Verified Web

கிழக்கு மாகாண சபை: சிவில் சமூகத்தின் தலையீடு உடன் அவசியம்

M.Fouzer

முஸ்லிம் குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான இவர் சிறந்த ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் அரசியல் விமர்சகராகவும் விளங்குகிறார். தற்போது லண்டனில் வசித்து வரும் புலம்பெயர் அரசியல்,சமூக, இலக்கிய செயற்பாட்டாளராகவும் விளங்குகிறார்.

2015-01-21 13:02:17 M.Fouzer

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில், தமிழ், முஸ்லிம் மக்­களின் அர­சியல் நிலைப்­பாடு இலங்கை மைய அர­சி­யலில்  ஏற்­ப­டுத்­திய தாக்கம் எல்­லோ­ருக்கும் தெரிந்­ததே. இரு இனங்­க­ளுக்­கி­டை­யேயும் பல்­வேறு முரண்­பா­டு­களும் கசப்­பு­ணர்­வு­களும் இருந்­தாலும், தம்மை அடக்­கு­கின்ற ஒரு பொது எதி­ரிக்கு எதி­ராக ஒரு தீர்க்­க­மான அர­சியல் நிலைப்­பாட்­டினை தமிழ், முஸ்லிம் மக்கள் எடுத்து , நடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்டு வேலைத்­திட்­ட­மாக இல்­லாது விட்­டாலும் தனித் தனியே  செயற்­பட்­டனர்.

இதில் முத­லா­வ­தாக தம்மை ஒடுக்­கு­கின்ற பிர­தான பொது எதிரி  சிங்­கள  இன மேலா­திக்க ஆளும் குழுமம் என்­பது மிக வெளிப்­ப­டை­யாக ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய உண்­மை­யாக இருந்­தது.அந்த சிங்­கள  இன மேலா­திக்க ஆளும் குழு­மத்­தினை அதி­கா­ரத்தில் இருந்து அகற்­று­வ­தற்கு இரு இன மக்­களின் அபி­லா­சை­களும் ஒரு மையப் புள்­ளியில் இணைந்­தன.இந்த இணைவின் விளை­வாக ஒரே நேரத்தில் நம்­பிக்­கை­யுடன் கூடிய  எதிர்­பார்ப்­பொன்றும், அதே நேரம் அதிர்ச்­சி­யுடன் கூடிய பிரித்­தாளும் சூழ்ச்­சியும் ஏற்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­மை­யினை மதிப்­பி­டு­ப­வர்­க­ளுக்கு பல பார்­வை­களும் ,அந்த பார்­வையின் அடி­யாக அர­சியல் நிலைப்­பா­டுகள் எழு­வதும் தவிர்க்க முடி­யா­தவை. தமிழ் முஸ்லிம் மக்­க­ளி­டை­யே­யான ஒற்­று­மையை , இணைந்த வாழ்வை விரும்­பு­வர்­க­ளுக்கும், நீண்ட கால­மாக இலங்கை அர­சி­யலில் ஒடுக்­கப்­ப­டு­கின்ற சிறு­பான்மை மக்­க­ளுக்­கான சமத்­துவ அர­சியல் வாய்ப்­பினைக் கோரு­ப­வர்­க­ளுக்கும் இது­வொரு நல்ல தொடக்கம் என நம்­பு­வது தவிர்க்க முடி­யா­த­தா­கி­றது. 

தமிழ் முஸ்லிம் மக்­க­ளி­டை­யே­யான ஒற்­று­மையை , இணைந்த வாழ்வை விரும்­பாத சக்­திகள்  “பொது அர­சியல் அபி­லா­சைகள் ஒன்­றாக சந்­திக்கும் புள்­ளியை “தகர்க்­கவே விரும்­புவர். நிச்­ச­ய­மாக   இலங்­கையின் சிங்­கள மைய அரசு ஒரு­போ­துமே இந்த இணைவின் புள்ளி தொடர்­வ­தற்கும், இரு இனங்­க­ளுக்கும் இடையே அர­சியல், சமூக ஐக்­கியம் வளர்­வ­தற்கும் வாய்ப்­ப­ளிக்­காது என்­பது சர்வ நிச்­சயம்.

மிக வெளிப்­ப­டை­யாக சொல்­லப்­போனால், தமிழ் முஸ்லிம் மக்­களின் அர­சியல் அபி­லா­சைகள் இணைந்த பின்­பு­லத்தில் தனது அதி­கா­ரத்­தினை பெற்றுக் கொண்ட மைத்­திரி, ரணில் கூட்டு, அதி­கா­ரத்­தினை கைப்­பற்­றிய பின்­னான சூழலில் இதனை அனு­ம­திக்­காது. இலங்­கையின் இன முரண்­பாட்டின் அர­சி­யலை ஆழ விளங்கிக் கொண்­டோ­ருக்கு இது இல­குவில் புரியும் உண்­மை­யாகும். 

அதேபோல் தமிழ் முஸ்லிம் மக்­க­ளி­டை­யே­யான ஒற்­று­மையை , இணைந்த வாழ்வை விரும்­பாத சக்­திகள் தமி­ழ­ருக்­குள்ளும் முஸ்­லிம்­க­ளுக்கும் இருக்­கின்­றனர். அவர்­க­ளுடன் இரு தரப்­பி­னையும்  சார்ந்த அர­சியல் தலை­வர்­களும் பிரதி நிதி­களும் உள்­ளனர்.

வர்கள்  மைய அரசின் நிகழ்ச்சி நிர­லுக்குள் போவ­தற்கும் தமது தனிப்­பட்ட  நிலைப்­பா­டு­க­ளுக்­காகவும் இந்த இணைவை முரண்­பா­டாக மாற்­று­வ­தற்கு அதிக வாய்ப்­புள்­ளது.

இதன் முக்­கிய ஒரு கள­மா­கவே கிழக்கு மாகா­ண­சபை விவ­காரம் சம­கா­லத்தில்  மாறி இருக்­கி­றது. எந்த இணைவின் மாற்றம்  மைய இலங்கை அர­சி­யலில் ஒரு சர்­வா­தி­கார இன­வாத அர­சாங்­கத்­தினை   தூக்­கி­யெ­றிந்­ததோ , அதே சூழல் இலங்கை கிழக்கு மாகா­ண­சபை விவ­கா­ரத்தில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே முரண்­பாட்­டினை, அதி­கார மோதலை தோற்­று­விக்கும் கள­மாக விரி­கி­றது. இது தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு ஒரு ஆபத்­தான சூழலை தோற்­று­விப்­ப­துடன் சிறு­பான்மை மக்­களின் அர­சியல் உரி­மையை நிலை நாட்­டு­வ­தற்­கான பலத்­தி­னையும் மீண்டும் சிதைத்­த­ழிக்க முற்­ப­டு­கி­றது. 

கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்­சி­ய­மைப்­பது? யார் முத­ல­மைச்சர் என்­கிற அதி­கார மோதல் எழுந்­துள்­ளது. தமி­ழர்தான் முத­ல­மைச்­ச­ராக வர வேண்டும் என்­கிற கோரிக்­கையை ஒரு பிரி­வி­னரும், முஸ்­லிம்தான் முத­ல­மைச்­ச­ராக வர வேண்டும் என்­கிற கோரிக்­கையில்  இன்­னொரு பிரி­வி­னரும் தமது அர­சியல், அறிக்கைப் போரில் குதித்­துள்­ளனர். இந்த அர­சியல் பிற்­போக்­கு­வா­தத்­திற்கு இன­வாதம் ஆகு­தி­யாக வார்க்­கப்­ப­டு­கி­றது. முரண்­பா­டுகள் கூர்­மை­யாக்­கப்­ப­டு­கி­றது. நேர்­ம­றை­யான பார்­வைக்குப் பதி­லாக எதிர்­ம­றை­யான பார்வை விதைக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த ஒரு வார­கா­லத்­திற்கு மேலாக, இந்த விவ­கா­ரத்தில்  நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசும் மூன்­றுக்கும் மேற்­பட்ட சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களை நாடாத்­தியும் அவர்­க­ளுக்குள்  ஒரு பொது இணக்­கத்­திற்கு வர முடி­ய­வில்லை என சொல்­லப்­ப­டு­கி­றது.   இந்த  நிலையில் கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்­வரும் பெப்­ர­வரி 10ம் திக­திக்கு  ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக  அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விவ­கா­ரத்தில் பல காய் நகர்த்­தல்கள் மறை­மு­க­மாக நடந்து வரு­கி­றது. இது தமிழ் முஸ்லிம் மக்­களின் ஐக்­கிய வாழ்வில் ஆபத்­தான ஒரு கட்­டத்­திற்கு வழி வகுக்­கலாம் என நான் அஞ்­சு­கிறேன்.

இந்த இக்­கட்­டான சூழ் நிலையில் தமிழ், முஸ்லிம் சிவில் சமூகம் இந்த விவ­கா­ரத்தில் பார்­வை­யாளர் என்­கிற நிலையைத் தாண்டி பங்­க­ளிப்­பா­ளர்­க­ளாக மாற வேண்­டிய உட­னடித் தேவை எழுந்­துள்­ளது. சம­கா­லத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­சையும் நோக்­கிய அர­சியல் அழுத்தம் அவ­சி­ய­மா­கி­றது.

* இரு கட்­சி­க­ளி­டை­யேயும் இது­வரை பேசப்­பட்ட விட­யங்­களை  தமிழ் , முஸ்லிம் மக்­க­ளுக்கு முன் பகி­ரங்­கப்­ப­டுத்­துதல் வேண்டும். 

*தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது கோரிக்கை , நிலைப்­பா­டுகள் என்ன என்­ப­தையும் , முஸ்லிம் காங்­கிரஸ் தனது கோரிக்கை , நிலைப்­பா­டுகள் என்ன என்­ப­தையும்  பொது வெளியில் பகி­ரங்­கப்­ப­டுத்­துதல் வேண்டும்.

* தமிழ் , முஸ்லிம் சிவில் சமூகம் கூட்­டாக இணைந்து இந்த விவ­கா­ரத்தில் காய்தல் உவத்­த­லின்றி நடு நிலை­யாக  உட­னடித் தலை­யீடு செய்தல் வேண்டும்.

* அமைக்­கப்­ப­டு­கின்ற இந்த சிவில் சமூக பிரதி நிதிகளை இரு கட்சித் தலைமைகளும் மதிப்பதுடன்,  தமக்கிடையேயான பேச்சுவார்த்தைகளில் அவர்களின் பங்குபற்றுதலையும்   உறுதிப்படுத்துதல் வேண்டும்.

ஏனெனில் இதன் முக்கியத்துவமானது இரு கட்சிகளுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, முழு தமிழ், முஸ்லிம் மக்களின் இணைந்த வாழ்வுடனும் அரசியல் உரிமை விவகாரத்துடனும் எதிர்கால வாழ்வியலுடனும் தொடர்புபட்டது. கிழக்கு மாகாணம் தான் தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான உறவுக்கும்,முரணுக்குமுரிய பூமியாக உள்ளது. ஆகவே  அரசியல் தலைமைகளிடம் மட்டுமே மக்களின் வாழ்வை ஒப்படைக்காதீர்கள்.