ஜனாதிபதியின் மன நிலையை சோதனைக்கு உட்படுத்தவும்

'மென்டாமுஸ்' - மேல்மன்ற பேராணை கோரி மேன்முறையீட்டு மன்றில் மனு

0 948
  • எம்.எப்.எம்.பஸீர்

மன­நல நோய்கள் தொடர்­பி­லான கட்­டளைச் சட்­டத்தின்  2 ஆம் அத்­தி­யா­யத்­துக்­க­மைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ராக கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் சட்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்­கு­மாறு கோட்டை பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கும், பொலிஸ் மா அதி­ப­ருக்கும் மென்­டாமுஸ் மேல் மன்ற பேராணை ஒன்­றினை பிறப்­பிக்­கு­மாறு கோரி  பெண் ஒருவர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் மனு­வொன்­றினை தாக்கல் செய்­துள்ளார்.

மஞ்­ஞ­நா­யக்க ஜய­வர்­தன முத­லிகே தக்­சிலா லக்­மாலி என்ற பெண்ணே சட்­டத்­த­ரணி சிசிர சிறி­வர்­தன ஊடாக இந்த மேல் மன்ற பேராணை மனுவை தாக்கல் செய்­துள்ளார்.

மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஏ.டப்­ளியூ.ஏ.கப்பார், பொலிஸ்மா அதிபர் பூஜித் சேனாதி பண்­டார ஜய­சுந்­தர மற்றும் சட்­டமா அதிபர் ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

கடந்த ஒக்­டோபர் 26 ஆம் திக­தியின் பின்­ன­ரான ஜனா­தி­ப­தியின் ஒவ்­வொரு நட­வ­டிக்கை தொடர்­பிலும் மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள மனு­தாரர், ஜனா­தி­ப­தியின் அந்த செயற்­பா­டுகள் மிகவும் குழப்­ப­க­ர­மாக உள்­ள­தா­கவும் அவர் சீரிய மன நிலையில் இருந்­தி­ருந்தால் இவ்­வாறு செயற்­பட்­டி­ருக்க மாட்­டா­ரென சுட்­டிக்­காட்­டியே கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் சட்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்­கு­மாறு பொலிஸ்மா அதி­ப­ருக்கும் கோட்டை பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கும் உத்­த­ர­வி­டு­மாறு மனுவில் கோரி­யுள்ளார்.

‘ 2018 ஒக்­டோபர் 26 ஆம் திகதி வரை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவின் செயற்­பா­டுகள் தேசிய அள­விலும் சர்­வ­தேச அள­விலும் மிகவும் உயர்­மட்­டத்தில் பாராட்­டப்­பட்­டன.  எனினும் 26 ஆம் திகதி அவரின் திடீர் மாற்றும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அர­சி­ய­ல­மைப்­பினை மீறி அவரால் வெளி­யி­டப்­பட்­டி­ருக்கும் சில உத்­த­ர­வுகள் மற்றும் வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் அடிப்­ப­டையில் மக்கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

கடந்த  ஒக்­டோபர் 26 ஆம் திக­திக்குப் பின்னர் ஜனா­தி­ப­தியின் செயற்­பா­டுகள் மிகவும் குழப்­ப­க­ர­மான நிலையில் இருக்கும் நிலையில் அவர் சீரிய  மன­நி­லையில் இல்­லை­யெனத் தெரி­கின்­றது. சீரிய மன­நி­லையில் இருந்­தி­ருந்தால் இவ்­வாறு செயற்­பட்­டி­ருக்க மாட்டார். எனவே முத­லா­வது பிர­தி­வா­தி­யான கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கொழும்பு மாவட்ட நீதி­மன்­றத்தில் ஜனா­தி­ப­தியின் மன­நி­லையை அறி­வ­தற்­கான விண்­ணப்பம் ஒன்றை தாக்கல் செய்ய வேண்­டிய கட­மையை கொண்­டி­ருக்­கின்றார்.  அவ்­வாறு ஜனா­தி­பதி விசேட மன­நல மருத்­து­வர்­களின் முன்­னி­லையில் சோதிக்­கப்­ப­டாத நிலையில் இலங்­கைக்கு பாரிய அப­கீர்த்தி தேசிய, சர்­வ­தேச அளவில் ஏற்­படும் .

அமைச்­ச­ர­வையும் பிர­த­மரும் தமது கட­மை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இடைக்­கால தடை­யினை விதித்­தி­ருக்கும் நிலையில் நீதி­மன்றக் கட்­ட­ளை­யினை பகி­ரங்­க­மாக அவ­ம­தித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுக­த­தாச அரங்­கத்தில் இடம்­பெற்ற ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின பிர­தி­நி­திகள் மத்­தியில் உரை நிகழ்த்­தி­யி­ருக்­கின்றார்  என தனது மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள மனு­தாரர், அதனால் மன­நல நோய்கள் தொடர்பிலான கட்டளைச் சட்டத்தின்  2 ஆம் அத்தியாயத்துக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் மென்டாமுஸ் மேல் மன்ற பேராணை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.