Verified Web

மிம்பர் மேடைகள் வேண்டி நிற்கும் கவர்ச்­சி­க­ர­மான முன்வைப்புத் திறன்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2016-08-22 17:27:59 T.M.Mufaris Rashadi

கதீப்­மார்­களை பொறுத்­த­வ­ரையில் தலைப்­புக்­களை பொருத்­த­மான முறையில் தெரிவு செய்­வ­துடன் கவர்ச்­சி­க­ர­மான முன்­வைப்புத் திறனும் அவ­ரிடம் காணப்­பட வேண்டும்.

ஒரு விட­யத்தை தெரிவு செய்து அதனை முன்­வைக்கும் போது சபை­யோர்கள் அதனை மிக இல­கு­வாக உள்­வாங்கிக் கொள்­கின்ற முறையில் முன்­வைப்­பது குத்­பாக்­களின் உண்­மை­யான தாக்­கத்தை மக்­க­ளி­டையே பிர­தி­ப­லிக்கச் செய்யும்.

ஒரு கதீப் அறை­யி­லி­ருந்து மிம்­ப­ருக்கு வரு­வது முதல் அவ­ரது கவர்ச்­சி­க­ர­மான முன்­வைப்­புத்­திறன்என்ற விடயம் ஆரம்­ப­மா­கி­றது. அவ­ரது வருகை கூட சபை­யோ­ரி­டையே அதிக தாக்­கத்தை செலுத்­து­வ­தா­கவே அமை­கி­றது.

குத்பா நிகழ்த்­து­வ­தற்­காக ஒரு கதீப் தனது அறை­யி­லி­ருந்து வெளியே வரு­கின்­ற­போது தன் முன்னே அமர்ந்­தி­ருக்கும் அவை­யோர்­களைப் பார்த்து புன்­ன­கைத்­த­படி ஸலாம் சொல்ல வேண்டும்.

மிம்­பரை நோக்கி நடந்து செல்­கின்­ற­போது இடை­யி­டையே மக்­களை விழித்து ஸலாம் சொல்­லிக்­கொள்ள வேண்டும். மிம்­பரில் ஏறிய பின் ஒட்­டு­மொத்த சபை­யோ­ரையும் பார்த்து அழ­கான முறையில் ஸலாம் கூறிக்­கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மிம்­பரில் ஏறி­ய­வுடன் ஸலாம் கூறு­வார்கள் என ஜாபிர் (ரழி) அவர்கள் அறி­வித்­துள்­ளார்கள். (ஆதாரம் இப்­னு­மாஜா)
இரண்­டா­வது– ஒரு கதீப் தனது பார்­வையை மக்­களை நோக்­கி­ய­தா­கவே அமைத்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மிம்­பரில் உரை நிகழ்த்­தும்­போது மக்­களை முன்­நோக்­கியே உரை நிகழ்த்­து­வார்கள். மக்­களும் நபி (ஸல்) அவர்­களை முன்­னோக்­கியே அமர்ந்­தி­ருப்­பார்கள் (ஆதாரம் பைஹகி அபூ­தாவுத்)

மூன்­றா­வது, இல­கு­வான மென்­மை­யான சொற்  பிர­யோ­கங்­களைக் கொண்டு அமை­தி­யான தொனியில் குத்­பாக்­களை ஆரம்பம் செய்தல். 

ஹகம் பின் ஹஸன் அல் கலபி ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இறை­வனைப் புகழ்ந்து அவன் துதி கூறிய பின் மிக இல­கு­வான வார்த்­தை­களால் மனி­தர்­களே! நீங்கள் ஏவப்­பட்­டி­ருக்கும் அனைத்துக் காரி­யங்­க­ளையும் உங்­களால் செய்­யவும் முடி­யாது.

அதற்கு நீங்கள் சக்தி பெறவும் மாட்­டீர்கள். எனினும் உங்­களால் முடி­யு­மான உங்கள் விவ­கா­ரங்­களை சீர் செய்து கொள்­ளுங்கள். மேலும் நன்­மா­ராயம் பெற்றுக் கொள்­ளுங்கள் என்று கூறியே உரை நிகழ்த்­து­வார்கள் என அறி­வித்­துள்­ளார்கள் (ஆதாரம்: அபூ­தாவூத்)
நான்­கா­வது, சப்­தத்தை உயர்த்தி ஆக்­ரோ­ஷ­மாக பேச வேண்­டிய கட்­டங்­களில் உரை­களைச் சப்­த­மா­கவும் ஆக்­ரோ­ஷ­மா­கவும் மனி­தர்­க­ளது உள்­ளங்­களைச் சென்­ற­டையும் வித­மா­கவும் உரை நிகழ்த்­துதல்.

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறு­கின்­றார்கள். நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்­தும்­போது அவர்­க­ளது இரு கண்­களும் சிவந்து சப்தம் மிக உயர்ந்து கோபம் அதி­க­ரித்த நிலையில் போருக்கு புறப்­படும் குழு­வுக்கு எச்­ச­ரிக்கை செய்­வதைப் போன்று ஆகி­வி­டு­வார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த நபி மொழிக்கு விளக்­க­ம­ளிக்­கும்­போது இமாம் நவவி (ரஹ்) அவர்கள் உரை நிகழ்த்­தும்­போது சப்­தத்தை உயர்த்­திய நிலையில் (தவ­று­களைக் கண்­டித்து) ஆக்­ரோ­ஷ­மாக மார்க்கப் போத­னைகள் செய்­வது விரும்­பத்­தக்க விடயம் என்று கூறி­யுள்­ளார்கள்.

அந்த வகை­யில சந்­தர்ப்ப சூழ்­நி­லைகள், இடம், அவை­யோரின் மனோ நிலை போன்­ற­வற்றை கருத்திக் கொண்டு தேவைக்­கேற்றாற் போல மென்­மை­யா­கவும் சில கட்­டங்­களில் கவலை தோய்ந்த முகத்­து­டனும் சில கட்­டங்­களில் சோக­மா­கவும் முக மலர்ச்­சி­யு­டனும் சொல்ல வரு­கின்ற செய்­தி­க­ளுக்­க­மைய பேச்சின் தொனியை மாற்­றி­ய­மைத்துக் கொள்ள வேண்டும்.

ஐந்­தா­வது, பேசு­கின்ற விட­யத்தை மனி­தர்கள் புரிந்து கொள்ளும் வித­மா­கவும் தெளி­வா­கவும் அழ­கிய மொழியில் முன்­வைக்க வேண்டும்.

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறு­கின்­றார்கள். நபி (ஸல்) அவர்கள் பேசினால் கேட்டுக் கொண்­டி­ருப்­பவர் தெளி­வாகப் புரிந்து கொள்­ளும்­படி மிகத் தெளி­வா­கவே பேசு­வார்கள் (ஆதாரம் அபூ­தாவூத்)

அவை­யோர்கள் கல்­வியில், புரியும் ஆற்­றலில், சிந்­திக்கும் விதத்தில் பல மட்­டங்­களை உடை­யோ­ராக இருப்­ப­துவே உண்மை. 

எனவே சாதா­ரண படிப்­ப­றி­வில்­லாத ஒரு மனி­த­னையும் இலக்­காகக் கொண்டே குத்பா உரைகள் அமையப் பெற வேண்டும்.

ஆறா­வது, உரைகள் மிக நீண்­ட­தா­கவோ சொல்ல வரு­கின்ற விடயம் முழு­மை­பெ­றாது மிகச் சுருக்­க­மா­ன­தா­கவோ இல்­லாமல் நடு நிலை­யாக அமைத்துக் கொள்­ளுதல்.

ஜாபிர் பின் சமூரா (ரழி) அவர்கள் கூறு­கி­றார்கள். நபி (ஸல்) அவர்­களின் தொழு­கையும் குத்பா உரையும் நடு நிலை­யா­ன­தா­கவே அமைந்­தி­ருக்கும். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த நபி­மொழி பள்­ளி­வா­ச­லுக்கு சமு­க­ம­ளித்­தி­ருக்கும் அவை­யோரின் தேவை­க­ளையும் அவர்­க­ளது உணர்­வு­க­ளையும் புரிந்து கதீப் தனது குத்­பாவின் அளவை மதிப்­பீடு செய்து கொள்ள வேண்டும் என்ற செய்­தியை சொல்­கி­றது. அரச, தனியார் காரி­யா­ல­யங்கள், தொழிற்­சா­லைகள், நிறு­வ­னங்கள், வேலைத்­த­ளங்­களில் பணி­பு­ரி­ப­வர்­க­ளுக்கு வரை­ய­றுக்­கப்­பட்ட நேரமே ஜும்­ஆ­வுக்­காக வழங்­கப்­ப­டு­கி­றது என்­பதை ஒவ்­வொரு கதீபும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தமது உரை­களின் அளவை அமைத்துக் கொள்­வதே மிகப் பொருத்­த­மாக இருக்கும்.

மேற்­சொல்­லப்­பட்ட ஆறு விட­யங்­க­ளுடன் ஏழா­வ­தாக அல்­குர்ஆன், ஹதீஸ்கள் வர­லா­றுகள் என்­ப­வற்றைத் துணை­யாகக் கொண்டு அன்­றைய சூழ்­நி­லையில் எந்தத் தலைப்பை மக்களுக்கு உணர்த்தினால் அது பொருந்துமோ அத்தலைப்பைத் தெரிவு செய்து அதிலுள்ள சாதக, பாதகங்களை விளக்கி ஆலோசனைகளையும் தீர்வுகளையும் முன்வைக்க முயற்சிக்க வேண்டும்.

வெறுமனே பிரச்சினைகளையும் நிகழ்வுகளையும் சம்பவங்களையும் மாத்திரம் கூறி அவர்களை ரசிக்கச் செய்யாது அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பயன்களையும் வழிகாட்டல்களையும் வழங்கி அவர்களையும் சிந்திக்கத் தூண்டும் விதமாக நமது குத்பாக்களை அமைத்துக் கொள்வோம்.