2019 க்கான ஹஜ் கோட்டாவை அதிகரிப்பதே எனது முதற்பணி

முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம்

0 845

எனது முதற்­பணி அடுத்த வரு­டத்­துக்­கான ஹஜ்­கோட்­டாவை அதி­க­ரித்­துப்­பெற்றுக் கொள்­வ­தாகும். சவூதி ஹஜ் அமைச்சு அடுத்த வரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு அழைப்பு விடுத்­துள்­ளது. எதிர்­வரும் 27 ஆம் திகதி மக்­காவில் நடை­பெ­ற­வுள்ள இக்­க­லந்­து­ரை­யா­டலில் ஹஜ் கோட்டா அதி­க­ரிப்பை வலி­யு­றுத்­துவேன் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ராக மீண்டும் பத­வி­யேற்­றுள்ள அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

அமைச்சுப் பத­வியைப் பொறுப்­பேற்றுக் கொண்­டதும் ‘விடி­வெள்­ளி’க்கு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் முஸ்லிம் சமய விவ­கா­ரங்கள் கடந்த இரண்டு மாதங்­க­ளாகத் தடைப்­பட்­டி­ருந்­தன. ஹஜ் ஏற்­பா­டு­க­ளிலும் தாம­தங்கள் நில­வின. ஜன­நா­ய­கத்­துக்கு கிடைத்த வெற்றி அல்­லாஹ்வின் ஏற்­பா­டாகும். ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்கு ஒரு புதிய சட்­ட­மூலம் மற்றும் வக்பு சட்­டத்தில் திருத்­தங்கள் என்­பன துள­ள­ரி­தப்­ப­டுத்­தப்­படும்.

ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய அனை­வ­ருக்கும் நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கிறேன் என்றார்.

அமைச்சர் ஹலீம் தனது அமைச்சுக் கட­மை­களை இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் தபால் தலைமையகத்திலுள்ள அமைச்சில் பொறுப்பேற்கவுள்ளதாக அவரின் ஊடகச் செயலாளர் ரஷி ஹாசிம் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.