இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யதமையை படித்தவர்கள் யாரும் அனுமதிக்க மாட்டார்கள். பொலிஸார் செய்த கேவலமான செயலாகவே இதை நான் பார்க்கின்றேன். அதேநேரம் இஸ்ரேலியர்களின் இலங்கைக்கான வருகையை அரசாங்கம் சாதாரணமாக நினைக்கக் கூடாது. அது எதிர்காலத்தில் நாட்டுக்கு பாரிய பாதிப்பாக அமையும் அபாயம் இருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள அனைத்து பெண்களும் சிறப்பான முன்னேற்றத்தை அடையவும் தங்கள் ஆற்றல்களை முழுமையாகப் பங்களிப்பதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஏப்ரல் 07 ஆம் திகதி கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற IMRA மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "IMRA சிறப்பு விருது விழா 2025" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அரபுக்கல்லூரிகள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் இமாம்களுக்கு பயிற்சி நிலையம் என ஒன்று இல்லை. எதிர்காலத்தில் இவர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவதற்கான பயிற்சி மத்திய நிலையம் அமைப்பதற்கு எதிர்பார்க்கிறோம் என புத்தசாசன, சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.
தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் (120,000) தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்ட விதிகளை மீறி மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் சுவரொட்டிகள் ஒட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவர், நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய விசாரணைகளுக்கு அமைய, சஹ்ரான் கும்பலுடன் தொடர்புகளைப் பேணியதாக கூறபப்டும் உளவுத் துறையின் சொனிக் சொனிக் எனும் பெயரால் அறியப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை சி.ஐ.டி.யினர் விசாரணை செய்துள்ளனர். தொடர்ச்சியாக விசாரணைகளை தவிர்த்து வந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் கடந்த 7 ஆம் திகதி இவ்விசாரணைகள் நடாத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.
பலஸ்தீன் காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலாவில் பிரார்த்திப்போம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் பத்வா குழுவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பலஸ்தீன் - காஸாவில் பல மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் கொடூரமான தாக்குதலில், அக்டோபர் 07 முதல் இன்று வரை 62,614 அப்பாவி…