Verified Web

சமூகப் புனர்நிர்மாணப் பணியில் மிம்பர்களின் வகிபாகம்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2016-09-05 17:12:06 T.M.Mufaris Rashadi

வாரத்தில் ஒரு நாள் குறித்த ஒரு ஊரி­லுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மனி­தர்­களின் மனித மணித்­தி­யா­லங்­களை மிம்பர் மேடையில் உள்ள கதீபின் பொறுப்­பிலே இஸ்லாம் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றது.

அப்­ப­டிப்­பட்ட  மிகப்­பெரும் அமா­னி­தத்தை சுமந்து கொண்ட கதீப் ஒருவர் தனது குத்­பாக்­களை குறித்த சில தலைப்­புக்­க­ளோடு மாத்­திரம் சுருக்கிக் கொள்­ளாமல் இஸ்­லாத்தை சம்­பூ­ரண வாழ்க்கைத் திட்­ட­மாக மிம்­பர்­க­ளி­லி­ருந்தே முன்­வைக்க முயற்­சிக்க வேண்டும் என்ற வகையில் பின்­வரும் எட்டு முக்­கிய அம்­சங்­க­ளையும் கதீப்­மார்­க­ளோடு 'விடிவெள்ளி மிம்பர்' பகிர்ந்து கொள்­கி­றது. 

1.- ஆன்­மீகம் சார்ந்த விட­யங்கள் 
அல்­லாஹ்­வு­ட­னான தொடர்பு எப்­ப­டி­யி­ருக்­கி­றது என்ற வினாவைத் தொடுத்து அதற்கு விடை­காணும் முக­மாக அல்­குர்­ஆனை ஓதுதல், அதனை விளங்­குதல், மன­ன­மிடல், பிற­ருக்கு எத்திவைத்தல், பர்­ளான  நபி­லான வணக்­கங்கள் செய்தல், திக்ர் அவ்­ராத்கள் கட­மை­யான சுன்­னத்­தான தொழு­கை­களை நிறை­வேற்­றுதல் , சதகா, இஸ்­திஃபார், தௌபா போன்­ற­வற்றை ஊக்­கு­வித்து அதனை வாழ்வில் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­காட்­டல்­களை கதீப்­மார்கள் மக்­க­ளுக்கு தெளிவு படுத்த மிம்பர் மேடை­களை பயன்­ப­டுத்த வேண்டும். 

2-. தஃவா சார்ந்த விட­யங்கள் 
ஆன்­மிக மேம்­பாட்­டுக்­கான பிர­தான வழியே அல்­லாஹ்­வின்பால் மக்­களை அழைக்­கின்ற இப்­பணி. இது நபி­மார்கள் செய்த நாமும் செய்ய வேண்­டிய ஒரு மகத்­தான பணி­யாகும். 

அழ­கிய உப­தேசம் மற்றும் அறிவு பூர்­வ­மா­கவும் அழைப்பு விடுக்­கு­மாறு (அந்நஹ்ல் 125) அல்லாஹ் கட்­ட­ளை­யி­டு­கிறான். தஃவாப்­ ப­ணியை அழ­காக செய்­வ­தற்கு அறிவு இன்­றி­ய­மை­யா­தது. அனைத்து இன மக்­க­ளையும் படைத்த அல்­லாஹ்­வையும் அவ­னது வழி­காட்­ட­லையும் வழி­காட்­டி­யையும் எம்­மோடு மாத்­திரம் சுருக்­கிக்­கொள்­ளாமல் அனைத்து மக்­க­ளுக்கும் அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும் என்ற சிந்­த­னையை நமது குத்பா உரை­களில் தெளிவு படுத்த முயற்­சிக்க வேண்டும்.
 

3-. அறிவு சார்ந்த விட­யங்கள்
அழ­கிய முறையில் தஃவா செய்­வ­தற்கு அறிவு மிக அவ­சி­ய­மா­னது என்ற வகையில் நாம் எமது கல்­விக்கு முக்­கி­யத்­துவம் வழங்க வேண்டும். பொது­வான அறிவை நாம் பெற்றுக் கொள்­வ­துடன் துறைசார் நிபு­ணத்­து­வத்­தையும் தத்­த­மது துறை­களில் பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்க வேண்டும். 'நிபு­ணர்­க­ளிடம் (கற்­ற­றிந்­த­வர்­க­ளிடம்) கேளுங்கள் (சூரா புர்கான் 59) என்ற அல்­குர்ஆன் வசனம் எமக்கு உணர்த்தும் விடயம் மிகத் தெளி­வா­னது. 

அத்­தோடு வாசிப்புப் பழக்­கத்­தையும் நாம் கடைப்­பி­டிக்க வேண்டும். வாசிப்­பீ­ராக என்ற வஹியின் முதல் கட்­ட­ளையை அனைத்து விட­யங்­களை விடவும் முதன்­மைப்­ப­டுத்த வேண்டும். 

ஏனெனில் வாசிப்பே மனி­தர்­களை உரு­வாக்­கு­கின்­றது. குறிப்­பாக நாம் முஸ்­லிம்கள் என்­ற­வ­கையில் வாசிக்­கின்ற அனைத்­தையும் உள்­வாங்கி விடாது இஸ்­லா­மிய வரை­ய­றை­களைப் பேணி வாசிக்க வேண்டும்.

மார்க்க விளக்­கங்­களைப் பெற்று உணர்ச்­சி­க­ளுக்கு கட்­டுப்­ப­டாது இஸ்லா­மிய அறிவை மைய­மாகக் கொண்டு நமது வாழ்­வையும் வஹியின் வெளிச்­சத்தில் அறிவு பூர்­வ­மா­ன­தாக அமைத்­துக்­கொள்ள முயற்­சிக்க வேண்டும் என்ற போத­னையை தமது போத­னை­யி­னூ­டாக சமூ­கத்­துக்கு முன்­வைக்க முயற்­சிக்க வேண்டும்.

4-. பொரு­ளா­தாரம் சார்ந்த விட­யங்கள் 
நபி­ய­வர்கள் இறை நிரா­க­ரிப்­புடன் இணைத்து பாது­காப்­புத்­தே­டிய ஒன்றே பொரு­ளா­தார நெருக்­கடி. எனவே பொரு­ளா­தார வளர்ச்­சியை நமது சமூகம் பெருக்கிக் கொள்ளும் வித­மாக நபிகளாரின் வாழ்வை முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்டு ஊக்­கு­விக்க வேண்டும், 

நல்ல ஹலா­லான பணம் நல்ல ஒரு­வ­னிடம் இருப்­பது எத்­துணை சிறந்­தது (அஹ்மத்) என்று பொரு­ளா­தா­ரத்தை பெருக்கிக் கொள்­ளு­மாறு நபி (ஸல்) அவர்கள் தூண்­டி­யுள்­ளார்கள்.

அத்­தோடு செல்வம் முஸ்­லி­ம்­களின் கரங்­களில் இருக்க வேண்டும். நாம் செல்­வத்தை வெற்­றி­கொள்ள வேண்டும். செல்வம் எங்­களை வெற்­றி­கொண்டு ஆட்­டிப்­ப­டைக்கும் வித­மாக உள்­ளத்தில் ஒரு போதும் முதல் இடத்தை அதற்கு வழங்கி விடக்­கூ­டாது. சிறு­வர்­க­ளுக்கு சேமிப்­பையும் வளர்ந்­தோ­ருக்கு முத­லீட்­டையும் பழக்க வேண்டும்.

அதனை மைய­மாகக் கொண்டு எமது சமூ­கத்தின் எதிர்­காலத் திட்­ட­மி­டலை அமைத்துக் கொள்ள வஹியின் வழி­காட்­டல்­களை வழங்க வேண்டும். 

5-. பண்­பாடு சார்ந்த விட­யங்கள் 
உங்­களில் சிறந்­தவர் நற்­கு­ண­மு­டை­ய­வரே என நபி (ஸல்) அவர்கள் கூறி­யதை இவ்­வாறு நாம் புரிந்து கொள்ள முடி­கி­றது. 
வணக்க வழி­பா­டு­களின் வெளிப்­பா­டு­களே பண்­பா­டுகள்.

இந்தப் பண்­பா­டு­களில் கோளாறு ஏற்­ப­டு­மாயின் அது எமது வணக்க வழி­பா­டு­களில் உள்ள குறை­க­ளையே எமக்கு படம்­பி­டித்துக் காட்­டு­கி­றது.

வணக்க வழி­பா­டு­களில் குறை­யுள்­ளவர் ஒரு காலமும் மனி­தர்­களில் சிறந்­த­வ­ராக முடி­யாது 

எனவே எமது சமூ­கத்தின் பண்­பா­டு­களை நெறிப்­ப­டுத்தி அதனை அழ­கு­ப­டுத்­திக்­கொள்ளும் வித­மாக கதீப் மார்கள் தமது உரை­களை அமைத்துக் கொள்ள வேண்டும். 

6-.  உட­லா­ரோக்­கியம் சார்ந்த விட­யங்கள் 
ஆரோக்­கி­ய­மான உடம்­பில்தான் சிறந்த அறிவு காணப்­படும். சிறந்த அறி­வுள்ள மேலும் சிந்­தனைத் தெளி­வுள்ள இடத்­தில்தான் ஈமானும் புத்­து­ணர்ச்சி பெற்று காணப்­படும், 

மேலும் உடல் ஆரோக்­கி­ய­மாக இருந்தால் மாத்­தி­ரமே எம்மால் இஸ்­லாத்­துக்­காக உழைக்க முடியும். இவ்­வ­கை­யில்தான் நபி (ஸல்) அவர்­களும் ஹாரிஸ் இப்னு கல்தா என்ற வைத்­தி­ய­ரிடம் போய் வைத்­திய ஆலோ­சனை பெற்­றுக்­கொண்­ட­தோடு ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்­க­ளையும் தூண்­டி­னார்கள். 

வாய்க்கு ருசி­யான உண­வை­விட ஆரோக்­கி­ய­மான உணவை முற்­ப­டுத்­து­வ­துடன் உடம்­புக்கு போது­மான அளவு உடற் பயிற்­சி­க­ளையும் கொடுக்­க­வேண்டும். சுத்தம், சுகா­தா­ரத்தை பேணு­வ­துடன் போது­மான அளவு ஓய்­வையும் உட­லுக்கு வழங்க வேண்டும்

உடம்­புக்கு நிறை­வேற்­ற­வேண்­டிய கட­மை­களை செய்­யு­மாறு நபி (ஸல்)அவர்கள் கூறி­யுள்­ள­மையை நாம் கருத்தில் கொண்டு கரு­ம­மாற்ற நமது சமூ­கத்­துக்கு மிம்பர் மேடை­க­ளி­லி­ருந்தே அறை­கூவல் விடுக்க முயற்­சிக்க வேண்டும். 

7-. தொழில் சார்ந்த விட­யங்கள் 
எமது தொழிலை நாம் மேம்­ப­டுத்­திக்­கொள்ள முயற்­சிக்க வேண்டும். நாம் செய்யும் தொழி­லையும் ஒரு வணக்­க­மாக பார்க்கும்படியே இஸ்லாம் போதிக்­கி­றது. தாவூத் (அலை) அவர்கள் தமது கரங்­களால் உழைத்துச் சாப்­பிட்­டார்கள். (புஹாரி) 

அவர் ஒரு அர­ச­னாக இருந்தும் உழைத்தே உண்டார்.

பிற­ரி­ட­மி­ருந்து அநி­யா­ய­மாக சுரண்­ட­வில்லை என்­பது சிந்­திக்­க­வேண்­டிய விட­ய­மாகும். அனைத்து நபி­மார்­களும் தொழில் செய்து தமது வாழ்வை முன்­னெ­டுத்­துள்­ளனர். நல்ல தோற்­ற­மு­டைய மனி­தனை கண்­ணுற்ற போது இவர் ஜிஹாதில் இருந்தால் எத்­துணை சிறப்­பா­யி­ருக்கும் என்று ஸஹா­பாக்கள் கூறி­ய­போது ''அவர் தனது பிள்­ளை­க­ளுக்­காக, பெற்­றோ­ருக்­காக, தனக்­காக உழைத்தால் அவர் இறை பாதையில் இருக்­கிறார்.

ஆனால் அவர் பெரு­மைக்­காக உழைத்தால் ஷைத்­தா­னு­டைய பாதையில் இருக்­கிறார்.'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (தப­ரானி) என்ற இந்த நபி மொழி ஒருவர் தூய்­மை­யாக அல்­லாஹ்வைப் பயந்து செய்யும் தொழி­லி­னூ­டா­கவும் அவரால் சுவனம் நுழைய முடியும் என்­ப­த­னையே சுட்­டிக்­காட்­டு­கி­றது. அந்த வகையில் இதற்­கான பூர­ண­மான தெளிவை மிம்­பர்கள் முழங்க வேண்டும். 

8-. குடும்பம் , சமூகம் சார்ந்த விட­யங்கள் 
மனைவி, பிள்­ளைகள் , அண்டை அய­ல­வர்கள், ஊர்­மக்கள் இவர்­க­ளோடு சுமு­க­மான உறவைப் பேணு­வ­தோடு அவர்­களின் ஆன்­மிகம், அறிவு, பண்­பாடு, தஃவா செயற்­பா­டுகள், பொரு­ளா­தார முயற்­சிகள் போன்­ற­வற்றை முன்­னேற்றும் வித­மாக சிந்­திக்க வேண்டும்.

நண்­பர்கள், ஊர் விவ­கா­ரங்கள், அநா­தைகள், ஏழைகள், கூட்­டாக ஸகாத்தை நிறை­வேற்றல், சமூக ஒற்­றுமை பேணல், ஐக்­கியம், சக­வாழ்வு போன்ற விடயங்களில் ஈடுபாடு காட்ட முயற்சிக்க வேண்டும்.  ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமை பலப்படுத்துகின்றவனாக இருப்பான். கஷ்ட துன்பங்களில் உதவுவான். சமூகத்தை சின்னா பின்னமாக்கி பலவீனப்படுத்தமாட்டான்.

இப்பொறுப்பு தொடர்பில் அல்லாஹ் எம்மை விசாரிப்பான் என்பதனை நினைவில் நிறுத்த வேண்டும். 

எம்மையும் எமது குடும்பத்தையும் அண்டை அயலவர் ஊர் மக்கள் அனைவரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து சுவனத்துக்கு அழைத்துச் செல்ல அயராது உழைக்கவேண்டும் என்ற எண்ணத்தை எமது சமூகத்துக்கு வழங்கி அதனைக் கட்டியெழுப்புகின்ற வகிபங்கை மிம்பர் மேடைகளே சுமந்து நிற்கின்றன என்றவகையில் மிம்பர் மேடைகளை கதீப்மார்களாகிய நாம் சிறப்பாக பயன்படுத்துவோமாக.