Verified Web

உயர்­கல்வி வளா­கங்­களில் உள்ள முஸ்லிம் மஜ்­லிஸ்களை ஊக்­கு­விப்பது பிர­தா­ன­ ­ப­ணி

Masihuddin Inaamullah

சிவில் சமூக அரசியல் செயற்பாட்டாளரான இவர், ஜித்தாவுக்கான கவுன்சியூலர் ஜெனராகவும் கடமையாற்றியுள்ளார். அரசியல் விமர்சகராகவும் எழுத்தாளராகவும் விளங்குகிறார்.

2015-03-12 15:15:06 Masihuddin Inaamullah

இலங்­கையில் உள்ள பல­கலைக் கழ­கங்கள், தொழில் நுட்பக் கல்­லூ­ரிகள், உயர் தொழில் நுட்பக் கல்­லூ­ரிகள், கல்விக் கல்­லூ­ரிகள் மற்றும் தனியார் உயர்­கல்வி நிறு­வ­னங்­களில் கற்­கின்ற முஸ்லிம் மாணவர் மஜ்­லி­ஸுகள் குறித்து சமூ­கத்­த­லை­மைகள் கூடுதல் கரி­சனை செலுத்த வேண்டும்.

சமூக வாழ்­விலும், தேசிய வாழ்­விலும் கல்வி உயர் கல்விச் சமூகம் எதிர்­பார்க்கப்படு­கின்ற பங்­க­ளிப்­பினைச் செய்­வ­தற்­கு­ரிய மிகச் சிறந்த தலை­மைத்­துவப் பாச­றை­க­ளாக அவை நோக்­கப்­படல் வேண்டும்.

சாதா­ரண தர, மற்றும் உயர் தர கற்­கை­களை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்து உயர்­கல்வி பட்­ட­தாரி கற்­கை­க­ளுக்­காக பல்­கலைக் கழக அனு­மதி பெறும் மாண­வர்கள் கல்வி வாழ்வின் கடந்த காலம் பற்­றியும் எதிர்­காலம் பற்­றியும் மிகத் தெளி­வான அனு­பவம், அறிவு அனு­மா­னங்கள், தக­வல்­களை தம்­ம­கத்தே கொண்­டுள்­ள­வர்கள்.

பல­கலைக் கழ­கங்­களில் அவர்கள் பெறு­கின்ற தலை­மைத்­துவப் பயிற்­சிகள், பரந்­து­பட்ட அறிவு, ஆய்வுத் திறன்கள், அனு­ப­வங்கள், விரி­வு­ரை­யா­ளர்கள், பேரா­சி­ரி­யர்­களின் உற­வுகள், வழி­காட்­டல்கள் என்­ப­வற்றை மைய­மாக வைத்து இலங்­கையில் உள்ள சுமார் எண்­ணூறு முஸ்­லிம்­ பா­ட­சா­லைக­ளி­னதும் எதிர்­கால தர­வி­ருத்தி, கற்றல் கற்­பித்தல் செயற்­பா­டுகள், மாணவ சமூ­கத்தின் உள­வள, மற்றும் வினைத்­திறன் விருத்தி, கல்வி உயர்­கல்வி தொழிற்­கல்வி வழி­காட்­டல்கள் என பல்­வேறு துறை­க­ளிலும் அவர்­க­ளது பங்­க­ளிப்­பினை பெற்றுக் கொள்ள முடியும்.

பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்­கங்கள் தத்­த­மது பிர­தே­சத்தில் இருந்து உயர்­கல்வி பெறு­வ­தற்­கான வாய்ப்­புக்­களை பெற்­றுள்ள பட்­ட­தாரி மாண­வர்­களை அணுகி அவர்­க­ளி­ட­மி­ருந்தும் பல­கலைக் கழக மஜ்­லிஸ்­களில் இருந்தும் பெற­மு­டி­யு­மான சேவைகள் பங்­க­ளிப்­புக்கள் குறித்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­வதன் மூலம் பரஸ்­பர ஒத்­து­ழைப்­புக்­களை மேற் கொள்ள முடியும்.

பரஸ்­பர ஒத்­து­ழைப்பு எனும் பொழுது அது ஒரு வழி பயன்­பாடாக இருக்­க­மாட்­டாது. குறிப்­பிட்ட பட்­ட­தாரி மாணவர் சமூ­கத்தின் நலன்கள், தேவைகள் அறிந்து அவர்­க­ளது மஜ்­லிஸ்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு சமூ­கமும் இரட்­டிப்­பான பங்­க­ளிப்­பினை செய்தல் வேண்டும்.

இலங்­கையில் பல்­வேறு தொண்டர் நிறு­வ­னங்கள் கல்­விசார் நட­வ­டிக்­கைகள்,கல்வி வழி­காட்டல் கருத்­த­ரங்­கு­களை நடாத்­து­கின்­றார்கள். அதற்­கான வளங்­களும் நிதி ஒதுக்­கீ­டு­களும், நன்­கொ­டை­களும் பெறப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றான நிறு­வ­னங்கள் பல்­கலைக் கழக மற்றும் உயர்­கல்வி மாணவர் சமூ­கத்­தையும் உள்­வாங்­குதல் இரு சாரா­ருக்கும் பய­னுள்­ள­தாக அமையும்.

செல்­வங்­களில் அளப்­ப­ரிய செல்வம் கல்விச் செல்­வ­மாகும், பல­கலைக் கழக மாண­வர்கள் தத்­த­மது கற்றல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு புறம்­பாக சுயேட்­சை­யாக மேற்­கொள்ள முன்­வரும் கல்­விப் ­ப­ணிகள் சமூக சேவை­களில் மிகப் பிர­தா­ன­மா­னவை என்­ப­தனை உணர்ந்து அவர்­க­ளுக்குத் தேவை­யான சகல வளங்­க­ளையும் உத­வி­க­ளையும் சமூகத் தலை­மைகள் தாரா­ள­மாக பெற்றுக் கொடுத்தல் கட்­டா­ய­மாகும்.

அதே­போன்று ஏற்­க­னவே பட்­ட­தாரி கற்­கை­களை நிறைவு செய்து சமூக மற்றும் தேசியத் தளத்தில் உயர் ­ப­த­வி­க­ளிலும், அதி­கார மையங்­க­ளிலும், கல்­விசார் பத­வி­க­ளிலும், அந்­தஸ்­து­க­ளிலும் உள்ள புத்­தி­ஜீ­விகள், மற்றும் நிபு­ணர்கள் உயர்­கல்வி கற்கும் பட்­ட­தாரி மாண­வர்­க­ளுக்கு தமது அனு­ச­ர­ணை­க­ளையும், அர­வ­ணைப்­புக்­களையும் வழங்­கு­வதில் தாராளத் தன்­மை­யு­யடன் நடந்து கொள்­ள­வேண்டும்.

பட்­ட­தாரி மாண­வர்­க­ளுக்கு குறிப்­பிட்ட ஒரு தலைப்பில் ஆய்வு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­வ­தற்­கான மிகச் சிறந்த நுட்­பங்­களும் திறன்­களும் பெற்றுக் கொடுக்­கப்­ப­டு­கின்­றன. தாம் சார்ந்த பிர­தே­சங்கள்,கிரா­மங்கள், கற்ற பாட­சா­லைகள் குறித்த மிகச் சிறந்த ஆய்­வு­களை, மூலோ­பாயத் திட்­ட­மி­டல்­களை, செயற்­பாட்டு பொறி­மு­றை­களை தயார் செய்து அமு­லாக்­கு­வதில் கல்வி உயர்­கல்விச் சமூ­கத்தின் பங்­க­ளிப்­புக்­களை உச்ச அளவில் சமூகம் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

இன­ மத மொழி வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் பல்­கலைக் கழக சூழலில் மிகச் சிறந்த தலைமைத்துவப் பண்­பு­க­ளோடு நடந்து கொள்­வதும், சமா­தான, சக­வாழ்வு, தேசத்தின் அபி­வி­ருத்தி, சமூக பொரு­ளா­தார, அர­சியல் கள­நி­ல­வ­ரங்கள் குறித்த பிரக்ஞை என்­ப­வற்றை பெற்றுக் கொள்­வதும்- தமது தனித்துவம் பேணியவர்களாக- பரஸ்பரம் சகோதர சமூகங்களோடு மேலே சொல்லப்பட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பதும் அவர்கள் கரிசனை செலுத்த வேண்டிய மிகப் பிரதானமான அம்சமாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இளமைப்பருவத்தில் தமது ஆன்மீக பண்பாட்டு விருத்தியில், உயரிய இஸ்லாமிய மானுட விழுமியங்களை கண்டிப்பாக கடைப்பிடித்தது ஒழுகுவதில் அவர்களுக்கு தேவைப்படுகின்ற ஆன்மீக பண்பாட்டு பயிற்சிப் பட்டறைகளை சமூக நிறுவனங்கள் பெற்றுக் கொடுத்தல் அவசியமாகும்.