புனித ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களுக்கு சுங்கத் திணைக்களத்தினால் 33 மில்லியன் ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது. திறைசேரியினால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து குறித்த வரி செலுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இஸ்ரேல் இனத்தவர்களின் மதஸ்தலங்கள் அல்லது அவர்களின் கலாசார நிலையங்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வாங்கி அவை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கி அமைக்கப்படும் இந்த கட்டிடங்கள் என்ன? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஹஜ் விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையிலான தூதுக்குழுவினர் நாளை வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவின் ஜித்தா செல்லவுள்ளனர். இந்த தூதுக்குழுவில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
புகலிடம் கோரி ஆபத்தான கடல் பயணம் ஊடாக இலங்கை வந்துள்ள 103 ரோஹிங்ய அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து நடாத்திய 2023 ஆம் ஆண்டுக்கான ஊடக அதியுயர் விருது வழங்கும் விழாவில் விடிவெள்ளி பத்திரிகை விருதினை வென்றுள்ளது.
மியன்மாரில் இருந்து அகதிகளாக வந்திருக்கும் ரோஹிங்கியா பிரஜைகளை மீள திருப்பி அனுப்புவது சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறும் விடயமாகும். அதனால் அவர்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாக அரசாங்கம் நிறுத்தவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.