Verified Web

குத்­பாக்­களில் நேர முகா­மைத்­துவம்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2016-08-30 15:13:12 T.M.Mufaris Rashadi

ஒரு முஸ்­லிமின் வாழ்வில் நேர முகா­மைத்­துவம் என்­பது அத்­தி­யா­வ­சி­ய­மாக பேணப்­ப­ட­வேண்­டிய ஒரு அம்­ச­மாகும்.

நபி(ஸல்) அவர்­களின் வாழ்வின் ஒவ்­வொரு பகு­தியும் திட்­ட­மி­டப்­பட்ட முறையில் கால­நே­ரங்கள் முகா­மைத்­துவம் செய்­யப்­பட்ட நிலை­யி­லுமே கழிந்­தி­ருக்­கின்­றது என்­ப­தனை நபி­ய­வர்­களின் வாழ்வை கூர்ந்து அவ­தா­னிக்­கின்ற போது மிக இல­குவில் நம்மால் புரிந்­து­கொள்ள முடி­கி­றது. 

அந்த வகையில் மிம்பர் மேடை­யெனும் வினைத்­தி­ற­னுள்ள சமூக ஊட­கத்தில் நிகழ்த்­தப்­ப­டு­கின்ற குத்­பாக்கள் நேர வரை­யறை செய்­யப்­பட்­ட­தா­கவும் சொற்­செ­றி­வுள்ள பயன்­மிக்க குத்­பாக்­க­ளா­கவும் அமை­யப்­பெ­றுதல் காலத்தின் அவ­சிய தேவை­யாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறி­னார்கள் குத்­பாக்கள் சுருக்­க­மா­ன­தா­கவும் தொழுகை நீள­மா­ன­தா­கவும் அமை­வது தெளிவின் அடை­யா­ள­மாகும். எனவே தொழு­கையை நீட்­டுங்கள்.

குத்­பாக்­களை சுருக்­க­மாக அமைத்துக் கொள்­ளுங்கள்.(ஆதாரம்: முஸ்லிம்)
இந்த நபி­மொ­ழியில் குத்பா நிகழ்த்­தக்­கூ­டிய கதீப் அவர்கள் தனது குத்­பாவை சுருக்­க­மாக அமைத்து தொழு­கையை நீட்­டு­வது அவர் அறி­வாளி என்­ப­தற்­கான ஓர் அடை­யா­ள­மா­கவே கூறப்­பட்­டுள்­ளது.

இமாம் அப்துல் பர் (ரஹ்) குத்­பாக்­களை சுருக்­க­மாக அமைத்­துக்­கொள்­வது சுன்­னத்­தான செய­லாகும் என கூறி­யுள்­ளார்கள்.

மேலும் மார்க்க அறி­ஞர்கள் நீள­மான குத்­பாக்­களை நிகழ்த்­து­வதை வெறுக்­கத்­தக்க அம்­ச­மாக கரு­தி­யி­ருக்­கி­றார்கள். (நூல்: அல் இஸ்­தித்கார்)

இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் தனது முஹல்லா என்ற நூலில் குத்­பாக்­களை நேர­வ­ரை­யறை இன்றி நீட்­டு­வது அனு­ம­திக்­கப்­ப­டாத ஒன்­றாகும் என கூறி­யுள்­ளார்கள்.

குத்­பாக்­களை சுருக்­கு­வ­தினால் நாம் இரண்டு வித­மான பயன்­களை அடைந்து கொள்ள முடியும் என்­ப­தாக அல்­லாமா ஸாலிஹ் அல் உதைமின் அவர்கள் குறிப்­பி­டு­கின்­றார்கள். 

01. குத்­பாக்­களை கேட்­டுக்­கொண்­டி­ருப்­ப­வர்கள் அது நீளு­கின்ற பொழுது சோர்­வ­டைந்து கவ­னத்தை திசை­தி­ருப்­பு­வதை விட்டும் அவர்­களை பாது­காக்க முடியும்.

02. குத்­பாவை செவி­ம­டுப்­ப­வர்கள் தாம் கேட்­ப­வை­க­ளை­யெல்லாம் உள்­வாங்கிக் கொள்­வ­தற்கும் முன்னால் சொன்­ன­வை­களை இறு­தியில் மறந்­து­வி­டாமல் இருப்­ப­தற்கும் ஏது­வாக அமையும். (நூல் அஸ்­ஸ­ரஹுல் மும்திஃ)

குத்­பாக்­களை சுருக்­க­மாக செய்­வது என்­பதன் அர்த்தம் மக்கள் புரிந்­து­கொள்­ளாத ஒரு சில வார்த்­தை­க­ளோடு மாத்­திரம் குத்­பாக்­களை முடித்துக் கொள்­வது என்­ப­தல்ல. மாறாக சந்­தர்ப்ப சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ப அவை­யோர்­களின் மனோ­நி­லையை கவ­னத்­திற்­கொண்டு யாவ­ருக்கும் புரி­யும்­படி மிகச்­சு­ருக்­க­மா­கவோ மிக நீள­மா­கவோ இல்­லாது இரண்­டுக்கும் மத்­தியில் குத்­பாக்­களை அமைத்துக் கொள்­வ­தாகும்.

ஜாபிர் இப்னு சமுரா (ரழி) அவர்கள் கூறு­கி­றார்கள். நபி(ஸல்) அவர்­க­ளோடு நான் தொழு­தி­ருக்­கிறேன். அவர்­க­ளது தொழு­கையும் அவர்­க­ளது குத்­பாவும் நடு­நி­லை­யா­ன­தா­கவே அமைந்­தி­ருக்கும். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த நபி மொழிக்கு இமாம் நவவி (ரஹ்) அவர்கள் விளக்கம் கூறு­கையில் மக்கள் புரிந்­து­கொள்ள முடி­யாத அள­வுக்கு மிக சுருக்­க­மா­ன­தாக இல்­லா­மலும் மக்கள் சோர்­வ­டை­யு­ம­ள­வுக்கு மிக நீள­மா­ன­தா­கவும் இன்றி நடு­நி­லை­யாக அமைத்துக் கொள்­வ­தையே இந்த நபி­மொழி விளக்­கு­கி­றது. (நூல்: ஸரஹ் முஸ்லிம்)

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தனது மஜ்மூஃ என்ற நூலில் குத்பா உரை­களை சுருக்­க­மாக அமைத்­துக்­கொள்­வது விரும்­பத்­தக்க செய­லாகும். அதுவே நபி(ஸல்) அவர்கள் தனது செயலால் காண்­பித்த சுன்­னா­வாகும் என பதிவு செய்­துள்­ளார்கள்.

மேற்­சொன்ன இரண்டு நபி­மொ­ழிகள் மற்றும் இமாம்­க­ளி­னது கருத்­துக்­களின் அடிப்­ப­டையில் இன்­றைய நமது நாட்டு சூழ்­நி­லையை கருத்­திற்­கொண்டு வெள்­ளிக்­கி­ழமை நாட்­களில் குத்­பாக்­க­ளுக்கு சமு­க­ம­ளிக்­கக்­கூ­டிய அவை­யோர்­களின் மனோ­நி­லையை புரிந்­து­கொண்டு நாம் சொல்­ல­வ­ரு­வதை தெளி­வா­கவும் மிக சுருக்­க­மா­கவும் முன்­வைப்­பது சாலச்­சி­றந்­த­தாகும்.

இன்­றைய அதி­க­மான பள்­ளி­வா­சல்­களில் இமாம் வழ­மை­யாக இத்­தனை மணிக்கு ஆரம்பம் செய்வார் இத்­தனை மணிக்கு முடிப்பார் என்று தெரிந்து வைத்­துக்­கொண்டு ஜும்­ஆக்­க­ளுக்கு மக்கள் தாம­த­மா­க வருவதோடு வரு­கின்­றனர். சிலர் நேரத்­துடன் சமு­க­ம­ளித்தால் கூட குத்­பாக்­களை செவி­ம­டுக்­காதும் தூங்கி வழிந்­தும் தான்­தோன்­றித்­த­ன­மாக ஏனைய விட­யங்­களில் கவனம் செலுத்­திய வண்­ணமும் ஜும்­ஆக்­களை வீண­டித்து விடு­கின்­றனர். 

இதற்கு மிக முக்­கி­ய­மான கார­ணங்­க­ளாக இரண்டு விட­யங்­களை நம்மால் அடை­யா­ளப்­ப­டுத்த முடியும். அந்த இரண்டு விட­யங்க­ளும் ஜும்­ஆக்­களை பிறர் மனதில் பய­னற்ற ஒன்­றா­கவே கரு­த ­வைத்­தி­ருக்­கின்­றன.

1. இன்­றைய அதி­க­மான கதீப்­மார்கள் எவ்­வித தயார்­ப­டுத்­த­லு­மின்றி குறித்த தலைப்­புக்­களில் தான் நினைப்­ப­தை­யெல்லாம் வாய்க்கு வந்­த­படி பேசு­வதால் அவர்­களை அறி­யாது இரு­பது நிமி­டங்கள் பேச­வேண்­டிய தலைப்பை நாற்­பது நிமி­டங்கள் பேசியும் முடி­வுக்கு கொண்­டு­வர முடி­வ­தில்லை.

இதனால் குத்­பாக்கள் உப்­புச்­சப்­பற்­ற­தாக மக்­க­ளுக்கு எவ்­வித பல­னு­மின்றி அதன் உண்­மை­யான நோக்­கத்­தை இழந்­து­ வி­டு­கின்­றது.

2. சில கதீப்­மார்­களைப் பொறுத்­த­வ­ரையில் தான் ஒரு தலைப்பை தயார் செய்து குத்­பாக்­களை நிகழ்த்­து­வ­தற்கு முன்­னா­யத்­தத்­துடன் வந்­தாலும் கூட உரை நிகழ்த்த ஆரம்­பித்­து­விட்டால் சுய­கட்­டுப்­பாடு இழந்து குறித்த ஒரு தலைப்பின் உள்­ள­டக்­கத்தை பேசாது அத்­த­லைப்­போடு சம்­பந்­தப்­ப­டு­கின்ற தமது நினை­வி­லுள்ள எல்லா விட­யங்­க­ளையும் மக்­க­ளுக்கு சொல்­லி­விட வேண்டும் என்று முயற்­சிப்­பதால் அவர்­களை அறி­யாது இரு­பது நிமிட உரைகள் இரு­பது நிமிடம் கழிந்த பிறகே அதன் முன்­னுரை முடி­வு­பெறும் நிலைக்கு தள்­ளப்­ப­டு­கி­றது. இவ்­வாறு இரு­பது நிமிட உரை­களும் நாற்­பது நிமிட உரை­க­ளாக மாறி­வி­டு­கி­ன்றன.

இந்த இரண்டு கார­ணி­க­ளாலும் குத்பா செய்­கின்ற கதீப்­களின் குத்­பாக்கள் பய­னற்ற ஒன்­றா­கவே மக்கள் மத்­தியில் காட்­சிப்­ப­டுத்­து­கின்­றன.

எவ்­வ­ளவு ஆழ­மான அக­ல­மான தலைப்­புக்கள் குத்­பாக்­களில் பேசப்­பட்­டாலும் வரை­ய­றுக்­கப்­பட்ட நேரத்தை அது தாண்­டு­கின்ற போது அதன் பெறு­ம­தியை இழந்து விடு­கின்­றது. 

என­வேதான் நபி (ஸல்) அவர்கள் குத்­பாக்­களை சுருக்­க­மாக செய்து காட்­டி­யுள்­ளார்கள்.

அத்­தோடு குத்­பாக்­களை சுருக்­க­மாக நிகழ்த்­துங்கள் என்று உத்­த­ர­வு­மிட்­டுள்­ளார்கள். இதனைக் கருத்திற் கொண்டே முன்­னைய சல­புஸ்­ஸா­லி­ஹீன்கள் இமாம்கள் அனை­வரும் தமது உரை­களை மிகச் சுருக்­க­மா­கவும் தெளி­வா­கவும் செய்­துள்­ளதை நம்மால் புரிந்­து ­கொள்ள முடி­கி­றது.

எனவே குத்பா செய்­கின்ற கண்­ணி­ய­மிக்க கதீப்­மார்கள் இலங்கை நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் அரச தனியார் அலு­வ­ல­கங்­களில் வேலை செய்­கின்­ற­வர்­க­ளுக்கு வெள்ளிக்கிழமை நாள் விடுமுறை நாள் அல்ல.

ஜும்ஆவுக்காக முஸ்லிம்களின் நலன் கருதி வழங்கப்பட்டிருக்கும் ஒரு மணித்தியாள இடைவேளையிலே சமுகமளிக்கிறார்கள்.

குறித்த நேர்த்திற்குள் அலுவலகங்களுக்கு மீண்டும் செல்லவேண்டியிருப்பதாலும் அக் காலப்பகுதியிலேயே பகலுணவை உட்கொள்ள வேண்டியிருப்பதாலும் அதிகமான பள்ளிவாசல்களில் நிர்வாகத்தினருடைய ஆலோசனையின் அடிப்படையில் நேரத்தை வரை யறை செய்து குத்பாக்களை முடித்துக் கொள்வது மிகப் பொருத்த மாகும்.

நபி (ஸல்) அவர்களின் ஸுன்னா மற்றும் நாட்டு முஸ்லிம்களின் நலன் என்ற இரண்டு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் எமது குத்பாக்களை சுருக்கமாகவும் தொழுகைகளை நீளமாகவும் அமைத்து இறைவனின் அருளைப் பெற்று நமது குத்பாக்களின் மூலம் மக்களை பயன்பெறச் செய்வோமாக.