்கு தன்­னு­டைய கட்­ட­ளை­களை நேர­டி­யாக வழங்கி இந்தப் பணி செவ்­வனே நடப்­ப­தற்கு எல்லா வகை­யிலும் உதவி செய்­கின்றான். இதில் ஆண்­க­ளி­டமும் பெண்­க­ளி­டமும் எதிர்­பார்க்­கின்ற பணி ஒன்று என்­பதன் கார­ண­மாக அல்லாஹ்வின் கட்­ட­ளைகள் இரு­வ­ருக்­குமே கொடுக்­கப்­பட வேண்டும் என்­பதே நியாயம்.

ஆனால், நபித்­துவம் எப்­போதும் ஆண்­க­ளுக்கு மட்டும் தான் வழங்­கப்­பட்­டது என்றும் அல்லாஹ்­வு­ட­னான நேரடித் தொடர்பை ஆண்கள் மட்­டுமே கொண்­டி­ருக்­கலாம் என்ற கருத்­து­நிலை கொண்டோர் கீழ்­வரும் அல்­குர்­ஆ­னிய வச­னத்தை ஆதா­ர­மாகக் குறிப்­பி­டு­கின்­றனர்.

(நபியே!) உமக்கு முன்னர் (பற்­பல சமூ­கங்­க­ளுக்கும் ) நாம் அனுப்­பிய தூதர்கள் (அந்­தந்த சமூ­கங்­களின்) ஊர்­க­ளி­லி­ருந்த மனி­தர்­க­ளே­யன்றி வேறில்லை (சூறா யூஸுப் 109)

எனவே இந்த வச­னத்தில் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்ள 'ரிஜாலுன்'  என்ற சொல்­லா­னது ஆண்­களைத் தான் குறிக்கும் என்ற வாதத்தின் பிர­காரம் நபித்­துவம் ஆண்­க­ளுக்கு மட்டும் தான் வழங்­கப்­பட்­டது என்று குறிப்­பி­டு­கின்­றனர். இருந்த போதிலும் இந்த வச­னத்தை விளங்­கப்­ப­டுத்­து­கின்ற இமாம் இப்னு ஆஷர் (றஹ்) அவர்கள் ரிஜாலுன் என்ற சொல் ஆண்கள் என்று மட்டும் அர்த்தம் தரு­கிற சொல் அல்ல. மாற்­ற­மாக மனி­தர்கள் என்­கிற பொது இனத்­தைதான் சுட்டும் என்று குறிப்­பி­டு­கின்றார். எனவே நபித்­துவம் மனித இனத்துள் உள்ள சகல மனி­தர்­க­ளுக்குத் தான் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே மனித இனம் என்று வரு­கின்ற போது அதில் ஆண்­களும் அடங்­கு­வதைப் போலவே பெண்­களும் அடங்­கு­வார்கள். இதனை வலு­வூட்டும் வகையில் கீழ்­வரும் ஹதீ­ஸையும் இக்­க­ருத்­து­டையோர் குறிப்­பி­டு­கின்­றனர்.

அல்லாஹ்வை நினை­வு­ப­டுத்தி அவ­ரது கண்கள் கண்ணீர் விடு­மாயின் அவரே மனிதன். ஆதாரம் : புகாரி 
இந்த ஹதீஸின் பிர­காரம் ரிஜாலுன் என்ற சொல் மனித இனத்தைத் தான் இங்கு குறிக்கும் என்­பதை நவீன கால அறி­ஞர்­க­ளான அஷ்ஷைக் ராஷித் அல் கன்­னூஷி, கலா­நிதி ஜாஸிர் அல் அவ்தா போன்றோர் குறிப்­பி­டு­கின்­றனர். இந்த இடத்தில் மிக நுணுக்­க­மான இன்­னொரு விட­யத்­தையும் கருத்தில் கொள்­ள­வேண்டும்.

இவர்­க­ளது கருத்தின் படி அல்லாஹ் நபி­மார்­க­ளாக பெண்­க­ளையும் தெரிவு செய்­தி­ருக்­கின்றான் என்­பதைப் போல றஸுல்­மார்­க­ளாக - தூதர்­க­ளாக அல்லாஹ் ஆண்­களை மட்­டும்தான் தெரிவு செய்­துள்ளான் என்­ப­தாகும். காரணம் பெண்­களை அல்லாஹ் இஸ்­லாத்தை எத்­தி­வைக்­கிற கடின பணியில் முகங்­கொள்ள வரு­கின்ற கஷ்­டங்­களை முழு­மை­யாக தாங்கிக் கொள்ளும் இயல்பில் படைக்­க­வில்லை என்­ப­தாகும். எனவே இஸ்­லாத்­தினை அல்லாஹ் வழங்­கு­கிற உள்­ளு­ணர்­வி­னூ­டாகப் புரிந்­து­கொண்டு சுய-­முன்­மா­திரி வாழ்க்­கையும் போத­னையும் என வாழ்ந்த நபிமார் என்­கிற அணியில் ஆண் , பெண் இரு பாலாரும் உள்ளனர்.

அதே­நேரம் றசூல் - தூதர் என்­கிற அதி உச்ச பொறுப்­பு­வாய்ந்த பணியில் ஒரு குறிப்­பிட்ட இறை-­வே­த­மொன்று வழங்­கப்­பட்டு அதன் தூது மைய சமூ­க­மொன்றை கட்­ட­மைக்­கிற கடின பணி பெண்­க­ளுக்கு தரப்­ப­ட­வில்லை, அது சம உரி­மை­பா­கு­பாடு அல்­லாது இயல்­புக்­கேற்­றாப்­போ­ல­மைந்த நியா­ய­மான பொறுப்­புப்­ப­கிர்­வாகும் என்­பது அவர்­க­ளது வியாக்­கி­யா­ன­மாகும். இக்­க­ருத்­தையே இமாம் குர்­துபி, இமாம் இப்னு ஹ்ஸ்ம் போன்றோர் குறிப்­பி­டு­கின்­றனர். 

3.- பள்­ளி­வா­யல்கள் ஆண்­க­ளுக்கா ? அல்­லது பெண்­க­ளுக்கா ? 
இஸ்­லா­மிய சமூ­கத்தின் அடிப்­படை மூல இயங்­கு­த­ள­மாக  கரு­தப்­ப­டு­வது மஸ்­ஜி­து­க­ளாகும். எனவே இஸ்­லா­மிய சமூ­கத்தின் மையப்­புள்­ளி­யாக பள்­ளி­வா­யல்கள் காணப்­ப­டு­வதன் கார­ண­மாக முஸ்லிம் சமூக அங்­கத்­த­வர்­க­ளான ஆண்­களும் பெண்­களும் அத­னுடன் தொடர்­பான தமது பங்­க­ளிப்­புக்­களை செலுத்த வேண்­டி­யுள்­ளது.

எனவே முஸ்லிம் சமூ­கத்தின் மைய­மாக கரு­தப்­படும் பள்­ளி­வா­யல்கள் பால் வேறு­பா­டற்ற செயற்­கள நிலை­ய­மாகும். ஆகவே எக்­கா­ரணம் கொண்டும் பள்­ளி­வா­ய­லுடன் தொடர்பு வைத்து கொள்­வ­தி­லி­ருந்து பெண்­களை தடுக்க முடி­யாது.

ஆனால் எமது சமூகம், குறிப்­பாக இலங்கை முஸ்லிம் ச்மூகம் பள்­ளி­வா­யல்கள் ஆண்­க­ளுக்கு மட்டும் தான் உரி­யது என்ற தோரணையில் எமது சமூ­க-­ம­ரபு சார்பாகப் பெற்ற கருத்­தையே கொண்­டி­ருக்­கிறோம். இஸ்­லா­மிய மூலா­தா­ரங்­களின் அடிப்­ப­டையில் இப்­பு­ரிதல் நபி (ஸல்) அவர்­களின் வழி­காட்­ட­லுக்கு முர­ணா­ன­தாகும்.

இதனை விளக்கும் வகையில் கலா­நிதி ஜாஸிர் அல் அவ்தா அவர்கள் தனது ' பள்­ளி­வா­யலும் பெண்ணும் ' எனும் விரி­வான ஆய்வில் நபி­ய­வர்­க­ளது தூதுத்­துவ காலப்­பி­ரிவில் பெண்கள் பள்­ளி­யிலே தான் ஐங்­கால தொழு­கை­களை தொழு­தி­ருக்­கின்­றார்கள், அதற்கு நபி­ய­வர்கள் எந்த வித­மான தடை­யையும் ஒரு­போதும் இட்­ட­தில்லை என்ற கருத்தை ஆதா­ர­பூர்­வ­மாக விளக்­கு­கிறார் 

பெண்கள் பள்­ளிக்கு செல்லக் கூடாது என்று வாதி­டு­கின்­ற­வர்கள் முன்­வைக்கும் ஆதா­ரங்­களில் ஒன்­றுதான் உம்மு ஹமைத் (றழி) என்ற பெண் நபித்­தோ­ழ­ரது சம்­பவம். உம்மு ஹமைத் (றழி) அவர்கள் நபி­ய­வர்­க­ளிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ! நான் உம்­முடன் இந்த பள்­ளி­யிலே தொழ ஆசைப்­ப­டு­கிறேன் என்று சொன்ன போது அதற்கு நபி­ய­வர்கள் ' நீங்கள் இந்தப் பள்­ளியில் தொழு­வதை விட உம்­மு­டைய வீட்டில் தொழுது கொள்­வது சிறப்­பா­னது என்று குறிப்­பிட்டார்.' இதனை ஆதா­ர­மாக வைத்துக் கொண்டு பெண்கள் பள்­ளிக்கு வரு­வதை தடுக்­கின்ற முயற்சி வர­லாறு நெடு­கிலும் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. ஆனால் இந்த இடத்தில் விளங்க வேண்­டிய விடயம் என்­ன­வெ­ன்றால் நபி­ய­வர்கள் ஏன் இவ்­வாறு சொன்­னார்கள் என்­பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த ஸஹாபிப் பெண்­ணுக்கு றஸ­ுலுல்லாஹ் இந்த சலுகை வழங்க இரண்டு கார­ணங்கள் உள்ளன.

•     அந்த பெண் மதீ­னா­வுக்கு வெளியில் இருந்து 05 நேரமும் பள்­ளிக்கு வர வேண்­டி­யி­ருந்­தது.
•     அவ­ளது குடும்ப பொறுப்­புக்கள் அதிகம்

இந்தக் கார­ணங்­க­ளினால் தான் நபி­ய­வர்கள் அந்த பெண்­ணுக்கு சலுகை வழங்­கி­னார்கள். ஆனால் இந்த ஹதீஸை பொது­வாக அனைத்து பெண்­க­ளுக்கும் பொருந்தும் என்று குறிப்­பிட முடி­யாது. இந்த ஹதீஸை விளங்­கு­வ­தற்கு முன் பெண்கள் பள்­ளிக்கு செல்லுதல் தொடர்­பான அனைத்து ஹதீஸ்­க­ளையும் ஒன்று சேர்த்து பார்க்­கின்ற போது உம்மு ஹுமைத்தின் சம்­ப­வ­மா­னது விதி­வி­லக்­கா­னது என்­பதை நாம் விளங்கி கொள்ள முடியும்.

இந்த இடத்தில் நாம் விளங்க வேண்­டிய விடயம் ஆண்­களும் பெண்­களும் பள்­ளிக்கு செல்­கின்ற சந்­தர்ப்­பத்தில் அங்கு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புக்கள் அதி­க­முண்டு. அத­னை­ஒ­ழுங்கு படுத்­து­வ­துதான் இஸ்­லா­மிய வழி­முறை. ஆனால் அதற்­காக இஸ்லாம் அனு­ம­தித்த ஒரு விட­யத்தை நாம் தடுத்து விடக்­கூ­டாது.

இதே பிரச்­சி­னைகள் நபி­ய­வர்­க­ளது காலத்­திலும் ஏற்­பட்­டுள்­ளது என்­பதை வர­லாற்­றி­னூ­டாக படிக்க முடியும். ஒரு­முறை ஒரு ஸஹாபி தான் தொழுது கொண்­டி­ருக்கும் போது தன்­னு­டைய கைகளின் இடை­வெ­ளி­யி­னூ­டாக பின்னால் தொழுது கொண்­டி­ருந்த பெண்ணை பார்த்தார். அந்த இடத்தில் நபி­ய­வர்கள் குறிப்­பிட்ட ஸஹா­பிக்கு உப­தேசம் செய்­தாரே தவிர பெண்­களை பள்­ளிக்கு வரு­வ­தை­விட்டும் தூர­மாக்­க­வு­மில்லை, பள்­ளியில் திரை­யினைப் போட­வு­மில்லை.

எல்லோருக்கும் பொது­வான ஒரு முறை­மை­யினை நபி­ய­வர்கள் மாற்­ற­வில்லை. தனிப்­பட்ட நபர் சார் பிரச்­சி­னை­களை  ( Case by Case Approach)  வழி­காட்டல் ஆலோ­சனை மூல­மாக அணு­கி­னார்கள். எனவே நபி­ய­வர்­களின்  வழி­மு­றைக்கு மாற்­ற­மாக நாம் செயற்­ப­டு­கின்­றோமா என்­பது தான் நாம் கேட்­க­வேண்­டிய முக்­கிய கேள்வி.

நாங்கள் பெண்கள் பள்­ளிக்கு வரு­வ­தை­யிட்டும் தடுக்க வேண்­டி­ய­தில்லை. அவ்­வாறு பிரச்­சி­னைகள் வரும் என்­றி­ருந்தால் அந்த பிரச்­சி­னைக்­கான தீர்வை நாம் முன் வைக்க வேண்­டுமே ஒழிய இஸ்லாம் கொடுத்த உரி­மையை ஒரு போதும்  நாம் மறுக்கக் கூடாது. இது வரை நாம் உரை­யா­டி­யது பால் சம­நிலை சார்ந்த 3 உதாரணங்கள் மட்டுமேயாகும்.

பெண்கள் தொடர்பான விடயங்களில் எமக்கு இருக்கும் அடிப்படைப் புரிதலின் தன்மை இருவகையானது. 

•     பாரம்பரியமாக நாம் ஏற்றுக் கொண்டுள்ள கருத்துநிலைப்பட்டது.
•     இஸ்லாமிய அடிப்படையிலான உண்மை நிலைப்பட்டது

எம்மில் பெரும்பாலானவர்கள் பெண்களுடன் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் முதல் வகையினதான பாரம்பரியமாக நாம் ஏற்றுக்கொள்ளும் கருத்துக்களை அதிகம் பின்பற்றுவதால் இஸ்லாம் சொல்லும் யதார்த்தத்தினை விளங்காமலே இருக்கிறோம்.
மீள்வாசிப்புக்குட்படவேண்டிய ஏனைய பெண்கள் சார் , பால் நிலை அதிகாரம், பால் சமனிலை தொடர்புபட்ட எல்லா விடயங்களும் மிக நேரான நேரடியான, விடயவாரியாகவும், ஷரீஆவின் இலக்குகள் அடிப்படையிலுமாகவும் மீள்வாசிப்புக்குட்படவேண்டும்.  

இப்படி மரபுசார் புரிதல் மனப்பதிவினால் ஏற்பட்ட சிக்கலினைத்தவிர்க்க ஒரு முக்கியமான குறிப்பினைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்தப் பார்வையில் பார்க்கின்ற போது இஸ்லாமிய ஷரீஅத் மிகமுக்கியமான இரு மகாஸிதுகளை – உயர் இலக்குகளைக் ( Higher Objectives of Shariah )  கொண்டு செயற்படுகிறது.

•    நீதி - Justice
•    அருள் - Mercy

இந்த இரு மகாஸிதுகளும்- உயர் இலக்குகளும் இஸ்லாமிய ஷரீஅத்தின் அனைத்து விடயங்களிலும் வெளிப்படையாக செயற்படுவதைப் பார்க்கலாம். விடயங்கள் இந்த இரு மகாஸிதுகளையும் விட்டு விலகிச் செல்லும் இடங்களில் அவைகளை இஸ்லாமிய ஷரீஅத்துக்கு வெளியே செல்வதாகவே கருதமுடியும். ஏனெனில் இஸ்லாமிய ஷரீஅத்தின் பார்வையில் இவையிரண்டும் குல்லிய்யாத்களாகக் (Universal Values) கருதப்படும்.

இதற்கு சான்றாக இமாம் இப்னு கைய்யூம் (றஹ்) அவர்களது புத்தகமான இலாமுல் முவக்கிஈன் இல் வருகிற பின்வரும் கூற்றை பதிவது இங்கு மிகப்பொருத்தமாக அமையும்.

' ஷரீஅத் என்பது ஒட்டுமொத்தமாக நீதி (Justice), அருள் (Mercy), ஹிக்மத்; (Wisdom), நலனைக் (Common Good)  கொண்டது. எந்த விடயங்கள் இவற்றை விட்டும் விலகி அவற்றின் எதிர்த் திசையில் செயற்படுமோ அவை ஷரீஅத்தின் பரப்பெல்லையை விட்டு தூரமாகியே செல்லும் அவை ஷரீஅத்தாகவும் கருத்திற்கொள்ளப்படவும்மாட்டாது'.