Verified Web

தேர்தலும் பாடங்களும் திட்டங்களும்...

Ash Sheikh SHM Faleel

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகவும் விளங்குகிறார்.

2015-08-23 18:28:38 Ash Sheikh SHM Faleel

தர்கா நகர் கல­வரம் நடந்து ஒரு சில மாதங்கள் கழியும் வரை அந்தச் சூடும் இருந்­தது. பல கலந்­து­ரை­யா­டல்கள் ஆக்­கங்கள் என்று முயற்­சிகள் தீவி­ர­மாக இருந்­தன. தற்­போது அது பழங் கதை­யா­கி­விட்­டதோ என்று நினைக்கத் தோன்­று­கி­றது. ஹலால் விவ­காரம், நிகாப் விவ­காரம், ஐ.எஸ்.ஐ.எஸ். விவ­காரம் என்­பன வந்த போதெல்லாம் உட­ன­டி­யாக பலர் களத்தில் இறங்­கி­னார்கள். ஏதோ நடந்­தது. அதன் சூடு தணிந்­ததும் மீண்டும் நாம் சோர்ந்து போனோம்.



நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்தல் பல்­வேறு அம்­சங்­களை எமக்கு உணர்த்­தி­னாலும் அவற்­றுக்கு மத்­தியில் பின்­வரும் முக்­கிய விட­யங்­களைக் குறிப்­பிட்­டுக்­காட்ட முடியும்

இன­வாத சக்­திகள் :
மிகத் தெளி­வா­கவே முஸ்லிம் விரோதப் போக்கைக் கொண்­டுள்ள பொது­ப­ல­சே­னாவின் கட்­சிக்கு படு­தோல்வி கிட்­டி­யி­ருப்­ப­தை­யிட்டு எம்மில் எவரும் சந்­தோ­சப்­ப­டாமல் இல்லை. ஆனால் நாட­ளா­விய ரீதியில் மொத்­த­மாக அக்­கட்­சிக்கு சுமார் 20107 வாக்­குகள் கிடைத்­தி­ருக்­கி­றது. இதி­லி­ருந்து அந்த தீவி­ர­வாத சிந்­த­னையில் முழு நாட்­டிலும் குறைந்­தது இரு­பத்தி மூவா­யிரம் பேர் இருக்­கி­றார்கள் என்­பதை அறிந்து கொள்­வ­தற்­கான நல்ல சந்­தர்ப்­ப­மாக இத் தேர்தல் அமைந்­தது. அல்லாஹ் அந்த சந்­தர்ப்­பத்தை எமக்கு ஏற்­ப­டுத்­தினான். 

இலங்­கையில் உள்ள முஸ்­லிம்­க­ளது தொகை அதிக­ரித்து வரு­கி­றது; இதனால் சிங்­கள சமூ­கத்தின் தொகை குறைந்து வரு­கி­றது; முஸ்­லிம்கள் தமக்­கெனத் தனி­யான சட்­டங்­களை அமைத்து இந்த நாட்­டையே ஷரீஆ சட்­டங்கள் அமு­லாகும் நிலைக்கு படிப்­ப­டி­யாகக் கொண்டு போகி­றார்கள்.

சர்­வ­தேச முஸ்லிம் பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுடன் இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்குத் தொடர்­புண்டு. இங்­குள்ள பள்­ளி­வா­சல்கள் இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தி­க­ளது பங்­கர்கள். மத்­ர­ஸாக்கள் தீவி­ர­வாத சிந்­த­னையை உரு­வாக்­கு­கின்­றன. வியா­பா­ரத்தில் சிங்­க­ள­வர்­களை மிகைத்து முஸ்­லிம்கள் கால்­ப­தித்­து­விட்­டார்கள். இது போன்ற துவே­சத்தைக் கக்கும் கருத்­துக்­களை நாக் கூசாமல் பகி­ரங்க மேடை­க­ளிலும் பத்­தி­ரி­கை­யாளர் மகா­நா­டு­க­ளிலும் கூறி வரு­கி­றார்கள்.

தர்கா நகர், அளுத்­கமை, பேரு­வளை  உள்­ளிட்ட இடங்­களில் நடந்த கல­வ­ரத்­துக்கு நேர­டி­யா­கவே கார­ண­மாக அமைந்த இந்த பொது­ப­ல­சே­னாவின் கொள்­கை­களை முழு­மை­யாக ஏற்றுக் கொள்ளும் இரு­பத்து மூவா­யிரம் பேர் முழு நாட்­டிலும் இருக்­கி­றார்கள் என்றால் இதன் ஆபத்தை நாம் சரி­வரப் புரிய வேண்டும்.

அதிலும் குறிப்­பாக தர்கா நகர் அளுத்­கமை, பேரு­வளை பிர­தே­சங்கள் அமைந்­துள்ள களுத்­துறை மா­வட்­டத்தில் 5 ஆயி­ரத்­துக்கும் கூடு­த­லான வாக்­கு­களை பொது­ப­ல­சேனா பெற்­றி­ருப்­பதும் அபாய அறி­விப்­பா­கவே உள்­ளது. அப்­பி­ர­தேச மக்கள் தமது பகு­தி­களில் தீவிர பௌத்த வாதத்­துக்­கான வித்­துக்கள் தூவப்­பட்டு அது பெரு விருட்­ச­மாக வளர்ந்து வரு­வதை உணர்ந்து அதன் வளர்ச்­சியை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை  தீவி­ரப்­ப­டுத்த வேண்டும்.

வளர்ச்­சியை கட்­டுப்­ப­டுத்­து­வது என்றால் தர்க்கம் செய்­வதோ ஆயுதப் போரோ அல்ல. இஸ்­லாத்தின் பகி­ரங்க விரோ­தி­க­ளான இவர்கள் முஸ்­லிம்கள் பற்­றியும் இஸ்லாம் பற்­றியும் முன்­வைக்கும் குற்­றச்­சாட்­டுக்­களை ஆராய்ந்து அவற்­றுக்கு எழுத்தால் பேச்சால் அறி­வு­பூர்­மா­கவும் நிதா­ன­மா­கவும் பதில்­களை முன்­வைப்­பது அடிப்­ப­டை­யான கட­மை­யாகும். அத்­துடன் முஸ்­லிம்­க­ளது வாழ்வு ஒழுங்கில் பல மாற்­றங்கள் செய்­யப்­பட வேண்டும்.

இந்த நாட்டில் முஸ்­லிம்­க­ளது சமூக உற­வு­களில் இஸ்­லாத்­துக்குப் புறம்­பான பிற­ரது ஆத்­தி­ரத்தைத் தூண்டும் அம்­சங்கள் பல இருக்­கலாம். அவற்றை சீர்­தி­ருத்திக் கொள்ள வேண்டும்.

வியா­பாரக் கொடுக்கல் வாங்­கல்­களில் வாய்மை, வெளிப்­ப­டைத்­தன்மை என்­பன இருப்­பதை மீளவும் நாம் ஊர்­ஜி­தப்­ப­டுத்த வேண்டும்.

முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுடன் மிகவும் அன்­பாகப் பழ­கு­வ­துடன் அவர்­க­ளுக்கு எம்­மா­லான சகல உதவி ஒத்­தா­சை­க­ளையும் நாம் செய்ய வேண்டும்.

எனவே அறி­வு­பூர்­வ­மா­கவும் பண்­பா­டு­க­ளோடும் நடப்­பது எமது இருப்பை இந்­நாட்டில் பலப்­ப­டுத்தி இன­வாத நெருப்பை அணைக்க பெரிதும் உதவும்.

முஸ்லிம் சமூகத் தலை­மைகள் சமா­தான சக­வாழ்­வுக்­கான முயற்­சி­களை தீவி­ரப்­ப­டுத்­து­வதன் அவ­சி­யத்தை 20107 வாக்­குகள் உணர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றன.

பொது­ப­ல­சே­னா­வுக்கு நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் அனு­ச­ர­ணை­யாக இருந்த ஆட்­சிக்கு ஜன­வரி எட்டாம் திகதி ஒரு சாவு­ம­ணியும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி மற்­றொரு சாவு­ம­ணியும் அடிக்­கப்­பட்­டு­விட்­டது என்று சிலர் எண்ணிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

 அதில் உண்­மை­யி­ருக்­கலாம். ஆனால் அரச அனு­ச­ரணை இனி கிட்­டாது என்று வைத்துக் கொண்­டாலும் பல மத­கு­ருக்­களும் ஏன் பல புத்­தி­ஜீ­வி­களும் இன­வா­தத்தில் எண்ணை ஊற்றிக் கொண்­டுதான் இருக்­கி­றார்கள். 

ஏலவே எழு­தப்­பட்ட பல நூல்கள் தற்­போதும் வாசிக்­கப்­பட்டு வரு­கின்­றன. சுமார் 20 இற்கு மேற்­பட்ட இணைய தளங்­களும் சமூக ஊட­கங்­களும் துவே­சத்தைக் கக்கிக் கொண்டு தான் இருக்­கின்­றன.

 எனவே இப்­பி­ரச்­சி­னையை அரசின் பொறுப்பில் ஒப்­ப­டைத்­து­விட்டு நாம் குறட்டை விட்டுத் தூங்­கினால் அல்­லது நம்­பாட்டில் நாம் இருந்­து­விட்டால் அல்­லது கைவிட்டுப் போனால் அல்­லாஹ்தான் பாது­காக்க வேண்டும். மீண்டும் வியா­பாரத் தளங்­களும் வீடு­களும் பற்றி எரியும் நாள் வரும்­போது மட்­டுமே உடனே விழித்­தெ­ழுந்து பேஸ்­புக்­கிலும் 'வட்­ஸ் அப்­'பிலும் வீறாப்புப் பேச ஆரம்­பிப்போம். கார்ட்போர்ட் வீரர்­க­ளாக மாறுவோம். சோடா கேஸா­குவோம்.

தர்கா நகர் கல­வரம் நடந்து ஒரு சில மாதங்கள் கழியும் வரை அந்தச் சூடும் இருந்­தது. பல கலந்­து­ரை­யா­டல்கள் ஆக்­கங்கள் என்று முயற்­சிகள் தீவி­ர­மாக இருந்­தன.

தற்­போது அது பழங் கதை­யா­கி­விட்­டதோ என்று நினைக்கத் தோன்­று­கி­றது. ஹலால் விவ­காரம், நிகாப் விவ­காரம், ஐ.எஸ்.ஐ.எஸ். விவ­காரம் என்­பன வந்த போதெல்லாம் உட­ன­டி­யாக பலர் களத்தில் இறங்­கி­னார்கள். ஏதோ நடந்­தது. அதன் சூடு தணிந்­ததும் மீண்டும் நாம் சோர்ந்து போனோம்.

பிரச்­சி­னைகள் நீறு­பூத்த நெருப்புப் போல் அடி­மட்­டத்தில் இருந்து பல்கிப் பெருகிக் கொண்­டுதான் இருக்­கின்­றன.

நாம் உட­னடித் தீர்­விலும் ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் கண்­டன அறிக்­கை­க­ளிலும் கவனம் செலுத்தும் அள­வுக்கு நீடித்து நிலைக்கும் தீர்­வு­களைப் பற்றி யோசித்து உணர்ச்­சி­க­ளுக்கு அப்பால் நின்று காத்­தி­ர­மான நீண்ட காலத் திட்­டங்­க­ளுக்­காக உழைப்­பது குறைவு. எமது ஞாப­க­சக்தி குறு­கி­யது.

பிரச்­சி­னை­க­ளுக்­கான கார­ணங்கள் ஆரா­யப்­பட வேண்டும். பிரச்­சி­னைகள் எவ்­வ­ளவு பார­தூ­ர­மா­னவை என்­பதை மிகச் சரி­யாக மட்­டி­டு­வது முக்­கி­ய­மான விட­ய­மாகும்.

அத்­துடன் அத்­த­கைய பிரச்­சி­னைகள் எதிர்­கா­லத்தில் தோன்­றா­ம­லி­ருக்க எத்­த­கைய வேலைத் திட்­டங்­களை அமு­லாக்க வேண்டும் என்­பது பற்­றியும் அதற்­கான வளங்­களைத் திரட்­டு­வது மற்றும் பயன்­ப­டுத்­து­வது பற்­றியும் துறைசார்  வல்­லு­னர்­களும் சமூக ஆர்­வ­லர்­களும் நன்கு கலந்­தா­லோ­சித்து திட்­டங்­களை வகுத்து நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். அது­வல்­லாமல் தற்­கா­லி­க­மாக மேற்­கொள்­ளப்­படும் பிளாஸ்டர் ஒட்டும் 'பெச்' போடும் வேலைகள் மட்டும் பல­ன­ளிக்கப் போவ­தில்லை.

இலங்­கையில் புலி­க­ளுக்கு எதி­ரான யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் சிங்­க­ள­வர்­களை முஸ்­லிம்­க­ளுடன் மோத­வி­டு­வ­தற்­கான பல சக்­திகள் மிகச் கச்­சி­த­மாக வேலை செய்து கொண்­டி­ருக்­கின்­றன.

அர­சியல் இலா­பத்­துக்­காக வெளி­நாட்­டி­லி­ருந்து வரும் பணத்­துக்­காக தனிப்­பட்ட குரோ­தங்­க­ளுக்­காக பௌத்­தர்­களை ஏவி­விடும் சக்­தி­களை இனங் கண்டு அவற்­றுக்­கான பரி­கா­ரங்கள் காணப்­ப­டு­வது உட­னடித் தேவை­யாகும்.

சாமா­னி­ய­மான சிங்­கள சமூ­கத்­தி­லுள்ள பொது மக்கள் படித்த வர்க்கம், வியா­பார சமூகம் என பல தரப்­பட்­ட­வர்­க­ளது மனங்­க­ளிலும் சூட்­சு­ம­மாக துவேஷ நஞ்சைப் போடு­வதில் சில தீவி­ர­வா­திகள் அல்லும் பக­லு­மாக உழைத்து வரு­கி­றார்கள்.

எனவே பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரிவு செய்­யப்­பட்ட முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளாக இருக்­கலாம். ஏற்­க­னவே மாகாண சபை மற்றும் உள்­ளூ­ராட்சி சபை­களில் அங்கம் வகிக்கும் முஸ்­லிம்­க­ளாக இருக்­கலாம்.

மற்றும் உல­மாக்கள் புத்­தி­ஜீ­விகள் அனை­வரும் ஒன்று சேர்ந்து முஸ்லிம் சமூ­கத்தை நோக்கிப் பாய்ந்­து­வரும் இன­வாத பிர­ள­யத்தைத் தடுத்து நிறுத்தும் கைங்­க­ரி­யத்தில் ஈடு­பட வேண்டும்.

அது காலத்தின் தேவையும் மார்க்கக் கட­மை­யு­மாகும். விஷப் பாம்பை கட்­சியின் சின்­ன­மாக ஆக்கிக் கொள்­வ­தாயின் தம்மை விஷ ஜந்­து­வாக சித்­த­ரிப்­பதில் பெரு­மைப்­ப­டு­கின்ற அள­வுக்கு அவர்­க­ளது மனப்­பாங்கு கீழ் நிலைக்கு வந்­த­விட்­டது. 

மியன்­மாரில் பல்­லா­யிரம் முஸ்­லிம்­களை  கொன்று குவித்து சர்­வ­தேச அளவில் கூட துஷ்­ட­னாகக் கணிக்­கப்­படும் விரா­துவை கொழும்பு சுக­த­தாஸ அரங்கு நிகழ்ச்­சிக்கு பிர­தம விருந்­தி­ன­ராக அழைத்­தத்தில் இருந்து தாமும் அப்­ப­டி­யான போக்­குள்­ள­வர்கள் தான் என பொது­ப­ல சேனாவினர்  பறை­சாற்று­கி­றார்கள்.

ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய முஸ்லிம்களின் அரசியல் நகர்வு : 
தேர்­தலின் மூலம் நாம் பெற்ற மற்­று­மொரு படிப்­பினை முஸ்­லிம்கள் பிள­வு­பட்­டி­ருப்­ப­தனால் முஸ்­லிம்­க­ளி­டையே சண்டை சச்­ச­ர­வுகள் மென்­மேலும் அதி­க­ரிக்கும் என்­ப­தாகும். தேர்தல் காலத்தில் முஸ்­லிம்­ அர­சி­யல் ­கட்­சி­களின் ஆத­ர­வா­ளர்கள் தமக்­கி­டையே மோதிக் கொண்­டனர்.

ஓர் அர­சி­யல்­வா­தியின் ஊழல்­களை மற்­று­மொரு முஸ்லிம் அர­சி­யல்­வாதி பகி­ரங்­க­மா­கவே மீடி­யாக்­களில் வெளிப்­ப­டுத்­தினார். அது பொது­ப­லக்­கா­ரர்­க­ளுக்கே தூண்­டு­த­லா­கவும் தைரி­ய­மா­கவும் அமைந்­தது. ஊழலில் சம்­பந்­தப்­ப­டு­வது தவ­றுதான். அதேபோல் எமது தவறை எமது தனிப்­பட்ட நலன்­க­ளுக்­காக எமது பொது எதி­ரிக்குக் கூட தெரி­யப்­ப­டுத்­து­வதும் தவ­றுதான்.

எம்மை எள்ளி நகை­யா­டு­வ­தற்கு சந்­தர்ப்பம் பார்த்துக் கொண்­டி­ருக்கும் அந்த எதி­ரிக்கு  ‘வாய்க்கு அவல்” கிடைத்த கதை­யா­கி­விட்­டது.

தேர்­த­லுக்கு முன்னால் எம்மில் பலரும் வாக்­க­ளிப்­பது என்­பது அமானத், ஷஹாதத், ஷபாஅத் என்ற வகையில் சாரும் என்று பேசி வாக்­கா­ளர்­களை அறி­வூட்டி வந்தோம்.

அதுபோல் முஸ்லிம் வேட்­பா­ளர்­க­ளுக்கும் பல தகை­மைகள் இருக்க வேண்டும் என்றும் பர­வ­லாகப் பேசப்­பட்­டது.

இறை­யச்சம் சமூக உணர்ச்சி, அறிவு திறமை, ஆற்றல், பரந்த மனப்­பான்மை தைரியம் போன்ற பண்­பு­களைப் பெற்­ற­வர்­களை மட்­டுமே நாம் தெரிவு செய்ய வேண்டும்.

இல்­லா­த­போது அது ‘கவ்லுஸ் சூர்” என இஸ்­லாத்தில் கூறப்­பட்ட பொய்ச் சாட்­சியம் கூறும் குற்­ற­மாகக் கரு­தப்­படும் என்றும் பொது மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. 

அப்­ப­டி­யாயின் தற்­போது பொது மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்­றத்­துக்­கான முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளிடம் இப்­பண்­புகள் எந்­த­ள­வுக்கு இருக்­கின்­றன. முழு­மை­யாக இல்­லா­விட்­டாலும் உயர்ந்த பட்சம் இருக்­கின்­ற­னவா? இவை சிந்­த­னைக்­கு­ரிய அம்­சங்கள்.
பாரா­ளு­மன்றம் செல்லும் இவர்­களை தனி மனி­தர்­க­ளாகப் பார்க்க முடி­யாது. அவர்கள் முஸ்லிம் சமூ­கத்தின் தலை­வர்கள்; பிர­தி­நி­திகள். சமூ­கத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான பிரச்­சி­னைகள் உள்­ளன.

அவற்றைத் தீர்ப்­ப­திலும் அவர்­க­ளது பங்கு மகத்­தா­னது. அவர்­க­ளது ஒவ்­வொரு அசை­வுக்கும் வார்த்­தைக்கும் பெறு­ம­தி­யுண்டு. நிலைப்­பா­டு­களை எடுக்க முன்னர் கருத்­துக்­களை வெளி­யிட முன்னர் அவர்கள் வெகு தூரம் சிந்­தித்துக் கொள்ள வேண்டும். 

எனது ஒவ்­வொரு வார்த்­தையும் நாட்டின் நலனைப் பாது­காக்­குமா? அல்­லது பாதிக்­குமா? நான் பிர­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சமூ­கத்தின் வளர்ச்­சிக்கு உத­வுமா? அல்­லது இன்னும் அதனைக் குட்டிச் சுவ­ராக்­கி­வி­டுமா என அவர்கள் சிந்­திக்க வேண்டும்.

சமூ­கமும் அவர்­களைத் தனி­மைப்­ப­டுத்­தி­வி­டாமல் அவர்­களை நெறிப்­ப­டுத்­தவும் தேவைப்­ப­டும்­போது  அவர்­களைப் பாது­காக்­கவும் முயற்­சி­க­ளை­யெ­டுக்க வேண்டும். குறிப்­பாக சமூ­கத்­தி­லுள்ள உல­மாக்கள் புத்­தி­ஜீ­விகள் இதற்­காக முன்­வர வேண்டும். 

பாரா­ளு­மன்­றத்தில் உள்ள ஒரு பிர­தி­நி­தியின் உரை பய­னுள்­ள­தா­கவும் தாக்­கம்­மிக்­க­தாவும் அமை­வ­தற்கு அதில் நம்­ப­க­ர­மான தக­வல்கள் புள்ளி விப­ரங்கள் உள்­ள­டங்­கி­யி­ருப்­பது அவ­சி­ய­மாகும். அப்­ப­டி­யாயின் அத்­த­கைய தக­வல்­களை  அவர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு முஸ்லிம் சமூ­கத்தில் ஒரு தகவல் களஞ்­சியம் இயங்க வேண்டும். அதி நவீன தொழில்­நுட்­பங்கள் ஆய்வு முறைகள் தகு­தி­யான ஆய்­வா­ளர்கள் அதில் உள்­வாங்­கப்­பட்டு பாரா­ளு­மன்ற உறு­ப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் தேவை.

'முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது மன்றம் ஒன்று உரு­வாக்­கப்­பட்டு அதில் கட்சி பேத­மின்றி சகல பிர­தி­நி­தி­களும் உள்­வாங்­கப்­பட்டு அவர்­க­ளுக்­கான கிர­ம­மான சந்­திப்­புக்கள், கலந்­து­ரை­யா­டல்கள் பயிற்சித் திட்­டங்கள், ஆத்­மீக ரீதியான வழிகாட்டல்கள் இடம்பெற வேண்டும்.

 இது மிகவும் அவசியமான காலத்தின் தேவை என்பதில் இரு கருத்துக்கு இடமிருக்க முடியாது.'



முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மன்றம் : 
முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது மன்றம் ஒன்று உரு­வாக்­கப்­பட்டு அதில் கட்சி பேத­மின்றி சகல பிர­தி­நி­தி­களும் உள்­வாங்­கப்­பட்டு அவர்­க­ளுக்­கான கிர­ம­மான சந்­திப்­புக்கள், கலந்­து­ரை­யா­டல்கள் பயிற்சித் திட்­டங்கள், ஆத்­மீக ரீதியான வழிகாட்டல்கள் இடம்பெற வேண்டும். இந்த மன்றத்தை தேசிய சூரா சபை போன்ற ஒரு பொதுவான அமைப்பு ஒழுங்கு செய்யலாமே என ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். அது சிறந்த ஓர் அபிப்பிராயமாக இருந்தாலும் அதனை எந்த அளவு சாத்தியப்படுத்தலாம் என்பது பற்றி சிந்திப்பது அவசியமாகும். ஆனால் அது மிகவும் அவசியமான காலத்தின் தேவை என்பதில் இரு கருத்துக்கு இடமிருக்க முடியாது.

முஸ்லிம் சமூகத்தில் தீர்க்கப்பட வேண்டிய ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டிய பிரதானமாக ஏழு துறைகள் உள்னள. 
1) ஆத்மீகமும் பண்பாடும்
2) அரசியல் 
3) கல்வி 
4) வெகுஜன தொடர்பு சாதனத் துறை 
5) சுகாதாரம்
 6) குடும்ப உறவுகள்
 7) பிற சமூகங்களுடனான சமாதான சக வாழ்வு.

இவற்றில் ஒரு துறையாக மட்டுமே அரசியல் இருந்தாலும் ஏனைய ஆறு துறைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக அது இருப்பது கண்கூடு. எனவே அரசியல் துறையையும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களையும் பற்றிய சரியான நிலைப்பாடுகளை நாம் எடுப்பதற்கான சந்தர்ப்பமாக இந்த தேர்தலுக்குப் பிந்திய சூழலை நாம் பயன்படுத்திக் கொள்வோமாக.

Reactive ஆக அதாவது பிரச்சினைகள் தோன்றியதற்குப் பின்னர் தீர்வுகளைத் தேடுவது பற்றி சிந்திப்பதனை விட Proactive எனப்படும் பிரச்சினைகள்  உருவாகாமல் இருப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கும் அதிக முயற்சிகளை எடுப்போமாக.

 வல்ல அல்லாஹ் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக!