Verified Web

குத்பாக்களும் கதீப்மார்களும்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2016-08-17 16:20:49 T.M.Mufaris Rashadi

அல்­லா­ஹுத்­த­ஆலா தனது திரு­ம­றையில் சூரா புஸ்­ஸிலத் முப்­பத்து மூன்­றா­வது வச­னத்தில் ''எவர் அல்லாஹ் அளவில் மனி­தர்­களை அழைத்து தாமும் நற்­க­ரு­மங்­க­ளையும் செய்து நிச்­ச­ய­மாக நாம் அல்­லாஹ்­வுக்கு முற்­றிலும் கீழ்­ப்படிந்த முஸ்­லிம்­களில் உள்ளேன் என்று கூறு­கின்­றாரோ அவரை விட சொல்லால்  மிக்க அழ­கா­னவர் யார்?'' என குறிப்­பி­டு­கிறான். 

இவ்­வ­சனம் அல்­லாஹ்வைப் பற்­றியும் அவ­னது மார்க்­கத்தைப் பற்­றியும் மக்­க­ளுக்கு அறி­வுரை வழங்கி அதன்பால் மக்­களை அழைப்­பதை மிக அழ­கிய வார்த்தை பேசு­ப­வ­ரென்றும் சிறந்த செயலில் ஈடு­ப­டு­பவர் என்றும் அடை­யா­ளப்­ப­டுத்­து­கி­றது.

அந்த வகையில்  உல­கி­லேயே பயன்­ப­டுத்­தப்­படும் வார்த்­தை­களில் அழ­கா­னதும் பெரு­மையை ஈட்டித் தரு­வ­து­மாகும்.

அந்த வகையில் இறைத் தூதை எத்தி வைப்­ப­தென்­பது ஒவ்­வொரு முஸ்­லிமின் வாரி­சு­ரிமைச் சொத்­தாகும். 

எனவே இது முஸ்லிம் என்ற வகையில் குறிப்­பாக இம்­மார்க்கக் கல்­வியை கற்ற ஆலிம்­க­ளுக்கு ஏனைய முஸ்­லிம்­களை விட ஒப்­பீட்­ட­ளவில் அதி முக்­கிய கட­மை­யாகும்.

குத்­பாக்­களை பொறுத்­த­வ­ரையில் வர­லாறு நெடு­கிலும் அசத்­தி­யத்­தையும் சடங்கு சம்­பி­ர­தா­யங்­க­ளையும் போலிக் கோட்­பா­டு­க­ளையும் அழித்­தொ­ழித்து தூய இறைத் தூதை இம் மண்ணில் நிலை நிறுத்த அவை பெரிதும் உத­வி­யி­ருக்­கின்­றன.

அந்த வகையில் குத்­பாக்­களில் சொல்­லப்­படும் விட­யங்கள் காலத்­திற்­கேற்ற வகை­யிலும் கருத்து மற்றும் தக­வல்கள் கொண்­ட­தா­கவும் நேர்த்­தி­யா­கவும் அமை­யு­மாக இருந்தால் நிச்­ச­ய­மாக அதன் வெளிப்­பாட்டை சமூ­கத்தில் காணக்­க­டி­ய­தாக அமையும். 

மாற்­ற­மாக காலத்­திற்கு பொருத்­த­மற்ற தலைப்­பு­களும் குத்­பாக்­களுக்­கு­ரி­ய கண்­ணி­யத்தை வழங்­கா­மலும் வசை பாடல்கள் சச்­ச­ர­வு­களை ஏற்­பத்­தக்­கூ­டிய விட­யங்­களும் நிச்­ச­ய­மாக சமூ­கத்­திற்கு எந்த நன்­மை­யையும் ஈட்டிக் கொடுக்­காது அல்­லது சமூ­கத்தை சீர்­கு­லைக்கும் வகை­யி­லேயே அமையும்.

குத்­பாக்­களை வினைத்­தி­ற­னாக அமைத்துக் கொள்ள இத்­து­றை­சார்ந்­த­வர்கள் சில அடிப்­படை விதி­களை வகுத்­துள்­ளார்கள்.

1) பொருத்­த­மான தலைப்பை தெரிவு செய்தல்:
பொருத்­த­மான தலைப்பு எனும் போது கால, இட, சூழல், மற்றும் சமூகம் போன்­ற­வற்றை கருத்­திற்­கொண்டு அமையப் பெற வேண்டும்.

2) தலைப்பின் கிளை அம்­சங்­களை வகுத்துக் கொள்ளல்:
தெரிவு செய்­யப்­பட்ட தலைப்பின் உள்­ள­டக்­கங்கள் பேச்­சாளர் குறிப்­பிட்ட உப தலைப்­பு­களின் கீழ் ஒன்­றி­ணைத்து கட்டம் கட்­ட­மாக பேசுதல்.

3) ஆதா­ரங்­களை சமர்ப்­பித்தல்:
ஆதாரம் எனும் பொழுது தான் சொல்­கின்ற ஒன்றை நிரூ­பிப்­ப­தற்­கான சான்­றாகும். சான்­று­களை வகைப்­ப­டுத்­தும்­போது அல்­குர்ஆன், அல் ஸுன்னா, நபி (ஸல்) அவர்­களின் வாழ்க்கை வர­லாறு, முன்­னைய சல­பு­களின் கூற்­றுக்கள் போன்­ற­வற்றின் ஊடாக தனது கருத்தை உறு­திப்­ப­டுத்­துதல்.

4) தொகுப்­புரை வழங்­குதல்: 
தான் எடுத்துக் கொண்ட தலைப்­பையும் அதன் கிளை அம்­சங்­க­ளையும் முன்­வைத்து இரத்­தினச் சுருக்­க­மான விளக்­கத்­துடன் அவை­யோ­ருக்கு முன்­வைத்தல்.

குத்­பாவை நிகழ்த்­து­கின்ற ஒரு கதீப் மேற்­சொன்ன விட­யங்­களை அவ­தா­னித்து அதனை முன்­வைக்­கின்­ற­போது அவ­ரிடம் காணப்­பட வேண்­டி­ய தனி அம்­சங்கள் பற்றி இத்­துறை சார் நிபு­ணர்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தும்­போது:

1) எந்­த­வித கலப்­புக்கும் திரி­புக்கும் உட்­பட்­டி­ராத அல்­குர்­ஆனை மூலா­தா­ர­மாகக் கொண்டு தனது உரையை அலங்­க­ரித்தல். 

ஒரு கதீப் அல்­குர்­ஆனை அழ­காக ஓதத் தெரிந்­தி­ருத்தல். அத­னு­டைய கருத்­துகள் மற்றும் வியாக்­கி­யா­னங்­களை சிறப்­புற தெரிந்­தி­ருப்­பது அவ­சி­ய­மாகும். குர்­ஆனில் வியாக்­கி­யான நூல்கள் (தப்ஸீர்) ஒன்றில் மட்டும் தங்­கி­யி­ராது பல நூல்­க­ளையும் வாசித்து தான் தெரிவு செய்த தலைப்­புக்கு ஏற்றால் போல் விட­ய­தா­னங்­களை ஒன்­றி­ணைத்து மக்­க­ளுக்கு புரி­யும்­படி­யாக முன்­வைத்தல்.

 தப்­ஸீர்­களில் குறிப்­பாக தப்­ஸீருத்தபரி, தப்ஸீர் இப்னு கதீர், தப்­ஸீருல் குர்­துபி, தப்ஸீர் துர்ருல் மன்ஸுர் போன்ற பழங்­கால தப்­ஸீர்­களும் தப்ஸீர் அல் காசிம், தப்ஸீர் இப்னு பாதிஸ், தப்ஸீர் பீ ழிலாலில் குர்ஆன், தப்­ஸீருல் முனீர் போன்ற சம­கால தப்­ஸீர்­க­ளி­லி­ருந்தும் தலைப்­புக்கு பொருத்­த­மாக விட­யங்­களை தொகுத்து வழங்­கு­வது சிறந்­தது.

2) அல்­குர்­ஆ­னுக்கு அடுத்­த­ப­டி­யாக ஸுன்னா எனப்­ப­டு­கின்ற நபி (ஸல்) அவர்­க­ளின் சொல், செயல், அங்­கீ­காரம், வர்­ண­னைகள் போன்­ற­வற்­றி­னூ­டாக தனது பிர­சங்­கத்தை அமைத்துக் கொள்ளல். 

3) பழங்­கால இலக்­கி­ய­வா­தி­களில் ஒரு­வ­ரான இமாம் ஜாஹிழ் அவர்கள் நபி­க­ளாரின் சுன்னா பற்றி அவ­ரது பாணியில் குறிப்­பி­டும்­போது, “அல்­லா­ஹுத்­த­ஆலா  அவ­ரது பேச்­சிலே இயல்­பான அன்­பையும் இத­யங்­களை கவ­ரு­கின்ற மொழி நடை­யையும் திடுக்­கத்­தையும் இனி­மை­யையும் ஒருங்கே சேர்த்து, கேட்­பவர் மீண்டும் அதை திரும்­பிக்­கேட்க தேவைப்­ப­டாத அள­வுக்கு பரி­பூ­ர­ண­மாக அமைந்­தி­ருக்கும்'' என வர்­ணிக்­கின்றார்.

ஹதீஸ் கிரந்­தங்­களை அணுகுகின்ற ஒருவர் அதன் அடிப்­படை நூல்­க­ளையே ஆதா­ர­மாக கொள்ள வேண்டும். குறிப்­பாக புகாரி, முஸ்லிம்,திர்­மிதி, நஸாஈ, அபூ­தாவூத், இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், பைஹகி, தார­குத்னி, தப­ரானி போன்ற அடிப்­படை மூலங்­களை ஆதா­ர­மாகக் கொள்­கின்ற அதே­வேளை தலைப்­பு­க­ளுக்கு பொருத்­த­மான ஹதீஸ்­களை இல­குவில் இனம் கண்­டு­கொள்ளும் பொருட்டு இமாம் நவவி (ரஹ்) அவர்­களின் ரியா­லுஸ்­ஸா­லி­ஹீ­னையும் அல் ஹாபிழ் முன்­திரி அவர்­களின் அத்­தர்கீப் வத்­தர்­ஹீ­பையும் இமாம் ஷௌகானி அவர்­களின் நைலுல் அவ­தா­ரையும் இமாம் முஹம்மத் இப்னு இஸ்­மாயில் அஸ் ஸன்­ஆனி அவர்­களின் ஸுபு­லுஸ்­ஸலாம் ஷரஹ் புலூகுல் மராம் போன்­ற­வற்றை துணை­யாக கொள்ள முடியும்.

03. நபி (ஸல்) அவர்­களின் வாழ்க்கை வர­லா­று­களில் படிப்­பி­னைக்­கு­ரிய குறித்த தலைப்­புக்கு பொருத்­த­மான சம்­ப­வங்­களை இஸ்­லா­மிய வர­லாற்றுத் துறையின் மூல­நூல்­க­ளி­லி­ருந்து பெற்று உரையின் பொருத்­த­மான இடங்­களில் பிர­யோ­கித்தல்.  

அல்­குர்ஆன், அஸ்­ுன்­னா­விற்கு மெரு­கூட்­டு­கின்ற வகையில் பொருத்­த­மான மற்றும் ஆதா­ர­பூர்­வ­மான வர­லாற்றுச் சம்­ப­வங்­களை இமாம் இப்னு கதீர் அவர்­களின் அல் பிதாயா வந்­நி­ஹாயா, முஹம்மத் இப்னு ஜரீர் வத்­த­பரி அவர்­களின் தாரிஹ் அர் ரஸுல் வல்­முலூக், அப்துல் மலிக் இப்னு ஹிசாம் அவர்­களின் சூரா இப்னு ஹிசாம் போன்ற நூற்­களின் துணை­கொண்டு குத்­பாக்­களை அழ­குப்­ப­டுத்திக் கொள்ளல்.

04. ஸஹா­பாக்கள் மற்றும் தாபி­ஈன்கள், தப்உ – தாபி­ஈன்கள், இமாம்கள் போன்­றோரின் வாழ்க்கை வர­லாறு அல்­குர்ஆன் சுன்னாவுக்கு அமைவான கருத்துக்கள் போன்றவற்றை குத்பாக்களின் தலைப்புக்கு ஏற்றாற்போல் ஆய்ந்தெடுத்து சிறப்பாக முன்வைத்தல்.

மேற்சொன்ன அம்சங்களை மையப்படுத்தி சமகால நிகழ்வுக ளையும் பேசுபொருள்களையும் கவனத்திற்கொண்டு சமூகத்திற்கான அவற்றின் சாதக, பாதகங்களை முன்நிறுத்தி சாதகமானவற்றை இஸ்லாமிய மயப்படுத்தியும் பாதகமானவற்றிற்கான மாற்றுத் தீர்வுகளையும் முன்மொழிவு களையும் குத்பாக்களின் ஊடாக சமூகத்திற்கு வழங்க முயற்சிப்பதன் மூலம் குத்பாக்கள் பயனுள்ளவைகளாகவும் குத்பாக்களை செவிமடுக்கின்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையிலும் அமையப் பெறும். 

இன்ஷா அல்லாஹ்.